Thursday, February 20, 2014





விகடன் வலைத்தள பதிவரை மிரட்டி உள்ளது..... அதைபற்றிய பரபரப்பான தகவல்கள் இங்கே.....
 
@avargal unmaigal









மதுரைத்தமிழன் அவர்களுக்கு,


விகடன் குழும ஆசிரியர் எழுதிக் கொள்வது, உங்களது வலைதளத்தால் விகடன் பத்திரிக்கையின் சர்குலேசன் குறைந்து கொண்டே வருகிறது. அதற்கு காரணம் நீங்கள் எங்கள் பத்திரிக்கையின் பார்முலாவை கடைபிடிப்பதாகும். அதாவது கொஞ்சம் நகைச்சுவை,கொஞ்சம் அரசியல்,கொஞ்சம் மொக்கை, மீதி கவர்ச்சி. இதுதான் எங்கள் பார்முலாவாகும். இது வரை நீங்கள் நகைச்சுவை,அரசியல்,மொக்கை பதிவுகளை எழுதி வந்தீர்கள்.அதைப்பார்த்தும் நாங்கள் பொருத்து இருந்தோம்.ஆனால் கடந்த பதிவில் நீங்களும் கவர்ச்சி படத்தை வெளியிட்டு எங்கள் அடிமடியில் கைவைத்து வீட்டீர்கள். இதை கண்ட பின்னும் எங்களால் பொறுமையாக இருக்க முடியாது என்பதால்தான் இந்த கடிதம் எழுத நேர்ந்தது.


நாங்கள் உங்களுக்கு சொல்வது இதுதான் வேண்டுமென்றால் 5 லட்சமோ 10 லட்சமோ வாங்கி கொண்டு இப்படி எழுதுவதை நிறுத்தி கொள்ளுங்கள் அல்லது கவிதை சீர்திருத்த கட்டுரைகள் , இலக்கியம் போன்றவைகளை எழுதி வெளியிடுங்கள் அதற்கு நாங்கள் ஆட்சேபணை தெரிவிக்கமாட்டோம்.



இதை நாங்கள் கொடுக்கும் கடுமையான எச்சரிக்கையாக கருதி செயல்பட வேண்டுகிறோம் அல்லது எங்களை அரசியல் தலைவர்கள் மாதிரி நடவடிக்கைகளை எடுக்க வைத்து வீடாதீர்கள்

இவன்

விகடன் ஆசிரியர்.



விகடன் ஆசிரியருக்கு பதில்


விகடன் ஆசிரியருக்கு மதுரைத்தமிழன் எழுது பதில்... நான் உங்கள் பார்முலாவை கடைபிடிக்கிறேன் என்று குற்றம் சாட்டி இருக்கிறீர்கள். அதற்கு காரணம் உங்கள் பத்திரிக்கைதான் அதை நான் சிறு வயதுமுதல் படித்து வருவதால் என்னுள் எழுந்த பாதிப்பாகும். எனவே எனது பதிவில் அதை தவிர்க்க இயலாது என்பதை இந்த இமெயில் மூலம் தெய்வித்து கொள்கிறேன்.

மேலும் நீங்கள் சொன்னது போல் கவிதை ,சீர்திருத்த கட்டுரை மற்றும் இலக்கியத்தை நான் எழுதிவந்தால் என் நண்பர்கள் சிலரைத்தவிர வேறு யாரும் வந்து படிப்பதில்லை. அல்லது அறிவை வளர்க்கும் கட்டுரைகளை எழுதி பதிவிட்டாலும் யாரும் வந்து படிப்பதில்லை. காரணம் நம் தமிழர்கள் எல்லோரும் எல்லாம் தெரிந்த அறிவாளிகள் அதனால் அவர்களுக்கு நாம் சொல்லிதான் ஏதும் தெரிய வேண்டியதில்லை அவர்களுக்கு தேவை கவர்ச்சி & மொக்கைகள்தான்.

வேண்டுமானால் நாம் இருவரும் இணைந்து ஆனந்தவிகடன் அல்லது அவர்கள் உண்மைகள் என்பதற்கு பதிலாக ஆனந்த உண்மைகள் என்ற பெயரில் வார இதழ் நடத்தலாம் எப்படி என் ஐடியா?

இந்த ஐடியா பிடிச்சு இருந்தா உங்கள் நிருபர்கள் அனைவரையும் வீட்டிற்கு அனுப்பிவிட்டு இந்த பதிவை படித்து பின்னுட்டம் இடவும்

அன்புடன்
மதுரைத்தமிழன்


இது ஒரு கற்பனை பதிவு கிராபிக்ஸும் படமும் கற்பனையே.....

34 comments:

  1. ஆனந்த உண்மைகள் ஐடியா சூப்பர்...!

    ReplyDelete
    Replies
    1. தலைவரே அப்ப முதல் போடுங்க உங்கள் தலைமையில் ஒரு வார இதழ் ஆரம்பித்துவிடுவோம்

      Delete
  2. உங்களை உண்மையாவே ' விசாரிக்க' பத்து அடியாளுங்களை அனுப்பி வைக்க போறேன்.............

    ReplyDelete
    Replies
    1. அந்த பத்து அடியாட்களும் நயன் தாரா, சினேகா, போன்று உள்ளவர்களாக தேர்தெடுத்து அனுப்பவும்

      Delete
  3. உங்க திறமைக்கு விகடன் தானா மிரட்டனும்!?

    ReplyDelete
    Replies
    1. பூரிக்கட்டயே போதும் என் கிறீர்களா?

      Delete
  4. ஓகோ.......இப்படியும் வேற ஐடியா இருக்கோ ?......பொருத்து இருந்து (பொறுத்து இருந்து )
    எழுது கடிதம் (எழுதும் கடிதம் ) வார்த்தைக்கு வார்த்த அக்கா என்ன மாதிரியே தம்பி
    நீயும் அவசரக் குடுக்கயாய் இருந்து கொண்டே கவிதை ,கட்டுரைகளைத் திருத்தினால் யாரும் வந்து
    படிக்கவில்லையா ?...அதென்ன ஆனந்த உண்மைகள் ?..கூட்டுச் சேர்ந்து எழுதும் முயற்சி ?...
    மதுரைத் தமிழனுக்கென்று ஒரு தனிப் பெருமை இருக்கும் போது இதெல்லாம் அவசியமா ?..
    இன்று எங்களின் வலைத்தள வளர்ச்சியைக் கண்டு உலகமே வாயைப் பிளக்கின்றது (யாருக்குத்
    தெரியும் எதுக்கு வாயைப் பிளக்கின்றது என்று :)) ) சரி இதுக்கு மேல இந்தத் தப்பப் பண்ண
    மாட்டீர் என்றே நம்புகின்றேன் .அவர்கள் உண்மைகள் இந்தத் தளத்தின் பெருமையை உணர்ந்து நட
    தம்பி .இந்த மெருட்டல் கடிதத்துக்கெல்லாம் பயப்பட வேண்டாம் .நீர் என்ன தனியாளா ?..நாங்க
    எத்தனை பேர் அக்கா தங்கச்சி என்று இருக்கின்றோம் சின்னதா ஒரு குரல் குடுய்யா (அடி விழ
    முதல் ஓடிருவோம் :))) )

    ReplyDelete
    Replies
    1. சின்னதா ஒரு குரல் கொடுங்க நாங்களும் வந்து சேர்ந்து அடிப்பொம் என்று சொல்லாமல் விட்டதற்கு மிகவும் நன்றி சகோ

      Delete
    2. நான் மட்டும் புலவர் நக்கீரரின் பேத்தியாக்கும் :))))) அட விடுங்க சகோ:))).
      நீங்கள் கருத்துச் சொல்லாமல் விட்டால் அப்படியே விட்டிருவோமாக்கும் ?
      இப்போது தானே விசயம் புரிந்து விட்டது இது எல்லாத்துக்கும் சேர்த்து
      மதுரைத் தமிழனுக்கு இத்தால் அறிவிப்பது என்னவென்றால் மனதில்
      பட்ட கருத்தைத் தெரிவித்தேயாக வேண்டும் என்ன நான் சொல்வது சரி
      தானே ?...நட்பை விட உயர்ந்தது வேறு எழுவுமே இல்ல சகோ .வாருங்கள்
      ஆக்கம் பிடித்திருந்தால் நிட்சயம் கருத்திடுங்கள் .அக்கா தம்பியிடம்
      கோவப் படலாம் அதுக்காக அடிக்கவா போகிறேன் ?...:)))வருத்தப்படாதீங்க சகோ .

      Delete
  5. பயந்தே போய்விட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. இவர் எப்பவுமே இப்படிதான்னு உங்களுத் தெரியாதா!?

      Delete
    2. என்ன ஜீ இந்த அப்பாவி காமெடியனை போய் யாரு அடிக்கப் போறாங்க... விகடன் குழும ஆசிரியர்கள் கூட இதை தப்பாக எடுத்துக்க மாட்டார்கள் அவர்களும் ரசித்து சிரிப்பார்கள்

      Delete
  6. ஹாஹாஹாஅ அடப்பாவி மனுஷா! மதுரைத் தமிழனுக்கு இப்படிக் கூட ஒரு ஆசையா! அதுசரி யாருய்யா சொன்னது நீங்க இலக்கிய, கவிதை, சீர்திருத்தக் கட்டுரை எழுதினா வாசிக்க மாட்டாய்ங்கனு? இது நம்ம தமிழ் நாட்டுல படங்களப் பத்தி சொல்ல்வாங்கல்ல...."மக்களின் ரசனைக்கு ஏத்தா மாதிரிதான் இந்த மாதிரி படம் எடுக்கறோம்...இல்லானா நாங்களும் இலக்கியத் தரம்வாய்ந்த படம் எல்லாம் எடுப்போம் அப்படினு அதுபோல இருக்கே?!!!! ம்ம்ம் நடத்துங்க உங்க ராஜ்ஜியத்த!.....பொளந்து கட்டரீங்க் போங்க!

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் உங்களை மாதிரி படித்து ரசித்து ஆசிர்வதிப்பதினால்தான் பொளந்துகட்டும் ஐடியா வருகிறது.. காமெடியை புரிந்து ரசிப்பதற்கு எனது நன்றிகள்

      Delete
  7. ஆனந்த உண்மைகள் - ஏதோ போலி சாமியார்களின் புத்தகம் மாதிரி தெரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. நீங்க போலிசாமியார் எழுதிய புத்தங்களை அதிகம் படித்து இருக்கிறீர்கள் என்பது தெரிகிறது.. ஹீ.ஹீ

      Delete
  8. ஆனந்த உண்மைகள் விரைவில் வெளியாகட்டும்... ஹா... ஹா... சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. விகடன் சம்மதித்தால் ஆரம்பித்து விடலாம்... ஹீ.ஹீ

      Delete
  9. இருந்தாலும் பில்ட் அப் கொஞ்சம் ஓவர்தான் ..அவர்கள் லட்சலட்சமாய் சம்பாதிக்கிறாகள்,உங்களுக்கு இதனால் என்ன லாபம் ?

    ReplyDelete
    Replies
    1. அவர்களுக்கு தேவை லாபம் எனக்கு தேவை ஒரு நல்ல பொழுது போக்கு & சந்தோஷம் அது கிடைக்கிறது இந்த தளத்தினால் அதுவே எனக்கு போதும்

      Delete
  10. சர்தான்... மதுரைத் தமிழனோட கற்பனைக் குதிரை மேய்வதற்கு எல்லைகளே இல்லை போலும்...! ஆனந்த உண்மைகள் & தலைப்பென்னவோ ஜோர்தான்!

    ReplyDelete
    Replies
    1. கற்பனை குதிரை தறிகெட்டுதான் போகிறது....

      Delete
  11. "ஆனந்த உண்மைகள் " பேரே ஒரு மாதிரியால இருக்கு ???

    ReplyDelete
    Replies
    1. நெட்டுல பலதை படிச்சதனால் உங்களுக்கு இப்படி தோன்றுகிறது.. இனிமே அந்த மாதிரி விஷ்யங்களை படிக்காமல் நம்ம தளத்திற்கு மட்டும் வந்து படியுங்

      Delete
  12. சூப்பர்! சீக்கிரமே பத்திரிக்கையை எதிர்பார்க்கலாமா?!

    ReplyDelete
    Replies
    1. முதல் போடுங்க உடனே நாம் பூஜை நடத்தலாம்

      Delete
  13. Replies
    1. இது ஒரு நகைச்சுவை பதிவுங்க அதற்கு எல்லையே இல்லை

      Delete
  14. ஆனந்த உண்மைகள் என்பதை விட ஆனந்த தொல்லைகள் என வைத்துக் கொள்ளலாம், :)

    ReplyDelete
  15. பாருங்க. தேர்தலுக்கப்பறம் வரிசையா செய்தித்தாள்காரங்க ஆரம்பிப்பாங்க.
    நாங்க எளுதின அரசியல், தேர்தல் கணிப்பு எல்லாமே காமெடி ஆயிருச்சு. இப்ப பத்ரிகை நடத்றதே பெரிய விசயம். மருவாதியா தமிள் சைட்ட விட்டு ஓடிருங்க. இல்ல ஓட வெப்போம். ஹிஹி சுத்தி வேல செய்ற பொம்பளங்க கிட்ட ரொம்ப அன்பா நடந்துக்குங்க.

    கோபாலன்

    ReplyDelete
  16. ஆனந்த உண்மைகள் - பேர் ரொம்ப சூப்பர். உங்கள் எண்ணம் நிறைவேற என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. முதலில் ஒரு high five !
    நானும் பலவருசமா விகடன் படிக்கிறேன் !
    இந்தமுறை டாபிக்கை பார்த்து நான் ஏமாறலையே :(

    ReplyDelete
  18. Visit : http://venkatnagaraj.blogspot.com/2014/02/blog-post_22.html

    ReplyDelete
  19. ஆனந்த உண்மைகள்..... செம டைட்டில்.....

    ஆரம்பிச்சுடுங்க! ஆதரவு தர நாங்க ரெடி!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.