உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, January 9, 2014

கடவுள் உண்மையிலே நம் கண்ணை குத்திவிடுவாறா என்ன?


கடவுள் உண்மையிலே நம் கண்ணை குத்திவிடுவாறா என்ன?

ஆஹா.....நாட்டுல எவ்வளவோ நல்ல விஷயம் நடக்கும் போது இந்த விஷயத்தையும் கற்று தெரிந்து உங்கள் அறிவை விசாலாகமாக்கி கொள்ள வந்த மக்களே உங்களை நினைச்சா எனக்கு மிக பெருமையா இருக்கு. இன்று நாம் அறியப் போவது கடவுள் விரும்பிய படி நாம் நடக்காவிட்டால் கடவுள் நம் கண்ணை குத்திவிடுமா என்பதுதான்.இந்த பதிவை நான் எழுத காரணம் நேற்று கடவுள் என் கனவில் வந்து என்னைப்பற்றி நீ உன் வலைத்தளத்தில் ஏழு நாட்களுக்குள் எழுதவில்லையென்றால் உன் கண்ணை குத்திபிடுவேன் அதுமட்டுமல்லாமல் உன் வாழ்வில் கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கும் என்று  சொல்லி சென்றது....பயந்து போன நான் உடனே இந்த பதிவை எழுத தொடங்கினேன்

சாமியை பற்றி என்ன எழுதலாம் என்று நினைத்த போது என் மனதில் தோன்றியது இதுதான். மக்களே இதை கவனமாக படித்து அதன்படி நடந்து கொள்ளுங்கள் இல்லையென்றால் சாமி உங்கள் கண்ணை குத்திவிடுவது மட்டுமல்லாமல் வாழ்வில்  கஷ்டங்களை கொடுத்து கொண்டே இருப்பார்.


என் பதிவிற்கு வந்தால் நீங்கள் முதலில் செய்ய  வேண்டியது இதுதான். நீங்கள் ஃப்ளோவராக இல்லாமல் இருந்தால் உடனடியாக சேர்ந்துவிடுங்கள் அப்படி சேரவில்லையென்றால் சாமி உடனடியாக உங்கள் கண்ணை குத்திவிடும் அதை தடுப்பது என் கையில் இல்லை அதுமட்டுமல்லாமல் எனது பதிவிற்கான லிங்கை உங்களுக்கு தெரிந்த 101 பேருக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஏற்கனவே ஃப்ளோவராக இருப்பவர்களானால் நீங்கள் 201 பேருக்கு எனது பதிவிற்கான லிங்கை அனுப்பி வைக்க வேண்டும்.


ஆமாம் இதையெல்லாம் செய்தால் என்ன நடக்கும் என கேட்கிறீர்களா?? வேற என்னங்க நடக்கும் எனக்கு அதிக ஃப்ளோவர்கள் கிடைப்பார்கள். மேலும் நான் போடும் மொக்கை பதிவுகள் நிறைய பேரை சென்று அடையும். அவ்வளவுதாங்க நடக்கும். ஆனால் இதையெல்லாம் செய்யாவிட்டால் சாமி உங்க கண்ணை குத்துவது நிச்சயம் மேலும் உங்கள் குடும்பத்தில் கஷ்டங்கள் வந்து சேரும்.

பெண்களுக்கு வரும் கஷ்டங்கள் : அவர்கள் போடும் மேக்கப் எல்லாம் 5 நிமிடங்களுக்குள் அழிந்துவிடும். வம்பு பேசுவதற்கு விஷயங்கள் கிடைக்காது. காதலித்த பையனையே திருமணம் செய்து கொள்ளுவார்கள். எந்த ஆண்களும் உங்கள் பக்கம் திரும்பிகூட பார்க்கமாட்டார்கள்.உங்கள் கணவர் உங்களுக்கு சமைத்து போடமாட்டார். மாமியார் உங்கள் கூட வந்து வசிப்பார் நீங்கள் அணியும் ஆடைகளை பார்த்து யாரும் பாராட்டமாட்டார்கள்,


ஆண்களுக்கு வரும் கஷ்டங்கள் : உங்கள் மனைவி தினமும்  காலை உணவாக உங்களுக்கு உப்புமாதான் பண்ணி தருவார்கள். பார்க்கும் பெண்கள் எல்லாம் உங்களை அண்ணண் என்றுதான் கூப்பிடுவார்கள். நீங்கள் தலைக்கு குளித்தால் தலை துடைக்க கர்சீப் மட்டும் போதுமானதாக இருக்கும் நிலை வந்துவிடும்.பேஸ் புக்கில் நீங்கள் எந்த பெண்களுக்கும் ரிக்வெஸ்ட் அனுப்பினால் யாரும் உங்களை அக்சப்ட் பண்ண மாட்டார்கள்

இன்னும்  நிறைய கஷ்டங்கள் வந்து சேரும் அந்த கஷ்டங்களை சொல்லி உங்களை பயமுறுத்தவில்லை. அதனால மக்களே ஒழுங்கா எனது வலைத்தளத்திற்கான பதிவை உங்கள் பேஸ்புக்கில் நண்பராக இருக்கும் எல்லோருக்கும் அனுப்பி உங்கள் வாழ்வில் கஷ்டங்கள் எல்லாம் வராமல் பார்த்து கொள்ளவும். இதை செய்யாமல் கண்ணு போச்சே என்று கண்ணிர் விட்டால் அதற்கு இந்த தளம் பொறுப்பு ஏற்காது

டிஸ்கி : எனது சிறுவயதில் போஸ்ட் கார்டில் அல்லது நோட்டிஸ் அடித்து கடவளின் பெருமையை பற்றி சொல்லி அதை அப்படியே காப்பி பண்ணி குறைந்தது 100 பேருக்கு அனுப்பிவைக்க வேண்டும் இல்லையெனில் குடும்பத்தில் கஷ்டங்கள் வந்து நடுத்தெருவில் நிக்க வேண்டிய நிலமை வந்துவிடும் என்று சொல்லி அதை நமக்கு அனுப்பி வைப்பார்கள். அந்த பழக்கவழக்கம் இன்னும்மாறாமல் நோட்டிஸ்ற்கு பதிலாக இப்போது இமெயில் அனுப்பி வருகிறார்கள் அதை அப்படியே நம்பி அதை நமக்கும் அனுப்பி புண்ணியத்தை தேடிக் கொள்ளும் நண்பர்கள் இன்றும் உள்ளனர். அதை நினைத்ததுதான் இந்த பதிவை போட்டுள்ளேன்


அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழனின் மொக்கைகள் உங்களின் பார்வைக்காக

15 comments :

 1. என்னது இமெயிலில் அனுப்பி வைக்கிறார்களா...? இதென்ன புது டிரண்டா இருக்கு...!

  ReplyDelete
 2. உங்கள் வலைப்பூவை படித்தாலே, என்னுடைய மனைவி அடிக்கிறாங்களே. அந்த அடியெல்லாம் வெளியே தெரியாமல், உள் காயமாகவே இருக்கிறது. அதற்கு சாமி எவ்வளவோ மேல். அவர் வெறும் கண்ணை மட்டும் தானே குத்துவாரு. நான் ரொம்ப நல்ல பையனாக்கும், அதனால பெண்கள் எல்லாம் அண்ணான்னு கூப்பிட்டாலும் பரவாயில்லை (ஏற்கனவே அமலாபாலே அண்ணான்னு கூப்பிட்டிருக்காங்க)

  ReplyDelete
 3. இன்னும் சில கஷ்டங்களை சேர்த்துக் கொள்ளலாம்.

  பெண்களுக்கு மதுரைத் தமிழன் போல மோசமான மாப்பிள்ளை கிடைப்பார்.

  ஆண்களுக்கு பூரிக்கட்டையால உதை விழும்

  ReplyDelete
 4. எதுக்கு இப்போது என்னுடைய படத்தைப் போட்டு இவ்வளவு விளம்பரம்
  கொடுக்கின்றாய் பக்தா ?...கண்ணை நோண்டிருவேன் :)))))))))))))))

  ReplyDelete
  Replies
  1. Timely wit! ரொம்பவெ ரசித்தோம்!! பாராட்டுக்கள்!!

   துளசிதரன், கீதா

   Delete
 5. மேட்டர் ரொம்ப சிம்பிள் .
  கடவுளுக்கும் கண் டாக்டர்களுக்கும் ஒரு லிங்க் இருக்கு
  .அதனால்தான் தப்பு பண்ணினா கடவுள் கண்ணைக் குத்தி அவங்களுக்காக பேஷன்ட் (கான்வாஸ் ) சேக்கிறார்.
  நீங்க அதை உங்க பிளாக்குக்கு ஆள் சேர்க்க கான்வாஸ் பண்ணிட்டீங்க!

  ReplyDelete
 6. intha pakkam vanthanthey kuthama poochi :))))))))))))))))))

  sami ippadi mirathi followers sekura madurai tamizarku rendu kannu mattum illa, rendu kathaum serthu aruthudu thayi

  ReplyDelete
 7. நவீன் யுகத்திற்கு அவர்களும் மாறிவிட்டார்கள் போல! இது போன்ற ஆசாமிகளின் கண்ணைத்தான் கடவுள் குத்த வேண்டும்!

  ReplyDelete
 8. Followers sound like flowers in ur writing. Thats correct too.We bring fragrance to ur blog

  ReplyDelete
 9. நல்ல நகைச்சுவைப் பதிவு! ஆஹா மதுரைத் தமிழனின் டெக்னிக் இப்பத்தான் புரியுது!!!!

  ReplyDelete
 10. இமெயிலில் அனுப்பிவைக்கிறார்களா?

  ReplyDelete
 11. ha... ha.... எனக்கு ஒண்ணும் பிராப்ளம் இல்ல... நாம மேக்-அப்பெல்லாம் போட்டுக்கறதில்ல...! வம்பே நான் தான்... ! நான் காதலிச்ச பையனுக்கு வேற பொண்ணோடு கல்யாணம் ஆயிடுச்சி....! நான் சமைக்கிறதை சாப்பிடற கணவருக்குதான் கஷ்டம்... அப்புறம் மாமியார் எங்களோடதான் ஏற்கனவே! நான் போடற டிரஸ்ஸை பாராட்டலைன்னாலும் உள்ளுக்குள்ள புகையும்ல...! அவங்க திரும்பி பார்க்காட்டி போவுது... அவங்க திரும்பிகிட்டிருக்க பக்கமா நான் நின்னுக்கிறேன்...! அடடா.... ஏற்கனவே உங்களை நான் follow பண்ணிக்கிட்டுதான் இருக்கேனா?

  ReplyDelete
 12. தினமும் மனைவி கையால் உப்புமா கிடைக்கும் என்றால் கணவன்மார்களுக்கு சமையல் கட்டு வேலையில் இருந்து விடுதலை தானே ?
  த.ம 5

  ReplyDelete
 13. உம்மாச்சி காப்பாத்து! :)

  மெயிலில் மட்டுமல்ல, இப்போதெல்லாம் முகப்புத்தகத்தில் கூட பத்து பேர் பக்கத்துல ஷேர் பண்ணனும் கூட சொல்றாங்க!

  ReplyDelete
 14. நீங்க சொல்வது போல எளிமையான சிறிய அளவில் எழுதும் போது அடுத்தடுத்து படிக்க சுவராசியமாகத்தான் உள்ளது.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog