உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, March 11, 2014

தப்பு தப்பான அர்த்தங்கள்!!! விகடனால் குடும்பத்தில் வந்த வினை ( எச்சரிக்கை பதிவு )

நேற்று இரவு தூங்குவதற்கு முன்பு விகடனை நெட்டில் பார்த்து கொண்டிருந்தேன். அப்போது மிக அழகான பெண்ணின் புகைப்படத்தை பார்த்தேன், அதில் ப்ரணிதா என்ற பெண் எனக்கு பிடித்த மற்றொரு கலரான ப்ளாக் கலரில் அம்சமாக சேலை கட்டி இருந்தார். அந்த படம் எனக்கு பிடித்ததால் அதை எனது பதிவுக்கு உதவுமே என்ற நோக்கத்தில் அதை டவுன்லோடு செய்துவிட்டு ஒரு கப் காபி குடிக்கலாம் என்று கிச்சனுக்கு சென்றேன்...அந்த இரவு நேரத்தில் எனது லேப்டாப்பை பார்த்த என் மனைவி அழகிய பெண் படத்தை நான் டவுன் லோடு செய்து வைத்திருந்ததை பார்த்து கோபம் கொண்டு வழக்கம் போல பூரிக்கட்டையால் தாக்க தொடங்கினார். என்னை தாக்கி கொண்டே யார் அவ எதுக்கு உங்களுக்கு போட்டோ அனுப்பினா என்று கேள்விகள் மேல் கேள்வி கேட்டு தாக்க தொடங்கினாள். ஒவ்வொரு முறை அவள் கேள்வி கேட்கும் போது அதற்கு நான் விளக்கம் சொல்ல வாயை திறக்கும் போது மற்றொரு தாக்குதல் வருவதால் பதில் சொல்ல முடியாமல் அம்மா அம்மா அம்மா என்று வலியில் அலறத்தான் என்னால் முடிந்தது. இதை மட்டும் ஜெயலலிதா அவர்கள் பார்த்து இருந்தால் என்னதான் அடி வாங்கி வலியில் துடித்தாலும் என்னை அம்மா அம்மா என்று கூப்பிடுகிறானே இந்த மதுரைத்தமிழன் என்று நினைத்து எனக்கு முதலமைச்சர் பதவியை கொடுத்துவிட்டு அவர் பிரதமாரகிவிடுவார் என்பது நிச்சயம் ஆனா நான் அடி வாங்குவதை அருகில் இருந்து பார்க்க கூட அவரால் முடியவில்லை...


சரி நம்ம கதைக்கு வருவோம்.... அடி அடியென என்னை போட்டு தாக்கிவிட்டு அதனால் வந்த களைப்பினால் என் மனைவி ஷோபாவில் அமர்ந்தாள். என்னதான் அவள் நம்மை அடித்தாலும் அவள் என் ஆசை மனைவி அல்லவா அதானல் அவள் மேல் இரக்கப்பட்டு களைத்து போன அவளுக்கு ஒரு கப் சூடா போர்ண்விட்டா கலக்கி தந்து விட்டு பதிபக்தியோடு அவள் அருகில் உட்கார பயந்து 5 அடி தள்ளி நின்று சொன்னேன்.செல்லம் அந்த போட்டோ யாரும் எனக்கு அனுப்பியது அல்ல விகடனில் வெளிவந்த படம்தான். நீயே கொஞ்சம் நல்ல சிந்திச்சு பாரு என் மூஞ்சிக்கு எல்லாம் அழகான பிகர் எல்லாம் பேசத்தான் செய்வாங்களா அல்லது போட்டோதான் அனுப்புவாங்களா என்றுதான் சொன்னேன்.


அதை கேட்டதும் மீண்டும் இலங்கை ராணுவம் தமிழர்களை போட்டுதாக்குவது போல மீண்டும் பூரிக்கட்டையால் கடுமையான தாக்குதல் தொடங்கியது உடனே உதவிக்கு நான் எனது பெண்னை கத்தி கூப்பிட்டேன். ஆனால் அவளோ சினேகா நடித்த பாவானி படத்தை டிவியில் பார்த்து அதில் இன்ஸ்பெக்டராக சினேகா வில்லன்களை போட்டுத்தாக்கி கொண்டிருப்தை பார்த்து மகிழ்ச்சியில் ஆழ்ந்து கொண்டிருந்தால் மன்மோகன்சிங்க் போல மெளனமாக அந்த படத்தை மட்டும் பார்த்து கொண்டிருக்கும் என் மகளிடம் இருந்து உதவி வாராது என்று நினைத்து மேலும் மேலும் அடியை வாங்கி கொண்டிருந்தேன்.


வழக்கம் போல என் மனைவி அடித்து முடித்தது களைத்து போன சமயத்தில் இப்ப எதற்காக நீ என்னை அடித்தாய் என்று கேட்டேன். அதற்கு அவள் சொன்னாள் உங்க பதில் என்னை மிகவும் இன்ஸ்ல்ட் பண்ணிவிட்டது என்றாள்


எப்படி என நான் கேட்க, அவள் சொன்னாள் உங்க மூஞ்சியை பார்த்து அழகான பெண் பேசமாட்டார்கள் என்று சொன்னிங்க அல்லவா ஆனால் அழகான நான் உங்களை கல்யாணம் பண்ணிக் குடும்பம் நடத்தவில்லையா? அப்படி இருக்கும் போது நீங்கள் சொல்வது அழகான என்னை அசிங்கமானவள் என்று இன்சல்ட் பண்ணுவது போல இருக்கிறது. அதனால்தான் கோபம் கொண்டு உங்களை தாக்கினேன் என்று விளக்கம் சொன்னாள் .


பாருங்க மக்களே பெண்கள் இப்படிதான் நாம் ஒன்று சொன்னால் அவர்கள் அதை தப்பு தப்பாக புரிந்து கொள்வார்கள்.


சரி மக்களே இன்றைய அடிவாங்கும் கோட்டா முடிந்துவிட்டது அதனால் இன்னும் வாயை திறந்து வைக்கவேண்டாம். வந்தீங்க நான் அடிவாங்குவதை ரசித்தீங்க எஞ்சாய் பண்ணீங்க. என்ன உங்களுக்கும் இது போல என்னை அடிக்கணும் என்று தோணுவது இயல்பே அதை நான் தப்பு என்று சொல்லவில்லை அதனால் என்னை அடிக்கவிரும்புவர்கள் உங்கள் கருத்துக்களால் என்னை அடித்து ஆசையை தீர்த்து கொள்ளுங்கள்


(கணவரை போட்டுத்தாக்கும் பெண்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள் !!!!! இனிமேல் நீங்கள் உங்கள் கணவரை அடிக்கும் போது ஒன்று நன்றாக அடித்துவிட்டு கேள்வி கேளுங்கள் அல்லது அடிக்கும் போது சிறிது பிரேக் எடுத்து அதன் பின் கேள்வி கேட்டு பதில் கிடைத்த பின் தாக்க தொடங்குங்கள் ஆனால் கேள்வியை கேட்டுக் கொண்டே தாக்க தொடங்காதீர்கள். பாவம் அந்த அப்பாவி கணவர்களால் வலியால் அலறத்தான் முடியுமே தவிர பதில் எப்படி சொல்ல முடியும்.. எதிலும் கொஞ்சம் நியாயம் வேண்டுமல்லவா பெண்களே )அன்புடன்
மதுரைத்தமிழன்

14 comments :

 1. நீங்க ரொம்ப நல்லவங்க.... எவ்வளவு அடிச்சாலும் தாங்கறீங்க...! இருங்க உங்க ரெண்டு பேருக்குமே இப்ப நான் போர்ன்விட்டா கலக்கித்தர்றேன்... குடிச்சிப்புட்டு ரெண்டு பேரும் மறுபடியும் ஸ்டார்ட் பண்ணுங்க...சுவாரஸ்யமா இந்த காட்சியை பார்க்கறதை விட்டுட்டு எதுக்கு டி.வி.. ப்ளாக்குன்னு பொழுது போக்கனும்...?

