உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Saturday, March 8, 2014

தமிழக தேர்தல் தலைமை அதிகாரி பிரவிண்குமாருக்கு ஒரு திறந்த கடிதம்.செய்தி : ஒருவருக்கு ஒரு பாட்டில் மது தான்: 'டாஸ்மாக்' கடைகளுக்கு கிடுக்கிப்பிடி

சென்னை: லோக்சபா தேர்தலையொட்டி, 'டாஸ்மாக்' கடைகளில், மதுபானங்கள் விற்பனையை கண்காணிக்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. ஒருவருக்கு ஒரு பாட்டிலுக்கு மேல் வழங்க, தடை விதிக்கப்பட்டுள்ளது.


லோக்சபா தேர்தலில், வாக்காளர்களை கவர, அரசியல் கட்சியினர், பணம், மதுபானம், பரிசு, போன்றவற்றை வழங்குகின்றனர். இதை தடுக்க, தேர்தல் கமிஷன், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது தொடர்பான ஆய்வு கூட்டம், நேற்று, தலைமைச் செயலகத்தில், தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், 'டாஸ்மாக்' அதிகாரிகள், மதுவிலக்கு தடுப்பு குற்றப்பிரிவு மற்றும் கலால் துறை அதிகாரிகள், பங்கேற்றனர். கூட்டத்தில் பிரவீண்குமார் பேசும்போது, ''வாக்காளர்களுக்கு, அரசியல் கட்சியினர் பணம் கொடுப்பதுடன், அதிக அளவில் மதுபானம் வழங்குகின்றனர்; இதை தடுக்க வேண்டும். எனவே, அனைத்து மதுபானக் கடைகளையும் கண்காணியுங்கள். ஒருவருக்கு ஒரு பாட்டில் மதுபானம் மட்டும், விற்பனை செய்ய வேண்டும். மதுபானங்களை மொத்தமாக, விற்பனை செய்யக் கூடாது,'' என, அறிவுறுத்தி உள்ளார்இந்தி செய்தியை அறிந்த தமிழ்குடிமகன்கள் எனக்கு செய்தி அனுப்பி இதைபற்றி ஒரு விரிவான பதிவுகள் இடக் கோரி ஆயிரக்கணக்கான மெயில்களை எனக்கு அனுப்பினர்.. இந்த செய்தியை படித்ததும் என்னுள் பல கேள்விகள் எழுந்தன அதற்கு தமிழக தேர்தல் தலைமை அதிகாரி பிரவிண்குமார் பதில் அளிப்பாரா?


ஐயா பிரவிண்குமார் உங்களின் ஒருவருக்கு ஒரு பாட்டில் மது தான் என்னும் திட்டம் மிக நல்ல திட்டம்தான் ஆனால் அதைப்ப்ற்றி குடிமக்களுக்கு பல சந்தேகம் எழுந்துள்ளன. அதற்கு நீங்கள் விளக்கம் அளிக்கவேண்டும்


1. ஒருவருக்கு ஒரு பாட்டில் மது தான்: அதற்கு அளவு உண்டா? அதாவது பாட்டிலின் சைஸ்?2. எந்த வகை மதுபாட்டிலாக இருந்தாலும் ஒரு பாட்டில்தான் தருவீங்களா அல்லது ஒவ்வொரு வகையிலும் ஒரு பாட்டில் வாங்கலாமா?


3. ஒருவருக்கு ஒரு பாட்டில் மது தான் என்பது ஒரு நாளுக்கு ஒரு பாட்டில் மட்டும்தானா? அல்லது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு பாட்டில் வாக் கொள்ளலாமா?4. ஒரு கடையில் ஒரு பாட்டில் சரக்கு வாங்கியதும் ஒட்டுப் போட்டவர்களுக்கு கையில் மை வைப்பது போல பாட்டில் வாங்கியதும் கையில் மை வைப்பீங்களா?


5. அம்மன் ஒயின்ஸில் ஒரு பாட்டில் வாங்கிய நான் கணேஷ் ஒயின்ஸிற்கு சென்று இன்னொரு பாட்டில் வாங்கமுடியுமா? அப்படி வாங்கினால் அதை எப்படி தடுப்பீர்கள்?6. குடிமகன்களுக்கு மட்டும் என்று ரேஷன் கார்டு போன்று ஒரு அட்டையை உபயோகித்து வாங்க வை ஏதும் செய்யப்படுமா?


7. குடிப்பவர்களுக்கு மட்டும்தான் சரக்கு தரப்படுமா அல்லது குடிக்காதவர்களுக்கும் தரப்படுமா?8. உங்களின் இந்த திட்டத்தினால் குடிகாரனுடைய மனைவியும் பிள்ளைகளும் கணவனால் மிரட்டப்பட்டு ஒய்யின்ஸ் ஷாப்பிற்கு அனுப்பபடுவதை எப்படி தடுக்க போகிறீர்கள்?9. சரக்கு பாட்டிலில் இருந்தால்தானே பிரச்சனை என்று சர்க்கை பிளாஸ்டிக் கவரில் அடைத்து விற்றால் என்ன செய்வீர்கள்?10. குடிக்காதவர்கள் வாங்கி குடிப்பவர்களுக்கு அதிக விலையில் விற்றால் நடவடிக்கை எடுப்பீர்களா?


11. ஒருவருக்கு ஒரு பாட்டில் மது தான் என்று சொல்லுவதால் அரசாங்க சரக்கு கிடைக்காத தால் கள்ளஸ் சாரயத்தை நோக்கி மக்கள் செல்லுவார்களே இந்த திட்டத்தன் மூலம் கள்ளஸ் சாராயம் மறைமுகமாக தூண்டப்படுகிறதே அதை தடுக்க ஐடியா ஏதும் வைத்து இருக்கிறீர்களா?
இது போல பல கேள்விகள் குடிகாரர்களின் மனதில் தோன்றுகிறதே? அதற்கு உங்கள் பதில் என்னவென்று சொல்ல முடியுமா?தமிழக குடிமகன்களின் சார்பாக
மதுரைத்தமிழன்8 comments :

 1. கள்ள சாராயமும் ஒரு பாட்டில்தான். அதையும் கண்காணிப்போம் இல்ல.

  ReplyDelete
 2. செம நக்கல்ஸ் ஆராய்ச்சி! கடைசில ஒரு போடு போட்டீங்க பாருங்க....கள்ளாச்சாராயம்....குடிக்காதவர்கள் வாங்கி குடிப்பவர்களுக்கு அதிக விலையில் விற்றால்....ஹாஹாஹஹ்....சென்ஞ்சாலும் செய்வாங்க....ரேஷன்ல செய்யலியா ....

  த.ம.

  ReplyDelete
 3. நீங்கள் இந்த நேரத்தில் இந்தியாவில் இருந்திருந்தால் என்ன செய்வீர்கள் தலைவா?? இந்தியாவிலாவது இந்த சமயத்தில் ஒரு பாட்டீல் தான், ஆனால் மத்திய கிழக்கு நாடுகளில் தண்ணியடிப்பதற்கு லைசென்ஸ் இருக்க வேண்டும் என்று தெரியுமா உங்களுக்கு?

  ReplyDelete
 4. நல்லாவே கேட்கறீங்க ! உங்க வலையில் வைரஸ் இருப்பதா என்னோட அவசாட் ஆண்ட்டி வைரஸ் சொல்லுது! ரெண்டு நாளா திறந்தாலே மணியடிச்சு சொல்லுது! என்ன காரணம்?

  ReplyDelete
  Replies
  1. yah! எனக்கும் அவாஸ்ட் அப்டிதான் சொல்லுது! ??
   சரி நம்ம சிஸ்டம்ல மிஸ்டேக் னு நினைத்தேன்.

   Delete
 5. இத்தோட விடுவாரா. அடுத்து பிரியாணி குடுக்காதீங்கம்பாரு. கோழி பிரியாணி குடுக்கலாமா, முட்ட பிரியாண் குடுக்கலாமா, ஆட்டுப் பிரியாணி குடுக்கலாமா, மாட்டுப் பிரியாணி குடுக்கலாமான்னு கட்சிக்காரங்க கேக்க ஆரம்பிப்பாங்க. அதுக்குள்ள எலெக்ஷனே முடிஞ்சிரும்.

  கோபாலன்

  ReplyDelete
 6. ஒரு பாட்டில் சரக்கை வச்சு ஒரு பதிவை தேத்துன உங்களை எப்படி புகழ்றதுன்னு தெரியலை

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog