உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, March 3, 2014

இதுதான் காதல் என்பதா இதயம் தொட்டுவிட்டதா சொல் மனமே!


மாலை நேரத்தில் ஒரு வயதான தம்பதிகள் உடகார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மனைவி கணவனிடம் சொன்னாள். என்னங்க எனக்கு மூடி மிக நீளமாக இருக்கிறது அதனால் இந்த பழைய உடைந்து போன சீப்பை வைத்து தலைவாறுவது மிக கடினமாக இருக்கிறது அதனால் எனக்கு ஒரு நல்ல சீப்பு வாங்கி தாருங்களேன் என்று கேட்டாள்.

அதற்கு கணவன் இங்க பாரும்மா எனது வாட்ஸ் ஸ்டிராப் பிஞ்சு போய்விட்டது அதை மாற்ற கூட பணம் இல்லாமல் இருக்கிறேன். அதனால் இப்போது என்னிடம் பணம் இல்லை. பணம் வந்ததும் கண்டிப்பாக வாங்கி தருகிறேன் என்று கண்ணில் வரும் கண்ணிரை மறைத்தவாறே சொன்னார்.

அந்த பெண்மணியும் தன் கண்ணில் வந்த கண்ணிரை மறைத்தவாறே சரி சொன்னாள்.

அடுத்த நாள் அந்த கணவன் வேலை கடினமாக உழைத்து கொண்டிருந்த போது மனைவி ஆசையோடு கேட்ட அந்த கோரிக்கை மனதில் நிலையாடிக் கொண்டே இருந்ததால் வேலைவிட்டு வீட்டுக்கு வரும் வழியில் உள்ள வாட்ஸ் கடையில் அந்த வாச்சை விற்றுவிட்டு அந்த பணத்தில் மனைவிக்கு பிடித்த சீப்பையும் கூடவே கொஞ்சம் மல்லிகை பூவையும் வாங்கி வீட்டிற்கு வந்தார்.


அவர் வீட்டிற்கு வந்ததும் மனைவியை பார்த்ததும் மிகவும் ஷாக் அடித்தவர் போலானார்.


காரணம் அவன் மனைவி தன் தலைமுடியை மிகவும் சிறியதாக வெட்டி வைத்து இருக்கிறார். ஏன் அப்படி செய்தாய் என்று கணவர் கேட்டதற்கு நீங்கள் பணம் இல்லாமல் கஷ்டப்படுவதால் நான் என் தலைமுடியை கட் செய்து அதை வேண்டியவருக்கு விற்று அதில் கிடைத்த பணத்தில் நான் உங்கள் வாட்சுக்கு ஏற்ற நல்ல ஸ்டிராப் வாங்கி வைத்துள்ளேன் என்று கூறி அதை அவனிடம் கொடுத்தாள்.

அந்த நேரத்தில் அவனும் தான் வாட்ஸ் விற்ற கதையை சொல்லி அழுதான்........

அதன் பின் இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்து அழுதனர்...

இந்த தம்பதிகளின் வாழ்க்கையில் பணம் இல்லாததுதான் குறையே தவிர அவர்களின் மணவாழ்வில் சந்தோஷத்தில் அன்பில் குறைவே இல்லாமல் வாழ்ந்து வந்தனர் அதனால் அங்கு பூரிக்கட்டைக்கு அவசியம் இல்லை


அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி :நான் ஆங்கிலத்தில் நெட்டில் படித்த சிறுகதையை என் நடையில் தந்ததுமட்டும் நான்...

40 comments :

 1. இந்த காட்சியில் சிவாஜியும் கேயார் விஜயாவும் நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்று மனக்கண்ணில் எண்ணிப்பார்த்தேன்...
  கூவத்தில் வெள்ளம் ஏற்படும் அளவிற்கு கண்ணீர்...

  ReplyDelete
  Replies
  1. உமக்கு ஏன் இந்த கொலைவெறி

   Delete
  2. இது நல்லாருக்கே....

   Delete
 2. Simply Superb! Love! இதுதாண்டா காதல்!

  மிகவும் ரசித்தோம்!

  ReplyDelete
  Replies
  1. ரசித்து படித்தற்கு நன்றிங்க

   Delete
 3. என்னது... இந்த சிறுகதை இப்போது தான் படித்தீர்களா...? சரி தான்...!

  ReplyDelete
  Replies
  1. இந்த கதை தமிழில் வந்து இருந்தால் எப்பவோ படித்து இருப்பேன். ஆனால் ஆங்கிலத்தில் வந்த கதை அல்லவா அதனால் இப்பதான் எழுது கூட்டி படித்து முடித்தேன் ஹீ.ஹீ அது மட்டுமல்லாமல் என் வாழ்க்கையை இதோட கம்பெர் பண்ணி பார்த்த போது மிகவும் அதிசயமாக இருந்ததால் அதை ஷேர் செய்யதேன் அவ்வளவுதாங்க. இதுக்கெல்லாம் என்னை அடிக்க வந்திடாதீங்க

   Delete
  2. நாங்கள் அடித்தால் உங்கள் மனைவி எங்களோடு சண்டைக்கு வந்து விடுவார்கள். உங்களை அடிப்பதற்கு அதுவும் பூரிக்கட்டையால் அடிப்பதற்கு அவருக்கு மட்டுமே உரிமை இருக்கிறதாம்.

   Delete
  3. இதை கொஞ்சம் சத்தம் போட்டு சொல்லாதீங்க. அவளுக்கு இப்பவெல்லாம் கை வலிப்பதினால் அடிப்பதை குறைத்து இருக்கிறாள். உங்களுக்கும் அடிக்க ஆசை இருப்பது தெரிந்தால் உங்களுக்கு க்ரீன் கார்டு வாங்கி கொடுத்து என்னை அடிக்க ஏற்பாடு செய்வாள், அவ்வளவு பாசம் என் மீது

   Delete
  4. என்னது! க்ரீன் கார்டு கொடுப்பாங்காளா??? இன்னும் சத்தமா சொல்றேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்!!!!!

   Delete
 4. Replies
  1. ஆமாம் உண்மையான காதல் எல்லாம் இப்போது காகிதங்களில் அதாவது புத்தகங்களில் மட்டும்தான் இருக்கிறது

   Delete
 5. மலர்ந்திடும் பூக்கள் கவிதை
  ........மரங்களின் அசைவும் கவிதை
  புலர்ந்திடும் காலைப் பொழுதின்
  .......காட்சியும் புதுமைக் கவிதை
  வளர்ந்திடும் நிலவும் கவிதை
  .......வடிவிலா மேகம் கவிதை
  தளர்ந்திடும் முதுமை வரினும்
  ........தளர்வுறாக் காதல் கவிதை

  ReplyDelete
  Replies
  1. வாவ்....காதல் என்றதும் கவிதை மடைதிறந்த வெள்ளம் போல வருகிறதே நண்பரே...அருமையான கவிதை

   Delete
  2. பிரமாதம் முரளிதரன்.

   Delete
 6. பதிவு நன்றாக இருந்தது... கடைசியில் நீங்களும்,உங்கள் மனைவியும் தான் அந்த வயசான தம்பதிகள் என்று சொல்வீர்கள் என நினைத்தேன்... நல்லவேளை இல்லை.... நன்று :-)

  ReplyDelete
  Replies
  1. நானும் என் மனைவியும் எலியும் பூனையுமாக இருப்பது போல ஒரு இமேஜ் க்ரியேய் பண்ணி வைச்சு இருக்கிறேன். அதனால்தான் இந்த தம்பதிகள்தான் நாங்கள் என்று சொல்லவில்லை....இந்த தம்பதிகள் வயதானவர்கள் ஆனால் எங்கள் இருவருக்கும் வயதே கூடாதுங்க

   Delete
 7. நல்ல கதை ...எனக்கு சின்ன வயசில சிறுவர் மலரில் படிச்ச கதை எல்லாம் இப்போ ஞாபகம் வருது....

  ReplyDelete
  Replies
  1. கடைசியில என் தளத்தை சிறுவர் மலர் ரேஞ்சுக்கு இருக்கிறது என்று நன்றாக கிண்டல் அடித்துவிட்டீர்களே

   Delete
 8. உங்களைப் போன்றவர் இருக்கும் வீடுகளில்
  புரிக்கட்டைத்தான் காதலின் சின்னமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. சரியா சொல்லியிருக்கிங்க சகோதரி

   Delete
  2. ஷாஜகான் மும்தாஜ்க்காக பளிங்கு கற்களால் தாஜ்மஹாலை கட்டினான் இந்த மதுரைத்தமிழன் பூரிக்கட்டையால் தாஜ்மஹால் கட்ட ரெடியாக இருக்கிறான். ஆனால் கட்டுவதற்கு முன்னால் இந்த மதுரைத்தமிழன் போய் சேர்ந்துவிடுவான் போலிருக்கிறது

   Delete
  3. என்னடா ஆஸ்திரேலியாவில் இருந்து ஒருத்தர் வருவாரே அந்த அண்ணனை இன்னும் காணலியே என்று நினைத்தேன், வந்துட்டீங்க....

   Delete
  4. லேட்டா வந்ததுக்கு காரணம், ரெண்டு நாளா கொஞ்சம் ஜலதோஷம், மூக்கடைப்புன்னு எல்லாம் இருந்துச்சு. அலுவலகத்துக்கு லீவு போட்டு,நல்லா தூங்கி எந்திரிச்சா சரியாயிடும்னு நினைச்சு நேத்து லீவு போட்டேன். ஆனா பாருங்க என் மனைவி, தூங்கி எந்திரிச்சா எல்லாம் சரியாப்போகாது, எனக்கு எடுபிடி வேலை செய்யுங்கன்னு சொல்லி என்னைய எடுபிடியாக்கிட்டாங்க, அதனால தான் கணினி பக்கமே வரமுடியலை.

   Delete
 9. அற்புதமான காதல் கதை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. கதை அருமைதான் ஆனால் வாழ்க்கையில் இதுமாதிரி தொடர முடியாது.. உதாரணமாக நாம் அவள் ஆசைபடி சீப்பூ வாங்கி வந்தால் முதலில் சொல்லுவது அந்த கலர் எனக்கு பிடிக்கவில்லை என்பாங்க.. சரி பிடித்த கலரில் வாங்கி வந்தால் அதன் கைப்படி நீளம் சரியில்லை என்பாங்க...அதன் பின் சீப்பின் மெட்டிரியல் ஸ்ரீ இல்லை என்பாங்க...இப்படி பல சொல்லி நம்பளை நொந்து நூலாக்கிவிடுவாங்க...

   Delete
  2. ஹா..ஹா...ஹா... மிகச்சரியாய் சொல்லியுள்ளீர்கள். அப்படித் தானே இருக்க வேண்டும்...:))

   Delete
 10. இன்னாபா ஆச்சி...? நல்லாத்தானே போய்க்கினு இர்ந்துச்சு...?
  இர்ந்தாலும் சோக்கா சொல்லிகினபா...

  ReplyDelete
  Replies
  1. மோடியையும் பூரிக்கட்டையையும் தமிழக் அரசியலையும் வைச்சு எவ்வளவுகாலம்தான் பதிவு போடுறது அதனாலதான் இப்படி ஒரு பதிவு

   Delete
 11. ஏற்கனவே பாடத்தில் இந்தக் கதையை படித்தாகிவிட்டது சகோ

  ReplyDelete
  Replies
  1. இதுக்குதான் சொல்லுறது என் தளத்தை தவிர வேறு எதையும் படிக்க கூடாது என்பது....

   Delete
 12. அந்த பெண் தன் கணவன் சாப்பிட்ட பிறகுதான் சாப்பிடுவாள்... அவள் சமைத்ததை சாப்பிட்டு அவனுக்கு ஒண்ணும் ஆகலைன்னு தெரிஞ்சகிட்ட பிறகு... தான் சாப்பிடத்தான்...! ஹா... ஹா... இந்த காதல் எப்பூடி?

  ReplyDelete
  Replies
  1. கணவன் சாப்பிட்ட பிறகு அவனுக்கு ஒன்றும் ஆகவில்லை என்று அறிந்த பிறகுதான் சாப்பிடும் பெண்ணாக இருந்தால் அவள் எச்சில் தட்டை மட்டும்தான் நக்கி கொண்டிருக்க வேண்டும் காரணம் அவந்தான் எல்லாவற்றையும் வழிச்சு சாப்பிட்டுவிடுவானே அதன் பிறகு மிச்சம் எப்படி இருக்கும்

   Delete
 13. பாவம் சகோதரா நீங்க புண் பட்ட மனதைப் புகையை விட்டு ஆற்றுவது போல
  இந்தக் கதையை விட்டு ஆற்றி உள்ளீர்கள் இனியேனும் அந்தப் பூரிக் கட்டை
  உங்களை விட்டு ஒழியட்டும் வாழ்த்துக்கள் :)))))))))) (பாவம் இந்தப் பயபுள்ள )

  ReplyDelete
 14. இது தான் உண்மையான காதல்.... ஆனால் முடியை ஏன் மூடியாக்கிவிட்டீர்கள்?

  ReplyDelete
 15. எங்க தமிள் நாட்ல ஒரு பாட்டே இருக்கு : பணம் என்னடா பணம் பணம், குணம்தானடா நிரந்தரம்.
  ஆனா ஒரு பிரச்னை, பாடறவரு பணக்காரரு.

  கோபாலன்

  ReplyDelete
 16. இது என் பேவரிட் சிறுகதை .O.Hendry எழுதிய Gift of maggi அது மேகி இல்லை மேஜை.அதாவது கிறிஸ்து பிறந்தப்ப மூன்று தேவதூதர்கள் பரிசு தருவாங்களே அதற்கு சமம் அப்டின்னு அர்த்தம். அப்புறம் அந்த மனைவி, கணவனின் பிளாட்டினம் வாட்ச் ஸ்ட்ராப் பை பார்த்து எண்ணுவாள் தான் கணவனும் பார்பதற்கு பகட்டில்லாத பிளாட்டினம் போன்றவன் என்று. ப்யுடிபுல் சீன் !!! நல்லாவே மொழிபெயர்த்துருக்கிறீங்க !

  ReplyDelete
 17. ஆங்கில சிறுகதை மன்னன் ஓ ஹென்றியின் மிகப் பிரபல சிறுகதை! உங்களைப் போலவே அனைவருக்கும் பிடித்த கதை!

  ReplyDelete
 18. சிறப்பான கதையை தமிழில் பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog