Monday, January 20, 2014






இப்படியெல்லாமா பெண்கள் ஆண்களை படுத்தி எடுக்குறாங்க? என்ன அநிஞாயம் இது,


என் மனனவி என்னிடம் சொன்னாங்க " என்னங்க கடைக்கு போய் ஒரு பாட்டில் பாலும் அவங்க கிட்ட ஆப்பிள் இருந்தா 6 வாங்கி வாங்க என்று சொன்னாங்க

நானும் கடைக்கு போய் அவங்க சொன்னபடி வாங்கி வந்தேனுங்க

வீட்டுக்கு வந்ததும் ஏதுக்குங்க நீங்க ஆறு பாட்டில் பால் வாங்கி வந்திருக்கிங்க என்று கேட்டாள்

அதுக்கு நான் நீதான் அவங்கிட்ட ஆப்பிள் இருந்தா  ஆறா வாங்கிவான்னு சொன்னேன் என்று கூறினேன்

(இதை படிப்பவர்கள் பெண்ணாக இருந்தால் மேலே இருப்பதை மீண்டும் ஒரு முறை சென்று படித்திருப்பீர்கள் ஆண்களாக இருந்தால் முதல் தடவை படிக்கும் போதே புரிந்து இருக்கும் என்ன நான் சொன்னது சரிதானே)

நான் என்ன தப்புங்க பண்ணிட்டேன் இதுகெல்லாம் அவ பூரிக்கட்டைடையை தூக்கி அடிக்கிறா? அவங்க மனசுல நினைக்கிறது ஒன்று சொல்லுறது ஒன்று எதையும் தெளிவா சொல்லுறது இல்லை


இந்த தடவை நான் பதிலுக்கு அவ மேல் கோபபட்டு கத்திட்டேன். அதுக்கு அவ உடனே அவ அம்மாவுக்கு போனை போட்டு அம்மா இவரோட இனிமே குடும்பம் நடத்த முடியாது அதனால நான் உன் கிட்டே வந்துடுறேன் என்று சொன்னாள்

அதற்கு அவ அம்மா அடியே நீ அப்படி ஏதும் தப்பு பண்ணிடாதேடி.. தப்பு பண்ணுனவன் புருஷந்தான் அதனால அவன் அதற்கு நல்லா தண்டனை அனுபவிக்கனும்.

அதனால நான் அங்கு வந்து உன்னோட ஒரு வருஷம் இருக்கேன். சரியா என்று கேட்கிறார்.

பாருங்க மக்களே இந்த மதுரைத்தமிழனுக்கு எப்படியெல்லாம் தண்டனை தருகிறார்கள் என்று

மக்களே எனக்கு மிகுந்த மனபலத்தை கொடுக்க மறக்காமல் இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.

இல்லையென்றால் என்னால் இப்படி யெல்லாம் பதிவுகள் போட முடியாது

ஹீ.ஹீ அப்ப நான் வரட்டா.... அடுத்த பதிவு தேர்த்த போவனும்


அன்புடன்
மதுரைத்தமிழன்

45 comments:

  1. வெல்கம் டு மாமியார்!
    ஆல் த பெஸ்ட்

    ReplyDelete
    Replies
    1. யோவ் சைதை இது நகைச்சுவைக்காக எழுதியதய்யா நீ பாட்டுல ஆல் தி பெஸ்ட் அது இது என்று வாழ்த்தி நீங்க வாழ்த்திய நேரம் அது கடவுள் காதில் விழுந்து அது பாட்டுல பலிச்சிட போதய்யா. அப்படி ஏதாவது நடந்த உம்மை தொலைச்சுபுடுவேன் தொலைச்சி

      Delete
  2. இதெல்லாம் ரொம்ப அநியாயம் தான்... ஹா... ஹா...

    ReplyDelete
    Replies
    1. திண்டுக்கல் தனபாலனே எனக்கு சப்போர்ட் பண்ணும் போது எனக்கு மனபலம் மிக அதிகமாயிடுச்சுங்க நன்றிங்க

      Delete
  3. நீங்க சந்தோசப்பட்டுக்குங்க. இதுபோலத்தான் எம் மாமியார் ஆறு மாசமா எங்கூட இருக்காங்க. என்னடி இப்டி சமச்சிருக்கன்னா அம்மா முடியாதவங்க, அவங்களுக்கு சமச்ச மிச்சம் அப்ப்டீங்கறா என் சம்சாரம். தெனம் இதே பொளப்பாப்போச்சு.

    கே. கோபாலன்

    ReplyDelete
    Replies
    1. அவங்க சாப்பிட்ட மிச்சத்தை உங்களுக்கு போடாதவரை சந்தோஷப்படுங்க கோபாலன் சார்

      Delete
  4. மாமியார் மட்டுமா? கூடவே மச்சானும் வந்து டேரா போட்டாதான் நல்லாயிருக்கும்... வெல்கம் டு ம.த மாமியார் & மச்சான்...! ஹா... ஹா... ஆல் தி பெஸ்ட் மதுரை தமிழன் அவர்களே!

    எங்க வீட்லயும் அவர் உங்களை மாதிரிதான்.... நேத்து-

    " என்னங்க பாசிப்பருப்பு வாங்கிட்டு வாங்க..."

    " இந்தாங்க ராணி நீங்க கேட்டது..."

    " டேய் என்னடாது... பாசிப்பருப்பை கேட்டா பயத்தம் பருப்பை வாங்கிட்டு வந்திருக்கே..?"

    " ரெண்டும் ஒண்ணுதானே..?" பாசிப்பருப்பு உடைச்சா பயத்தம் பருப்புதானே?

    " டேய்... . நான் அழகா இருக்கனும்னு முகத்துக்கு தேய்க்க பாசிப்பருப்பை வாங்கி வந்து பவுடர் பண்ண கேட்டால்... நீயி சாம்பார் வைக்க பயத்தம் பருப்பை வாங்கிட்டு வர்றியே.... " ...உன்ன பூரிக்கட்டையில் அடிச்சாதான் சரிவரும்....."
    ( கவனிக்கவும்... நான் முதல்ல மரியாதையாத்தான் கூப்பிட்டேன்... )

    ஹா....ஹா....

    ReplyDelete
    Replies
    1. நல்லவேளை மைச்சான் எனக்கு இல்லை

      ///
      எங்க வீட்லயும் அவர் உங்களை மாதிரிதான்.... நேத்து////

      என்ன என்னை மாதிரி பூரிக் கட்டையில் அடிவாங்கினாரா என்ன

      ///நான் அழகா இருக்கனும்னு ///
      அப்ப நீங்க அழகாக இல்லையா இப்ப?

      //நீயி சாம்பார் வைக்க பயத்தம் பருப்பை வாங்கிட்டு வர்றியே.///

      உங்க மூஞ்சி நல்லா இருந்தா என்ன இல்லைன்னா என்ன எனக்கு வேண்டியது நல்ல சாம்பார் என்று நினைத்து இருப்பாருங்க

      Delete
  5. ஐயோ பாவம் ,மாமியாருக்கும் சேர்த்து சமைக்கணுமா ?
    த.ம 2
    காதலிச்ச பாவத்துக்கு காதலன் பட்ட பாடு ...லிங்கில் பாருங்க >>>காதல் என்பது இரு கை ஓசை ?http://jokkaali.blogspot.com/2014/01/blog-post_20.html

    ReplyDelete
    Replies
    1. இங்க ஒரு கையால எங்க வூட்டுகாரம்மா கொடுத்தாலே பலமான ஒசை வருது இதில வேற இரு கை ஒசையா அடி அம்மாடி

      Delete
  6. //அப்ப நான் வரட்டா. அடுத்த பதிவு தேத்த போவணும்.//
    அடி வாங்க போறேங்கறத கூட எப்படியெல்லாம் சொல்ல வேண்டியிருக்கு பாருங்க.

    ReplyDelete
    Replies
    1. நீங்க ரொம்ப ஸ்மார்ட்ங்க நல்லாவே புரிஞ்சிகிட்டீங்க

      Delete
  7. எல்லாருக்கும் மாமியார் வந்த புடிக்காதுதான். ஆனா எனக்கு அப்படியில்லை. நல்லா ருசியா சாப்பாடு கிடைக்கும்னு உடனே கிளம்பி வாங்க என்பேன். அதாவது கல்யாணம் ஆன புதுசுல!!

    ReplyDelete
    Replies
    1. கல்யாணம் ஆன புதுசுல மாமியார் நம்ம வாயிக்கு புடிச்சபடி சமைச்சு போடுவாங்க... ஆனா அதுக்கு எல்லாம் சேர்த்து வைச்சு பின்னால மொத்தமா நம்மிடம் வசூலிப்பாங்க

      Delete
  8. ஏங்க இது உங்களுக்குக்கே அடுக்குமா?

    ...சிரிக்க வைத்த பதிவு..

    வாழ்த்துக்கள்
    http://www.malartharu.org/2013/01/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. பலரையும் சிரிக்க வைக்க என் வாழ்க்கையை இங்கே காமெடியாக ஆக்குகிறேன் அதில் தப்பு இல்லைங்களே

      Delete
  9. பதிவு தேத்த போகனுமா!? மாமியாரை கூப்பிட்டு வர ஏர்போர்ட் போகனுமா சகோ!?

    ReplyDelete
    Replies
    1. வயசான காலத்துல மாமியாரை அலைகழிக்க வைப்பது எனக்கு பிடிக்காததால் நானே அவர்களை சந்தித்துவிட்டு வருவேன்( மைண்ட் வாய்ஸ் : போய்பார்த்துவிட்டு வந்தால் ஒரு சில நாட்கள் மட்டுமே அவர்கள் வீட்டில் இருக்கலாம் அதே நேரத்தில் அவர்கள் நம்ம வீட்டுக்கு வந்தாள் மாதக்கணக்கில் டேரா போட்டால் என்ன செய்வது அதனால்தான் நாம் அவரை போய் சந்திக்கிறோம் என்பது யாருக்கும் தெரியாது. உஷ் அப்பாடா)

      Delete
  10. இன்னைக்கு என் மனைவி அதிசயமா, ஏங்க அந்த மதுரைத் தமிழன் வலைப்பூவை கொஞ்சம் ஓபன் பண்ணுங்கன்னு சொன்னாங்க. நானும் ஓபன் பண்ணினா, இந்த மாதிரியான ஒரு பதிவு. அவுங்களுக்கு கோபம்னா கோபம்,அப்படியொரு கோபம். அவர்களின் வார்த்தையில் இந்த கருத்து -

    சொன்னதை ஒழுங்கா வாங்கிக்கிட்டு வரத்தெரியலை, இதுல வேற மாமியார் வந்து தண்டனை கொடுக்கணுமாக்கும். பூரிக்கட்டையெல்லாம் பத்தாது, இன்னும் வீட்டில இருக்கிற பெரிய சாமானை வச்சுத்தான் அடிக்கணும்.

    மதுரைத் தமிழா, இதெல்லாம் உண்மையிலேயே என் மனைவி பக்கத்தில் உட்கார்ந்து சொன்னது தான். நான் அவுங்க சொன்னதை எழுதலைன்னா, எனக்கும் பூரிக்கட்டையால அடி விழும்.

    ReplyDelete
    Replies
    1. உங்க மனைவி ரொம்ப ஸ்மார்ட்டுங்க உங்களை அடிக்க அவர்கள் கை பரபரத்தால் அடிக்க காரணம் ஏதும் இல்லையென்றால் அவர்கள் செய்வது உங்களிடம் சொல்லி மதுரைத்தமிழன் வலைத்தளத்தை உங்களை விட்டு திறக்க சொல்லி & படிக்க சொல்லி உங்களை அடிக்க வைப்பதுதான். இது கூட தெரியாத அப்பாவியா நீங்கள் இருக்கிங்க

      Delete
    2. ஓ! இதான் மேட்டரா, எனக்கு இப்பத்தான் புரியுது, என் மனைவி ஏன் அடிக்கடி உங்களோட வலைப்பக்கத்தை திறந்து படிக்கச் சொல்றாங்கன்னு. அவ்வளவு அப்பாவியாவா இருந்திருக்கேன்!!!!!!!
      அதுலேயும் பாருங்க, அவுங்க உங்களோட லேடஸ்ட் பதிவை படிக்கச் சொல்லும்போது தானா, நீங்க எடக்கு மடக்கா பதிவைப் போடுவீங்க???

      Delete
  11. நல்ல ஜோக்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. Replies

    1. எங்க என்மேல இப்படி ஒரு கொலைவெறியா நல்லா வேணும்மெனு சொல்லுறீங்க

      Delete
  13. அடி விழுந்தது எல்லாம் இருக்கட்டும். அது என்ன புதுசா? ஆனால் எனக்கு ஒரே ஒரு doubt.. ஏன் அடி விழுந்தது என்பது மட்டும் இன்னும் விளங்கவில்லை...

    ReplyDelete
    Replies
    1. வேண்டாத புருஷன் கைபட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றமுங்க அதனாலதான் இப்படி அடி கிடைக்கிறதுங்க

      Delete
  14. இது பரவாயில்ல நண்பா. என்னை எலுமிச்சை வாங்கியானு அனுப்பினாங்கொ. நானும் பொய் வாங்கிவந்தேன். இது lime இல்ல lemon என்று சொல்லி, ஒரே "பங்கஜ வள்ளி அம்புஜ நேத்ரி" கதையா போச்சி. இது நடந்து ஒரு மாசம் மேல ஆகுது, இன்னும் நான் limeக்கும் lemonக்கும் வித்யாசம் தேடி அலையுறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா. உங்களுக்கும் அந்த வித்தியாசம் தெரியலையா? எனக்குத்தான் அந்த சந்தேகம் இருக்குதுன்னு நினைச்சேன். இந்த விஷயத்தில எனக்கு ஒரு கூட்டாளி கிடைச்சாச்சு.

      Delete
    2. லைம் க்ரீன் கலர்லேயும் லெமன் யேல்லோ கலரிலும் இருக்குங்க இது எப்படி தெரியும் என்று கேட்கிறீங்களா அடிவாங்கி வாங்கி கத்துகிட்டதுதான்

      Delete
    3. சரி பிரச்னை வேண்டாம்னு அடுத்த முறை பச்சை ஒன்னும் மஞ்சள் ஒன்னும் வாங்கியாந்தேன். ஒன்னு நார்த்தங்காய் ஒன்னு சாத்துக்குடின்னு மீண்டும் ஒரு பிரச்னை.

      Delete
  15. அது சரி நண்பா, இந்த பதிவுக்கு ஏன் ஜாகி சான் படம். அவர்தான் கழுவுற நீரில் நழுவர கராத்தே ஆள் ஆச்சே, அவரே அடிக்கவே முடியாதே... இல்லாட்டி அவருக்கும் அதே நிலமைன்னு தான் சொல்ல வரேளா?

    ReplyDelete
    Replies
    1. பொண்டாட்டிகிட்ட தப்பிக்க ஜாக்கியால கூட முடியாதுங்க அப்படி தப்பித்து போக இருக்கும் இடம் சொர்க்கம் மட்டுமே

      Delete
  16. மகள் படுத்தியது பத்தாதுன்னு மாமியார் வேறாக்கும்...
    எல்லாம் விதி... வேறென்ன சொல்ல...

    ReplyDelete
    Replies
    1. விதி வாழ்க்கையில் ரொம்பவே வீளையாடுதுங்க

      Delete
  17. இந்த பூரிக்கட்டையை US- ல் தடை பண்ணவேண்டும்
    என்று , ஒபாமா அவர்களை கேட்டுக்கொள்கிறோம்.
    இப்படிக்கு
    வருத்தப்படும் வாலிபர் சங்கம் . .

    ReplyDelete
    Replies
    1. பூரிக்கட்டை மேல் உங்களுக்கு இவ்வளவு அக்கரையாய் என்ன?

      Delete
  18. ஹிஹிஹி... செம்ம சோக்குபா...
    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...

    ReplyDelete
    Replies
    1. ரசிப்பிற்கு நன்றி நன்றி நன்றி நன்றி

      Delete
  19. Replies
    1. ரசிப்பிற்கு நன்றி நன்றி

      Delete
  20. ஒரு மாசத்துக்கு உங்க மனைவி பூரிக்கட்டையை
    சராசரியாக எத்தனை முறை பயன்படுத்தறாங்க ?
    நான் கேட்பது பூரி சப்பாத்தி செய்வதற்கு மட்டுமே.

    ReplyDelete
  21. எப்படி எல்லாம் நம்மை மாட்டி விடறாங்க! சொல்லும்போதே புரியும்படி சொல்றது இல்லையா! :)

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.