Saturday, June 14, 2014



அன்னை ஒரு கோவில் என்றால் தந்தை ஒரு தெய்வமடா!!!


தாயைப் போலொரு தந்தையைக் கண்டேன்
தவமாய் அவனை என்னுள் வைத்தேன்
சேயைப் போற்றும் அப்பனை மறந்தவர்
செழுமை உடையவரா ..........


அன்னை கோவில் என்றால்
அப்பன் தெய்வமடா ......
அந்தத் தெய்வம் இல்லை என்றால்
நீயும் இல்லையடா ....

தாயைப் போற்றும் மனமே கொஞ்சம்
தந்தையை நினையாயோ -அந்தத்
தந்தையின் காலடி சொர்க்கம் என்று
சங்கதி சொல்லாயோ !......
வாயைப் பிழந்து பார்க்கும் போது
அம்மா தெய்வமடா ........
அந்தத் தெய்வமும் வாழ வழிகள் வகுத்த
அப்பா பாவமடா ......
எங்கள் அப்பா பாவமடா ......

காலை இழந்ததும் கண்ணீர் சிந்துது
காளை மாடிங்கே அந்தக்
காளை மாட்டின் கவலைகள் எல்லாம்
அதன் கன்றுகள் தான் இங்கே ....

பத்தே மாசம் சுமந்தவள் என்னைப்
பாதியில் மறந்து விட்டாள் நான்
பாக்கியம் செய்தவன் அதனால் அப்பனின்
பாசத்தில் வளர்ந்து விட்டேன் ....

அம்மா அம்மா அம்மா தெய்வம் என்றால் போதாது
சிலர் அப்பனைக் கொஞ்சம் இப்படி நினைத்தால்
தப்பேயாகாது ...................

கொட்டும் மழையில் குடையாய் வந்தவன்
குல தெய்வம் தான் இங்கே
அந்தக் குல தெய்வம் தந்த
அறிவைக் கொஞ்சம் பார் பார் பாரிங்கே !...

பட்டப் படிப்பு நான் படிக்க
பனியில் அவன் உறைந்தான்
தன் பாசம் எல்லாம் கொட்டிக் கொடுத்துத்
தனியாய் ஏன் இருந்தான் ?..........!

(தாயைப் போலொரு....
http://rupika-rupika.blogspot.com/2014_05_01_archive.html

என் மனதை தொட்ட இந்த கவிதையை எழுதியவர் : அம்பாளடியாள் ( ரூபிகா ) அவரின் அனுமதியுடன் இந்த கவிதை இங்கு வெளியிடப்படுகிறது.. மேலை நாட்டில் வசித்த போதிலும் தமிழின் மீது உள்ள காதலால் கவிதைகளை படைத்து அம்பாளடியாள் என்ற வலைத்தளத்தில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.. இவர் மட்டும் தமிழகத்தில் வசித்து வந்தால் சிறந்த புகழ் பெற்ற தமிழ் சினிமா பாடலாசிரியராக வந்து இருப்பார் என்பது நிச்சயம் அவரது கவிதை மழையில் நனைய விருப்பம் உள்ளவர்கள் இந்த லிங்கை க்ளிக் செய்து http://rupika-rupika.blogspot.com/2014_05_01_archive.html ரசித்து மகிழுங்கள்

அன்புடன்
மதுரைதமிழன்




9 comments:

  1. சிறப்பு...

    பாக்கியம் செய்த அம்பாளடியாள் அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. topicகை பார்த்தவுடன் செம டௌட். இது யார் பதிவென்று !! so இந்த சிந்தனையை பாராட்டும் விதமாய் உங்களுக்கு ஒரு த.ம 2:)

    ReplyDelete
  3. தாய்-மகன் பாசமும், தந்தை-மகள் பாசமும் எங்கும் உயர்ந்தே நிற்கும். இருப்பினும் டாஸ்மாக் சென்று வரும் தந்தை முன் மகளை நினைத்து ஏங்கும் தாய்தான் மிகவும் உயர்ந்தவள்.

    தந்தையின் பாசத்தைக் கவிதை வடிவாக எழுதியவருக்கும் வெளியிட்டவருக்கும் பாராட்டுக்கள்.

    கோபாலன்

    ReplyDelete
  4. மிக்க நன்றி சகோதரா தங்களின் தன்னம்பிக்கை வீண் போகாது என்றோ ஒரு
    நாள் இந்த வாக்கும் பலிக்கும் !

    ReplyDelete
  5. ஹைய்யா! இப்படியும் கூட ஒரு பதிவைத் தேத்திடலாமா?
    சும்மா சொல்லக்கூடாது .மதுரை என்றாலே மூளை என்று ஒரு அர்த்தம் உண்டு போல !
    எனினும் அடுத்தவர் பதிவை மெச்சும் விதம் பாராட்டுக்கு உரியதே!

    ReplyDelete
  6. அருமையான பாடல்! சகோதரியின் வலைப்பக்கத்தை தொடர்ந்து வாசிப்பவர்களில் நானும் ஒருவன்! பகிர்வுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  7. அம்பாளடியாள் சகோதரி ரூபிகாவின் அருவி போல் கொட்டும் தமிழையும், அவரது கவிதைகளையும் மிகவும் ரசிப்பவர்கள் நாங்கள்! ஆன்மீகம் மட்டுமல்ல காதல் கவிதைகள் எழுதுவதிலும் வல்லவர்!

    அவர் தமிழ் சினிமாவில் மிளிரத்தக்கவர்தான்...அவரது வலைத்தளத்திலும் சொல்லி இருந்தோம்! ஆனால் இவரது இந்தத் தூய தமிழை தமிழ் சினிமா உலகத்தினர் கடித்துக் குதறி பாடுபவர்கள் கையில் கொடுத்தால் .......அருமையான மனம் கவரும் இந்தக் கவிதைகள் படும் பாட்டை நினைத்தாலும் பயமாகத்தான் இருக்கின்றது!

    ReplyDelete
  8. அருமையான கவிதை. அவரது தளத்திலும் படித்தேன்.

    ReplyDelete
  9. அருமையான கவிதை நண்பரே... ரசித்து படித்தேன்...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.