Tuesday, May 27, 2014




மெயில் பேக் 4 : பிரதமர் நவாஸ் சரீப் மீது மோடிக்கு பாசம் ஏன்? மோடியின் திருவிளையாடல் ஆரம்பம்



இத்தனை ஆண்டுகள் பாகிஸ்தான் மீதும் அதன் பிரதமர் நவாஸ் சரீப் மீதும் வன்ம மழை பொழிந்த மோடி ஏன் அவரை பதவி ஏற்புக்கு அழைத்தார்?

மோடியின் அதய்ந்த நண்பர் அதானியின் அதானி பவர் (Adani Power) நிறுவனம் பாகிஸ்தானுக்கு மின்சாரம் வழங்க முயற்சிகள் எடுத்து வருகிறது, இதற்கான அவர்கள் குஜராத்தில் கட்ச் பகுதியில் 10,000 MW அனல் மின் நிலையம் அமைக்க அடிப்படை வேலைகள் செய்துள்ளார்கள். அதானி வழங்கிய இலவச விமானத்தில் இந்தியாவை சுற்றிய மோடிக்கு பதவியேற்பிலேயே அடிபணிய வேண்டிய நிர்பதம் மோடிக்கு வந்தது, அவரை மட்டும் அழைத்தால் சிக்கல் என்று தான் இந்த SAARC நாடுகள் நாடகமும் இணைந்து அரங்கேற்றப்பட்டது.

இந்த அழைப்பிற்கும் அமைதி, நல்லுரவிற்கு தொடர்புகள் ஏதும் உண்டா??
பேஸ்புக்கில் இருந்து, எழுதியவர் முத்து கிருஷ்ணன்


என்னை சிரிக்க வைத்த பேஸ்புக் ஸ்டேட்டஸ்

ோடி பிரதமராக பதவி ஏற்கும் முன் ிஜேபி தொண்டர் பேஸ்புக்கில் பதிந்த காமெடி. ிஜயகாந்திடம் பாடம் படித்திருப்பாரோ இந்த பேஸ்புக் பேராளி... இதோ அவர் வெளியிட்ட ஸ்டேட்டஸ் :

கடுமையாக எச்சரிக்கிறேன்....

தமிழகத்தின் மூலை முடுக்கிலும் மது கடைகளை திறந்து வைத்து தமிழின படுகொலை நடத்தி கொண்டிருக்கும் ஜெயலலிதா நாளை மோடி பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளவே கூடாது



மதுரைத்தமிழனின் மன டைரியில் இருந்து :


நமது இந்தியகலாச்சரத்தில் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டால் கை கூப்பி வணக்கம் சொல்லுவார்கள் இது ஒரு நல்ல பழக்கம் என்பதோடு மட்டுமல்லாமல் மிக ஆரோக்கியமனது என்பது பலருக்கும் புரியவில்லை மேலை நாட்ட்டு பழக்கப்படி நாம் கை குலுக்க ஆரம்பித்துள்ளோம் அதை பெருமையாகவும் கருதுகிறோம் அது எவ்வளவு ஆரோக்கியமற்றது என்பதை இப்போது மேலை நாட்டினர் அறிந்து இப்போது கைகுலுக்குவது பெருமளவில் தவிர்த்து வருகின்றனர் காரணம் கைகுலுக்குவதன் மூலம் பலவித கிருமிககள் பரவி உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது காரணம் நாம் சுத்தமாக இருந்தாலும் நம்மிடம் கைகுலுக்குபவர் சுத்தமாக இருகிறாரா என்பது கேள்வி குறியே

மனதை பாதித்த செய்தி :


ெக்ஸிகோ நாட்டை சேர்ந்த ManuelUribe   மானுவேல் உரிபே ன்பவர்தான் உலகின் மிக அதிக எடையுள்ள மனிதர் கின்னஸ் ரிகார்ட் 2006ல் இவரின் எடை (weight )1,230 pounds (560 kilograms), இவர் கடும் முயற்சி செய்து தனது எடையை 867 pounds (394 kilograms) குறைத்த இவர் இன்று காலமானார். அவருக்கு வயது 48


FILE - In this June 9, 2008 file photo, Manuel "Meme" Uribe, 42, shows how he exercises from his bed during an interview in Monterrey, Mexico. Uribe, once listed as the world's heaviest human being, has died at the age of 48. His death was confirmed Monday, May 26, 2014 by an official of the health department of Nuevo Leon state in Mexico. Doctors have not yet certified the cause of death. (AP Photo/Monica Rueda, File)






.....மைகாட் !!!!!!

Man catches child who fell from second story window in China


ன்புடன்
மதுரைத்தமிழன்

5 comments:

  1. உலகின் மிக அதிகமான எடை கொண்ட மனிதர் - பார்க்கவே கஷ்டமாக இருக்கிறதே, அவர் அத்தனை எடையும் எவ்வளவு கஷ்டமான வாழ்வினை வாழ்ந்திருப்பார்......

    ReplyDelete
  2. இனி எல்லோரும் இந்திய பண்பாட்டின்படி
    கைக்கூப்பி வணக்கம் சொல்வார்களா...???

    ரொம்ம்ம்ம்ப நல்லது.

    இங்கே கன்னத்தில் முத்தமிடுகிறார்கள்..... கைக்குலுக்குவதை விட...

    ReplyDelete
  3. சுவையான தொகுப்பு.
    குழைந்தையை கேட்ச் பிடிக்கும் காட்சி திகில் .
    எடையும் தாங்கும் இதயமாக இல்லாமல் போய்விட்டதே!

    ReplyDelete
  4. மோடி பற்றிய குறிப்பு interesting. இத்தனை blatantஆகவா!

    ReplyDelete
  5. அந்த மனிதரைப் பர்ர்க்கும் போது அவர் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பர் என்று நினைக்கும் போது மனது கனக்கின்றது!

    அந்தக் குழதை காப்பாற்றப்பட்டதே அது ஒரு நிறைவாக இருந்தது! சமீபத்தில் நண்பர் ஒருவரின் மகள் ஹாஸ்டலில் ஃப்ரென்ச் ஜன்னலில் வழக்கமாக இட்கருபவர் என்றாலும் அன்று விதி அவர் உட்காரப் போக 4 வது வது மாடி அங்கிருந்து கேழே விழுந்து ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி 4 நாட்கள் உயிருக்குப் போராடி இறுதியில் உயிர் நீத்தார்! கொடுமை! பெர்றோர் ரண்மாகி விட்டனர்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.