உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, April 20, 2014

ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ரஜினிகாந்த் சொன்ன பஞ்ச் டயலாக்
ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ரஜினிகாந்த் சொன்ன பஞ்ச் டயலாக்கடந்த வாரத்தில் மோடி ரஜினிகாந்ததை சந்தித்து அவர் வீட்டில் தேநீர் அருந்தி சென்றார் அப்போது ரஜினி மோடியை பார்த்து ரஜினி அவருக்கு பிடித்த ஒரு பஞ்ச் டயலாக்கை தமிழில் சொன்னார். அதை மோடி மிகவும் ரசித்து மகிழ்ந்தார். அவர் ரஜினி தன்னை மிகவும் பாராட்டுவதாக நினைத்து ரஜினியின் கையை பிடித்து அவருக்கு நன்றி சொல்லி மகிழ்ந்தார்


ரஜினிக்கோ ஒன்றும் புரியவில்லை என்னடா நாம் ஜெயலலிதாவை பாராட்டி ப்ஞ்ச் டயலாக் சொன்னால் இந்த மனுஷன் தன்னை பாராட்டுவதாக நினைத்து கொண்டாரே என்று தன் மனதிற்குள் நினைத்து. மோடியை பாரத்து அவரும் சிரித்து மகிழ்ந்தார்.


ஆமாம் அப்படி என்ன ப்ஞ்ச் டயலாக் ரஜினி சொன்னார் என்று உங்களுக்கு மிகவும் அறிய ஆவலாக இருக்கிறதா?


அவர் சொன்ன டயலாக் இதுதான்;


ஹரே மோடி சாப் : பன்னிங்கதான்( பா., தேமுதிக, பா. ) கூட்டமா வரும். ஆனா சிங்கம்(ஜெயலலிதா) சிங்களாகத்தான் வரும் என்று சொன்னார்


என்னங்க இப்ப சொல்லங்க ரஜினி யாருக்கா இப்ப வாய்ஸ் கொடுத்து இருக்கிறார் என்று?. இதைத்தான் நமது தமிழக மீடியாக்கள் மக்களிடம் இருந்து மறைத்து இருக்கின்றன.


ஹீ.ஹீ.ஹீ
அப்ப வரட்டா?


அன்புடன்
மதுரைத்தமிழன்

13 comments :

 1. //ஹீ.ஹீ.ஹீ
  அப்ப வரட்டா?//
  ஹூம்... வராமலே இருந்திருக்கலாம்!!!

  ReplyDelete
 2. பத்த வச்சுடீங்களே பரட்டை # இது ரஜினியோட மைன்ட் வாய்ஸ் ஆக்கும் :)

  ReplyDelete
 3. கொளுத்திப் போட்டாச்சி...!

  ReplyDelete
 4. கொளுத்திப் போட்டாச்சி...!

  ReplyDelete
 5. நல்ல கிளப்பிவிடுறீங்க
  ஆனாலும் படிக்க வெகு சுவாரஸ்யம்

  ReplyDelete
 6. நல்லாவே கோர்த்து உடறீங்க! நடத்துங்க!

  ReplyDelete
 7. ha,ha,
  ஹ ஹா ,இது கொஞ்சம் ஓவர்தான் .
  karthik amma

  ReplyDelete
 8. அதற்கு மோடி குடுத்த பன்ச்.

  அரே சாப். தமிள் நாட்ல படத்ல நடிச்சா போதும். பன்னியாவது சிங்கமாவது. ஒங்க டூப் டயலாக் கேக்க நான் என்ன தமிளனா. எப்பவாவது இமயமலப் பக்கம் வந்தா நம்ம கையால டீ சாப்டு போங்க.

  கோபாலன்

  ReplyDelete
 9. மொத்தத்தில் எல்லாம் மிருகங்கள்(பண்ணி, சிங்கம்). மனிதர்கள் யாரும் போட்டியிட இல்லையா?

  ReplyDelete
 10. அது எப்படிங்க உங்களுக்கு மட்டும் ரஜினி யாருக்கு வாய்ஸ் கொடுத்திருக்கிறார்னு தெரியுது????

  ReplyDelete
 11. boss.. ungalukku irukkura arivukkuuu.. ada ada.. next PM nee thaane.. nillu annan.. vote podurom..

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog