உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, March 10, 2014

தளபதிக்கும் சாணக்கியருக்கும் தனியாக நிற்க பயம் ஏன்?

ஒரு பெண்மணியை எதிர்க்க தலைவரும் தளபதியும் அவசியமா என்ன? ஏன் தனியாக நிற்கும் தைரியம் இவர்கள் இருவருக்கும் இல்லாமல் போயிற்று? தேர்தலில் தனியாக நிற்கும் ஒரு பெண்மணியை எதிர்க்க இவர்களுக்கு மறுபடியும் ஏழு கட்சி கூட்டணி தேவைபடுகிறது.


ஜெயலலிதா அவர்களோ தன்னிடம் இருந்தவர்களை உதைக்காமல் உதறிவிட்டு தனியாக மோதி பார்க்கிறேன் என்று சவால் விட்டு செல்கிறார். அவரால் அவமானப்பட்டு உதறிவிடப்பட்ட கம்யூனிஸ்டுக்கள் ஜெயலலிதாவை எதிர்த்து பேசாமல் வாய்முடிதான் செல்கிறார்கள் அப்படி பட்டவர்கள் கூட தனியாக நின்று பார்ப்போம் என்றுதான் நினைக்கிறார்களே ஒழிய திமுக கூட்டணியில் சேர மறுக்கிறார்கள்.


அதே நேரத்தில் ஒரு தொகுதி பெற்ற காரணத்தினால் கோபம் கொண்ட திருமாவளவன் கட்சியினர் திமுக தலைவரின் கொடும்பாவியை எரித்து ஆர்பாட்டம் செய்ததால் அதற்கு பயந்து இன்னுமொரு சீட்டு கொடுத்து தன் கூட்டணியில் தக்க வைப்பது தான் தனியாக நின்றால் தோற்றுவிடுவோம் என்ற பயத்தினாலா என்ன?


திமுக ஆட்சியில் தமிழகத்தில் பொற்கால ஆட்சி போல நடந்தாக பில்டப் கொடுத்தும் பல வளர்ச்சி திட்டங்கள் ஏற்படுத்தியதாக மார்தட்டி கொண்டும் அதே நேரத்தில் அதிமுக ஆட்சியில் வளர்ச்சியே ஏதும் இல்லை அதிகார ஆட்சிதான் நடக்கிறது மக்கள் மிகவும் இந்த ஆட்சியை கண்டு மிக மனம் வெறுத்துள்ளனர் என்று சொல்லும் திமுக, தனியாக நிற்க பயபடுகிறது. அப்படி திமுகவினர் சொல்வது உண்மையாக இருந்தால் பயப்படுவது அதிமுக வாகத்தானே இருக்க வேண்டும்


எங்கள் கதவுகள் மூடப்பட்டுவிட்டன அதில் காங்கிரஸுக்கு இடம் இல்லை என்று சொன்னவர்கள் இப்போது 5 சீட்டு தருகிறேன் வேண்டுமானால் வந்து சேருங்கள் என்று வரவேற்பது எதனால்? நீங்கள் எந்த காரணத்தினால் காங்கிரஸை எதிர்த்து வெளியேறினிர்களோ அந்த காரணத்திற்கு அவர்கள் ஆதரவு தந்துவிட்டனரா? அல்லது ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யபட்டவர்களை விடுதலை செய்கிறோம் என்று சொல்லிவிட்டனரா என்ன? இல்லை தமிழக் மீனவர்களுக்கு பாதுகாப்பு செய்து தருகிறோம் என்று சொல்லிவிட்டார்களா? அப்படி என்ன நல்ல காரியம் அவர்கள் செய்தார்கள். அவர்களுக்கு ஏன் உங்கள் கூட்டணியில் மீண்டும் வரவேற்பு? விஜயகாந்த் உங்கள் இருவருக்கும் அல்வா கொடுத்ததினால்தான் இந்த கூட்டணியா? எப்படியோ பிரிஞ்ச உங்களை விஜயகாந்த் இணைத்து வைத்துவிட்டார் அவர் மாற்றுக் கூட்டணிக்கு சென்றாலும். சரி இனி என்ன விஜயகாந்துதான் வரலைன்னு சொல்லிட்டாரு இல்ல. அப்ப எங்க அண்ணண் அழகிரியையும் உடன் சேர்த்து கொள்ள வேண்டியதுதானே?அன்புடன்
மதுரைத்தமிழன்

14 comments :

 1. ஜெஜெ ஜே ஜே யாக வலம் வந்து கொண்டிருக்கிறார்! நீங்கள் கொடுத்துள்ள படம் அசத்தல்! அம்மா பாத்தாங்கன்னா "மகனே! நீயல்லவோ வீரத் தமிழன்! அம்மாவிற்கு இப்படி ஒரு படம் கொடுத்து அழகு பார்க்கும் மகன்!" என்று புளகாங்கிதம் அடையலாம்!

  ReplyDelete
 2. எனக்கு அம்மாவை பிடிக்காவிட்டாலும் அவர் தைரியமும், ஆளுமையும் ரொம்பப் பிடிக்கும். தைரியத்தில் அம்மாவை மிஞ்ச யாராலும் முடியாது!

