உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, May 5, 2014

மனதை தொட்டுச் செல்லும் ஒரு பவர்புல் மெசேஜ் (பார்க்க தவறாதீர்கள் )

மனதை தொட்டுச் செல்லும் ஒரு பவர்புல் மெசேஜ் (பார்க்க தவறாதீர்கள் ) extremely powerful message


மனதை தொட்டுச் செல்லும் வீடியோ விளம்பரம் இது. கண்ட கண்றாவி வீடியோ க்ளிப்புகளை பார்த்து உலகம் கெட்டுவிட்டது என்று மேம்போக்காக சொல்லிவிட்டு செல்வதை விட இதை பார்த்து இதன் படி நடக்க முயற்சித்தாலே இந்த உலகம் வாழும் சொர்க்கமாக மாறிவிடும்..இந்த வீடியோ க்ளிப்பில் சொல்லி இருக்கும் விஷயம் மிகவும் பவர்புல் மெசேஜ் ஆகும். இதை பார்பதோடு மட்டுமல்லாமல் இதில் சொல்லியவைகளை சிறிதளவாகவது கடைபிடிக்க முயற்சிக்கலாமே.....அப்படி செய்வதால் நாம் வாழும் இந்த பூமியை சொர்க்கமாக மாற்றலாமேYou must not lose faith in humanity. Humanity is an ocean; if a few drops of the ocean are dirty, the ocean does not become dirty.” -Mahatma Gandhi


அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி 1: இந்த பதிவை பார்த்த பின் கருத்து சொல்லும் முன் இந்த க்ளிப்பை நான் ஏற்கனவே பார்த்து இருக்கிறேன் பகிர்வுக்கு நன்றி என்று கருத்து இடுவதைவிட இந்த தகவல்கள் உங்களுக்கு ஏற்படுத்திய பாதிப்பை அல்லது மாற்றத்தை கருத்தாக சொல்லுங்கள்.

டிஸ்கி 2: இந்த க்ளிப்பில் உள்ளது மாதிரி பல நல்ல விஷயங்களை நான் செய்து கொண்டுதான் இருக்கிறேன். இது என்னைச்சுற்றி உள்ளவர்களுக்கு மிக நன்றாக தெரியும். ஆனால் இதைப் பார்த்த பின் இன்னும் பல விஷயங்களை செய்ய வேண்டும் நான் இன்னும் நிறைய மாற வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் நின்று கொண்டு இருக்கிறது...என் மனதுள் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. நிச்சயம் உங்கள் மனதிலும் மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கலாம். தினமும் இந்த வீடியோ க்ளிப்பை ஒரு முறை காலை நேரம் பார்த்து வந்தால் நிச்சய்ம நமது செய்கைகளில் மாற்றம் இருக்கும்

13 comments :

 1. டிஸ்கி2: ஹாட்ஸ் ஆஃப் டு யு!

  ReplyDelete
 2. மனத்தைத் தொட்டுச் சென்ற பவர்புல் மெசேஜ் தான்.

  அருமையான பகிர்வு.

  ReplyDelete
 3. உண்மையான உதவியானது தேவையான நேரத்தில் தேவையானவர்களுக்கு செய்வதே. அதையும் எந்த வித பிரதிபலன்களையும் எதிர்பார்க்காமல் செய்யும்போது கிடைக்கும் மகிழ்ச்சியே பெரிய சொத்து என்பதை அருமையாக சொல்லியிருக்கிறார்கள்.

  ReplyDelete
 4. கிளிப்பே ஒப்பன் ஆக மாட்டேங்குதுய்யா திரும்ப திரும்ப ஒப்பன் பண்ணி பார்த்துட்டுதான் இருக்கேன்.

  ReplyDelete

 5. வணக்கம்!

  நெஞ்சமெனும் கூட்டில் நிறைந்த படக்காட்சி!
  கொஞ்சமெனும் நாமிதைக் கொண்டோமா? - அஞ்சா
  மதுரைத் தமிழன் வடித்த பதிவோ
  முதுமை நலத்தின் மொழி!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு


  ReplyDelete
 6. அருமையான படக்காட்சி! உண்மை! தமிழன்!

  ReplyDelete
 7. gooood,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

  ReplyDelete
 8. பலனை எதிர்பாராமல் செய்யும் உதவி என்றும் மகிழ்ச்சி தரும்.

  ReplyDelete
 9. தமிழ்ல ஒரு பாட்டுக்கூட இருக்கு : உன்போலே சிலர் இருந்தால் மண்ணில் சொர்க்கம் வருமே.
  அந்தச் சிலரில் ஒருவர் நானாக இருந்தால்
  கோபாலன்

  ReplyDelete
 10. என் கணினியில் சவுண்ட் பாக்ஸ் வேலைசெய்யவில்லை சரி விடியோவையாவது பார்ப்போம் என்று பார்த்தால்.. உண்மையிலேயே நெஞ்சைத் தொட்ட பதிவுதான். அன்புக்கு மொழியேது? ஒரு சார்லிசாப்ளின் படம் பார்த்தது போல உறைத்தது. என்ன அது சிரித்து சிந்திக்க வைக்கும் இது ஆனந்தக்கண்ணீர் விடவைத்தது. நன்றி நண்பரே.

  ReplyDelete
 11. உண்மையில் மனதை நெகிழ வைத்த மெசேஜ். இப்படி என்னால் இருக்கமுடியுமா என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டேன்.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog