உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, January 16, 2014

கலைஞர் பாணியில் மதுரைத்தமிழனின் கேள்வி பதில்கள் (மோடியை கண்டு அஞ்சும் பாலிவுட் நடிகர்கள்)
கலைஞர் பாணியில் மதுரைத்தமிழனின் கேள்வி பதில்கள் (மோடியை கண்டு அஞ்சும் பாலிவுட் நடிகர்கள்)


ஆகமதாபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் மற்றும் மோடியும் கலந்து கொண்டதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

மதுரைத்தமிழனின் பதில் : மோடியிடம் இருந்து நடிப்பு திறமையை மேலும் கற்று அறியவே சல்மான்கான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை அல்லது எனது போட்டோடுனில் உள்ள கருத்துதான்தான் சரியாக இருக்கும்.

தேமுதிக வுடன் கூட்டணி பேச்சு வார்த்தைகள் நடத்தவில்லை என்று கலைஞர் சொன்னது பற்றி?
மதுரைத்தமிழனின் பதில் : தேமுதிக வுடன் கூட்டணி பேச்சு வார்த்தைகள் நடத்தவில்லை என்று கலைஞர் சொல்வதை விட அவர்கள் எங்களுடன் பேசகூட விரும்பவில்லை என்று உண்மையை சொல்லி இருக்கலாமே

அல்லது தேமுதிக வுடன் கூட்டணி பேச்சு வார்த்தையா திமுகவா நிச்சயம் அது யாரோ திரித்துவிட்ட கதை உண்மை என்னவென்றால் நாங்கள் தேமுதிகவிடம் கெஞ்சி கொண்டிருக்கிறோம்


பிரதமர் வேட்பாளராக ராகுல் இல்லை: பிரசாரத்தை வழிநடத்துவார் என காங்கிரஸ் தலைமை அறிவிப்பு செய்து இருக்கிறதே?

மதுரைத்தமிழனின் பதில் : தாங்கள் தோல்வி அடைவோம் என்று தெரிந்த பிறகு தன் மகனை பழி கொடுக்க தாய்க்கு மனம் இடம் கொடுக்கவில்லை அதனால் வேறு ஒரு ஆட்டை பிரியாணிக்கு தயார் செய்ய முடிவு செய்து விட்டார்

மீனவர் பேச்சுவார்த்தையில் இலங்கையுடன் மிக எச்சரிக்கை செயல்படவேண்டும் என்று கலைஞர் சொல்லி இருக்கிறாரே அதை பற்றி?

மதுரைத்தமிழனின் பதில் : அதாவது இந்திய மீனவர்களைப் பிடிப்பதை எந்த காரணத்தை கொண்டும் இலங்கை அரசு நிறுத்துவிடக் கூடாது. அப்ப்டி நிறுத்திவிட்டால் எங்க பொழப்பு போயுவிடும் அதனால்தான் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என சொல்லுகிறார் போல

காங்கிரஸை காப்பாற்ற நேரு குடும்பத்தில் யாரும் இல்லை என்று மேனகா காந்தி சொல்லி இருக்கிறாரே அதைப்பற்றி நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் மதுரைத்தமிழனே?

மதுரைத்தமிழனின் பதில் : நேரு குடும்பத்தில் மட்டும் அல்ல இந்தியாவில் கூட காங்கிரஸை காப்பாற்ற யாரும் இல்லைதான்.

செஞ்சி அருகே கள்ளச்சராயம் குஇத்து 2 பேர் சாவு  ஒருவர் கவலைகிடம் அது பற்றி ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?

மதுரைத்தமிழனின் பதில் : அட என்னங்க கவர்மெண்ட் வழங்கும் நல்ல சாரயத்தை குடிப்பதினால் தினமும் பலர் இறக்கின்றனர் பல குடும்பங்கள் கவலைக்கிடமாக இருக்கின்றன. அது ஒப்பிட்டு பார்க்கும் போது கள்ளஸ் சாராயமே பெட்டர் போலிருக்கிறது


ஊழலில் காங்கிரஸும் பாஜவும் நாணயத்தின் இரு பக்கங்கள் என்று ரமேஷ் பாபு சொன்னதுபற்றி?

மதுரைத்தமிழனின் பதில் : தலை நாணயத்தின் ஒரு பக்கதில்தான் இருக்க வேண்டும் அது இரு பக்கதிலும் இருந்தால் அது செல்லாக் காசுதாங்க..


பிரதமராக எல்லா தகுதிகளும் ராகுல் காந்தியிடம் இருக்கிறது என்று எம் எஸ் கிருஷ்ணா சொல்லியிருப்பது பற்றி?

மதுரைத்தமிழனின் பதில் : இந்திய குடிமகனாக பிறந்த எவருக்கும் இந்திய பிரதமாரக தகுதி இருக்கிறது என்பது கூட தெரியாமல் இவர் பேசுவது இவர் அறியாமை வெளிக்காட்டுகிறது

தூத்துகுடியில் மருத்துவர் போல நடித்து மூதாட்டியிடம் முப்பது சவரன் கொள்ளை அடித்தது பற்றி என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?

மதுரைத்தமிழனின் பதில் : அது எல்லாம் என்ன பெரிய விஷயம் நல்ல தலைவர்களாக வேஷம் போட்டு கோடிக்கணக்கில் நம் அரசியல் தலைங்க தினசரி கொள்ளை அடிக்கிறாங்களே அதை ஒப்பிடும் போது  இதெல்லாம் நத்தீங்க்

டாஸ்மாக் கடைகளை மூட முடியாது என சோ சொல்லி இருப்பது பற்றி?
மதுரைத்தமிழனின் பதில் : அதிக அளவில் குடித்து சாவது அவா இனம் இல்லையே அதுமட்டுமல்லாமல் டாஸ்மாக்  கடைகளால் பயன் பெறுவது அவா இனம்தானே அதனால் அவர் அப்படி சொல்லி இருப்பார்


நிலக்கரி சுரங்க ஒதுக்கிடு ஊழலில் வெளிநாடு நிறுவனத்திடம் விசாரணை துவக்கம்?
மதுரைத்தமிழனின் பதில் : சுரண்டியதில் தமக்கு சரியான பங்கை தந்து இருக்கிறார்களா என்று விசாரிக்கிறார்கள் போல இருக்கிறது

அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : உங்களுக்கு இது மாதிரி ஏதாவது கேள்வி மனதில் எழுந்து அதற்கு பதில் தெரிந்தால் பின்னுட்டத்தில் சொல்லிச் செல்லுங்கள்

 இதுவரை வந்த கலைஞர் பாணியில் மதுரைத்தமிழனின் கேள்வி பதில்களின் தொகுப்புகள்,
அலசி ஆராய்வது மதுரைத்தமிழன்


18 comments :

 1. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!

  ReplyDelete
 2. நான் உங்களிடமிருந்து மிகவும் எதிர்பார்த்த பதிவு - திமுக மற்றும் தேமுதிக கூட்டணி பற்றி தான். அந்தோ பாவம் திமுக என்று உங்கள் பாணியில் சொல்லிவிட்டீர்கள் .

  ReplyDelete
  Replies

  1. அந்தோ பாவம் என்று நான் சொல்லவில்லை மக்களும் மாற்று கட்சியினரும்தான் சொல்லுகின்றனர் அதைத்தான் நான் கவனித்து இங்கே எழுதுகிறேன்

   Delete
 3. கான்செப்ட்டை கொஞ்சம் மாத்தலாமே! எனக்கு கொஞ்சம் போர் அடிக்குது!

  ReplyDelete
  Replies
  1. நண்பரே உங்களுக்கு நான் சொல்வது & எழுதுவது போரடித்தால் உங்களுக்கு போரடிக்காத தளங்களுக்கு சென்று படிக்கலாமே. நான் யாரையும் "கட்டாயப்படுத்தி' இங்கே வந்து படியுங்கள் என்று சொல்லவில்லையே. இங்கு நான் எனக்கு படித்ததில் பிடித்ததை எனது வழியில் "எனது பொழுது" போக்கிற்காகவே எழுதுகிறேன் .

   உங்களுக்கு மட்டுமல்ல எனது இணைய நட்புகளுக்கும் சொல்வது இதுதான். நான் எழுதுவதை எல்லாம் படிக்கனும் கருத்து சொல்லனும் என்று அவசியம் இல்லை. நீங்கள் அப்படி செய்தால்தான் நட்பு தொடரும் நான் உங்கள் தளத்திற்கு வருவேன் என்பதில்லை எனக்கு நேரம் கிடைக்கும் போது எனக்கு பிடிக்கும் வகையில் எழுதும் பதிவை கண்டிப்பாக படித்து கருத்துக்கள் இடுவேன் அது நட்புகளாக இருந்தாலும் இல்லையென்றாலும் சரி எல்லாம் எனக்கு ஒன்றுதான்.

   அது போல யாரும் என்னை இப்படி எழுதுங்கள் அப்படி எழுதுங்கள் என்று என்னிடம் சொல்லுவதை நான் விரும்புவதில்லை. நான் கட்டுபாடற்ற சுதந்திர மனிதன்

   Delete
 4. கேள்வியும் நானே
  பதிலும் நானே அருமை
  படங்கள் கூடுதல் சிறப்பு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies

  1. வலையுலக கவியரசே உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 5. கேள்வி பதில் அருமை... அந்தப் படங்களும் கலக்கல்.,.

  ReplyDelete
 6. கச் கேள்விகளுக்கு நச் பதில்கள் !!!!!!!!!!!!

  ReplyDelete
 7. மதுரைகாரர்களுக்கு கலாய்க்க சொல்லியா கொடுக்கணும் .
  செல்ல காசு ,நிலக்கரி ஊழல் நச் கமென்ட் !

  ReplyDelete
 8. நல்ல பதில்கள் மதுரைத்தமிழன்.

  உங்கள் படங்கள் ஒவ்வொன்றும் அருமை! :)

  ReplyDelete
 9. பதில்கள் அனைத்தும் நக்கல் நையாண்டி கலக்கல்...!

  ReplyDelete
 10. விஜயகாந்த்தை நினைத்தால் ஒரு பக்கம் ஆச்சரியம் மறுபக்கம் அதிர்ஷட மனிதர் என்றே நினைக்கத் தோன்றுகின்றது.

  ReplyDelete
 11. தே தி மு க கூட்டணி போட்டோடூன் ஒன்னாங்கிளாஸ்....!

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog