உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, March 12, 2014

மக்களவை தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் நிலமை இப்படிதான் இருக்கிறதுகாங்கிரஸ்: ( சோனியா ) எந்த கட்சி நம்மோடு கூட்டணி வைக்க வருவார்கள் என்று எதிர்பார்த்த கட்சியின் இன்றைய நிலமை மிகவும் பரிதாபமாகத்தான் இருக்கிறது. இப்போது அவர்கள் கட்சி சார்பாக போட்டியிட தைரியமாக யார் வருவார்கள் என்று எதிர் பார்த்து கொண்டிருக்கின்றனர்
தேமுதிக : (விஜயகாந்த்) நிலையில்லா எதிர்காலத்தை நினைத்து நிகழ்காலத்தை கோட்டை விட்டுகொண்டிருப்பவர்கள். தங்களுக்கு இருக்கும் வாக்கு சதவிகித்தை வைத்து மற்றவர்களின் வெற்றிக்கு வேண்டுமானால் இவர்களால் உதவ முடியுமே தவிர தனியாக நின்று வெற்றிக் கொள்ள முடியாது என அறியாமல் சடுகுடு ஆடிக் கொண்டு இருக்கிறார்கள்.
அதிமுக : (ஜெயலலிதா) ஹைக்ளாஸ் தனியார் பஸ்ஸில் வெற்றியை அடைந்துவிடுவோம் என்று நினைத்து வெகு விரைவாக சென்றுக் கொண்டிருக்கிறார்கள் அப்படி நினைப்பது போல அவர்கள் முழு வெற்றியை அடைய முடியாது காரணம் பல தடைகள் இருந்தாலும் அதையும் கடந்து வெற்றி பெறலாம்.
திமுக : (ஸ்டாலின் )இந்த பஸ் அரசாங்கத்தின் சாதாரண பஸ்ஸைப் போன்றது இது போகாத இடமெல்லாம் போய் நன்றாக அடிபட்டு உடைந்த நிலைமையில் ஒடிக்கொண்டிருப்பதை போல்தான் இதன் நிலமையும் இது பாதி வழியில் நிற்க வாய்ப்புகள் அதிகம்.
பாஜ : (மோடி) பஸ் ஒடுவது பெட்ரோலினால் ஆனால் இவர்கள் பஸ் அலையினால் ஒடப் போகிறது என்று எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், இந்த பஸ் அலையினால் ஒடப் போவதில்லை அது முழ்கத்தான் போகிறது என்பதை அறியாதவர்கள்
மதிமுக : (வைகோ) முன்பு சொன்ன பஸ்ஸில் புதிதாக சேர்ந்த நடத்துனர் முழ்கப் போகும் வண்டியில் புதிதாக சேர்ந்தவர் ஒரு வேளை அதிர்ஷம் இருந்தால் முழ்கிய பஸ்ஸில் இருந்து தப்பிக்க வாய்ப்பு இவருக்கு உண்டு.பாமக : (ராமதாஸ்) பஸ் ஓட்டத் தெரியாதவர் வேறு யாரையும் ஓட்டவிடாமல் பஸ்ஸில் 10 பயணிகளை ஏற்றுக் கொண்டு டில்லி போகவிரும்புவர்.

அன்புடன்
மதுரைதமிழன்
10 comments :

 1. ஆட்கள் தேவை விளம்பரம் மிக மிக அருமை. நன்றாக ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. ரசிப்பிற்கு நன்றி

   Delete
 2. ஆமா, நீங்க அம்மாக்கிட்டேயிருந்து எத்தனை பொட்டி உங்களுக்கு பார்சல் வந்துச்சு. திரை நச்சத்திரங்களுக்கு பணம் கொடுத்து தேர்தல் பணி செய்யச் சொல்கிறார்கள், உங்களுக்கு மட்டும் பொட்டி கொடுத்து, வலைப்பூ வழியாக தேர்தல் பணி செய்யச் சொல்லியிருக்கிறார்களாமே!!!!!

  (இதனால தான் ரெண்டு மூணு பதிவு அம்மா புராணமா இருந்துச்சோ!!!)

  ReplyDelete
  Replies

  1. பொட்டி எனக்கா ? இன்னும் வந்து சேரவில்லையே? அடப்பாவிங்க யாரோ அதை சுட்டு போட்டுட்டாங்களே

   Delete
 3. அருமையான அதே சமயம் மிகவும் யதார்த்தமான கற்பனை. அதுவும் மருத்துவரைப் பற்றியது மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. ஹாஹாஆஹா....கற்பனை அருமை! செம காமடி! மிகவும் ரசித்தோம்!

  துளசிதரன், கீதா

  ReplyDelete
 5. நல்லாயிருக்கு கற்பனை... ஆனால் இன்றைய அரசியல்வாதிகளின் நிலையை உணர்த்துகிறது..

  ReplyDelete
 6. விலையில்லா கட்சியோட சேர்ந்தாலும் சேர்ந்தார் இப்டி
  நிலையில்லாமல் தள்ளாடுகிறார் விஜயகாந்து !!
  பா.ம .க கமென்ட் சூப்பர்!!

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog