உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, March 7, 2014

சரியான காமெடிங்க......(சிறந்த நகைச்சுவை நிகழ்ச்சியை பார்க்க புதிய தலைமுறை செய்திகளை பாருங்கள் )

எனக்கு பொழுது போகவில்லை என்றால் விஜய் டிவி நிகழ்ச்சிகளை பார்ப்பேன்.ஆனால் வர வர அதில் உள்ள நிகழ்ச்சிகள் ஒன்றும் இப்போது இன்ரெஸ்டிங்காக இல்லை அதனால் இன்று விஜய் டிவிக்கு பதிலாக புதிய தலைமுறை டிவியை ஆன் செய்தேன். அதில் பார்த்த செய்திகள் என்னை மிகவும் சிரிக்க வைத்தன.முதல் செய்தி: திருமாவளவன் திமுக கட்சியுடன் ஏற்பட்ட கூட்டணியை பற்றி பேசினார். அப்போது நிருபரின் கேள்விக்கு அவர் பதிலளித்த போது சொன்னது . நாங்கள் திமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தும் போது எங்களுக்கு 5 தொகுதிகள் வேண்டுமென்று கோரிக்கை விடுவித்தோம் ஆனால் எங்களுக்கு 3 தொகுதிகள் கிடைக்கும் என்று நம்பினோம். கடைசியில் 2 தொகுதிவது வேண்டும் என்று உறுதியோடு இருந்தோம். ஆனால் அவர்கள் ஒரு தொகுதிகள் மட்டும் எங்கள் கட்சிக்கு தந்தார்கள் அதை நாங்கள் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டோம் இதற்கு காரணம் ஒட்டுகள் பிரிந்து மதவாதிகள் வெற்றி பெறக்கூடாது என்பதால் மட்டுமே இதற்கு ஒத்துக் கொண்டோம் என்று சொன்னார்.


திருமா உங்களுக்கு நல்ல நேரம் அதனால்தான் கலைஞர் தன் இதயத்தில் இடம் தராமல் சிதம்பரத்தில் தந்து இருக்கிறார்.அடுத்த செய்தி: இரண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக தலைவர்கள் கூட்டம் போட்டு நிருபர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில் சொன்னது.


நாங்கள் அதிமுகாவிடன் பல மாதங்களாக கூட்டணிப் பற்றி பல தடவை பேசிவந்தோம் ஆனால் அதில் பலன் ஏது இல்லை என்பதால் அதிமுக கூட்டணியில் இருந்து நாங்கள் வெளிவந்து விட்டோம் என்று சொன்னார்கள்.
அம்மா இந்த இருவரையும் தூக்கி ஏறிந்து விட்டாலும் வலியை பொறுத்து கொண்டு ஜெயலலிதா என்ற பெயரை சொல்லக் கூட பயந்து. மீண்டும் மீண்டும் நாங்கள் அதிமுவுடன் பேச்சு வார்த்தை நடத்தினோம் என்று சொன்னார்களே தவிர ஜெயலலிதாவுடன் பேச்சு வார்த்தை நடத்தினோம் என்று ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. நல்ல வேளை சீட்டுக்காக நாங்கள் பணம் கொடுத்து ஏமாந்துவிட்டோம் என்று தமிழக மக்கள் சீட் பண்ட் கம்பெனியில் முதலிடு செய்வது போல இவர்களும் இங்கு செய்து ஏமாறாமல் இருந்தது மிகவும் அதிசியமே...
அடுத்தாக நம்ம முன்னால் சினிமா நடிகர் கார்த்திக் விகடனுக்கு அளித்த பேட்டியில் சொன்ன விஷயம் இன்னும் சிரிக்க வைத்தது,


நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி?''

''இரண்டு தேசிய கட்சிகளுடனும் ஒரு மாநில கட்சியுடனும் பேச்சு வார்த்தை நடத்திட்டு இருக்கேன். இன்னும் ஒரு வாரத்தில் என்ன மேட்டர் என்பது தெரிஞ்சிடும். தமிழகத்தில் எந்தக் கட்சி பெரும்பான்மையான இடங்களைப் பிடிக்குதோ அந்தக் கட்சிக்குதான் மத்தியில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இருக்கு. அப்படி தமிழகத்தில் பெரும்பான்மையான இடத்தை பிடிக்கணும் என்றால் அந்தக் கட்சிக்கு நாடாளும் மக்கள் கட்சியின் ஆதரவு தேவை! என்ன நான் சொல்றது கரெக்ட்தானே பிரதர்!''- கண்சிமிட்டிக் கேட்கிறார் கார்த்திக்!

எனக்கு ஒன்றுமட்டும் புரியவில்லை. தமிழக கட்சிதலைவர்கள் காமெடி பீஸ்ஸா அல்லது தமிழக மக்களை இவங்க காமெடி பீஸுங்களாக நினைக்கிறாங்களா? ஒன்றுமே புரியவில்லை


அன்புடன்
மதுரைத்தமிழன்

12 comments :

 1. அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!

  ReplyDelete
 2. உங்க வலைப்பூ தளத்தை படிக்கிற எங்களை நீங்க காமெடி பீஸா நினைக்கலையா, அது மாதிரி தான் தமிழக மக்களை, தமிழக தலைவர்கள் காமெடி பீஸா நினைக்கிறாங்க. என்ன நான் சொல்றது சரி தானே??

  ReplyDelete
 3. பொழுது போகலைன்னா, கொஞ்ச நேரம் சன் டி‌வி செய்திகளை பாருங்க. அப்புறம் கொஞ்ச நேரம் கழித்து ஜெயா டி‌வி செய்திகளை பாருங்க. இவுங்க ரெண்டு பெரும் கொடுக்கிற செய்தியை கேட்டு, பொழுது போகாம இருந்தாக்கூட நல்லா இருந்திருக்கும் போலன்னு நீங்க நினைப்பீங்க.

  ReplyDelete
 4. திருமா தன் அருகில் நிற்பதையே கவனியாதவர்போல் கலைஞரின் முகபாவனை இருந்ததே கவனித்தீர்களா? திருமாவுக்கு வேறு போக்கிடம் இல்லை என்பது அவருக்கு தெரியும். அதனால்தான் அவரை அப்படி கேவலப்படுத்தியிருக்கிறார். கம்யூனிஸ்ட்டுகளுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும். ஆனால் இந்த சூழலிலும் திமுகவுடன் சேரக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதில் சந்தோஷம். கார்த்திக் ஒரு காமடி பீஸ் என்பது தெரிந்ததுதானே!!

  ReplyDelete
  Replies
  1. comunist; SRILANK TAMILEAN ;OPPSIT [agaisnt] china orginal comunist CUBA VENNISULA; 'vall pedickkum nammur communist; hoop;hoop;

   Delete
 5. பல அதிசயங்கள் இனி மேல் ஆரம்பம்...!

  ReplyDelete
 6. செய்திகளும்.. அதற்கு உங்களின் துடுக்கான துணுக்குகளும் அருமை.. மிகவும் ரசித்து சிரித்தேன்..

  ReplyDelete
 7. //இவங்களை பத்தி இப்போ தான் தெரிஞ்சுகிட்ட மாதிரி அரசியல் அப்பாட்டகர் மதுரை தமிழன் பதிவு போட்டு நம்மள வைச்சு காமெடி கீமிடி பண்ணுறாரோ // மைன்ட் வாய்ஸ் !!

  ReplyDelete
 8. அடுத்த பிரதமர் கார்த்திக் தான்

  ReplyDelete
 9. கார்த்திக் பேட்டி கலகல! இவர் படங்களை ஒருகாலத்தில் ரசித்தேன்! இப்ப ஏன் இப்படி மாறிட்டாருன்னு தெரியலையே!

  ReplyDelete
 10. இப்ப வர அரசியல் நியுஸ் பாத்தாலே பல மகா காமெடி படங்களை பார்த்த அளவுக்கு சிரிப்பு சிரிப்பா வருது

  ReplyDelete
 11. அரசியல் எப்போதோ காமெடியாக மாறி விட்டது மதுரைத் தமிழன்.... :))))

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog