Monday, April 21, 2014




ஜெயலலிதா ஏன் இந்தியாவின் பிரதமராக கூடாது?



மோடி பிரதமர் ஆனால் அல்லது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அப்படி, இப்படி ஆகிவிடும் என்று பேஸ்புக்கிலும், வலைத்தளத்திலும் எழுதி தள்ளுபவர்களிடம் வேறு யார் ஆகவேண்டும் என்று கேட்டால் ஒன்றும் சொல்ல மாட்டேங்கறாங்கப்பா.....நாம் ஏதாவது சொன்னால் நாங்க நட்ட நடு சென்டர் என்று சொல்லி ஜகா வாங்குறாங்கப்பா. அது போல நானும் நடு செண்டர்ல என்று சொல்லிச் செல்லாமல், யாருக்கு ஒட்டுப் போடலாம் என்று எனக்கு தெரிந்ததை சொல்லிச் செல்கிறேன். இப்படி நான் சொல்வதால் நான் அந்த கட்சி ஆதரவாளன் என்றோ அல்லது அவர்களிடம் இருந்து பெட்டி வாங்கி கொண்டு எழுதியதாக நினைக்க வேண்டாம்


தமிழர்கள் சார்பாக பிரதமர் பதவி போட்டிக்கு களம் இறங்கியவர் ஜெயலலிதா அவர்கள் மட்டும்தான்.அதனால் தமிழர்களாகிய நாம் அவர் சார்ந்த கட்சிக்கு வாய்ப்பு தந்து அவரை பிரதமர் பதவி போட்டிக்கும் அழைத்து செல்ல வேண்டும். அது மட்டும்மல்லாமல் மிக தைரியமும் ஆளுமையும் போர்க்குணமும் கொண்ட பெண்மணி. மேலும் யாரிடமும் மண்டியிடதா மனம் கொண்டவர். இப்படி பட்ட குணம் கொண்டவரால் மட்டுமே இந்தியாவின் கெளரவத்தை காப்பாற்ற முடியும்.


இப்படி நான் சொல்வதால் சில பேர் அவரது ஆட்சியில் அவர் என்ன தமிழகத்திற்கு செய்து கிழித்துவிட்டார் அவருக்கு வக்காலத்து வாங்கி அவருக்கு ஒட்டு போடச் சொல்கிறீர்கள் கேட்கலாம். இப்படி கேட்பவர்களை நோக்கி நான் கேட்கிறேன். மற்றவர்கள் ஆட்சிக்கு வந்தால் மட்டும் என்ன செய்து கிழித்து விடுவார்கள். அவர்களும் இது போன்றுதானே செயல்பட்டு கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இவர் வந்தால் மற்ற நாடுகளுக்கு பயந்து மண்டியிடாமல் தைரியமாக செயல்படுவார் என்பதில் துளி சந்தேகம் கூட யாருக்கும் இருக்காது.

மன்மோகன் சிங் ஆட்சியில் இந்தியா எப்படி இருந்தது என்று நான் சொல்லிதான் உங்களுக்கு தெரிய வேண்டுமா என்ன? அது போல மோடி வந்தாலும் மாற்றம் ஏதும் இருக்காது அவர் மன்மோகன் சிங்கிற்கு அண்ணன். காஞ்ச மாடு கம்பங்க் கொல்லையில் வந்து மேய்ந்தது போல மேய்ந்து விடுவார். காரணம் அவர் ஒரு குஜராத்தி வியாபாரி. அவருக்கு தெரிந்தெல்லாம் வியாபாரத்தில் எப்படி வெற்றி பெறுவது என்பது மட்டுமே? குஜராத்தி வியாபாரிகள் பிஸினஸில் வெற்றி பெற என்ன வேண்டுமானலும் செய்வார்கள். நியாம அநியாயம் பார்க்க மாட்டார்கள் அதிலும் இந்த வியாபாரி பிஸினஸோட மத வெறுப்புணர்வை விதைத்து வருபவர். அதனால் இவர் பிரதமராக வந்தால் நாடு குட்டிச் சுவராக ஆகிவிடும் என்பதில் மாற்றம் ஏதும் இல்லை.

குஜராத் மதக் கலவரத்தில் இவரின் பங்கு எந்தளவிற்கு இருந்தது என்று அங்குள்ள சிறு பிள்ளைகளையோ அல்லது அவரின் மதத்தை சார்ந்த மனசாட்சிக்கு பயந்து உண்மையை சொல்பவர்களிடம் கேட்டாலே தெரியும்.
சில பேர் சொல்லலாம் கோர்ட்டே அவர் எந்த குற்றமும் செய்யவில்லை என்று சொல்லிவிட்டதே இன்னுமும் அவர் மீது நாம் குற்றம் சுமத்தலாமா என்று கேட்கலாம். அவர்களிடம் ஒன்றை கேட்கிறேன் இன்னுமா நீங்கள் நமது கோர்ட் தீர்ப்பை அல்லது சட்டத்தை நம்பிக் கொண்டு இருக்கிறீர்கள் ? சங்கர்ராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரியருக்கு எப்படி தீர்ப்பு வழங்கப்பட்டதோ அப்படிதான் இந்த மோடிக்கும் தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.


காங்கிரஸால் இந்தியாவின் வளர்ச்சி பாதித்தது என்றால் மோடி வந்தால் மதவெறி ஊக்குவிக்கப்பட்டு வளர்ச்சி பாதிக்கப்படும், நம் பாரத நாட்டில் அரசியல் தலைங்க மிக அதிக அளவில் ஊழலில் ஈடுபட்ட போதிலும் மதச்சார்பின்மை கொண்ட ஜனநாயக நாடாக இருப்பததால்தான் இன்னும் இந்தியா வளர்ச்சியடைந்து கொண்டு இருக்கிறது. இந்திய தலைவர்கள் மட்டும் ஊழில் ஈடுபடாமல் நேர்மையாக இருந்தால் உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றாக இந்தியா எப்போதோ ஆகி இருக்கும்....


ஒரு வேளை மோடிக்கு பதிலாக அத்வானி பிரதமர் பதவி போட்டியில் இருந்து இருந்தால் இந்த அளவு குழப்பம் இல்லாமல் மிக எளிதாக காங்கிரஸுக்கு மாற்றாக மாற்று கட்சியின் ஆதரவோடு வந்து இருப்பார். அது இல்லாததால்தான் இப்போது நாம் இங்கு ஜெயலலிதா அவர்களை பற்றி பேச வேண்டி இருக்கிறது.


மோடியின் கரங்கள் மதவெறி என்ற கறைகளால் அசிங்கப்பட்டு இருக்கின்றன. அதை கழுவு மன்னிப்பு என்ற சிறிய முயற்சியை எடுக்க கூட அவர் துளி முயற்சி எடுக்கவில்லை. ஆனால் ஜெயலலிதா ஆதிக்க ஜாதி என்று சொல்லக் கூடிய ஜாதியை சேர்ந்தவர் என்று சொன்னாலும் அவர் வந்த பாதையை பார்த்தால் மோடி மாதிரி அவர் எந்த மதத்திற்கு எதிராகவும் இது வரை செயல்படவில்லை கைகளை கரைப்படுத்தி கொள்ளவும் இல்லை .அதனால் அவர் இந்தியாவிற்கு பிரதமராக வந்தால் மதத்தால் துண்டுபட அல்லது கலவரம் வர வாய்ப்பு இல்லை

ஜெயலலிதா அவர்கள் ஊழலில் ஈடுபட்டவர் என்றாலும் இந்த தடவை ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஊழலில ஈடுபடாமல் ஆட்சி புரிந்து வருகிறார்...ஜெயலலிதாவை குறை சொல்லுபவர்கள் எல்லாம் அம்மா அதை செய்யலை இதை செய்யலைன்னு எல்லாம் சொல்றாங்க. ஆனால் அவரின் இந்த ஆட்சியில் முக்கியமா அம்மா செய்யாத ஒரு முக்கியமான விசயம் என்னவென்றால் ஊழல்தான் அதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை. அதனால்தான் திமுக தலைவர்கள் கூட அது செய்யலை இது செய்யலை என்றுதான் சொல்லுகிறார்களே தவிர அவர் புதிதாக ஏதும் ஊழல் செய்து இருக்கிறார் என்று சொல்லிக் காட்டமுடியாமல் வாய் பொத்தி நிற்கிறார்கள்.

காங்கிரஸுக்கு மாற்றாக மோடியின் தலைமையிலான அரசு இருக்க முடியாது இருக்கவும் கூடாது.

அதனால் ஊழலில்லாத மதச்சார்பற்ற நல்லாட்சி அமைத்திட அம்மாவை டெல்லி நோக்கி தமிழர்களாகிய நாம் ஒன்றுப் பட்டு அனுப்பி வைப்போம்.!

குறிப்பு : 38 இடங்களில் அதிமுக வை ஜெயிக்க வைத்து மீதியுள்ள 2 இடங்களில் ஒன்றில் வைகோவையும் மற்றொன்றில் உதயகுமாரையும் வெற்றி பெறச் செய்யுங்கள்


டிஸ்கி : என்னடா திமுக வை பற்றி ஏதும் சொல்லவில்லை என்று நினைக்கிறீர்களா? இது என்ன சட்டசபை தேர்தலா அவர்களைப் பற்றி பேச? அது மட்டுமல்லாமல் இப்போது குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்களால் திமுக பாமாகா கட்சியைப் போல சுருங்கிவிட்டது. வருங்கலாத்தில் ஸ்டாலினுக்கு பதில் சொல்ல ஜெயலலிதா தேவையில்லை விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவே போதும்

அன்புடன்
மதுரைத்தமிழன்




13 comments:

  1. ஐய்.. வந்துட்டீர்களா... வந்துட்டீர்களா...?

    ReplyDelete
  2. என்னமோ நடந்திருக்கு அதான்.... பாவம் இந்தியர்கள்?!

    ReplyDelete
  3. 8 crore TN people saw your blog today morning and agreed to do what you said.. thanks

    ADMK -38
    MDMK - 1
    AAP - 1

    ReplyDelete
  4. நீங்க சொல்கிறமாதிரி ஜெயலலிதா பிரதமர் ஆனா அங்கெ யாரு போய் முதுஎலும்பு உடையுற அளவு வளைஞ்சு கும்பிடுறது பதவிக்காக கால்களில் மானம் கெட்டு நெடுஞ்சாண் கிடையா விழுறது கும்பிட்ட கையை கீழே இரக்கமா கைவலிக்க நிற்பது ..அதுக்காக திமுக சைடுன்னு நினைச்சுராதீங்க இவனுங்களை இப்படியாவது பேசலாம் ஆனா திமுக காரனை பேச கூட தகுதி இல்லாதவனுங்க இந்த திராவிட கட்சிகள் தமிழ் நாட்டை கெடுத்தது போராதா பூரா இந்தியாவும் கெட்டு போக நீங்க விரும்புகிறீர்களா .. விரும்புகிறீர்களா ..

    ReplyDelete
  5. மோதி ஒருதடவை தவறு செய்தாலுமே(?) திருந்த்வே மாட்டார். தலைவி ஏற்கனவே திருந்திவிட்டார். இது என்னாங்க நியாயம்.

    நீங்கள் கூறும் நபர் பிரதமரானால் :

    1) இந்தியாவில் உள்ள பட்டி தொட்டிகளில் உள்ள வீடுகளிலும் விலையில்லாப் பொருட்களும் அதில் ஒவ்வொன்றிலும் தலைவியின் படம் இருக்கும் . அதற்கு ஏதுவாக வரிகளும் ....மாக்குகளும் உருவாக்கப்படும்.

    2) நேர்மை மிக்க ஐ ஏ ஸ் அதிகாரி உடனே இடமாற்றம் செய்யபடுவார். அதுவும் தொடர்ந்து நடக்கும். உதாரணம் : உமா சங்கர், சஹாயம், அன்சுல் மிஸ்ரா, குராலா

    3) பாராளுமன்றத்தில் எவரும் தலைவியின் பேரை உச்சரித்தால் அவர் பேசுவது சபா நாயகரால் சபையின் பதிவிலிருந்து நீக்கப்படும்.

    4) குறிப்பிட்ட சில மலைப் பிரதேசங்களில் பிரதமர் சென்று தங்குவது நடைமுறைப் படுத்தப்படும். அங்கு சென்று சந்திப்பவர்களுக்கு ஹெலிகாப்டர் வசதி செய்துதரப்படும்.

    5) பிரதமரைச் சார்ந்தவர்கள் செய்யும் எந்தத் தொழிலிலும் வியாபாரம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது. ஆனால் நாங்கள் குஜராத்திகளை மிஞ்சிக் காட்டுவோம்.

    V ஏற்றுக் கொள்வீர்களா, ஏற்றுக் கொள்வீர்களா

    கோபாலன்

    ReplyDelete
  6. தைரியமானவர், நல்ல நிர்வாகி, யாருக்கும் பயப்படமாட்டார்! இதெல்லாம் ஓக்கே! யாரையும் மதிக்கவும் மாட்டாரே! அப்புறம் 38 சீட் பிரதமர் பதவிக்கு போதுமா? பி.ஜே.பி. கூட கூட்டணி ஜெயிச்சதுக்கு அப்புறம் கூட்டணி வச்சுக்க மாட்டாருங்கிறதுக்கு கேரண்டி இல்லையே! எனக்கென்னமோ இந்த தேர்தல்ல நல்ல பிரதமர் கேண்டிடேட் இல்லைன்னு தான் தோணுது!

    ReplyDelete
  7. தமிழர் பிரதமர் ஆக வேண்டும் என்பதற்காக கண்டிப்பாய் அம்மாக்கு ஓட்டுப் போடலாம்

    ReplyDelete
  8. வைகோ தனியா போனா கஷ்டம், அவர் கூட துணைக்கு கொஞ்ச பெரும் போகணும்.....

    ReplyDelete
  9. அம்மா புராணமா... 38 சீட்டா!!!! பார்ப்போம். மக்கள் உங்கள் எண்ணப்படி நடக்கிறார்களா என்று!!!

    ReplyDelete
  10. Mr Rajan... dravida katchigal keduthu irukiradhu enraal..

    thesiya katchigal aatchi seiyum maanilangalil ellam paalaarum thenaarum odugiradha?

    ReplyDelete
  11. நல்லாத்தான் சொல்லுரிய பாப்போம்

    ReplyDelete
  12. 38 - 1 - 1 - பொறுத்திருந்து பார்க்கலாம்..... :)

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.