Thursday, February 27, 2014




முறுக்கி கொண்டு இருக்கும் அழகிரியியால் தென்மாவட்டங்களில் ஏற்படும் சேதாரங்களை சரிக்கட்ட 


மக்களவைத் தேர்தலில் மதுரை மக்களவைத் தொகுதி வேட்பாளராக அவரது மகளைத்தான் நிறுத்த முடிவு செய்து இருக்கிறதாம் கட்சித் தலைமை. அதுமட்டுமல்லாமல் மூத்த வாரிசின் ஆதரவாளரான நடிகர்தான் சேதுபதி சமஸ்தானத்தின் தலைநகரை உள்ளடக்கிய தொகுதியின் வேட்பாளராக மீண்டும் அறிவிக்கப்படுவார் என்கிறார்கள். இப்படி செய்வதன் மூலம் மூத்த வாரிசு வாக்குகளைப் பிரித்து விடாமல் இருப்பதற்குக் கட்சித் தலைமை செக் வைத்துவிட்டதாக தகவல் கசிந்துள்ளது.


அதனால்தான் என்னவோ அழகிரி மெளனமாக நடப்பதை பார்த்து கொண்டிருக்கிறார். தேர்தல் முடிந்ததும் அவர் எம்.ஜி.ஆர். பாணியில் கணக்குக் கேட்கத் தயாராகி வருகிறாராம் அறக்கட்டளை சொத்துகளைத் தம்பியின் ஆசியுடன் அவரது ஆதரவாளர்கள் அபகரித்து வருவதாகவும், கட்சியின் வரவு-செலவு கணக்குகள் முறையாகத் தாக்கல் செய்யப்படுவதில்லை என்றும் குற்றம்சாட்ட போவதாகவும் பேச்சுகள் அடிபடுகின்றன.


கடல் அலைகள் ஒய்வதில்லை என்பது போல திமுக கட்சியிலும் பிரச்சனைகள் ஒய்வதில்லை போலும்.



அன்புடன்
மதுரைத்தமிழன்



கல்கி வார இதழை ஐபேட் மூலம் வாசிக்க விரும்புபவர்களா நீங்கள் அப்படியானல் உங்களுக்கொரு நல்ல செய்தி.பிரபலமான கல்கி இதழை வாசகர்கள் தங்களுடய ஐ பேடில் படிப்பதற்க்கு வசதியாக இலவச பயன்பாடாக கிடைக்கிறது பயன்பாட்டின் சுட்டி https://itunes.apple.com/in/app/kalki/id622544050?mt=8
 https://itunes.apple.com/in/app/kalki/id622544050?mt=8

 படித்து ரசியுங்கள். இந்தத் தகவலைத் தந்து என் வாசகர்களுக்குப் பகிரச் சொன்ன நண்பர் ப்ரவீண் தியாகராஜனுக்கு நன்றி!!!

http://www.kalkionline.com/
இந்த சுட்டி பற்றி உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு தெரிவித்தால் அவர்களும் பயனடைவார்கள்.

5 comments:

  1. எப்பத்திலிருந்து நீங்கள் கிசுகிசு எழுதும் நிருபராக மாறினீர்கள்?
    எனக்கு சினிமா கிசுகிசுவையே புரிந்துக்கொள்வதற்கு மண்டை காய்ந்து விடும், இதுல அரசியல் கிசுகிசுன்னா??
    அதனால தயவு செய்து சொல்றதை விளக்கமாக சொல்லுங்கள்.

    ReplyDelete
  2. கடல் அலை ஓயுதோ இல்லையோ மக்களை (பொது மக்கள் சொத்தை )
    மண் அரித்துச் செல்வது போல அரித்துக் கொள்ளாமல் இருந்தாலே போதும் !
    (மதுரைத் தமிழன் எப்போதில் இருந்து கிசு கிசு பத்திரிக்கை ஆசிரியர் ஆனார் ?!! :) )

    ReplyDelete
  3. யா காவாறாயினும் நா காக்க

    சிலர் வருசம் முன்னால இதே அண்ணன் அஞ்சா நெஞ்சன், கேப்டன் விஜயகாந்தை காத்து போன பலூன் என்னாரு. இப்பப் பாருங்க இவரு காத்த அவுரு புடுங்கி வுட்டுட்டாரு. அண்ணன் என்னடா தம்பி என்னடா அமைச்சரா இல்லா உலகத்திலேன்னு வாய்க்குள்ளயே பாட்றாரு. போஸ்டர் ஒட்டக்கூட ஆளு கெடக்கல.

    கோபாலன்

    ReplyDelete
  4. இந்தக் கலைஞ்ர் குடும்பமே என்னிக்குமே அரசியல் சண்டை ந்றதை விட குடும்பச் சண்டைதான் மேலோங்கும்! கலைஞருக்கு பன்சாயத்து பண்ணவே சரியா இருக்கும்! ஆனா மெய்யாலுமே ரொம்ப ஆச்சரியமான விஷயம் என்னன்ன....அவரு எப்படித்தான் குடும்பச் சண்டைய பஞ்சாசத்து பண்ணிக்கிட்டே அரசியலையும் சமளிக்கிறாரோ!.....

    ReplyDelete
  5. என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே......

    கல்கி ஐ பேடில் படிக்கலாம்.... அதுக்கு முதல் ஐ பேட் வேணுமே..... ஒரு ஆப்பிள் ஐ பேட் பார்சல் ப்ளீஸ்....

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.