Monday, May 19, 2014




அமெரிக்கா வாழ்த்தி வரவேற்பது இந்திய பிரதமரைத்தான் மோடியை அல்ல 



இந்திய தேர்தலில் மோடி அமோக வெற்றி பெற்றதும் மரியாதை நிமித்தமாக அனைத்து நாடுகளும் வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்தன. அது போலதான் அமெரிக்காவும் அந்நாட்டின் தலைவருமான ஒபாமாவும் வாழ்த்தி வரவேற்றார்.

இதை அறிந்த மோடி ஆதரவாளர்கள் என்னமோ மோடி அமோக வெற்றி பெற்றதும் அமெரிக்கா மோடிக்கு பயந்து அவர்கள் நாட்டிற்கு வர அனுமதி அளித்து விட்டது போலவும் அமெரிக்க அதிபருக்கும் அரசாங்கத்திற்கும் வெட்கம் ஏதுமில்லை என்பது போலவும் சித்தரித்து இணைய தளங்களில் செய்திகளை வெளியிட்ட வண்ணம் இருக்கின்றனர் இப்படி மோடி ஆதரவாளர்கள் கூக்குரலிட காரணம் மோடி பல முறை அமெரிக்க விசாவிற்கு விண்ணபித்தும் அது நிராகரிக்கப்பட்டதே காரணம்.

இப்போதும் அமெரிக்கா மோடிக்கு வாழ்த்தையும் வரவேற்பையும் அளிப்பது மோடி என்ற தனியாளுக்கு அல்ல. அவர் இந்தியாவின் பிரதமர் என்ற ஒரே காரணதிற்காக மட்டுமே இது மோடியின் ஆதரவாளர்களுக்கு புரியோமோ இல்லையோ மோடிக்கு நன்றாக புரியும்

இன்று பேஸ்புக்கில் உள்ள ஒரு பிரபலம் ஒபாமா என்னவோ விசா வை தங்கதாம்பளத்தில் பழங்களோடு வைத்து அவர் வீட்டு வாசலில் காத்து இருப்பது போல ஒரு கருத்து இட்டு இருந்தார், அவருக்கு நான் சொல்வது மோடி மீண்டும் விசாவிற்கு விண்ணபித்தால் மட்டும் அமெரிக்க விசா கிடைக்கும் விசா இல்லாமல் ஒருவன் அமெரிக்காவிற்குள் ஒருத்தன் நுழைகிறான் என்றால் அவன் அகதியாக மட்டூமே இருக்க முடியும். அமெரிக்காவை கிண்டல் பண்ணும் முன் மோடிக்கு விசா தரக் கூடாது என்ற சொன்ன இந்திய நாட்டு எம்பிக்கள் முகத்தில் போய் முதலில் கரியை பூசுங்கள்

மானம் கெட்ட அமெரிக்க அரசு இப்போது மோடியை தன் நாட்டிற்கு அழைக்கிறது என்று கூறும் மானமுள்ள பிஜேபியினரே மோடிக்கு மானம் இருந்தால் வரும் ஐந்து ஆண்டுகள் முழுவதும் அமெரிக்க வாராமல் இருப்பாரா என்று தெரிந்து கொண்டு கூவுங்கள். உங்களின் கூவலுக்கு மோடி கூட காது கொடுத்து கேட்கமாட்டார் காரணம் அவர் பிஸினஸ் அவருக்கு

Modi, the chief minister of Gujurat since 2001, has had U.S. visa issues before. His business visa was revoked in 2005 and that same year he was denied a diplomatic visa after he was found to have committed “particularly severe violations of religious freedom” under a section of U.S. law.

அன்புடன்
மதுரைத்தமிழன்

8 comments:

  1. அமெரிக்காவின் குணமே இது தானே.

    யாராவது துர்க்கிவிட்டப் பிறகு அவர்களைத் தன் பக்கத்திற்கு அழைத்துக் கொள்வது....


    ReplyDelete
    Replies
    1. தனது சொந்த நாட்டில் தகுதி பெற்ற ஒருவனை சொந்த நாட்டை விட்டு கிளப்பி தன்னிடம் அழைத்து வைத்து கொள்வது தானே அமெரிக்க நடமுறை!
      பெரும்பான்மை பெற்ற புதிய இந்திய பிரதமரை கவருவதற்காக அமெரிக்கா ஜல்ரா அடிப்பதில் வியப்பேதுமில்லை.

      Delete
    2. கடைசியா எப்ப அமெரிக்கா வலுக்கட்டாயமா நம்ம ஆளுங்கள தூக்கிட்டு போச்சுன்னு சொன்னா நல்லா இருக்கும்.
      As far as I know, it is our people who line up outside the american consulate.

      Delete
  2. ஒண்ணுமிலீங்க. ஒபாமாக்கு ஒருத்தர் தமிளு சொல்லித்தராறு. எதிரிக்கு எதிரி எனக்கு நண்பன் அப்டீங்கறத அரகொறயா தீவிரவாதிக்குத் தீவிரவாதி எனக்கு ந்ண்பன் அப்டீன்னு எடுத்துவுட்டாறு. கேட்டு ஒடனே ஒபாமா அப்டி ஒருத்தன் இருக்கானான்னு கேக்க அந்த ஆளு இவ்ள பெரிய ஆளு ஒனக்கு இதுகூடத் தெர்லயா, எங்க ஊர்ல கேட்டா ஒரு பொடிப்பயகூடச் சொல்லுவான் அப்டீன்னு சொல்ல, ஒபாமாக்கு சொரண வந்த்திருச்சு.

    கோபாலன்

    ReplyDelete
  3. ஒபாமா... அப்படி என்றால் என்னவென்றே எங்களுக்குத் தெரியாது.

    …அமெரிக்க அதிபர்....அவர் எலிக்குஞ்சோ...மூட்டைப்பூச்சியோ.. நாயோ...நரியோ... யாருக்கு வேண்டும்? அவர் அமெரிக்க அதிபர். அதற்குத்தான் மரியாதை.

    …ஒபாமாவிற்கு இன்னும் சில ஆண்டுகள் மட்டுமே பதவி..ஆனால் மோடி ..இந்திய மக்கள் விரும்பும்வரை எவ்வளவு ஆண்டுகள் வேண்டுமானாலும் இருப்பார். வாய்ப்பு உள்ளது.

    …மோடி மீது அமெரிக்கா கூறும் களங்கம் அவர் பிரதமர் ஆனவுடன் நீங்கிவிடுமா?

    …களங்கப்பட்ட மோடியை நாங்கள் எந்தக்காலத்திலும் வரவேற்கமாட்டோம் என்று அமெரிக்கா போன்ற நாடுகள் கூறுமா? அந்த தைரியம் இருக்கா?

    ReplyDelete
    Replies
    1. ///ஒபாமா... அப்படி என்றால் என்னவென்றே எங்களுக்குத் தெரியாது.///
      ஒகே உங்களின் உலக ஞானம் என்னை வியக்க வைக்கிறது

      ///…அமெரிக்க அதிபர்....அவர் எலிக்குஞ்சோ...மூட்டைப்பூச்சியோ.. நாயோ...நரியோ... யாருக்கு வேண்டும்? அவர் அமெரிக்க அதிபர். அதற்குத்தான் மரியாதை.///

      என்ன முதலில் தெரியாதுன்னிங்க.. இப்ப என்னனென்னமோ சொல்லுறீங்க... என்ன டாஸ்மாக் சரக்கு உள்ளே போயிடுச்சா?


      …///ஒபாமாவிற்கு இன்னும் சில ஆண்டுகள் மட்டுமே பதவி..ஆனால் மோடி ..இந்திய மக்கள் விரும்பும்வரை எவ்வளவு ஆண்டுகள் வேண்டுமானாலும் இருப்பார். வாய்ப்பு உள்ளது.////

      மிக மிக உண்மைகங்க..அதில் எனக்கு கருத்து வேறுபாடு இல்லைங்க

      …///மோடி மீது அமெரிக்கா கூறும் களங்கம் அவர் பிரதமர் ஆனவுடன் நீங்கிவிடுமா?///

      மோடி மீது களங்கம் கூறுவது அமெரிக்கா அல்ல இந்திய மக்களும் இந்திய எம்.பிக்களும்தானுங்க பழைய நாளிதழ்களை எடுத்து படிக்கவும்

      …////களங்கப்பட்ட மோடியை நாங்கள் எந்தக்காலத்திலும் வரவேற்கமாட்டோம் என்று அமெரிக்கா போன்ற நாடுகள் கூறுமா? அந்த தைரியம் இருக்கா? ///

      அட நீங்களே மோடி களங்கப்பட்டவர் என்று ஒத்துக் கொண்டீர்களே.....

      ஒரு வேளை அமெரிக்காதான் வெட்கம் கேட்டு அழைக்குதுன்னு வைச்சுகோங்களேன் அப்ப 'மானமுள்ள மோடி'' நான் உன் நாட்டுக்கு வரவே மாட்ட்டேன் என்று சொல்லும் தைரியம் உங்கள் தலைவனுக்கு உண்டா?

      மோடி ஒரு குஜராத்தி அவர்களுக்கு தேவை பிஸினஸ் பணம் செல்வாக்கு......

      Delete
  4. உண்மை... பதவிக்கு கிடைத்த மரியாதை தான்...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.