Friday, February 28, 2014




உலகை அடிக்கடி சுற்றி வரும் புலவர் ஐயா  என்று நம்மால் அழைக்கபடும் வலையுலக பதிவர் புலவர் இராமாநுசம் அவருக்கு ஒரு ஆசை வந்தது. எல்லோரும் பதிவு போட்டி அது இது என்று வைக்கிறார்களே அது போல நாமும் ஒன்று வைப்போம் என்று ஆசைதான் அது.




அவரின் ஆசைப்படி ஒரு போட்டியை அறிவித்து அதற்கு நடுவராக ரமணி சாரை அறிவித்துள்ளார். அந்த போட்டியின் படி உலகின் ஏழு அதிசியங்கள் எது என்பதை முதலில் சரியாக சொல்லுபவர்களுக்கு பரிசு என்று அறிவித்து இருக்கிறார்..



முதலில் யாரு சரியான பதிலை சொல்லி இருப்பார்கள் என்று நான் சொல்லிதான் உங்களுக்கு தெரியவேண்டுமா என்ன?


அந்த திண்டுக்கல் தனபாலன்  தான் முந்திரிக் கொட்டையாக முந்தி கிழ்கண்ட பதிலை சொல்லி பரிசை தட்டி செல்ல முயன்றார்

SEVEN WONDERS OF THE WORLD?

1. Egypt's Great Pyramids
2. Taj Mahal
3. Grand Canyon
4. Panama Canal
5. Empire State Building
6. St. Peter's Basilica
7. China's Great Wall


முதலில் சரியான பதிலை சொன்ன இவருக்கு பரிசை கொடுக்கலாம் என்று ரமணி சார் அவர்கள் தீர்மானம் எடுக்கு நேரத்தில் எதற்கும் ஏட்டிக்கு போட்டியாக பதில் அளித்து கலாய்க்கும் நம்ம மதுரைத்தமிழன் கீழ்கண்ட பதிலை அளித்து நடுவரை குழப்பத்தில் ஆழ்த்திவிட்டார்


மதுரைத்தமிழன் அளித்த பதில்
'Seven Wonders of the World' are:
1. to see
2. to hear
3. to touch
4. to taste
5. to feel
6. to laugh
7. and to love."


இதை படித்த நம்ம ரமணி சாருக்கு இதுவும் சரியான பதில்தான் ஆனால் யாருக்கு பரிசு கொடுப்பது என்று தெரியாமல் தலைமுடியை பிய்த்து கொள்வதாக தகவல்கள் வருகின்றன.


அதனால் மக்களே முடிந்தால் நீங்களும் அவருக்கு உதவலாமே உங்களால் சரியான பதிலை தேர்ந்தெடுக்க முடியவில்லை என்றால் ஒரு சிறிய தொகையை அவருக்கு அனுப்பி அந்த பரிசை எங்கள் இருவருக்கும் பகிர்ந்து அளிக்க உதவலாம்..


டிஸ்கி : The things we overlook as simple and ordinary and that we take for granted are truly wondrous!
A gentle reminder - that the most precious things in life cannot be built by hand or bought by man.



அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி: புலவர் ஜயா,ரமணி சார், திண்டுக்கல் தனபாலன் உங்கள் மூவர் பெயரையும் இந்த பதிவின் சுவையை கூட்டுவதற்காக பயன்படுத்தியுள்ளேன். அதற்கு ஆட்சேபணை ஏதும் இருக்கும் பட்சத்தில் என்னிடம் தெரிவியுங்கள் அதை நீக்கிவிடுகிறேன்.

40 comments:

  1. இன்னைக்கு நானும் மாட்டிக்கிட்டேனா...! ஹா... ஹா...

    ReplyDelete
    Replies
    1. திண்டுக்கல் என்று சொல்லி தனியா போனாலும் நீங்கள் மதுரைக்காரரே அதனால் நீங்கள் என்றும் என்னிடம் இருந்து தப்ப முடியாது நட்பு வளையத்தில் இருந்து

      Delete
  2. இவ்வளவு கஸ்டப்பட்டு பதிவு தேத்தும்போது வந்து படிக்காம எப்பூடி... சரி... சரி...

    ReplyDelete
    Replies

    1. கஸ்டப்படுபவர்களைப் பற்றி நான் கஸ்டப்பட்டு எழுது பதிவை நீங்கள் கஸ்டப்பட்டு வந்து கஸ்டப்பட்டு படித்து கஸ்டப்படுவதை பார்த்து என் மனம் க்ஸ்டப்படுவதால் நான் உங்களைப் போல உள்ளவர்களை கஸ்டப்பட்டு சிரிக்க வைக்க கஸ்டப்பட்டு ,நான் கஸ்டப்பட்டாலும்( பூரிக்கட்டையால் அடிவாங்கினாலும்) தொடர்ந்து தொடர்ந்து கஸ்டபட்டு எழுதுகிறேன்...இதை படித்து புரிந்து கொள்ள நீங்கள் கஸ்டப்பட்டாலும், கஸ்டப்பட்டு படித்து கஸ்டத்துடன்( உங்கள் தலையில் நீங்கள் அடித்துக் கொண்டு ) கருத்து பதிவிங்க என்று நான் நினைக்கும் போது என் மனம் கஸ்டப்படுவதால் இதை நான் கஸ்டப்பட்டு நிறுத்தி கொள்கிறேன்.

      Delete
  3. என் வூட்டு அம்மா இப்பத்தான் இதப் படிக்கறாங்க.
    Eighth Wonder 8. to kick எங்க வூட்ல வரப்போவுது.

    கோபாலன்


    கோபாலன்

    ReplyDelete
    Replies
    1. நீங்க உங்க வூட்டு அம்மாவிடம் உதை வாங்கம்மா இருப்பது 9வது அதிசியமாக இருக்குமோ?

      Delete
  4. பதிவு தேத்த எப்படியெல்லாம் யோசிக்கறீங்க சகோ!! ....:))

    ReplyDelete
    Replies
    1. சக பதிவாரன உங்களுக்கு பதிவு பற்றி யோசிக்கிறது எவ்வளவு கஷ்டம் என்று தெரிஞ்சு இருக்கும். சரி இப்படி நீங்க கருத்து மட்டும் சொல்லிட்டா விட்டுவுடுமோ என்ன அதனால கஷ்டப்பட்டு யோசிக்கும் எனக்கு சூடா ஒரு கப் காபியும் ஒரு 10 வாழைக்காய் பஜ்ஜியும் போட்டு தந்தா நல்லா இருக்குமே சகோ

      Delete
  5. ஐயோ! மதுரைத் தமிழன் ஒரு பதிவு போட மண்டைய பிச்சுகிட்டாரா? அதிசயம்! அதுதான் முதல் அதிசயம்! (மதுரைத் தமிழன் பூரிக்கட்டையால் மண்டை பிய்வதை விட இது பரவாயில்லையோ?!!!!!..)இந்த 7 உடன் அதையும் சேர்த்துக்கங்க! ஸோ உங்க 2 பெருக்குமெ பரிசு கிடையாது! ஹை ஜாலி!

    ReplyDelete
    Replies
    1. மதுரைத்தமிழன் பதிவு போடா மண்டைய பிச்சுகிட்டாரா அதிசயம் என்பதை நான் மண்டையை போட்டுடாரா என்று அவசர அவசர்மாக படித்து விட்டேன்

      மதுரைத்தமிழனாவது மண்டையை போடுவதாவது அவன் பதிவை படித்த மற்றவர்கள் மண்டையை போடாமல் இருந்தால் சரி என்று நினைத்து என்னுள் சிரித்து கொண்டேன்

      Delete
  6. ஒரு முந்திரிக் கொட்டை, பழமான கதை...!!
    Take it easy DD sir... Just gags...!!!

    ReplyDelete
    Replies
    1. dd சார் பதிவுலகின் ஞானப்பழம் அதனால் அவர் எப்போது தவறாக எடுத்து கொள்ளமாட்டார்

      Delete
  7. மகிழ்வூட்டுவது மட்டுமல்ல கொஞ்சம் சிந்திக்கவும் வைத்துவிட்டீர்களே!

    தங்கள் தளத்தை 'வலைப் பதிவர்களின் தமிழ் பக்கங்கள் (http://thamizha.2ya.com/)' தளத்திலும் இணைத்துத் தமிழுக்கு உதவுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு நன்றி நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக வந்து இணைத்து கொள்கிறேன் நண்பரே

      Delete
  8. ஒரு சிறிய தொகை என்றால் ஒரு லட்சம் sfr போதுமா சார் ?...:)))

    ReplyDelete
    Replies
    1. ஒரு லட்சம் வேண்டாம் ஒரு லட்சத்து ஒன்றாக தந்துவிடுங்கள் . அதோடு ஒரு கவிதையும் எழுதி அதை அழகாக தங்க பிரேம் கொண்டு அழங்கரித்து தாருங்கள் இது போதும் நான் ரொம்ப ஆசைப்படுற டப்பு இல்லை

      Delete
  9. இத்தனை நாள் சகோதரிகளைதான் கலாய்த்தீர்கள் என்றால், இன்று டிடி அண்ணா மாட்டியதோடு புலவர் ஐயாவும் சிக்கிக்கிட்டாரா!? சோ சேட்!!

    ReplyDelete
    Replies
    1. சகோதரிகளை மட்டும் எவ்வளவு நாள் கலாய்த்து கோண்டு இருப்பது பாவம் அவங்க என்றுதான் இவங்களையும் வயசு வித்தியாசம் இல்லாம கலாய்துள்ளேன் சிரித்து மகிழ வயசு வரம்பு இல்லைதானே

      Delete
  10. எப்புடிய்யா... உன்னால மட்டும். ஹையோ... ஹையோ.

    ReplyDelete
    Replies
    1. எப்படியா அடி வாங்கி அழுகிற ஆளுக்குதான் மற்றவர்களை சிரித்து மகிழ வைக்க முடியும். வேண்டுமானால் நீங்கள் வீட்டில் அடிவாங்கிப் பாருங்களேன்

      Delete
  11. எப்புடிய்யா... உன்னால மட்டும். ஹையோ...ஹையோ.

    ReplyDelete
  12. போனால் போகிறது....
    உங்களின் பதில் தான் சரி என்று இரமணி ஐயாவிடம் ரெகமண்ட் பண்ணுகிறேன்.

    கிடைத்தத் தொகையில் பாதியை எனக்கு அனுப்பிவிடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. தொகை கிடைத்தால் தருகிறேன் ஆனால் வேறு ஏதாவது கிடைத்தால்???? ( இதை திருவிளையாடல் படத்தில் வரும் வசனம் போல படியுங்கள்)

      Delete
  13. என்னையும் குழம்ப வைச்சிட்டீங்களே!

    ReplyDelete
    Replies
    1. குழம்பிய நீங்கள் தெளிவடைய மனைவியிடம் அடி வாங்கினால் குழப்பம் தெளிவாகிவிடுமுங்க

      Delete
  14. பதிவு தேத்துறது கஷ்டமா ?
    இதுக்கு கமென்ட் போடுறது அதைவிட கஷ்டமா இருக்கு !
    எட்டாவது அதிசயமா பூரிக்கட்டை மிஸ்ஸிங், கிளாமர் மிஸ்ஸிங், பாலிடிஸ் மிஸ்ஸிங் !
    ஒன்லி இன்டெலிஜென்ட் ஹுமர் ! gr8 !

    ReplyDelete
    Replies
    1. ஸ்மார்ட்டான ஆசிரியருக்கு இப்படி ஸ்மார்ட்டா கருத்து சொல்ல கஸ்டம் ஏதுமில்லை என்பது இந்த பதிலில் இருந்து தெரிகிறது

      Delete
  15. நல்ல காலம் நீங்க ஆசிரியராக வேலைக்கு போகலை. போயிருந்தா பசங்க நிலமை என்னாவாகியிருக்கும். பசங்க தப்பிச்சாங்க.

    ReplyDelete
    Replies
    1. நான் ஆசிரியரா? நான் இன்னும் படித்தே முடிக்கவில்லையே?

      இந்த பதிலை படிக்கும் பெண்கள் என்ன இந்த மதுரைத்தமிழன் இன்னும் மாணவர்தானா ( சின்ன பையனா) என்று நினைப்பதும்

      பெரியவர்கள் இந்த வயதிலும் இந்த மதுரைத்தமிழன் படித்து கொண்டிருக்கிறாரா என்று நினைத்து வியப்பதும்

      நம் பதிவுலக சகோதரிகள் இன்னும் மதுரைத்தமிழன் ப்ள்ஸ் டூ எக்ஸாம் அட்டெண்ட் பண்ணிக் கொண்டிருக்கிறார் என்று நக்கலாக சொல்வதும் நடக்க கூடும். ஆனால் அதற்கு நான் பொறுப்பல்ல

      Delete
    2. பெண்கள் யாரும் கண்டிப்பாக உங்களை சின்னப் பையன் என்று நினைக்க மாட்டார்கள். அது உறுதி . கழுதை வயசாயிடுச்சு இன்னுமா பள்ளிக்கூடத்தையே தாண்டலையேன்னு தான் நினைப்பார்கள்.



      Delete
  16. Very humuor. Emma irundhalum enga dindigulkararr maatiyirukka koodaadhu.

    ReplyDelete
  17. //ஏட்டை கரைத்து குடித்த திண்டுக்கல் தனபாலனும் //

    போலீஸ் ஏட்டு தானே??

    ReplyDelete
  18. தம்பி தனபாலனுக்கு வாழ்த்துகள் ...

    ReplyDelete
  19. ஹா... ஹா... மூவரையும் கோர்த்து மிக அழகான பதிவு தேத்திட்டீங்க...

    ReplyDelete
  20. உலகின் அதிசயங்கள்தானே! என்னிடமும் 'ஆச்சரியத்துப்பால்' என, ஆமை வேகத்தில் வளர்ந்துவரும் ஒரு லிஸ்ட் இருக்கிறது நண்பரே. நேரம் கிடைத்தால் படியுங்கள். பிடித்திருந்தால் சொல்லுங்கள். http://amarvellousjourney.blogspot.com/

    ReplyDelete
  21. மிக்க நன்றி! நண்பரே!

    ReplyDelete
  22. சபாஷ் சரியான போட்டி....

    நாட்டாமை ரமணி ஐயா சீக்கிரம் தீர்ப்ப சொல்லுங்க!

    ReplyDelete
  23. மூவரையும் சேர்த்து ஒரு கதம்பம்!

    ReplyDelete
  24. மிகவும் ரசித்தேன்
    சுவாரஸ்யமான பதிவில் என்னையும்
    சேர்த்தமைக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  25. to get எனச் சேர்க்காததை மிகவும் ரசித்தேன்
    ஏனெனில் அது அதிசயமில்லை
    அனைவர் வீட்டிலும் அதுஅன்றாட நிகழ்வல்லவா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.