Sunday, June 22, 2014




மோடியின் சாதனைகள். சபாஷ் மோடி! (நாட்டு நடப்புகள் இங்கே நக்கல் செய்யப்டும் )


மோடி :

செய்தி : ஈராக்கில் தீவிரவாதிகளிடம் பிடிபட்ட இந்தியர் அனைவரும் பாதுகாப்பாக இருக்கின்றனர். மோடி அரசாங்கம் அறிவிப்பு'


நானெல்லாம் மோடி இரவோடு இரவாக விமானப்படையை அனுப்பி, அதிரடியா பணயக் கைதிகளை மீட்டுட்டு வருவார் என்றுதான் நம்பினேன். பின்னே? மோடி தலைமையில் இப்போது இருப்பது வலிமையான பாரதம் அல்லவா?! ஆனால் தீவிரவாதிகளிடம் இருப்பதைதான் பாதுகாப்பு என்று மோடி அரசாங்கம் கருதுகிறதோ என்னவோ? ஆஹா என்ன அருமையான பதில் தருகிறது மோடி அரசாங்கம்


செய்தி ; ரயில்வே கட்டணம் மற்றும் பெட் ரோல் விலை உயர்வு தவிர்க்க முடியாதது.

கடந்த மன்மோகன் ஆட்சி செயல்படாத அரசாங்கமாக இருந்தது. அதனால் அவர்கள் விலையை அதிகம் கூட்டாமல் இருந்து விட்டார்கள் ஆனால் மோடி அரசாங்கமோ அப்படி இல்லை இது செயல்படும் அரசு அதனால்தான் விலை உயர்வு. இப்படி ஒரு செயல்படும் அரசுக்கு வாக்களித்த இந்திய மக்களுக்கு மோடி மிக நன்றிவயப்பட்டவராக இருக்கிறார் போல ஹும்ம்ம்ம்

வெளிநாட்டுத் தலைவர்களுடன் இந்தியில் தான் பேசுவேன் - பிரதமர் மோடி அதிரடி
வெளிநாட்டுத் தலைவர்கள் தப்பித்தார்கள் இல்லையென்றால் மோடி பேசும் ஆங்கிலத்தை கேட்டு தூக்கு போட்டு செத்து இருப்பார்கள்.

மோடி அரசின் சாதனைகள் வரும் ஜந்து ஆண்டும் அமோகமாக தொடரும்
வாழ்க மோடி வளர்க அவரின் அரசாங்கம்

பிஜேபி :
ஜனாதிபதி பதவிக்கு தகுதியானவர் அத்வானி: நிதின் கட்காரி புகழாரம் பேசாம நேரடியாக அத்வானி உப்புக்கு சாப்பாணி அல்லது ரப்பர் ஸ்டாம்புதான் என்று நேராகவே சொல்லி இருக்கலாமே

குஜராத் முதல்வர் ஆனந்தி படேல் பயணம் செய்வதற்காக ரூ.100 கோடியில் ஜெட் விமானம் வாங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது

வளர்ச்சி பாதையில் குஜராத் அரசாங்கம் :ஆமாம் குஜராத்தின் வளர்ச்சியை தினசரி டெல்லிக்கு சென்று மோடியிடம் சொல்லிவிட்டுதான் முதல்வர் தன் ஆபிஸுக்கு செல்ல வேண்டுமா என்ன?



திமுக:
திமுகவின் தோல்விக்கு 33 பேர்தான் காரணம் அவங்க மட்டும் இல்லையென்றால் ஸ்டாலின் பிரதமர் ஆகி இருப்பார்...

திமுகவின் தோல்விக்கு குஷ்புவிடம் முன்னைப் போல இப்போது கவர்ச்சி இல்லை என்பதுதான் திமுகவின் தோல்விக்கு காரணம் அதனால்தான் குஷ்புவுக்கு முக்கியத்தும் தரப்ப்படவில்லை

திமுகவில் ஒழுங்கு நடவடிக்கை கலைஞர் அறிவிப்பு! ஐயா சாமி உங்க குடும்பத்தில் எப்ப ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் போறீங்க

அதிமுக :
//தொழில் அதிபர்கள், தமிழகத்தில், நம்பிக்கையோடு தொழில் துவங்கலாம்; இனி மின்தடை இருக்காது,'' என, மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார்.//
இதனால் சொல்ல வருவது என்னவென்றால் தொழில் துவங்குபவர்களை தவிர மற்றவர்கள் எல்லாம் வேறு கண்காணாத இடத்திற்கு சென்று விடுங்கள் என்றுதான்

அன்புடன்
மதுரைத்தமிழன்

13 comments:

  1. மோடி பேசும் ஆங்கிலம்/// இது தான் மதுரை லொள்ளா?

    ReplyDelete
    Replies
    1. //மோடி பேசும் ஆங்கிலம்// அதுக்கும் ஒரு மொழிபெயர்ப்பாளர் வச்சுட்டா?

      Delete
  2. யோசிக்க வேண்டிய விஷயங்கள் தான்.

    ReplyDelete
  3. ரசிக்கும்படியான கிண்டல்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. மோடியின் ஆங்கிலம்-
    "சோ" இந்தியப்பிரதமர் யாராயினும் ஆங்கில அறிவு மிக்கோராக இருக்க வேண்டும் என வெகுகாலமாக கூறுபவர். நீங்கள் சொல்வதுபோல் மோடிக்கு ஆங்கிலம் ஆகாதெனில் எப்படி ஏற்றுக் கொண்டார்.

    ReplyDelete
  5. நக்கலு ரொம்ப தூக்கலு! ஹாஹாஹா!

    ReplyDelete
  6. தீவிரவாதிங்கறாங்க, பாதுகாப்புங்கறாங்க.

    பாசமுள்ள தீவிரவாதிகளிடம் பிடிபட்ட இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்பதுதான் சரியாக இருக்கும்.

    கோபாலன்

    ReplyDelete
  7. கொஞ்ச நாளைக்கு கதக்களி தானோ?

    ReplyDelete
  8. இப்பதானே ஆரம்பிக்கிறாங்க.. போகப்போக பார்க்கலாம்....

    ReplyDelete
  9. திமுக தோல்விக்கு சூப்பர் காரணத்தை கண்டுப்பிடித்திருக்கீங்க பாஸ்

    ReplyDelete
  10. வணக்கம்

    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
    http://blogintamil.blogspot.com/2014/06/2.html?showComment=1403913354053#c858988773780526037

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.