Friday, May 9, 2014




குழந்தைகளை அடிமையாக்க விருப்பமா அப்ப தனியார் பள்ளியில் சேருங்கள்


கவர்மென்ட் பள்ளியில் படிப்பது கேவலம்

கவர்மென்ட் பஸ்ஸில் போவது கேவலம்

கவர்மென்ட் காலேஜில் படிப்பது கேவலம்

கவர்மென்ட் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெறுவது கேவலம் என்று கருதி வளரும்(வளர்க்கும்) பிள்ளைகள் கடைசியில் கவர்மென்ட் வேலையில்(IAS Officer )சேர்ந்து MLA, MP களுக்கு சேவை செய்து கொண்டு கை கட்டி வாய் பொத்தி நிற்கிறார்கள்

அதே நேரத்தில்

தனியார் பள்ளியில் படிக்க வசதியில்லாமல்

தனியார் பஸ்ஸில் போக வசதியில்லாமல்

தனியார் கல்லூரியில் படிக்க வசதியில்லாமல்

தனியார் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற வசதியில்லாமல் வளர்ந்த(வளர்த்த) பிள்ளைகள்

MLA, MP , மற்றும் தொழில் அதிபர்களாகி தனியார் பள்ளியில் படித்து வந்தவர்களை தங்கள் அடிமைகளாக்கி தங்களுக்கு சேவை செய்ய வைக்கிறார்கள்.


அரசாங்க பள்ளியில் படிப்பது என்ன இளப்பமா?

இப்ப சொல்லுங்கள் யார் புத்திசாலி?

அன்புடன்
மதுரைத்தமிழன்


டிஸ்கி : அரசாங்க பள்ளியில் ஆசிரியராக சேர வைக்கும் பரிட்சையில் பாஸ் செய்ய தகுதியில்லாதவர்கள் சொல்லிதரும் தனியார் பள்ளிகளில் உங்கள் பிள்ளைகள் எப்படி நன்றாக படிக்கும்.. யோசிங்க மக்களே

9 comments:

  1. எல்லாம் சொல்லி விட்டு டிஸ்கியில் - உண்மை-சில பேர்

    ReplyDelete
  2. அட இந்த மாத தங்க மங்கை இதழில் இந்த தலைப்பைத்தான் நானும் எழுதி இருக்கிறேன்.......... ( thangamangai.com ( katturai page 46-47 & my parts..pages.. 14- 15, 46-47)

    ReplyDelete
  3. அரசு பள்ளியில் படிப்பதை கேவலவமாக நினைப்பார்கள். ஆனால் கல்லூரி மட்டும் அண்ணா யூனிவெர்சிட்டி யாக இருக்கவேண்டும் என்று நினைப்பார்கள். செலவும் குறைவு மதிப்பும் அதிகம்.அதில் இடம் கிடைக்கவே எல்.கே.ஜி முதல் 12 வரை ஏகப்பட்ட பணம் செலவு செய்து படிக்க வைகிறார்கள் .தரமான கல்வி என்று நினைத்து மனப்பாடம் செய்ய வைத்து (கணிதத்தையும் கூட) அதிக மதிப்பெண் பெரும் வழிமுறைகள் தனியார் பள்ளிகளில் மட்டுமே சாத்தியம். கல்லூரிகளில் இந்த நடைமுறையை பின்பற்ற முடியாது.தனியார் கல்லூரிகளில் கற்பிக்கும் பெரும்பாலான ஆசிரியர்கள் ஒரு மாணவனின் அளவுக்கே பாடத்தை தெரிந்து வைத்திருப்பதாக மாணவர்கள் கூறுகிறார்கள்.
    பொறியியலோ மருத்துவமோ பெரு நகரங்களில் உள்ள அரசு கல்லூரிகளுக்கே மதிப்பு. அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கே அரசு கல்லூரிகளில் இடம் கொடுக்கவேண்டும். அரசு ஏழைகளுக்காக பள்ளிகளையும் கல்லூரிகளையும் நடத்துகிறது. அரசு பள்ளி வேண்டாம் என்று நினைத்தவர்களுக்கு அரசு கல்லூரிகளில் மட்டும் ஏன் இடம் கொடுக்கவேண்டும்.
    குறைந்த பட்சம் பாதி இடங்களாவது அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய முன்வரவேண்டும்.
    பணம் படைத்தவர்கள் கடைசிவரை தனியார் கல்லூரிகளிலேயே பயிலட்டுமே
    கொஞ்சம் பணம் இருந்துவிட்டால் போதும் ஏழைமாணவர்களுடன் சேர்ந்து படித்தால் கௌரவக் குறைவு என்று நினைத்து விடுகிறார்கள்.

    ReplyDelete
  4. நல்லா சொன்னீங்க! ஆனா யாரும் கேப்பாங்களா தெரியலை!

    ReplyDelete
  5. சூப்பர். சூப்பர்.
    சும்மா நச்சுன்னு இருக்கு.

    ReplyDelete
  6. மிக அருமையான ஒரு நச் பதிவு! குடோஸ்!

    ReplyDelete
  7. நெத்தியடி நண்பரே. நானும் இதுபற்றிக் கட்டுரை எழுதுியிருக்கிறேன். ஆனால் அதைத் தூக்கிச் சாப்பிட்டுக் கவிதை மாதிரி சுருக்கமாகவும், சுருக்கென்று தைக்கும்படியும் எழுதிவிட்டீர்கள். மிகவும் அருமை. ரோஷம் இருப்பவர்களுக்கு உறைக்கும்..உறைக்கட்டும்.

    ReplyDelete
  8. அட கொன்னியா....ஆமால்ல !

    ReplyDelete
  9. அரசாங்க பள்ளி ஆசிரியர்கள் சரி இருந்தால் ஏன் இப்படி!?

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.