Monday, June 16, 2014




சாணக்கியரின்(கலைஞர்) கேள்வியும் சமான்யவனின் பதிலும்

மின்சாரம் பற்றி ராமதாசும், செம்மொழி பற்றி நானும் சொன்னது உண்மை' என, தி.மு.., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கையில்: மின்சாரம் பற்றி ராமதாஸ் விடுத்த அறிக்கைக்கும், செம்மொழி பற்றி நானும் விடுத்த அறிக்கைக்கும் முதல்வர் பதில் கூறாமல், அமைச்சர்கள் பதில் சொல்லியுள்ளனர். அதிலிருந்தே நான் கூறியதும், ராமதாஸ் கூறியதும் உண்மை. நாங்கள் கூறிய செய்திகள் தவறாக இருந்தால், முதல்வர் பதில் சொல்லியிருப்பாரே? உண்மை அவருக்கும் புரிந்தபடியால் தான் பதில் அறிக்கை விடுக்க விரும்பாமல், இரண்டு அமைச்சர்களைப் பிடித்து, பதில் சொல்ல வைத்திருக்கிறார். அமைச்சர்களும் விதியே என, எதிர்க்கட்சிகளைத் தாக்கி அறிக்கையும் விடுத்திருக்கின்றனர். எது உண்மை என்பதை மக்களே அறிவர். இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.

சமான்யவனின் பதில்:
""நாங்கள் கூறிய செய்திகள் தவறாக இருந்தால், முதல்வர் பதில் சொல்லியிருப்பாரே?"" அப்போது இதற்க்கு முன் முதல்வர் கூறிய பதில்கள் எல்லாம் சரி என்று ஒப்புக்கொள்வாரா ? அல்லது தாம் கூறியவை தவறு என்று ஒப்புக்கொள்வாரா ?

அன்புடன்
மதுரைத்தமிழன்

10 comments:

  1. அரசியலெல்லாம் எங்களுக்கு விளங்காதப்பு நீங்க சமீபத்தில எத்தனை அடிகள்
    உருட்டுக் கட்டையால் வாங்கியுள்ளீர்கள் மக்களும் இதைத்தானே எதிர் பாக்கினம்
    அதப் போடுங்க :))

    ReplyDelete
  2. கேள்விக்கு கேள்வியா.... சபாஷ் பாஸ் அருமை........

    ReplyDelete
  3. எந்த பக்கம் போனாலும் கேட் போட்டால் எப்படி!? பாவம்ப்பா தாத்தா!

    ReplyDelete
  4. எந்த பக்கம் போனாலும் கேட் போட்டால் எப்படி!? பாவம்ப்பா தாத்தா!

    ReplyDelete
  5. வாசல்ல கடங்காரன் கதவத் தட்டினா ஊட்டு ஐயா உள்ள இருந்துக்கிட்டே சம்சாரத்தையோ பசங்களயோ அனுப்பி ஐயா வெளீல போய்ருக்காருன்னு சொல்ல வெப்பாரு. யாராவது பரிசு கொண்டுவந்தா தானே வந்து தெரப்பாரு.

    மு.க் சொன்னதோட அர்த்தம் இதுதானுங்க.

    கோபாலன்

    ReplyDelete
  6. வணக்கம் சகோதரர்
    சிலரின் பேச்சை. மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்பது மட்டும் புரிகிறது. நல்ல மாற்றுச் சிந்தனை. தொடருங்கள். நன்றி சகோதரர்.

    ReplyDelete
  7. பாவம் வயசானவரு விட்டுத்தொலைங்கப்பா!

    ReplyDelete
  8. ஏற்கனவே குழம்பி போனவர்களை நீங்கள் வேறு குழப்பிக்கிட்டு......

    விடுங்க தமிழா.

    ReplyDelete
  9. தாத்தாவை நான் வெறுத்தாலும், இந்த வயசுல, இத்தனை குடும்பபிரச்சனைக்கு மத்தியில் அவர் காட்டும் உழைப்பை நாம் மதிக்க வேண்டும். யாரும் தைரியமாகக் குரல் கொடுக்கவில்லையென்றால், அம்மா சாமியாடிவிடுவார் (1991-96ஐப் போல)

    ReplyDelete
  10. எவ்வளவு உன்னிப்பா கவனிக்கறீங்களே அவரை.... நீங்க அவரோட முதல் ரசிகர்!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.