Thursday, June 12, 2014


பொண்ணுங்க எப்பதான் திருந்த போறாங்களோ? அப்பாவி பொண்ணுங்க கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு.

இன்று எனக்கு தெரிஞ்ச பொண்ணுகிட்டே பேசினேன் அப்ப அவங்க ஓ.....என்று அழுதாங்க. நான் பயந்து போய் என்னங்க என்ன ஆச்சு என்று கேட்டேன். அதற்கு அவங்க சொன்னாங்க வூட்டுகாரர் ரொம்ப் திட்டிடாருன்னாங்க...


என்னங்க வூட்டுகாரர் உங்களை திட்டின்னா அதுக்கு அவருதான் அழணும் ஆனா நீங்க அழுகுறீங்க என்றேன்.

அதுக்கு அந்த பொண்ணு அதுதெல்லாம் உங்க வீட்டில் நடக்குறவிஷயம் ஆனா எங்க வீட்டில் அப்படி இல்லை என்று சொன்னாங்க ( இதுக்குதான் நாம அனாவசியமாக வாயை கொடுத்து வாங்கி கொட்டிக்க கூடாது)

ஒகே ஓகே உங்க வீட்டில் என்ன நடந்ததுன்னு சொல்லுங்க என்று கேட்டேன்( அடுத்த வீட்டில் என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிக்காட்டி நமக்கு தூக்கம் வராதே)

அதுக்கு அவங்க நேற்று நான் பூசணிக்காய சாம்பார் வைச்சேன் என்று சொல்லும் போதே நான் இடை மறித்து என்னங்க உங்க கணவருக்கு நான்வெஜ்ன்னா ரொம்ப பிடிக்கும் என்று சொல்லுவீங்களே அதனால நீங்க சாம்பார் வைக்கும் போது பூசணிக்காய்க்கு பதிலா சிக்கன் போட்டு சிக்கன் சாம்பார் வைத்து கொடுத்து இருக்கலாமே என்று சொன்னேன்

அதற்கு அவர் மதுரைத்தமிழா நானோ வேதனையில் இருக்கிறேன் நீ என்ன என்னை நக்கலா பண்ணுறே நான் சொன்னதை ஒழுங்கா கேட்கிறாயா அல்லது உன் மனைவி போல பூரிக்கட்டையாலே உன் தலையில் அடிக்கவா என்று கேட்டார்கள்

உடனே நான் வாய்யை மூடி அவர்களின் கதையை கேட்கலான்னேன்

நான் ஆசையாய் என் வூட்டுகாரருக்கு பூசணிக்காய் சாம்பார் பண்ணினேனா அதை சாப்பிடும் போது பூசணிக்காயை கடித்ததால்தன் அவருக்கு பல் வலிக்க ஆரம்பித்ததாம் பூசணிக்காயை கடித்தால் பல் எல்லாம் வலிக்காதுங்க ஒரு வேளை நான் புளியை கரைத்துவிடும் போது ஒரு சில புளியங்கொட்டை கை தவறி விழுந்து இருக்கலாம் அதைதான் நீங்க கடித்து இருப்பீர்கள் என சொன்னேன் ஆனால் அதை எல்லாம் கேட்க மனதில்லாமல் என்னை திட்டி கொண்டே இருந்தாருங்க அதனால்தான் என் மனசுக்கு கஸ்டாம இருக்குதுன்னு சொல்லி ஒப்பாரி வைத்தாங்க

அதை கேட்டு நான் சிரித்து கொண்டே என்னங்க நீங்க இன்னும் அப்பாவி பட்டிக்காட்டு பொண்ணாவே இருக்கிறீங்க.. எப்பதான் நீங்க எல்லாம் மாடர்ன் பொண்ணாகவோ அல்லது ஸ்மார்ட் பொண்ணாகவோ ஆவிங்க என்று கேட்டேன்

அதுக்கு அவங்க என்னங்க நான் ரொம்ப மாடர்னாகத்தான் இருக்கேன் இப்ப கூட பாருங்க நான் ஸ்லிவ்லெஸ் சட்டையும் சின்ன ஸ்கட்டும் அணிந்து மாடர்னாகத்தானே இருக்கேன் அதுமட்டுமல்ல எனது ஸ்மார்ட் தனத்தை பாராட்டிதானே எனக்கு என் மேனேஜர் புரோமோஷன் கூட கொடுத்தாரு என்றாள்

அதுக்கு நான் அவரிடம், "நான் சொல்ல வந்ததது அந்த அர்த்ததில் இல்லைங்க மாடர்ன் பொண்னு என்று நான் சொன்னது வீட்டுல சமைக்காம ஆபிஸ் முடிந்து வரும் போது அப்படியே ஹோட்டலுக்கு போய் சாப்பாட்டை வாங்கி கொண்டு செல்வதுங்க என்றேன்.

அப்படி எல்லாம் செய்ய முடியாதுங்க ஹோட்டல் சாப்பாடு உடம்புக்கு ஒத்துகாதுங்க அது மட்டுமல்ல அது அநாவசிய செலவும் கூட என்று சொன்னாள்

உடனே நான், அப்ப நீங்க ஸ்மார்ட் பொண்ணா மாறிடுங்க அதாவது உங்க வூட்டுகாரரையே தினமும் சமைக்க வைச்சுடுங்க அப்புறம் சாப்பாட்டில் அவர் குறையே சொல்ல முடியாது என்று சொன்னேன்

நான் சொன்னதைக்கேட்ட அந்த பெண் விழுந்து விழுந்து சிரித்தாள்... சிரித்த அவள் சிரிப்பை நிப்பாட்டி அப்ப உங்க வீட்டில் உங்க மனைவி நிச்சயம் ரொம்ப ஸ்மார்ட் பொண்ணாதான் இருப்பாங்க என்றாள்

நானும் ஆமாம் அவ ஸ்மார்ட்டான பொண்ணுதான் ஆனா அதே நேரத்தில் நான் மாடர்ன் ஆணாக மாறிட்டேன் என்றேன்

அப்ப நீங்க ஹோட்டலில்தான் தினமும் சாப்பாடு வாங்கி கொண்டு போகிறீர்களா என்று கேட்டாள்

நான் அதெல்லாம் இல்லைங்க... நீங்க சொல்வது மாடர்ன் பொண்ணுங்க செய்வது' ஆனால் மாடர்ன் ஆண் கிச்சனில் புகுந்து நன்றாக சமைத்து கொட்டுவதுதான் இந்த காலத்து மாடர்ன் ஆண் செய்வதுங்க என்றேன்

அதை கேட்ட அவள் மீண்டும் குலுங்கி குலுங்கி சிரித்தவாரே சொன்னாள் மதுரைத்தமிழா உன் வாயாலே நீ நீ நல்லா பிழைச்சுக்குவே என்றாள்

எது எப்படியோ அவளின் அழுகையும் கவலையும் அவளிடம் இருந்து பறந்து போய்விட்டது

ஏதோ நம்மாலால் ஒரு பெண்ணுக்கு செய்த சின்ன உதவிதான் இதுங்க..,

அப்ப வரட்டா.... நான் இப்ப கிச்சனுக்கு போவணும் இல்லை பூரிக்கட்டை என்னை தேடி வந்துடும்

http://avargal-unmaigal.blogspot.com/2012/10/blog-post_21.html




அன்புடன்
மதுரைத்தமிழன்

28 comments:

  1. இனி நானும் ஸ்மார்ட்டான பொண்ணா மாறிடுறேன்.

    ReplyDelete
    Replies
    1. அப்ப இதுநாள் வரை நீங்க ஸ்மார்ட்டா இல்லையா?

      Delete
  2. நானும் மாறனும்
    அப்பத்தான் நல்லதுன்னு படுது
    இப்போதுதான் காய்கறி நறுக்கத் துவங்கி இருக்கிறேன்
    நல்ல வழிகாட்டிப்பதிவு
    தொடர (பதிவையும் )வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies

    1. தலைவரே இங்கு நான் சொல்லும் அட்வைஸ் எல்லாம் பெண்களுக்கு மட்டுமே அது நமக்கு இல்லை

      Delete
  3. ஊரிலெ எந்தப் பொண்ணுங்க அழுதுகிட்டு இருந்தாலும் ஓடிப் பொய் சமாதானம் பண்ணுவது எந்த இடத்தில் ஃ புல் ஸ்டாப் ஆகுமோ கடவுளே .....

    ReplyDelete
    Replies
    1. நான் அவர்களை நோக்கி ஒடிப் போவதில்லை அவர்கள்தான் சமாதானம் அடைய என்னை நோக்கி வருகிறார்கள் என்னை நோக்கி யார் அமைதியை தேடி சமாதானத்தை தேடி வருகிறார்களோ அவர்களுக்கு சமாதானத்தையும் அமைதியையும் இளைப்பாறுதலையும் தருவேன் என்று கிறிஸ்து சொல்லுவது போலத்தான் நான் அவர்களுக்கு ஆறுதலையும் அதோடு அருமையான அட்வைஸையும் தருவேன்

      Delete
  4. இப்போதைக்கு நேரமில்லை நானு ஆசுப் பத்திரிக்குப் போகணுமாக்கும்
    வந்ததும் அவசியம் படிப்பேன் கூடவே உங்களைப் போன்றோருக்காக
    (வயசு போன பாட்டன் ) ஒரு கவிதை போட்டுள்ளேன் பார்த்து மகிழுங்கள் சரியா :))

    ReplyDelete
    Replies
    1. வயசான போன பாட்டன் களுக்காக வயசும் பல்லும் போன பாட்டி எழுதிய கவிதை அருமை

      Delete

  5. சிறந்த பகிர்வு!

    visit: http://ypvn.0hna.com/

    ReplyDelete
  6. நானும் மாறிட்டேனுங்க... (பூரிக்கட்டை எப்படி இருக்கு ...?)

    ReplyDelete
    Replies
    1. அட வாங்கம்மா வாங்க இப்பதான் வழி தெரிஞ்சுதா? பூரிக்கட்டைகென்ன அது நன்றாகத்தான் இருக்கிறது. அதால அடிவாங்கின நாந்தான் நல்ல இல்லை.. பூரிக்கட்டைமேல் வைச்ச அன்பு என்மேல் இல்லையே என்று நினைக்கும் போதுதான் இன்னும் ரொம்ப மொக்கை பதிவா போட்டு உங்களை மாதிரி உள்ள ஆட்களை வாட்டி வதைக்கணும் என்று தோன்றுகிறது... நல்லா இருங்கம்மா இருங்க

      Delete
    2. என்னம்மாஅழகு அழகாக கிராமியப் பாணியில் காதல் கவிதை எழுதி காய்ந்து போன எங்கள் மனதை சோலையாக்க்குவீர்களே அந்த கவிதைகள் மீண்டும் எப்ப வெளிவரும்

      Delete
    3. கற்பனைக்கு தடை இல்லை தான் ஆனாலும் எழுதுவதற்குத்தான் நேரம்இல்லை... மறக்காமல் இருப்பதற்கு மகிழ்ச்சிங்க.

      Delete
  7. ஒத்துக்கிறேன் நான் ஸ்மார்ட் இல்லை, ஸ்மார்ட் இல்லை:((
    அப்புறம் சமையல் டிப்ஸ் படிச்சேன். கலவை சாதமெல்லாம் ஆஹா!.
    ஆனா நீங்க நெஜமாவே சாம்பார் இப்படிதான் செய்வீங்கன்ன உங்கள மேடம் பூரிக்கட்டையில போடுறதோட விட்டாங்கலேன்னு சந்தோசப்பட்டுக்காங்க. பாவம் தான் மிஸ்ஸஸ் தமிழ்

    ReplyDelete
    Replies

    1. // நான் ஸ்மார்ட் இல்லை நான் ஸ்மார்ட் இல்லை///
      அப்படியா அப்ப நீங்க தினமும் என் பதிவை படியுங்க அதன் பின் நான் சொல்லிய படி நடக்காம இருந்தா நீங்க தன்னால ஸ்மார்ட் ஆகிடுவீங்க. அப்புறம் கூடிய சீக்கிரம் உங்களுக்கு நல்லாசிரியர் விருது கிடைக்கும்

      Delete

    2. // நான் ஸ்மார்ட் இல்லை நான் ஸ்மார்ட் இல்லை///
      நானும் உங்களை போலத்தானுங்க ஸ்மார்ட் இல்லை அதுனாலதான் பல சமயங்களில் கிச்சனில் குடி இருக்க வேண்டி இருக்குது ஹும்ம்

      Delete
  8. please read my comment as pooi (going and solacing ) not as false .
    It is a mistake . But Surprisingly both words fit well.

    ReplyDelete
    Replies

    1. நானும் அதை கவனித்தேன் பதில் சொல்ல நேரம் இல்லை அப்போது...

      பெண்களிடம் பல ஆண்கள் போய் சமாதானம் பண்ணுவதில்லை அவர்கள் அருகில் வரும் போது பொய் சமாதானம்தான் பண்ணுகிறார்கள். பெண்களும் அதை நம்புகிறார்கள்

      Delete
  9. இந்தப் பதிவைப் படிச்சி அதன் படி நடந்தால்....
    அப்பாவி பெண்களை “அடிப்பாவி பெண்ணே“
    என்று சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. அப்பாவி என்று நீங்கள் பேர் எடுக்க விரும்பினால் பிறர் உங்கள் தலையில் மிளகாய் அரைப்பார்கள்
      அடிப்பாவி என்று நீங்கள் பேர் எடுக்க விரும்பினால் பிறர் தலையில் நீங்கள் மிளகாய் அரைக்கலாம்
      உங்க வசதி எப்படி?

      Delete
  10. தேவைப்படும் நேரங்களில் அம்பியாவும், ரெமோவாகவும், அன்னியனாகவும் மாறிவிடுவேன்...அதாங்க சமைக்கும் பெண்ணாக, ஸ்மார்ட்டாக,மாடர்டனாகவும் தான்..

    ReplyDelete
    Replies
    1. இந்த பதிவு அப்பாவி பெண்களுக்குதான் ஸ்மார்ட்டான பெண்களுக்கு இல்லை அதுவும் உங்களை போல ரொம்ப ஸ்மார்ட்டாக இருப்பவர்களுக்கு இல்லை

      Delete
  11. இந்த பதிவு அப்பாவி பெண்களுக்காக எழுதியது ஆனால் வந்து படித்து கருத்து சொன்ன பெண்கள் எல்லாம் ஸ்மார்ட்டான பெண்களாவே இருக்கிறார்கள். அது எனக்கு மிகவும் ஆச்சிரியமாக இருக்கிறது ஸ்மார்ட்டான பெண்கள் கூட இந்த மதுரைத்தமிழன் எழுது பதிவை வந்து படிக்கிறார்களே என்று நினைக்கும் போது..

    எனது பதிவை படித்து கருத்து இட்ட ஸ்மார்ட்டான பெண்களான ராஜி,அபயா அருணா, அம்பாளடியாள், அருணா செல்வம், சசிகலா அனைவருக்கும் நன்றிகள் அகில உலகில் ஸ்மார்ட்டான தமிழ் பெண்மணிகள் 5 பேர்மட்டும்தானா?மீதியுள்ளவர்கள் எல்லோரும் அப்பாவிகள்தானா என்ன?

    ReplyDelete
    Replies
    1. நான் ஸ்மார்ட் இல்லையானு சொன்னதற்காக என்னை அந்த லிஸ்ட்டில் சேர்த்துக்கலை போல. so what நல்லாசிரியர் விருது வாங்க ஒரு நல்ல டிப்ஸ் கொடுத்துருக்கீங்க. தேங்க்ஸ் . ஆனா இந்த விருது இப்போ எல்லாம் கொடுக்கப்படுவதில்லை. ராதாகிருஷ்ணன் நினைவு விருது என்று பெயர் மாற்றப்பட்டு பலரால்(கவனிக்க பலரால்) வாங்க படுகிறது. so இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் நம்பினால் போதும் அவர்களே நல்ல ஆசிரியர்கள்:) சாரி ரொம்ப போர் அடிச்சுட்டேன்:)

      Delete
  12. நாங்கள் இருவருமே ஸ்மார்ட்டாக இல்லையே மதுரைத் தமிழா! என்ன செய்ய?!!!!

    ReplyDelete
  13. தமிழ்நாட்டில் இருக்கும் பெண்களுக்கு மட்டும் :

    இங்க இருக்கற அப்பாவிப் பொம்பளங்க கஸ்டப்படக்கூடாதுன்னு தலைவி மிக்ஸி, க்ரைண்டர் எல்லாம் குடுத்தாங்க. இந்த மதுரைத்தமிழன் வாழ்க. அப்பறம் அரைக்கற வேலையெல்லாம் ஆம்பளேங்க கிட்ட தள்ளிப்டுவோம்.

    ஆனா இப்போ இன்னோரு பிரச்னை. அடுத்த மாசத்லேந்து ரேசன்ல பருப்புல்லாம் குடுக்க மாட்டாங்களாம். அப்பாவிப் பொம்பளங்க அடுப்படிக்கே போக வேணாம். ஊட்டுக்காரி போட்டோவக் காட்னா அங்க பார்ஸல் தருவாங்களாம்.

    பெண்ணாட்சி பொன்னாட்சி.

    மனைவி சொல்லி எழுதியவன் கோபாலன்

    ReplyDelete
  14. இந்த பதிவை நான் முன்பே பார்த்துவிட்டு கருத்து போடாமல் இருந்தேன். ஆனால் இப்போது என்னுடைய மனைவி இந்த பதிவை படிச்சுட்டு, எனக்கு சமைச்சு கொடுங்கன்னு கேக்க ஆரம்ப்ச்சுட்டாங்க.

    சமைக்கத் தெரியாத ஆண்களின் பாவம் எல்லாம் உங்களை சும்மா விடாது. தினமும் நீங்கள் குறைந்தது பூரிக்கட்டையால் அடி வாங்குவீர்கள் என்று சமைத்தத் தெரியாத ஆண்களின் சார்பில் சாபம் அளிக்கிறேன்.

    ReplyDelete
  15. ஆஹா நல்ல ஐடியா தான் குடுத்து இருக்கீங்க.... ஆனா கூடவே நமக்கும் வேலை வெச்சுட்டீங்களே

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.