  ReplyDelete
 3. சிங்கம் - சிங்கிளாதான் வரும்...!

  ReplyDelete
  Replies
  1. ''EPPADI- EPPADI- DHANPAI POLA- 'BLOGSPOT. COMMENT ???????

   Delete
 4. நீங்க நேற்று (உங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தானே!!) முழுக்க அம்மா நடித்த பழைய படங்களை பார்த்தீங்களா என்ன? (அம்மாவை இப்படி படம் எடுத்து போட்டிருக்கீங்க!!!!)

  ReplyDelete
 5. வணக்கம் சகோதரர்
  தங்களின் இந்த பதிவு வழக்கமான எள்ளல்களோடு சிந்திக்கவும் வைக்கிறது. மடியில் கணம் இருக்கும் போது வழியில் பயம் இருக்கத் தானே செய்யும் சகோதரரே!! அரசியல் சதுரங்கத்தில் எல்லாம் அடுத்தடுத்த வியூங்கள். மக்கள் தான் விழிப்போடு தான் இருக்க வேண்டும். பகிர்வுக்கு நன்றி பல..

  ReplyDelete
 6. அம்மா ரொம்ப வருசத்து அப்புறம் செம ஹாட்டு ;))))
  //அப்புறம் என்ன எங்க அண்ணனை சேர்த்து வேண்டியதுதானே// ஊர் பாசம் !!
  பாத்துடே இருங்க மறுபடியும் கண்கள் பனிக்கும், நெஞ்சம் இனிக்கும்!! lol !

  ReplyDelete
 7. நம்மை இளிச்ச வாயன் ஆக்குகின்றன இந்த கட்சிகள்! பார்ப்போம்!

  ReplyDelete
 8. உங்க பதிவைப் பார்த்ததும் நம்ம ஊர் ஞாபகம் வந்துடுச்சு..

  நம்ம ஊர்ல தண்ணியப் போட்டுட்டு ஒண்டிக்கு ஒண்டி வர்ரியா?னு நிப்பாணுக. கூட்டமா வந்து அடி அடினு மொத்திட்டுப் போயிடுவாணுக! மறுபடியும் தண்ணியப் போட்டுட்டு "கோழைகள்" கூட்டமா வந்து அடிச்சுட்டுப் போறானுகனு சொல்லி அழுவான் நம்மாளு!

  அதுக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை..

  தனியா நின்னு 40 சீட்டும் ஆத்தாவே வரட்டுமே? என்ன இப்போ? மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே ஆட்சி நடந்தால் தனி ஈழம், 24 மணி நேரம் கரண்ட் (கட்) எல்லாம் நமக்குக் கிடைத்தால் நல்லதுதானே?

  பார்ப்பணர்கள் நம்மை தொடர்ந்து ஆள்வதுதான் ஒவ்வொரு திராவிடனுக்கும் பெருமை? நம்மள்ளாம் கையாளாகதவனுக, எங்களை ஆள எப்பவுமே பார்ப்பணர்கள் வேண்டும் னு பெருமையா சொல்லிக்குவோமே? இதை சொல்ல மட்டும் ஜெயா ஜால்ராக்களுக்கு என்ன வெட்கம்?? I think that's how we let foreigners rule us 1000 s of years. We always think others are better than our own to rule us! We find them RESPECTABLE or not? ஆனால் யாரையாவது போட்டுத் தள்ளணும்னா காஞ்சி மடத்திலிருந்து ஓலை வரும், திராவிட நாய்கள் போயி வேலையை முடிச்சுடும். அதெல்லாம் திராவிடர்களின் வீரம் இல்லையா என்ன?

  I think people like you existed ALL THE TIME to reveal the "good part of" who deserve to rule us! That's why Brahmins rule us even today! Nothing wrong with that. But you must admit that you are incompetent to rule your own people! YES, YOU! I hope you dont have any problem with that. DO YOU?

  Now start your canvassing!

  ReplyDelete
 9. BTW, MK is certainly corrupt. So was Robert Clive who invaded India with the help of Indians like YOU! I heard he committed suicide and died because of corruption charges. It is does not matter, வெள்ளிக்காரன் ரூலிங்கே தனிதான்! ஆத்தா வாள் பிடிச்சு நிக்கிற அழகும்தான் - நீங்க சொன்னது இது! அதே மாரித்தான் பாரப்பணர்கள் ரூலிங்கே தனிதான். என்ன சொல்றேள்? :)

  ReplyDelete
 10. எப்பவுமே வாக்காளர்களான நாமதான் இளிச்சவாயர்கள்...

  ReplyDelete
 11. எல்லாமே விஷம் என்றால் எதைச்சாப்பிடுவது?

  பாவம் தான் வாக்காளன்.

  ReplyDelete
 12. ஜெயலலிதாவின் பலமும் அதுதான் பலவீனமும் அதுதான் !

  மானங்கெட்ட தலைவனை மண்ணள்ளி போடுங்கய்யா.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog