உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Saturday, June 21, 2014

கலைஞரின் நாட்டாமையும் மோடியின் புதிய ஹிந்தி கொள்கை தீர்ப்பும்

கலைஞரின் நாட்டாமையும் மோடியின் புதிய ஹிந்தி கொள்கை தீர்ப்பும்


சமூக வலைத்தளங்களில் ஹிந்தி  மொழியைக் கட்டாயமாக பயன்படுத்த வேண்டும் என மோடி அரசு உத்தரவிட்டிருந்தது. இந் நிலையில், இது குறித்து விளக்கமளித்துள்ள மத்திய அரசு, ஹிந்தி  மொழி பேசும் மாநிலங்களில் மட்டுமே இந்த மொழி கட்டாயம் என்றும், ஹிந்தி மொழி பேசாத மாநிலங்களில், அமல்படுத்தப்பட மாட்டாது என கூறியுள்ளது.


இப்படி மோடி அரசாங்கம் தீர்ப்பை மாத்திச் சொல்லியாதற்கு காரணம் கலைஞர் மெரினா பீச்சில் 1 மணி நேரம் உண்ணாவிரதம் இருக்கப் போறாதா சொன்னதனாலேதானம்....!

வயதானலும் எங்க தானைத்தலைவர் கலைஞரின் பலம் குறையவில்லை

அன்புடன்
மதுரைத்தமிழன்

5 comments :

 1. இன்னுமா உலகம் அவரை நம்புது????

  ReplyDelete
 2. கலைஞர் : நான் ஒரு மணிநேரம் இருந்தா நூறு மணிநேரம் இருந்த மாதிரி.

  மோதி : தலைவா, மன்னிச்சிருங்க. நீங்க சொல்றபடியே செய்றேன்.

  கோபாலன்

  ReplyDelete
 3. தானைத் தலைவர் வாழ்க! அவரு பேரப்புள்ளைங்க! கொள்ளு, எள்ளு பேரப் புள்ளைங்க மட்டும் இந்தி படிக்கட்டும்! நாட்டை ஆளட்டும்!

  ReplyDelete
 4. எப்பத்திலிருந்து அவர் உங்களுக்கு தானைத்தலைவர் ஆனார்???/

  ReplyDelete
 5. :)))))

  இப்ப அவரால ஒரு மணி நேரம் உண்ணாவிரதம் இருக்க முடியாது அதனால பத்து நிமிச உண்ணாவிரதம் தான்.....

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog