உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, March 4, 2014

தமிழக இணைய தள பதிவர்களுக்கு கண்டனம்நானும் எவ்வளவு நாள்தான் பொறுத்து இருப்பது. சரி இவர்களும் நம் சக பதிவர்களாச்சே என்றுதான் நான் மிக பொறுமையாகவும் அமைதியாகவும் இருந்தேன். ஆனால் எவ்வளவு காலம்தான் இப்படி பொறுமையாக இருப்பது. எதற்கும் ஒரு அளவு உண்டல்லாவா?
நானும் பொறுமையாக பார்த்து கொண்டிருக்கிறேன் தமிழக பதிவர்கள் பல பேர் பல ஹோட்டல்களில் சாப்பிட்ட்டு அதை பதிவாக எழுதி வெளியிடுவது மட்டுமல்லாமல் அதை போட்டோவாகவும் எடுத்து வெளியிடுகிறாரகள்.. ஒருத்தர் எழுதிகிறார் நான் XYZ ஹோட்டலுக்கு போனேன் அங்கு புரோட்டாவும் குருமாவும் சாப்பிட்டேன் மிக அருமையாக இருந்தது என்று எனக்கு பிடித்த புரோட்டாவை பலவித கோணங்களில் படம் எடுத்து வெளியிடுகிறார். இன்னொருவர் இந்த ஹோட்டாலில் ஆப்பம் பாயா சாப்பிட்டேன் என்று விலாவரியாக எழுதுகிறார். இன்னொருவர் என்னவென்றால் நான் திருநெல்வேலி போனேன் அங்கு ஆபிஸர் எனக்கு இருட்டடிக்கடை அல்வா வாங்கி தந்தார் என்று பதிவிடுகிறார்.சரி அதைவிட்டுத்த்ள்ளுவோம் என்றால் சிலர் நான் சின்னவயதில் சாப்பிட்ட தேன்மிட்டாயை படம் எடுத்து அதைப்பற்றியும் சிலர் பீச்சில் சுண்டல் பஜ்ஜி வாங்கி தின்றதைப்பற்றியும் சிலர் இலந்தப்பழம் அரிநெல்லிக்காய் ஜிகர்தண்டா வாங்கி சாப்பிட்டதையும் போட்டோ எடுத்து போட்டு மனதை நோக அடிக்கின்றனர்.


வேறு சிலரோ நான் பைக் ஒட்டிச் செல்லும் போது என் பைக் முன்னால் சென்ற பைக் பள்ளத்தில் குதித்த போது அந்த பைக்கின் பின்பக்கத்தில் உட்கார்ந்து இருந்த பெண்மணியும் குலுங்கினாள் அப்போது என் மனமும் குலுகிங்கியது என்று எழுதுகிறார்கள் பஸ்ஸில் சன்னல் ஒரம் உட்கார்ந்து இருந்த பெண்ணிம் முந்தானை காற்றில் ஆடி என் முகத்தில் பட்டது அது தென்றல் வந்து தொட்டுவிட்ட்டு சென்றது போல இருக்கிறது என்று எழுதுகிறார்கள்..


இப்படி எல்லாம் எழுதி பதிவு இடுபவர்கள் ஒரு கணம் சிந்தித்து பார்த்தார்களா இதை படிக்கும் பார்க்கும் இந்த அப்பாவி மதுரைத்தமிழனின் மனம் என்ன பாடுபடும் என்று. இப்படி எல்லாம் எழுதி ஈவு இரக்கம் இல்லாமல் இருக்கும் இந்த தமிழ் பதிவர்களுக்கு கண்டனம் தெரிவிப்பதில் தவறு ஏதும்மில்லைதானே..


இந்த பதிவின் மூலம் தமிழக பதிவர்களுக்கு இப்படி பதிவிட்டு என்னை மாதிரி உள்ள அப்பாவிகளை வாட்டி வதைப்பதை இன்றே நிறுத்த வேண்டும் இல்லையெனில் உங்கள் மனதை நோக அடிக்க்கும் விஷயங்களை நானும் பதிவு எழுதி படம் போட்டு உங்கள் மனதை நோக அடிக்க என்னாலும் முடியும் என்று எச்சரிக்கிறேன்..


உங்கள் மனதை எப்படி நோக அடிக்க முடியும் என்பதற்கு சில செய்திகளை உங்களுக்கு சொல்லுகிறேன்

இங்கு எங்கள் நாட்டில் பீச்சுக்கு சென்றால் பிகர்கள் பாடியும் ஜட்டியும் மட்டும் போட்டு எனக்கென்னா என்ற மாதிரி படுத்து இருப்பார்கள். அவர்கள் பார்ப்பதற்கு தொந்தியும் தொப்பையும் இல்லாமல் பார்பதற்கு வளவள மொழு மொழு என்று இருப்பார்கள் இந்த பாக்கியம் எங்களுக்கு மட்டுமே உண்டு. அது போல மிக தரமான சர்க்குகள் இங்கே கிடைக்கும். இங்கே நடக்கும் போல் டான்ஸுக்கு உங்க டப்பாங்க் குத்து பாட்டெல்லாம் ஒன்றுமே இல்லை இங்கே எந்த பெண்னையும் பார்த்து நீ அழகாக இருக்கே செக்ஸியாக இருக்கே என்று எல்லாம் சொல்ல முடியும் இன்னும் நிறைய சொல்லாம் ஆனால் பதிவின் நீளம் கருதி அதை இங்கே சொல்லாமல் விடுகிறேன்.


உங்கள் மனச்சுரங்கத்தில் இருந்து எனக்கு பிடித்தவைகளை படங்களாக போட்டு வெறுப்பு ஏற்றினால் பதிலுக்கு என் மனச்சுரங்கத்தில் இருக்கும் அழகான அமெரிக்க பிகர்களை படங்களாக போட்டு உங்களை வெறுப்பு ஏற்ற வேண்டியிருக்கும் என எச்சரிக்கிறேன்..அதனால நான் மேற்சொன்னவாறு பதிவுகளை இனிமேல் எழுதி வெளியிட வேண்டாம் என்று தமிழக இணைய பதிவர்களை கேட்டுக் கொள்கிறேன்..அன்புடன்
மதுரைத்தமிழன்

20 comments :

 1. அதானே... இப்படிச் செய்யலாமா...? என்ன வேண்டுமென்றால் சாப்பிடுங்க... அதைப் பற்றி படத்தையும் போடுங்க... நம்ம மதுரைத் தமிழனுக்கு வைத்தெரிச்சல் வராது... பைக் அனுபவம் எல்லாம் போடாதீங்கப்பா...! ஹா... ஹா...!

  (ஆமாம்... வீட்டிலே எங்காவது வெளியூர் சென்றுள்ளார்களோ...?!

  ReplyDelete
  Replies
  1. வீட்டுல வெளியூர் போயிருந்தால் இப்படியா கணணி முன் இருந்து பதிவு போட்டுகிட்டு இருப்பேன். எந்த பொண்ணுகிட்டாயாவதுதான் கடலைப் போட்டு கிட்டு இருப்பேன்.

   Delete
 2. மாம்பழ நிறத்தில் டூ பீஸ் அணிந்த ஒருவரின் படத்தை எதிர்பார்த்தேன்!
  ஏமாற்றிவிட்டாயே மதுரை!!

  ReplyDelete
  Replies
  1. மாம்பழக்கலர்தான் எனக்கு பிடித்தகலர் அந்த கலர்லதான் ஒரு படம் தேர்த்தி வைச்சிருந்தேன். ஆனால் இந்த பிகர் பிடிச்சததுனால் இதேயே போட்டுவிட்டேன்

   Delete
  2. உங்களை எல்லாம் திருத்தவெ முடியாதுப்பா சிங்கிள் பீசில் ஒரு படம் இருக்கும்போது ஏன் டூ பீசுக்கு அலைகிறீர்கள் சின்ன குழந்தைகள் ரூபாய் நோட்டை விட சில்லறை காசை பெரியதாக நினைப்பதை போல் சீப்பாய் இருக்கீங்களே அஜீஸ்.

   Delete
 3. ஆஹா, இப்படியெல்லாம் கூடவா ஒரு பதிவை தேத்த முடியும்!!!!. மற்றவர்கள் எழுதியதை வைத்தே ஒரு பதிவை போட்டுவிட்டீர்களே. உங்களின் அறிவுத்திறனை பாராட்டுவதா இல்லை இப்படி காப்பியடிச்சு எழுதுறீங்களேன்னு திட்டவா? நீங்களே சொல்லுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. என்னுடைய அறிவுத்திறனை நீங்கள் பாராட்டினால் உங்கள் அறிவுத்திறனை சோதித்துபார்க்க கிழ்பாக்கம் ஹாஸ்பிடல் கூப்பிட்டு செல்லுவார்கள்... இப்ப நீங்க என்னை பாராட்ட ரெடியா?

   Delete
 4. சே. சே... இனி இந்தப்பக்கம் வரக்கூடாது.

  (அந்தப்பொண்ணு பர்கர் சாப்பிவிடுவதைப் பார்க்க
  எனக்கு வைத்தெரிச்சலாக இருக்கிறது.)

  ReplyDelete
  Replies
  1. உங்க வைத்தெரிச்சலுக்கான காரணம் எனக்கு புரியுது... நாமெல்லாம் ஒரு இட்லியோ 2 இட்லியோ சாப்பிடுறோம் ஆனா நம்ம உடம்பு ? ஆனா இந்த வெள்ளைக்காரி இவ்வளவு பெரிய பர்கரை சாப்பிட்டும் இப்படி சிக்கென்று அழகாக உடம்பை வைத்து இருக்காங்க என நினைக்கும் போது வயிறு நல்லாதான் எரியும் அது ஞாயம்தானுங்க

   Delete
 5. மதுரை தமிழரே, வேண்டாம். கிழக்கு சீமையிலே இருக்கும் நீங்களே இப்படி எழுதினா, இங்க மேற்க்கே கலிபோர்னியாவில இருக்குற எங்கள் லேவேலே வேற ஆகிவிடும். உடனடியாக இந்த பதிவை வாபஸ் பெறவும்.

  ReplyDelete
  Replies

  1. உங்க லேவலை பார்க்க விரும்புகிறோம். அதனால் ஒரு 'நல்ல' பதிவாக போட வேண்டுகிறோம்

   Delete
 6. என்ன தான் கடற்கரையில் அரை நிர்வாண வழ வழுப்பான பிகர்களை பார்த்தாலும், நம்ம தமிழ்நாட்டில் சுமாரான நிறத்தில் சாதாரண தமிழ் பெண் சுடிதாரிலோ தாவணியிலோ தலை நிறைய மல்லிகைச் சூடி, வெட்கப்பட்டுக் கொண்டே போகும் அழகுக்கு மில்லியன் டாலர் ஈடாகுமா..!

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் விவரித்த தமிழ் பெண்தான் எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் அப்படிபட்ட பெண்களை இப்போது காண்பது மிகவும் அரிதாகவே இருக்கிறது.

   Delete
 7. அப்போ இவுங்க நாட்ல துணிக்கடையே இல்லையா. எங்க ஊர்ல மட்டும் ஏங்க இவ்ளவு கடை.

  கோபாலன்

  ReplyDelete
  Replies
  1. இங்கே இயற்கையோடு இணைந்து வாழ நினைப்பதால் அவர்களுக்கு ஆடை தேவையில்லை...

   Delete
 8. ஆஹா! இப்படிலாமா பொறாமைப் படுவாங்க!?

  ReplyDelete
 9. படத்தை விட படம் போடச் சொன்ன காரணம்
  மிக மிக அருமை
  எச்சரிக்கையும் கூட...

  ReplyDelete
 10. சி சி சீ ...மதுரைத் தமிழனுக்கு உருட்டுக் கட்டை அடி தேவை தான் .
  என்ன ஒரு கொலை வெறி !!

  ReplyDelete
 11. இன்னாபா வூட்டாண்டை சொல்லிகினுதானே இங்க வந்த?!!!!!! பேஜாராயிடும்பா!

  அவுக நல்லா இருக்காகளா?!!!!! நீங்க நல்லா இருக்கீகளா?!!!!! இல்ல கட்டு கிட்டு போட்டுக்கிட்டுருக்கீகளா?!!!!

  ReplyDelete
 12. சரி தான்.... என்னோட பதிவு இப்படி ஒரு பதிவு போட உங்களுக்கு உதவி இருக்கே! :))))

  த.ம. +1

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog