Monday, July 7, 2014


1000 மாவது பதிவு: என்னைப் பற்றி என் தளத்தைப்பற்றி இதுவரை நீங்கள் அறியாததை அறிய....

















என்னங்க என்னைப் பற்றி என் தளத்தைப்பற்றி என்று போட்டுவிட்டு ஒன்றும் எழுதவில்லையே என்று நினைக்கிறீர்களா? என்னைப் பற்றி என் வலைத்தளத்தை பற்றி நான் சொன்னால் அது தற்பெருமையாகவே முடியும் அதனால் நீங்களே என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லிவிடுங்கள்

நண்பர் பால கணேஷ் சொல்வது போல தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க!

அதனால உங்கள் எண்ணங்களை கருத்துக்களை உண்மையாகவே இங்கே வார்த்தைகளால் கொட்டுங்க.. தயவு செய்து 1000 பதிவு 10,000 பதிவாக வர வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் என்பதை போல என்று போடும் கருத்துக்களை தவிர்க்கவும்



ஆயிராம் பதிவில் நான் சொல்ல விரும்புவதை 1001 ஆம் பதிவில் பதிகிறேன் அப்ப நான் உங்களை 1001 மீண்டும் சந்திக்கிறேன்...

அன்புடன்
மதுரைத்தமிழன்

36 comments:

  1. வாழ்த்துக்கள் தல உண்மையிலே மிக பெரிய இலக்கை தாண்டி இருக்கின்றீர்கள்.. 5 வருடங்கள் 1000 பதிவுகள்..

    ஒவ்வொரு பதிவுக்குமாக "சஞ்சிகை முன்னட்டை" போல மெனக்கெடல்கள்.. எல்லாமே அருமை.. வாழ்த்துக்கள் மதுரை தமிழரே..

    ReplyDelete
  2. என் ரீடரில் உங்கள் தளம் எப்போதெல்லாம் கண்ணில் படுகிறதோ அப்போதெல்லாம் வாசிக்க மறக்க மாட்டேன்....
    சிந்தனையை தூண்டுதோ இல்லையோ, சிறு புன்னகை பூக்க செய்யும்....
    ஆயிராம் பதிவிற்கு வாழ்த்துக்கள்... மேலும் தொடரவும் வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
  3. சூடான வில்லங்கமான
    விவகாரமான விஷயங்களை
    சுவாரஸ்யமாகத் தரும் பதிவுகள்
    தங்கள் பதிவுகள்
    அந்த வகையில் தங்கள் பதிவுகள் பிடிக்கும்

    பூரிக்கட்டை பிராண்ட் ஆனது
    தங்களால்தான்.அது பிடிக்கும்
    (நாஞ்சில் மனோ அரிவாள் மாதிரி )

    ஆயிரம் என்பது அசுரச் சாதனையே
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. எவ்வளவு சொன்னீங்க. 1000மாவது பதிவா? ...ஐயோ நான் என்னபன்னுவேன்... யாரிடம் சொல்லுவேன்... சொக்கா.... (எல்லாம் திருவிளையாடல் தருமி பாணியில்)

    ReplyDelete
  5. ஆயிரம் பதிவுகள் அபூர்வ சிகாமணி என்ற பட்டத்தை வழங்குவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் !(இவ்வளவு பதிவுகள் போட வாங்கிய பூரிக்கட்டை அடிகள் எத்தனை என்று நீங்கள்தான் சொல்லணும் !)
    த ம 3

    ReplyDelete
  6. பூரிக் கட்டையின் தயவால்
    பொலியும் நகைச்சுவை(கள் ) ஓங்குக !
    ஏரிக் கரைகளைத் தாண்டி உன்றன்
    எழுத்தின் ஆற்றல் ஓங்குக
    வாரிக் குவிக்கின்றேன் வாழ்த்துரைகளை
    வள்ளல் போன்ற மனத்தளகால்
    பாரிக்கு இணையாக எந்நாளும்
    பகிரும் படைப்பில் அறிவு துலங்குக !

    நாரிக்கு நோய்வந்து முத்திடினும்
    நாற்பது லட் சத்தைத் தாண்டிவிடு ....:)))
    காரித் துப்புவோர் துப்பட்டும்
    கவலை வேண்டாம் இந்நாளில்
    ஊரில் உள்ளதெருக்கள் ஆயிரம் -அதில்
    உக்காந்து பேசுபவர்கள் பல்லாயிரம்
    யாரில் வெறுப்புனக்கு வந்தாலும்
    அடங்காதே அடங்காதே மதுரைத்தமிழா

    லொள்ளுக்கு உனையன்றி யாருமில்லை
    லோகேசன் வீதியிலே தெருமில்லை
    கொள்ளுக்கு இணையான ஆக்கங்கள்
    கொழுந்து விட்டுத் தவளட்டும் அரசியலிலும் !
    முள்ளுக்கும் அஞ்சாத மனத்தழகால்
    முத்தான பகிர்வுகளைத் தந்துவிடு
    கள்ளுக்கு இணையான போதை மிக
    காண்பவர்கள் தொகையுமிங்கே எகிறட்டும் !!

    இதுக்கு மேல எழுதினா அவ்வைப் பாட்டியும் என்னோடு கோவிச்சுக்கும் :))))
    மொத்தத்தில மதுரைத்தமிழா உனக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும்
    வாழ்த்துக்களும் .இந்தத் தொகை நான் நினைக்கும் அந்தத் தொகைகளையும்
    தாண்டி உச்சம் பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகின்றேன் போதுமா ?:..:))

    ReplyDelete
  7. ஆயிரம் பதிவைக் கடந்தாச்சா
    பத்தாயிரம் அறிவைச் சொன்னாச்சா
    போதாது போதாது தொடருங்கள்
    தொடர வாழ்த்துகள்!

    ReplyDelete
  8. வணக்கம்
    எந்த மூலையில் என்ன அனியாயம் நடக்கிறதோ அந்த விடயங்களை மிக துள்ளியமாக வெளிப்படுத்தும் தன்மையும் மற்றவர்களை கோர்த்து விட்டு புதினம் பார்க்கும் பக்குவமும் பிறருக்கு நல்ல சிந்தனைகளை ஊட்டும் அறிவாற்றாலும் தங்களிடம் நிறைந்துள்ளதை தங்களின் ஒவ்வொரு பதிவும் தெளிவாக சொல்லும்... நான் சொல்லவில்லை தங்களின் 1000வது பதிக்கு வாழ்த்துக்கள் மேலும் வாழ்க வளர்க வளர்க....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  9. 1000ஆவது பதிவா... அட்டேங்கப்பா... நீங்க என்னதான் வேலை பாக்குறீங்க? (அதாவது பூவாவுக்கு..?)
    இங்க என்னடான்னா.. முந்நூத்திச் சொச்சம் பதிவு போடவே மூனுவருசமாச்சு... அப்பப்ப இருக்குற வேலைகளைப் பாக்க முடியாம மூச்சு முட்டுது... நீங்க என்னடான்னா... அரசியல், கலை இலக்கியம், சமூக நிகழ்வுகள் ஒன்னைக் கூட விடுறதில்ல போல...?!! நலலா இருங்கய்யா.. நல்லா இருங்க... “நீ நல்லா வருவடா.. நல்லா வருவ..“ (நன்றி ஓகே.ஓகே-படவசனம்) பத்தாயிரம் பதிவிட வாழ்த்துச் சொல்லக் கூடாதுன்னா விட்டுடுவமா? ஒரு லட்சம் பதிவிட வாாாாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு என்னவாவது செய்யணுமே.. என்ன பரிசு தரலாம்னு யோசிச்சேன்.. பரிசுப்பொருள் வாங்கும் விலையை விட அனுப்பற செலவு அள்ளிடும்ங்கறதால...(அப்பாடா தப்பிச்சேன்), வேற வழியிலலாம, உங்க வலைப்பக்கத்தை எனது நட்பு வலைப்பட்டியலில் இணைத்திருக்கிறேன் (ம்கூம்..இதுக்கெல்லாம் ..அழக்கூடாது...“நட்பு வலைங்“ கறது இதுதானே?

      Delete
  10. "அவர்கள் உண்மைகள்"! அதாங்க குடும்பத்தில் நடக்கும் பூரிக்கட்டை அடியிலிருந்து.......அரசியல் அடிதடிவரை.....உண்மையைச் சொல்லி அதுக்கும் சேர்த்து பூரிக்கட்டை அடிவாங்கி....எவ்வளவு அடி வாங்கினாலும்.....அதுவும் இங்கருந்து வேற அன்புச் சகோதரிகள் நிறைய பூரிக்கட்டைகள் அனுப்பி உதவ... மீண்டும் மீண்டும் வருவேன்....பதிவு போடுவேன்..அப்படினு மனம் தளராம போடுறீங்க பாருங்க...உங்க தில்..!!! நீங்க அடி வாங்கினாலும்...எங்களை எல்லாம் சிரிக்க வைக்கிறீங்க பாருங்க...(அது எவ்வளவு கஷ்டம் தெரியுமா!!!?...) அதனால....உங்க பதிவுகளுக்கு நாங்க வெயிட்டிங்தான்......வடிவேலு சொல்லுவாரு பாருங்க....அடி வாங்கிட்டு...."என்னை ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாய்ங்க" .......

    ReplyDelete
  11. ஆயிரமாவது பதிவின் மொத பின்னூட்டம்.
    இட்டவர் : சேக்காளி

    ReplyDelete
  12. முதலாயிரத்துக்கு இனிய பாராட்டுகளும் , மேலும் பல்லாயிரங்கள் வளர இனிய வாழ்த்துகளும்!

    நல்லா இருங்க.

    ReplyDelete
  13. அநேக பிரச்சனைகளைப்பற்றி தயங்காமல் தங்களது எண்ணங்களை விளையாட்டாக கூறிவிடுகிறீர்கள். ஆனால் சில சமயங்களில் இந்தியர்களைக் குறைகூறுவது எனக்கு சரியாகப்படவில்லை. நீங்கள் அங்கு இருந்தாலும், பெரிய மாற்றத்தை செய்திருக்கப்போவதில்லை. ஆயிரம் பதிவுகள் அசுர சாதனைதான். அதிக சிரத்தை எடுத்து அட்டைப்படங்களுடன். வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  14. 1000000000 இப்படியெல்லம் போடக்கூடாதுன்னு சொல்றீங்க அதனால,,,, வளர்க தோழரே...எனது பதிவு தற்போது எனக்குள் ஒருவன் படிக்கவும் எனவேண்டுகிறேன்.

    ReplyDelete
  15. பதிவு எத்தனைப் போட்டால் என்ன?
    படிப்பவர் மனத்தில் நிற்க வேண்டும்.

    அந்த வகையில் எங்களின் மனங்களில் அதிக இடம் பிடித்தவர் நீங்கள்.
    வலையுலகில் உங்களின் பதிவுகளைப் படிக்காதவர் எவரும் இல்லை என்றே
    சொல்லிவிடலாம்.
    நையாண்டி, சிரிப்பு, சிந்தனை, சிறப்பு என்று வெகுவாக
    எழுத்தினால் ஈர்த்திடும் தங்களின் திறமையைக் கண்டு வியக்கிறோம் சகோ.

    வாழ்த்துக்கள்.

    ராஜி அக்கா டூர் போயிருக்கிறார் என்று நினைக்கிறேன்.
    இருந்திருந்தால் உங்களுக்குப் பொன்னாலானப் பூரிகட்டையைப் பரிசாக அனுப்பி இருப்பார்....)))

    நான் அப்படியெல்லாம் செய்ய மாட்டேன். அவ்வளவு வசதி கிடையாது.
    அதனால் கல்லால் செய்த பூரி கட்டையைப் பரிசாக அனுப்புகிறேன்.

    ReplyDelete
  16. மதுரை பதிவர் திருவிழாவிற்கு மட்டும் வரலேன்னு வைச்சிக்குங்கோ... கொன்னேபுட்டேன்...! ஹிஹி....

    மனமார்ந்த பாராட்டுக்கள் சகோதரா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  17. என்னது, 1000 பதிவுகளா??? நான் அவ்வளவையும் படிக்கலையே. உங்களுக்கு 1000 பதிவுகளை எழுதுவதற்கு கிட்டதட்ட 5 வருஷம் ஆயிருக்கு. ஆனா எனக்கு இந்த 1000 பதிவுகளை படிப்பதற்கு, எத்தனை வருஷம் ஆகுங்க???

    வாழ்த்துக்கள். இன்னும் எத்தனை அரசியல் தலைவர்களோட தலை உருளப்போகுதோ????

    உங்களோட இந்த 1000 பதிவுகளோட சீக்ரட் கண்டுப்பிடிச்சுட்டேன். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால், ஒரு பெண் இருக்கிறாள் என்பதற்கு சரியான உதாரணம் நீங்க தான் பாஸ். உங்கள் மனைவி பூரிக்கட்டையால அடி கொடுத்து,அடி கொடுத்து உங்களை 1000 பதிவுகளை எழுத வச்சுட்டாங்களே!!!! என்ன, நான் சொல்றது கரெக்ட் தானே..................

    ReplyDelete
  18. தொடருங்கள். இனியவாழ்த்துகள்!.

    ReplyDelete
  19. ஆஹா!!! ஆயிரமா !!herzlichen Wünschen für Ihren Erfolg
    ஒண்ணுமில்லை உங்க சாதனையை ஜெர்மன் மொழியில் பாராட்டினேன் :)
    இதேபோல எப்பவும் சந்தோஷமா பூரிகட்டையடி வாங்கிக்கொண்டே/தாங்கிக்கொண்டே மேலும் அதிகதிகமான பதிவுகளை தரணும் :)
    உங்க பதிவுகள் முக்கால் வாசியாவது கண்டிப்பா படிச்சிருக்கேன் ...
    ஆயிரம் பதிவுகள் என்பது சாதாரண விஷயமில்லை !!கிரேட் தொடருங்கள் (பூரிகட்டையடி வாங்குவதையும் சேர்த்து தான் சொன்னேன் :)
    உங்களுக்கு பரிசு கொடுக்கணும் ஆனா அதைவிட முக்கியமா எழுதறதுக்கு உங்களுக்கு இவ்வளவு நேரம் இருக்குன்னா !!!அந்த சாதனைக்கு பின்னாலிருக்கும் உங்க மனைவிக்குதான் அனைத்து பாராட்டுக்களும் :))
    உங்களுக்கு பட்டர்ப்ளை ப்ராண்ட் சப்பாத்தி மேக்கர் DHL இல் அனுப்பறேன் :)

    ReplyDelete
  20. ஆ.........ஆ,,,,,,,,,ஆ ஆயிரமாவது பதிவா????............ ஒரு பதிவுக்கு எத்தனை பூரிக்கட்டை என்பது எனக்கு தெரியலையே.!!... சொக்கா........நீயாவது எனக்கு சொல்லக்கூடாதா?............

    ReplyDelete
  21. வாழ்த்துகள் மதுரைத் தமிழன்.

    உங்கள் உழைப்பு என்னை ஆச்சரியப் பட வைக்கும். ஒவ்வொரு பதிவுக்கும் படம் தேர்ந்தெடுத்து அதில் வார்த்தைகளைச் சேர்த்து எத்தனை வேலை......

    நக்கலும் நையாண்டியும் தொடரட்டும்..... பூரிக்கட்டை அடி பற்றி நான் ஒன்றும் சொல்லப் போவதில்லை! :)

    ReplyDelete
  22. ஆஹா!!! அசத்துங்க!! :))
    உங்ககிட்ட ட்ரீட் கேட்கமுடியாது. என்ன நான் டீ டோட்டலர்(ஏன் பொண்ணுங்க அந்த வோர்ட் டை பயன்படுற்ற்ஹ்தகூடாதா?) என்னது நீ பதிவு எழுதுறதே ஒரு கேட்ட பழக்கம் தான்னு யாரப்பா அங்க வாய்ஸ் கொடுக்கிறது. அது மைதிலியின் மனசாட்சியாம்:((

    ReplyDelete
  23. நீங்க அரசியல் பதிவுகளை சீரியஸா எழுதினாலும், காமெடியான பதிவா எழுதினாலும் எனக்கு ரொம்ப பிடிக்கும் சகா. வாழ்த்துகள் (அதும் சொல்லகூடாதா?)

    ReplyDelete
  24. நூறாவது பதிவு போடப்போறதையே பெரிய சாதனையா நினைச்சியே மைதிலி . அடங்கு அடங்கு.

    ReplyDelete
  25. அரசியல் நையாண்டியில் ஆரம்பித்து வீட்டுக்குறும்புகள் வரை சுவாரஸ்யமாக பகிர்வது உங்கள் சிறப்பு! ஒவ்வொரு பதிவிற்கும் நீங்கள் போடும் படம் என்னை வியக்க வைக்கும். இதை எப்படி உருவாக்குகிறீர்கள்? எவ்வளவு நேரம் பிடிக்கும்? நாமும் ஒரு நாள் இதே மாதிரி செய்து பார்க்க வேண்டும் என்று தோன்றும். ஆனால் இதுவரை செய்தது இல்லை! சோம்பேறித்தனம்தான். ஆயிரம் பதிவுகளில் சில நூறு பதிவுகள் நான் வாசித்திருப்பேன்! சோடை போனதில்லை உங்கள் எழுத்து! நிச்சயம் இன்னும் பல்லாயிரம் பதிவுகள் தாண்டும்! வாழ்த்துக்கள் அன்பரே!

    ReplyDelete
  26. என்னையும் என் வலைப்பதிவுகளையும் நிழல்போலத் தொடர்வதாகச் சொல்லி வந்த என் அன்புத்தம்பி. தங்கக்கம்பி இன்று ஆயிரமாவது பதிவினை எட்டியுள்ளது கேட்க மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

    மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். மேலும் பல வெற்றிகளை எட்டவும் வாழ்த்துகள்.

    நிழல் இன்று 1000 ஐ எட்டிவிட, நிஜம் இன்று 577 லேயே உள்ளது ..... நிஜம். நிஜமாகச் சொல்கிறேன்.

    சில சமயங்களில் நிழல் நிஜத்தைவிட உயரமாக, பெரியதாகவும் தோன்றும் என்பதே இயற்கை.

    வாழ்க ! வளர்க !! என்றும் அன்புடன் VGK

    ReplyDelete
  27. பதிவைக் கண்டதும் முதல் ஆளாக போட்ட விமர்சனத்தை காணவில்லையே? காக்கா தூக்கிட்டு போயிடுச்சோ?

    என் இனிய வாழ்த்துகள்.

    1. ஆயிரம் என்பது என் பெரும் இலக்கு. ஆனால் வாய்ப்புள்ளதா? என்று தெரியவில்லை. ஆர்வம் இருக்கின்றது. ஆனால் சிறிய பதிவுகளில் ஆர்வமில்லை.

    2. நிச்சயம் உங்கள் பதிவு ஒரு புன்னகையை தந்து விடுகின்றது.

    3. வரைகலை உங்களுக்கு கைவந்த கலை. ஆனால் நான் எதிர்பார்த்துள்ள திறமையில் பத்து சதவிகிதம் கூட உங்களிடம் இருந்து வர வில்லை என்ற ஆதங்கம் உண்டும். பேசும் போது அதைத்தான் சொல்லி உள்ளேன்.

    4. பலதரப்பட்ட வாசக வாசகிகளை பெற்று இருப்பது உங்களின் நம்பகத்தன்மை.

    5. சரியோ தவறோ உங்கள் நிலைப்பாட்டில் இருந்து தப்பித்துக் கொள்வதில்லை. பலமுறை கவனித்துள்ளேன்.

    6. மதங்களை தாண்டிய மனிதர்களை நேசிக்கத் தெரிந்த உங்களுக்கும் உங்களை உங்கள் போக்கில் செயல்பட அனுமதித்த உங்கள் காதல் மனைவிக்கு மற்றும் குழந்தைகளுக்கும் என் இனிய வாழ்த்துகள்.

    ReplyDelete
  28. நிஜமாவே மலைப்பா இருக்கு நண்பா... ஆயிரம்ங்கற எண்ணிக்கையத் தொடறது சாதாரண விஷயமில்ல... சீரியஸான விஷயங்களையும் நகைச்சுவையா சொல்லி வலையுலகில் எல்லாரோட மனசையும் சம்பாதிச்சு வெச்சிருக்கிங்க. இந்த சாதனைகள் தொடர்வதற்கு என் இதயம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  29. தொடரட்டும் உங்கள் பதிவுகள்!

    வாழ்த்துக்கள் சகோதரரே!

    ReplyDelete
  30. ஒருவனுடைய வெற்றிக்கு பின்னால் மனைவி உள்ளாள் என்பது மதுரை தமிழன் விடயத்தில் உண்மைதான். மனைவி மட்டுமல்ல பூரிக்கட்டையும் சேர்ந்து நிற்கிறது. ஆனால் பூரிக்கட்டை பின்னால் மட்டும் அல்ல left, right, up, down, middle என்று மதுரை தமிழனின் எல்லா ஏரியாவிலும் நிற்பதுபோல் எனக்கு தோன்றுகிறது. மேன்மேலும் வளர (நான் அடியையும் சேர்த்துதான் சொன்னேன்)வாழ்த்துகள்.

    ReplyDelete

  31. எனது இந்த 1000மவது பதிவில் வந்து கருத்திட்ட அனைவருக்கும் மற்றும் வழக்கம் போல சைலன்டாக வந்து படித்து சென்ற சைலண்ட் ரீடர்களுக்கும் மனமார்ந்த் ஸ்பெஷல் நன்றிகள் கை எடுத்து வணங்கி நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன் எத்தனை அன்பு , அரவணைப்பு எத்தனை அறிவுரைகள் , ஆலோசனைகள் எல்லாம் எதற்கு எனது தளம் வளம் பெறதானே .இன்று வரையிலும் , இனிமேலும் நான் காணும் வெற்றிகளுக்கு நான்அடையும் புகழ்களுக்கு உரியவர்கள் நீங்கள் தான் அதனால் தலை குனிந்து வாழ்த்தி வணங்குகிறேன்

    ReplyDelete
  32. வாழ்த்துகள் மதுரைத் தமிழன். மேலும் பல சிறப்பான பதிவுகளை எழுதுங்கள். பரபரப்பான தலைப்பை வைத்து இழுத்து உள்ளே எதுவும் இல்லாமல் சில முறை ஏமாந்து இருக்கிறேன். இது போல செய்வதை தவிர்க்கவும். சில நேரங்களில் எதிர்மறையான நிகழ்வுகளை படிப்பவர்களுக்கு ஏற்படுத்தலாம்.

    ReplyDelete
  33. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  34. அவர்கள்...உண்மைகள் பற்றிய தென்றல் சசிகலாவின் கருத்து இது அவர் பலமுறை எனது கருத்து பகுதியில் போட்டும் அது எனக்கு வந்து சேராததால் இமெயில் மூலம் அவர் அனுப்பிய கருத்து இதுதான்

    தனக்கென ஒரு தனி பாதையில்
    நீயா நானா போட்டியில்லாமல்
    நிகழ்வோடு நிஜமாய் ..
    சிரிப்போடு சிந்திக்க..
    சிலர் அல்ல
    பலரின் மனதை
    வரிகளால் வருடும்..
    அவர்கள் உண்மைகள்
    பல சுவை தரும்
    இணைய இதழ்..
    சுவிட்... காரம்..காபி என
    என்றென்றும் எங்களை
    காண வருகை தர அழைப்பதைத்தவிர வேறென்ன சொல்ல நான்..

    தென்றல் சசிகலா.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.