Monday, April 21, 2014





மோடி பிரதமராக வந்தால்....



மோடிக்கு அமெரிக்கா வர விசா தரப்படும் அதை உலக சாதனையாக பா.ஜ தொண்டர்கள் கொண்டாடுவார்கள்.

அமெரிக்கா விசா கிடைத்ததானால் அதற்கு நன்றி கடன் செலுத்துவதற்காக அமெரிக்காவின் முதலீடுகளுக்கு இந்தியாவில் தங்கு தடையின்ற இருக்க மோடி வழி செய்வார்

இந்திய ராணுவத்தில் மிக அதிகாரம் மிக்க வீரர்களாக ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் நியமிக்கபடுவார்கள்.

காவி உடைதான் இந்திய தேசிய உடையாக அறிவிக்கப்படும்.

கல்யாணம் செய்த ஆண்கள் எந்த நேரத்திலும் மனைவியை விட்டு பிரிந்து கொள்ளலாம். விவாகரத்து செய்ய தேவையில்லை. பிரிய நீங்கள் சொல்லும் காரணம் நாட்டுக்கு சேவை செய்யப் போகிறேன் என்று சொன்னால் மட்டும் போதும்

நித்தியானந்தா இந்திய மகளிர் துறை அமைச்சராக நியமிக்கபடுவார்.

ரஜினிகாந்த் ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார்.

விஜயகாந்த் விளையாட்டு துறை அமைச்சராக ஆக்கப்படுவார்.

அன்புமணி விவசாய மற்றும் சமுகத்துறை அமைச்சராக ஆக்கப்படுவார்.

வைகோ இலங்கைக்கான இந்திய ஹைகமிஷனராக நியமிக்கப்படுவார்.

அத்வானிக்கு தமிழக பா.ஜ தலைவர் பதவி அளிக்கப்படும்.

பாரதிய மூத்த கட்சி தலைவர்கள் காங்கிரஸில் சேர்ந்து இருப்பார்கள் அல்லது மறுமலர்ச்சி பா.ஜ என்ற கட்சியை ஆரம்பித்து இருப்பார்கள்

மாற்று மதத்தினர்களுக்கு ஒர் ஆண்டு அவகாசம் தரப்படும் அதற்குள் அவர்கள் இந்து மதத்தை அதிலும் ராமர் கிருஷ்ணர் என்ற கடவுளை ஏற்று வழிபட வேண்டும் இல்லெயெனில் அவரவர்கள் அவர்கள் மதம் சார்ந்த நாடுகளுக்கு சென்று விட வேண்டும்


வெளிநாட்டு முதலீடுகளுக்கு தடையில்லா மின்சாரமும் மற்ற வசதிகளும் அவர்கள் வேண்டிய இடங்களில் இட வசதியும் செய்து தரப்படும். மூதலீடு செய்பவர்கள் இந்திய வளங்களை மிக குறைந்த விலையில் வாங்கி அதை மக்கள் உபயோகத்திற்கான பொருளாக மாற்றி மிக அதிக விலைக்கு விற்க வசதி செய்து தரப்படும்.

குஜராத்திகள் மட்டும்தான் பிஸினஸில் முதலிடு செய்ய முடியும்.

குஜராத்திகள் மட்டும்தான் உயர்தரக் குடிமகனாக கருதப்படுவார்கள்.


சரி நான் எனக்கு தெரிஞ்சதை சொல்லிவிட்டேன்.....நீங்களும் உங்களுக்கு தெரிஞ்சதை சொல்லி செல்லுங்கள்


அன்புடன்
மதுரைத்தமிழன்



7 comments:

  1. அயல் நாடுகளிலிருந்து தீவிரவாதிகள் நுழைவது தடுக்கப்படும். அதன்மூலம் எல்லாத் தீவிரவாதச் செயல்களுக்கும் இந்தியாவிலுள்ள மக்களே பொறுப்பாகும் நிலை வரும்.. ஆர் எஸ் எஸ் உட்பட.

    இந்தியர்கள் யாவரும் நான் ஒரு இந்தியன் என்று கூறவேண்டும். இல்லையெனில் அவரவர் விரும்பும் நாடுகளுக்குச் செல்ல ஏற்பாடு செய்யப்படும்.

    திருமணம் செய்து கொள்ளும் ஒரே காரணத்துக்காக மதம் மாறுவது தடுக்கப்படும்.

    பொருட்களை நேரே வாங்கி விற்பது போன்ற வியாபார நடவடிக்கைகளில் அரசு தலையிடாது. குஜராத்தி ஒருவர் வியாபாரத்துறையில் அங்கம் வகிப்பார்.

    அரசியலும் வியாபாரமும் த்னிமைப்படுத்தப்படும்.

    தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும்.

    அயல் நாடுகளிலிருந்த கறுப்புப் பணம் இங்கே கொண்டுவரப்படும்.

    தற்போதுள்ள உலகில் கம்யூனிஸம் என்பது ஒரு காதறுந்த ஊசி என்று நமது மக்களுக்குப் புரியும் முறையில் உணர்த்தப்படும்.

    கோவில்களிலும் மசூதிகளிலும் தேவாலயஙகளிலும் அரசியல் தலையிட்ட நிலை இனி நீடிக்காது. பாவிகள் மட்டுமே பயப்படும் நிலை வரும்.

    கோபாலன் - மோதிக்காக

    ReplyDelete
  2. ஜனாதிபதி மேட்டர்தான் சூப்பர்

    ReplyDelete
  3. அதவானி...

    ஐயா மருதை இது ரெமப ஒவரு

    ReplyDelete
  4. நடந்தாலும் நடக்குமோ ? சொல்லமுடியாது.

    ReplyDelete
  5. மானா தானா எங்கிட்டோ அப்பீட்டாய்க்கினாருன்னு ஊராண்ட பெசிக்கினாய்ங்க... எந்த சந்துலபா பதுங்கிகினுருந்த... இவ்ளோ நாளா...?

    அல்லாம் சரி... அந்த டீ கடை மேட்டர வுட்டுக்கினியேபா...?

    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!

    ReplyDelete
  6. ஆனா இது ரொம்ப ஓவருன்னு நினைக்கிறேன். சொல்ல முடியாது. நீங்கள் சொல்கிற மாதிரி சில விஷயங்கள் நடந்தாலும் நடக்கலாம்.

    ReplyDelete
  7. ஐ.... ரஜினி தான் ஜனாதிபதியா.... :)

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.