Sunday, April 27, 2014





நல்ல மாப்பிள்ளை பார்க்கும் பெற்றோர்களுக்கு?




வாங்க மாப்பிள்ளை வாங்க ? செளக்கியமா இருக்கீங்களா?

என்ன மாமி கிண்டலா பண்ணுறீங்க... உங்க பொண்ணை கட்டிக்கிட்டவன் நிம்மதியா இருக்க முடியுமா என்ன?


கல்யாணத்திற்கு முன் என்னிடம், என் பெண்ணை பற்றி ஒரு வார்த்தை கேட்டு இருந்தீங்கன்னா என் பெண்ணின் குணத்தை பற்றி சொல்லி இருப்பேன். அதையெல்லாம் பெரியவங்ககிட்ட கேட்காம நீங்களா லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணிக்கிட்டா இப்படி அவதிப்பட வேண்டும். சரி உங்களை பார்த்தா பாவமா இருக்கு குடிக்க என்ன வேண்டும் சொல்லுங்க...

ஆமாம் மாப்பிள்ளை வந்து இருக்காரே டாஸ்மாக்க்கு போயி பிடித்தமான சரக்கா வாங்கி தரப் போறீங்க.. வழக்கமா தர காபியை கொண்டு வாங்க... ச்சே இன்னும் ஒல்டு பேஷன் ஆளாவே இருக்குறீங்க மாமி எப்ப நம்ம கலாச்சாரம் மாறப் போகுதோ....உங்களை மாதிரி உள்ள ஆளுங்களை இன்னும் ஜெயலலிதா வெளியில நடமாட வைக்கிறாங்க பாருங்க.. முதலில் அவங்களைதான் குறை சொல்லனும்...

கருமம், கண்றாவி எப்படித்தான் இந்த டாஸ்மாக் சரக்கை குடிக்கிறீங்களோ மாப்பிள்ளை?
மாமி நீங்க நல்லாவே புரிஞ்சுக்கிட்டு இருக்கீங்க, ஏதோ நாங்கள்லாம் ஜாலியா குடிச்சுட்டுருக்கோம்னு உங்க பொண்ணு நினைச்சுகிட்டு இருக்கா...ஹும்ம்ம்ம்ம்

சரி மாமி நான் சொன்னதை மனசில் ஏதும் வைச்சுகாம காபியில் கொஞ்சம் சக்கரை துக்கலாக போட்டு எடுத்துட்டு வாங்க..

இந்தாங்க மாப்பிள்ளை காபி குடிச்சிட்டு சொல்லுங்க எப்படி இருக்குதுன்னு..

மாமி குடிச்சிட்டு நல்லா இல்லைன்னுதான் சொல்ல முடியுமா அப்படி நான் சொல்லிவிட்டு எனது வீட்டிற்கு நான் போகத்தான் முடியமா என்ன? அதுனால காபி நல்லா இருக்குன்னு சொல்லிட்டு போயிடுறேன்.

மாப்பிள்ளை நீங்க அநியாத்துக்கு ரொம்ப புத்திசாலியாவே இருக்குறீங்க...

சரி மாப்பிள்ளை உங்ககிட்ட ஒன்று கேட்கணும்... உங்களுக்கு தெரிஞ்ச யாரவது ஒரு நல்ல பையன் இருக்கானா?

ஆமாம் மாமி எனக்கு தெரிஞ்ச ஒரு பையன் மிகவும் நல்லவன் மாமி

அவன் குடிப்பானா?

மாமி அவன் காபி கூட குடிக்கமாட்டான்னுனா பார்த்துகுங்களேன்..

புகை ஏதும் பிடிப்பானா?

ச்சீ ச்சீ என்ன மாமி இப்படி கேட்குறீங்க..... அவனுக்கு புகைப் பிடிப்பது என்றால் என்ன வென்று கூட தெரியாது.


பார்க்க நல்லா இருப்பானா?

மாமி என்ன இப்படி கேட்டுட்டீங்க.. அவன் அழகுன்னா அப்படி ஒரு அழகு மாமி எந்த பெண்ணும் அவனை பிடிக்கவில்லை என்று சொல்லமாட்டங்க மாமி..

மாப்பிள்ளை அவனுக்கு டிவி பார்க்கிறது நெட்டுல பொண்னுங்க கிட்ட சாட் பண்ணுறது நைட்டுல அதிக நேரம் விழித்து இருப்பது போன்ற பழக்க உண்டா?

மாமி அவனுக்கு கம்பியூட்டர், டிவி இதையெல்லாம் கண்டாலே ஆவாது. அதனால் அதை கண்டால் போட்டு உடைத்து விடுவான் மாமி அது மட்டும்மல்ல நைட்டுல அதிக நேரம் முழித்து இருப்பது கூட அவனுக்கு பிடிக்காது சிக்கிரமாவே தூங்கை காலையில் சீக்கிர்ரம் எழுந்துவிடுவான் மாமி....

வாவ் இப்படி ஒரு நல்ல பையனைத்தானே நான் தேடிக் கொண்டு இருக்கிறேன்...

எதுக்கு மாமி இப்படி ஒரு நல்ல பையனை தேடுறீங்க...

வேற எதுக்கு என் சின்ன பொண்ணுக்குதான் நான் வரன் தேடிக் கொண்டு இருக்கிறேன் அதனாலதான் நாலுபேர்கிட்ட கேப்போம் என்று எண்ணி உங்ககிட்ட முதலில் கேட்டேன்..

மாமி முதலில் அதை எனக்கு விளக்கமா ஏன் சொல்லி இருக்க கூடாது. இப்ப அதில் ரொம்ப சிக்கல் இருக்கே?

என்ன மாப்பிள்ளை சொல்லுறீங்க? அந்த பையனுக்கு வேறு இடத்தில் பொண்ணு பாத்திட்டாங்களா அல்லது அவங்க வீட்டில் பணம் நிறைய எதிர்பார்க்கிறாங்களா? எது என்று சொன்னால் அதுக்கு தகுந்த மாதிரி நாம் செயல்பட்டு அந்த மாப்பிள்ளையை நம்ம பக்கம் இழுத்துடலாம்..

மாமி அதெல்லாம் இல்லை... ஆனா இதை உங்ககிட்ட எப்படி சொல்லுரது என்றுதான் தெரியவில்லை..

மாப்பிள்ளை எதுவாக இருந்தாலும் சொல்லுங்க...

மாமி வர மே மாசம் வந்தா?

வந்தா என்ன அவனுக்கு கல்யாணாமா?

இல்லை மாமி அப்பதான் அவனுக்கு வயது 6 மாசம் ஆகப் போகிறது...என்று சொல்லிவிட்டு ஒடிவிட்டேன்.

இனிமே குறைந்தது 6 மாசம் மாமி வீட்டு பக்கம் கூட எட்டிப்பார்க்க முடியாது..


அன்புடன்
மதுரைத்தமிழன்


12 comments:

  1. :)))))

    ரசித்தேன் மதுரைத் தமிழா....

    ReplyDelete
  2. ஹா... ஹா...

    இனி மாமி வீட்டிற்கு எப்போது போனாலும் பூரிக்கட்டை தயாராக இருக்கும்... ஹிஹி...

    ReplyDelete
  3. அதுவும் சரித்தான்
    முடியாதவர்களும் இயலாதவர்களும்தான்
    மாமி சொல்வது போல இருக்கச் சாத்தியம்
    மனம் கவர்ந்த சுவாரஸ்யமான பதிவுக்கு
    நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. ஒரு வேளை அந்த நல்ல பையன் நான் தான் என்று சொல்லுவீங்கள் என்று எதிர்
    பார்த்திருந்தேன் நல்ல வேளை அதுக்கு இதுவே பரவாயில்லை உருட்டுக் கட்டை
    தப்பிச்சுது :))) வாழ்த்துக்கள் சகோதரா .

    ReplyDelete
  5. கம்ப்யூட்டர் கண்டா பிடிக்காது உடைக்க ஆரம்பிச்சுடுவான்னு சொல்லும்போதே நினைச்சேன் கைக்குழந்தையா இருக்கும்ன்னு..,

    ReplyDelete
  6. சீக்கிரம் தூங்கி அதிகாலையில் எழுந்துடுவான்
    >>
    இந்த மாதிரி இருந்தா பொண்ணுங்களுக்குப் பிடிக்காது. ஏன்னா, நைட்டு டின்னர் யார் சமைப்பா, சாப்பிட்ட பாத்திரத்தை யார் கழுவி வைப்பாங்க!?

    ReplyDelete
  7. அடி வாங்காம தப்பிச்சது அதிசயம்தான்.
    போன் பண்ணி பொண்ண வச்சு அடிக்கபோறாங்க.
    நல்ல நகைச்சுவை விருந்து

    ReplyDelete

  8. வணக்கம்

    வாய்விட்டு நன்றே சிாித்தால் நிலைகொண்ட
    நோய்விட்டுப் போகுமே நோக்கு

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  9. அத்தானே பார்த்தேன்....
    ஆண்களாவது..... இதையெல்லாம் செய்யாம நல்லவர்களாக இருப்பதாவது.....

    ReplyDelete
  10. நினைத்தோம் இந்த மதுரைத்தமிழன் கடைசியில ஏதாவது இந்த மாதிரி சொல்லி முடிப்பார் என்று அதாங்க 6 வயசுப் பையன்.....

    மிகவும் ரசித்தோம்!

    ReplyDelete
  11. ந்மது சன் TVயில் வரும் கல்யாண மாலை நிகழ்ச்சியில் எனக்கு வரும் மருமகன்/மருமகள் எப்படி இருக்கவேண்டும் என்று பேசும் மாமியார்கள் முன்னால் நிற்கும் தகுதி உள்ள ஒரே நபர் அவர்தான்.

    கோபாலன்

    ReplyDelete
  12. மகளிடம் அடி வாங்குவது பத்தாதுன்னு மாமியார் கிட்டேயும் அடி வாங்க போறீங்க?

    கடைசியில கொடுத்திங்களே ஒரு ட்விஸ்ட். அருமை.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.