  ReplyDelete
 2. சே... இந்தப் "பச்சை" பிள்ளைய இப்படியா போட்டு அடிப்பது...? "பச்சை" அம்மா பதவி கொடுத்து விடுவார்கள்... ஹா... ஹா...

  அடுத்து "உண்மையைத்தான் சொன்னேன்" என்று மகளிடம் ரகசியமாக சொன்னதை அவர்கள் கேட்காமல் இருந்த வரைக்கும் சந்தோசம்... ஹிஹி...

  ReplyDelete
 3. இவ்வளவு அடி வாங்கியும் உங்களுக்கு புத்தி வர மாட்டேங்குதே!!!
  ஆசை, ஆசையா அந்த படத்தை டவுன்லோட் செஞ்சீங்க இல்ல, உடனே அந்த படத்தின் ப்ராப்பர்ட்டீஸ்ல போய் மறைக்க வேண்டும் என்று க்ளிக் பண்ணியிருக்க வேண்டியது தானே, இதெல்லாமா சொல்லிக்கொடுப்பாங்க????

  ஏற்கனவே, ரொம்ப அடி வாங்கிட்டீங்க அதனால, இங்கேருந்து பூரிக்கட்டைகளை அனுப்பும் திட்டத்தை கை விட்டுவிட்டேன்.

  ReplyDelete
 4. உங்கள் வேண்டுக்கோள் ஏற்றுக் கொள்ளப்பட்டது சகோ!

  ReplyDelete
 5. ஸ்பா.....மூச்சு வாங்குது! ஐயோ! அடில்லாம் இல்லீங்க! இதை படிச்சுட்டு சிரிச்சு சிரிச்சு!

  ஸோ அம்மானு கத்தினா முதல்வர் பதவி உறுதி அப்படின்றீங்க!!! பரவாயில்லையே மதுரைத் தமிழா! முதல்வர் ஆனால் ....பூரிக்கட்டை அடியிலிருந்து தப்பிக்கலாமே!...

  சரி அது போகட்டும்.....நாளைய கோட்டா அடிக்கு என்ன காரணம் சொல்ல போகிறீர்கள் என்று காத்திருக்கும் உங்கள் நலம் விரும்பிகள்???!!!!!????

  ReplyDelete
 6. நியூஜெர்சியிலும் பூரிக்கட்டை தானா ? அமெரிக்க ஆயுதங்கள் பயன் படுத்த மாட்டாரா உங்கள் மனைவி!

  ReplyDelete
 7. ரொம்ப வலிக்குதா! பாவம்! உங்களுக்குப் பழகிப் போச்சி!

  ReplyDelete
 8. நல்லா கேட்டாங்கப்பா ஒரு கேள்வி? நியாயமான கேள்வியும் கூட! ஹாஹாஹா!

  ReplyDelete
 9. ஐயோ.... பாவம் உங்கள் மனைவி!!

  அவ்வளவு அழகா பொறந்திட்டு.....ம்ம்ம்...

  ReplyDelete
 10. டைவர்ஸ் பண்ணுங்க அதுதான் அதுங்களுக்கு சரியான தணடணை

  ReplyDelete
 11. இன்னாத்த அட்ச்சுக்கினாங்க போ... இவ்ளோ அடி அட்ச்சதுக்கு பதிலா... ஒயுங்கா வாயில ரெண்டு அடி போட்டுக்கினுருந்தா எவ்ளோ சோக்கா இர்ந்துர்க்கும்...?

  ஹும்... நாங்க குட்த்து வச்சுக்கினது அவ்ளோதாம்பா... :-(

  அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!

  ReplyDelete
 12. அடடா... வர வர அடி ரொம்பவே பலமா விழுது போல! தில்லி வரைக்கும் உங்க அலறல் கேட்குதே!

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog