Monday, June 16, 2014




திமுகவில் இருந்து விலகுவதாக, நடிகை குஷ்பு இன்று திடீர் அறிவிப்பு

இது தொடர்பான விலகல் கடிதத்தை, திமுக தலைவர் கருணாநிதிக்கு அவர் அனுப்பியுள்ளார்.


அந்தக் கடிதத்தில், "என்னை தங்களின் இல்லத்தில் ஒருத்தியாகவே ஏற்றுக்கொண்ட அன்புள்ளம் கொண்ட தமிழ் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு கழக உறுப்பினராக பொதுவாழ்வில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன்.

அந்த நாள் முதல் கழகத்தில் எனக்கு அளிக்கப்பட்ட பணியை நான் நூறு சதவீதம் சிரத்தையுடன் நிறைவேற்றியதை கழகத்தில் பொறுப்பில் உள்ளவர்கள் முதல் அடிப்படைத் தொண்டர்கள் வரை அனைவரும் அறிவார்கள்.

ஆனால், என் அர்ப்பணிப்பும், உழைப்பும் ஒருவழிப் பாதையாகவே தொடர்ந்து நீடிக்கும் என்ற நிலை கழகத்தில் உள்ள போது நான் தேர்ந்தெடுத்த பாதையும் பயணமும் தாங்க இயலாத மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

ஆகவே, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தும், அதன் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையில் இருந்தும் விலகுவது என்ற முடிவை கனத்த இதயத்துடன் மேற்கொள்கிறேன்" என்று அந்தக் கடிதத்தில் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்
 

சிறிது காலம் கடந்து எடுத்த முடிவு ஆனாலும் சரியான முடிவு ஒரு வேளை தேர்தலுக்கு முன்பு எடுத்திருந்தால் பாராளுமன்றங்களில் இவரது குரல் ஒலித்திருக்கும். இவர இப்போது சேர வேண்டிய இடம் பாரதிய ஜனதா கட்சி. ஒரு வேளை அந்த கட்சியில் சேர்ந்தால் வருங்கால தமிழக முதல்வராக வர நல்ல வாய்ப்பு உண்டு. ஜெயலலிதாவிற்க மாற்று குஷ்புதான் ஸ்டாலின் அல்ல


குஷ்பு விலகுக்கு கலைஞர் பதிலடி : குஷ்பு போனால் அந்த இடத்திற்கு அமலா பால் அமர்த்தப்படுவார். அமலா பாலை கிள்ள நினைப்பவர்கள் அவர்கள் இடையை கிள்ளிப் பார்க்க கூடிய விரைவில் கூட்டம் நடத்தப்படும்


அன்புடன்
மதுரைதமிழன்

18 comments:

  1. வணக்கம் சகோதரர்
    குஷ்பு விலகினாரா அல்லது விலக்கப் பட்டாரா என்பது அவர்களுக்கே வெளிச்சம். அது இருக்கட்டும் ஒரு வழி பாதையாகவே நீள்கிறது என்று சொல்லியிருப்பதன் அர்த்தம் என்னவாக இருக்கும் பதவி உயர்வு இல்லை என்பது தானே! அடுத்த முதல்வர்னு போட்டீங்களே ஒரு போடு! அவர் விரைவில் இணைய இருப்பது அதிமுகவில் தான் இருக்கும். பொருத்திருந்து பார்ப்போம். பகிர்வுக்கு நன்றிகள் சகோதரர்.

    ReplyDelete
    Replies
    1. பிஜேபி யில் பெண்கள் அதுவும் தமிழகத்தில் மதிக்கப்படுகிறார்கள் & மதிக்கப்படுவார்கள் அதனால் நிச்சயம் அங்கு சேர்ந்தால் நல்ல வாய்ப்பு அல்லது அதிமுகாவில் சேர்ந்தாலும் நிச்சயம் அம்மா குஷ்புவை மதிப்பார். காரணம் தன்னைப் போல போராடும் குணம் கொண்டவர் என்பதால். ஒரு வேளை சொத்து வழக்கு கேஸில் ஜெயாவிற்கு எதிராக தீர்ப்பு வந்து சிறை செல்ல நேர்ந்தால் அந்த சமயத்தில் இவர் நிச்சயம் நல்ல தலைவராக செயல்படுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது

      Delete
    2. அம்மாவை ரொம்பப் பேசிவிட்டார் குஷ்பு. அவருக்கு அங்கு இடம் கிடைக்காது. எஸ்.வி.சேகர் மாதிரி, காத்திருந்து காத்திருந்து காலங்கள் நோகுதடி பாடவேண்டியதுதான். எந்தக் கட்சியில் சேர்ந்தாலும் அவரின் தி.மு.க விசுவாசத்தை (3 வருடங்கள் இருந்தபோது) திமுக கேள்விக்குரியாக்கும்.

      Delete
  2. பா ஜ க ஒரு கேபிள் சேனல் தொடங்கினால், இதில் இடம்பெற ஆங்கிலம் தெரிந்த ஒரு பெண்மணி தேவைப்பட்டால், அங்கே குஷ்புவுக்கு இடம் அவசியம் உண்டு.

    திரைப்பட முதல்வர்கள் அனேகம் பேரைத் தமிழகம் சந்தித்துவிட்டது. போதுமடா சாமி.

    கோபாலன்

    ReplyDelete
    Replies
    1. இதுவும் நல்ல ஐடியாவாக இருக்கிறதே

      Delete
  3. குட்டையைக் கலக்காமல் மீனைப் பிடிக்க முடியாது!!

    ReplyDelete
  4. நன்றாகக் கொளுத்திப் போடுகிறீர்கள்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. ஆ என்ன இது
    தி.மு.க என்ன ஆகும்
    http://www.malartharu.org/2014/06/time-management-part-one.html

    ReplyDelete
  6. த.ம மூன்று
    http://www.malartharu.org/2014/06/time-management-part-one.html

    ReplyDelete
  7. வருவார் போவார் வழக்கம்தான்- இது,
    வாடிக்கை அரசியல் பழக்கம்தான்

    ReplyDelete
  8. neega vera varungaala muthalamaichcharnnu thiriai kozhuththi pottu vitteenga ini kushbuvirkku thokkam pochchu

    ReplyDelete
  9. சிறந்த கருத்துப் பகிர்வு

    ReplyDelete
  10. அமலா பாலுக்கு இடுப்புச்சதை இருக்கிறது என்று கண்டுபிடித்த உங்களுக்கு, 'மைக்ரோஸ்கோப் கண்ணர்' என்ற பட்டம் அளிக்கிறேன்.

    குஷ்பு திமுகாவில் சேராமல் அமைதியாக இருந்திருந்தால் அதிமுகவைக் கைப்பற்றி இருக்கலாம். இப்போ காலம் கடந்துவிட்டது.

    பாஜாகாவில் சேர முடியாது. அம்மாவை ரொம்பத் திட்டிவிட்டதால், இவருக்கு திருனாவுக்கரசர் கதிதான்.

    ReplyDelete
  11. அமலா பால் பவம்யா, அது பாட்டுக்கு சிவனேன்னு இயக்குயன்ர் விஜய்யை கண்ணாலம் கட்டிக்கிச்சு.. ஆமா, அந்த பொண்ணுக்கு இடை இருக்குதுன்னு யாருங்க சொன்னது உங்களுக்கு?

    ReplyDelete
  12. எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும்.... முதலில் மதுரைத் தமிழனின் வழக்கமான கலாய்ப்புனுதான் நினைத்தோம்! அவர் முன்பே எடுத்திருக்கலாம்.......ம்ம்ம்குஷ்பு எந்தக் கட்சியில் சேர்ந்தாலும் யோசித்து முடிவு செய்தால் நல்லது!

    ReplyDelete
  13. அமலா பால் விரைவில் திமுகவில் சேர்ந்து கொள்கை பரப்புச் செயலாளராக ஆக்கப்படலாம்னு சொல்லுங்க!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.