Saturday, March 1, 2014


மனசு ஒடிஞ்சு போன நான் இன்று பாருக்கு போயி சரக்கு ஆர்டர் பண்னி அது வந்ததும் அதையே வெறிச்சு பார்த்து கொண்டிருந்த போது ஒரு ஆப்பிரிக்கன் வந்து அதை அப்படியே எடுத்து லபக் லபக் என்று குடித்துவிட்டான். அதை பார்த்த நான் ஓஓஓஓஓஓ என்று அழ ஆரம்பித்துவிட்டேன்.




அதை பார்த்த ஆப்பிரிக்கன் டேய் அழுகுரதை முதலில் நிறுத்துடா ...எனக்கு ஆண்கள் அழுவதை பார்த்தா சுத்தமா பிடிக்காதுடா... நான் சொன்னதை கேட்கப் போறியா இல்லையா என்று என்னை மிரட்டினான்.


அதுக்கு நான் டேய் லூசாடா நீ நான் எதுக் அழுகிறேன் என்பதை தெரிஞ்சா நீ கதறி கதறி அழுவேடா என்றேன்.


அதுக்கு அவன் நான் எதுக்கும் அழமாட்டடேன் நான் சுத்தமான ஆம்பிளையடா என்று வீராப்பு பேசினான்.


மீண்டும் நான் டேய் நான் சொல்லுறதை முதலில் கேளுடா அதை கேட்டா நீ கண்டிப்பா கதறி அழுவேடா என்று கூறினேன்.


அதற்கு அவன் முதலில் என்ன நடந்தது என்று சொல்லு அதை கேட்டுட்டு எனக்கு அழுகை வரலீன்னா.. உன்னை தூக்கி போட்டு தக்காளி சட்னி ஆக்கிவிடுவேண்டா என்று வீராப்பு பேசினான்.


நானும் அந்த டீலுக்கு ஒப்புக் கொண்டு எனக்கு நடந்ததை சொல்ல ஆரம்பிக்கும் முன் நல்லா 2 பெக் அடித்து விட்டு என் கதையை அவனிடம் சொல்ல ஆரம்பித்தேன்.


நண்பா உனக்கு தெரியுமோ தெரியாதோ நான் ப்ளாக்கில் எழுதுவது. என்னைப் பார்த்து ஒவ்வொருத்தனும் நீ சரக்கு அடிக்கிறாய் நீ அதன் போதைக்கு அடிமையாகி ஒரு நாள் வேலை இழந்து உன் குடும்பத்தை கஷ்டத்திற்கு உள்ளாக்க போகிறாய் என்று சாபம் தருவார்கள். ஆனால் அதற்கு அடிமையாகாமல் இருந்த நான் இந்த ப்ளாக்கிற்கு அடிமையாகி அதில் எழுதுவது எனக்கு போதையாகி போனதால் தினமும் பதிவுகள் போட்டும் மற்றவர்கள் எழுதும் பதிவுகளை படித்தும் அதற்கு முழு அடிமையாகி போனேன். இதனால் என் தூக்கம் இழந்து தவித்தேன் அதனால் காலையில் லேட்டாக எழுந்திருந்து லேட்டாக வேலைக்கு செல்ல ஆரம்பித்தேன். தினமும் நான் லேட்டாக வேலைக்கு வருவதை அறிந்த என் மேனேஜர் என்னை கூப்பிட்டு வார்னிங்க் கொடுத்தார். ஆனால் ப்ளாக்கிற்கு அடிமையாகி போன எனக்கு அது காதில் ஏறவில்லை. அத்னால் வழக்கம் போல இன்றும் வேலைக்கு லேட்டாக சென்றேன்.


மதியம் 3 மணி இருக்கும் என் மேனேஜர் என்னை அவர் ரூமிற்கு கூப்பிட்டு அனுப்பினார். நான் சென்றதும் மதுரைத்தமிழா இந்த நேரத்தில் இருந்து உன்னை வேலையில் இருந்து தூக்கிவிட்டேன் இனிமேல் நீ இங்கு வரத் தேவையில்லை என்று சொல்லி செக்யுரிட்டியை கூப்பிட்டு என்னை வெளியே அனுப்பிவிட்டார்.


அதற்கு மேல் நான் சொல்வதற்கு ஏதும் இல்லாததால் நான் , எனது காரை நிறுத்தி இருந்த இடத்திற்கு வந்த நான் பார்த்த போது என் கார் அங்கு இல்லை எவனோ அதை திருடி சென்றிருக்கிறான் என்பதை அறிந்து கொண்டேன் உடனே போலிஸுக்கு தகவல் சொல்லிவிட்டு அதன் பின் ஒரு டாக்ஸியை பிடித்து வீட்டீர்கு வந்தேன். காரை விட்டு இறங்கிய போதுதான் அறிந்தேன் என் விலை உயர்ந்த செல் போனை போல்ல்ஸ் காரில் விட்டு விட்டு வந்துவிட்டேன் என்று. அதன் பின் டாக்ஸி டிரைவருக்கு பணத்தை கொடுத்துவிட்டு வீட்டு கதவை திறக்க போதுதான் தெரிந்தது நான் வைத்திருந்த பர்ஸில்தான் வீட்டு கீயை வைத்திருந்தேன் என்று அந்த கீயை எடுக்கும் போதுதான் தெரிந்தது அந்த பர்ஸை டாக்ஸியில் மறந்து வைத்து விட்டேன் என்று அதன் பின் என்ன செய்வது என்று தெரியாமல் மனைவி வரும் வரை வீட்டின் பின்புறத்தில் உள்ள வீளையாட்டு இடத்தில் சிறு குழந்தைகள் விளையாடுவதையாவது பார்க்கலாம் என்று அமர்ந்தேன்.


குழந்தைகளை பார்க்கலாம் என்று நினைத்த நான் அந்த சோகத்திலும் குழந்தைகளின் அம்மாக்களை மட்டு நோட்டம் விட்டு ரசித்து கொண்டிருந்தேன் தப்பா நினைக்காதீங்க மக்கா நான் ரசித்தது அவங்க அழகான முகத்தை மட்டுமே காரணம் நான் நல்ல பையன் என்பதல்ல இந்தியாவில் இருந்து வந்த ஆண்டிகள் தொந்தியும் தொப்பையுமாக இருந்ததுதான் காரணம் இந்தியாவில் இந்த ஆண்டிகள் சேலை கட்டி இருந்த போது இந்த தொந்தியும் தொப்பையும் தெரியாது கார்ணம் சேலை கட்டும் விதத்தால். ஆனால் அவர்கள் இங்கு வந்த பிறகு மாடர்னாக இருப்பதாக நினைத்து ஜீன்ஸ் அணியும் போது பார்க்க சகிக்க மாட்டார்கள்.


சரி சொல்ல வந்த விஷயத்தை விட்டு வேறு ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறேன்.. மாலை நேரத்தில் இருள் கவ்வும் நேரத்தில் வந்த என் மனைவி வீட்டிற்குள் என்னை காணாததால் வீட்டின் பின் பக்கம் வந்து பார்த்த போது நான் அந்த ஆண்டிகளை வேடிக்கை பார்ப்பதாக் நினைத்து கோபம் கொண்டு பூரிக்கட்டையை எடுத்து கண்ணா பின்னா என்று தாக்க ஆரம்பித்தார் பசியோடு வந்த அவருக்கு நான் சமைத்து வைக்கவில்லை என்ற கோபம்தான் அவருக்கு என்னை அடிக்க காரணம். அவர் அடிக்கும் போது தடுக்கும் என்னை காப்பாற்ற தடுக்கும் நிலையில் இருந்த எனக்கு அன்று எங்க்கு நடந்த சோகத்தை வாய் திற்ந்த சொல்லக் கூட முடியவில்லை. அதன் பின் இந்த வீட்டில் இருந்தால் நமக்கு மரியாதை இல்லை என்று நினைத்து வீட்டில் இருந்த பணத்தை எடுத்து இந்த பாருக்கு வந்து குடிக்க ஆரம்பித்த போதுதான் நீ வந்து என் சரக்கை குடித்துவிட்டாய் என்று சொல்லி அழுதேன்


அதற்கு அந்த ஆப்பிரிக்கன் இதை கேட்ட எனக்கு அழுகை ஏதும் வரவில்லை என்று சொல்லி என்னை அடிக்க முன் வந்தான். அப்போது நான் அவனிடம் சொன்னேன் எல்லாம் சொல்லிய நான் மிக முக்கியமான ஒன்றை சொல்ல மறந்துவிட்டேன்.


சரக்கை வாங்கிய நான் அதை குடிக்காமல் வெறிச்சு பார்த்தத்ற்கு காரணம் நான் அதில் விஷம் கலந்து வைத்திருந்தேன். என் வாழ்க்கையை முடித்து கொள்ள நினைத்து இருந்தேன். ஆனால் நான் செய்த புண்ணியத்தால் அதை நான் சாப்பிடுவதற்குள் நீ அதை சாப்பிட்டு விட்டாய் என்றதும் அந்த ஆப்ப்ரிக்கன் உயிருக்கு பயந்து கதறி அழுக ஆரம்பித்தான். ஆனால் நானோ சிரித்தாவாறு வீட்டிற்கு வந்து நடந்த சம்பவத்தை உங்களுக்கு பதிவாக எழுதிக் கொண்டிருக்கிறேன்..


என்ன மக்கலே இப்படியெல்லாம் பதிவு போட்டு இந்த மதுரைத்தமிழன் சாக அடிக்கிறானே என்று நினைத்து நீங்கள் பாருக்கு போகாமல் ஒழுங்கா கருத்து சொல்லிவிட்டு போங்க...


அன்புடன்
மதுரைத்தமிழன்

11 comments:

  1. சொல்ல வந்த விஷயத்தை விட்டு வேறு ஏதோ சொன்னதற்கு கருத்து சொல்ல (வாருவதற்கு) வருவார்கள் சகோதரிகள்...

    ReplyDelete
  2. நெனைச்சேன் கதை இப்படித்தான் போவுமின்னு...........

    ReplyDelete
  3. துபாயில்தான் ஆண்டிங்க தொல்லை இப்படின்னா, அங்கேயும் இப்படித்தானா?
    இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்துவிட்டால் போதும், பிறகு தங்களை பற்றி கவலையே இல்லாமல் இருக்கின்றனர். நாம தான் "ஏக பத்தினி" விரதம் என்று சொல்லி ஏகப்பட்ட பத்தினிகளை பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.

    ReplyDelete
  4. உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா..........

    ReplyDelete
  5. இந்த மதுரைத் தமிழன் தொல்ல தாங்கலப்பா பேசாம இந்த ஆளு சோகக் கதையக்
    கேக்குறதுக்கு பதிலா கானாக்காரன் கையில மாட்டின விஸ்கிய விறு விறென்டு
    குடிச்சிற்று நாங்களே போய் செர்ந்திரலாம் ச்சி ....( :))) )

    ReplyDelete
  6. வூட்டு அம்மா இப்பத்தான் வசல்ல பெல் அடிக்கறாங்க. அவங்க படிச்சு சிரிச்சு முடிக்கறதுக்குள்ள ரெண்டு மணி நேரம் பார்க் பக்கம் போய்ட்டு வந்துடறேன். பார்க் போறபோதுல்லாம் சட்டைல ஒரு ரோஜாப்பூ வச்சுக்கறது ஏன் வளக்கம்.

    தெனம் இப்டீ எதாவது எளுதி எனக்கு ஒதவுங்க.

    கோபாலன்

    ReplyDelete
  7. சோகமான விஷயத்தை சொல்லும்போது கூட, உங்களின் கடமை உணர்ச்சியை என்னவென்று சொல்லுவது. நான் கூட,நீங்கள் அவர்களின் அழகான முகத்தை மட்டும் தான் ரசித்தேன் என்று சொன்னவுடன், பரவையில்லையே நீங்கள் உண்மையிலேயே நல்ல பிள்ளை என்று தான் நினைத்தேன். அடுத்த வரியை படித்தவுடன் தான், நீங்க ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல பையன் என்று தெரிந்தது. (!!!!!!!!!!!!!!!!!!)

    இதுவரைக்கும் நீங்கள் உங்கள் மனைவியின் கையால் அடி வாங்கியிருக்கிறீர்கள், இந்தியாவில் அடி வாங்கியிருக்கிறீர்கள். இப்போது இந்த பதிவைப் படித்துவிட்டு, அமெரிக்காவில் இருக்கும் சகோதரிகள் உங்களை வீடு தேடி வந்து அடிக்கப்போகிறார்கள். இப்போது அதையும் வாங்கிக்கொள்ளுங்கள்.



    ReplyDelete
  8. மதுரைத் தமிழனே சத்தியமாக உங்கள் மண்டைக்குள் ஏதோ ஒரு ஸ்பெஷல் நியூரான் இருக்குப்பா! இல்லானா இந்த அளவுக்கு நகைச்சுவை தளுமபாதுப்பா! உங்க கையைக் குடுங்க பாஸ்!

    ரசித்தோம்!...பூரிக்கட்டையில் முடியவில்லையேனு நினைச்சுட்டு வரும்போது அது ஆஜராகிவிட்டது...இது மதுரைத் தமிழனினின் பதிவுதான் என்று சொல்ல!

    த.ம.

    ReplyDelete
  9. ஆமாங்க! இந்த குண்டு ஆண்டிங்க ஏன் தான் இப்படி ட்ரெஸ் பண்ணி .....இல்லைங்க இங்க இப்பல்லம் ஸாரி இல்லைங்க குண்டு ஆண்டிங்க இங்கயும் ஜீன்ஸ்....அதுலயும் இந்த லெக்கிங்க்ஸ்னு ஒன்னு பாருங்க (தோழிதான் அது லெக்கிங்க்ஸ்னு சொன்னாங்க)....ஐயோ! தாங்கலைங்க.......நலல் காலம் என் தோழி என்னை இதுககு அடிக்க மாட்டாங்க...அவங்கதான் இதச் சொன்னதே

    ReplyDelete
  10. இத்தனை சோகத்தையும் இத்தனை அற்புதமாக
    நகைச்சுவைத் ததும்ப தங்களால்தான் முடியும்
    தொடர ( பதிவுகள் )வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. கருத்துப் போட்டால் மட்டும் போதுமா ?..த.ம .ஓட்டு யார் வந்து போடுவா ?..
    ஏன் இந்தக் கொலை வெறி ?!!கோ ..கோ ..:))

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.