Monday, June 23, 2014



மன்மோகன் சிங் சொல்லாமல் செய்ததை மோடி சொல்லிச் செய்கிறார் அது என்ன?


மோடி கறுப்புபண பேர்வழிகள் பட்டியலை முதலில் வெளியிட்டு வெளிநாடுகளில் இருக்கும் கறுப்பு பணத்தை கைப்பற்றி காலியாக இருக்கிறது என சொல்லப்படும் அரசாங்க கஜானாவை நிரப்பலாம் இதனால் அதிக வரி விதிக்கும் நிலைமை ஏற்படுவதில்லை. முந்திய அரசாங்கம் தொடர்ந்த ஊழல் வழக்குகளை துரிதப்படுத்தி தவறுக்கு காரணமானவர்களின் சொத்துக்கள் முழுவதையும் அரசாங்க கஜானாவில் கொண்டு வந்து குவிக்காலம்.. தவறு செய்த காங்கிரஸ் கட்சிக்காரன் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கலாம் அதைவிட்டு விட்டு எங்கள் அரசாங்கம் யாரரையும் பழிவாங்காது என்று சொல்லி பம்மக் கூடாது. தேசிய நதி நீர் திட்டம் என்று குழுக்கள் மேல் குழுக்கள் போடமல் ஒரு பட்ஜெட்டை போட்டு காரியத்தை தென்னகத்தில் இருந்து ஆரம்பிக்கலாம்.

ஆனால் இதை எல்லாம் விட்டு விட்டு ஹிந்தி, கேஸ், ரெயில் கட்டண உயர்வு என்று மோடி அரசு செய்தால் சோனியா ஆட்சி இன்னும் மாறவில்லையோ என்ற எண்ணம் மக்களின் மனதில் விதைக்கப்பட்டு 5 ஆண்டுகளில் மிக பெரிய மரமாக வளர்ந்து விடும். ஒன்று மட்டும் நிச்சயம் 5 ஆண்டு என்பது கண்ணை மூடி கண்ணை திறப்பதற்குள் பறந்துவிடும். அப்புறம் என்ன சோனியாவின் நேரடி ஆட்சியே மீண்டும் வந்துவிடும் இதைதான் உங்களை விரும்பி நீங்கள் நாட்டுக்கு நல்லது செய்வீர்கள் என்று நினைத்து அமோகமாக வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நீங்கள் செய்ய விரும்புகிறீர்களா என்ன?

மோடி சாப் சார்பாக யாராவது பதில் சொல்லுங்கப்பா?

அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. வணக்கம்
    எல்லோரும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள்தான்... அதை விட வேறு ஒன்றும் சொல்ல முடியாது.....
    பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. யார் பதில் சொல்லப் போறாங்க... சீக்கிரம் சொல்லுங்கப்பா....

    த.ம. +1

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.