உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, January 19, 2014

நெட்டில் எப்படியெல்லாம் ஏமாத்துகிறார்கள்

நெட்டில் எப்படியெல்லாம் ஏமாத்துகிறார்கள்
மெயில்பேக் 5 :

திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்கிறது. ஆமாங்க இந்த திருட்டு கூட்டம் நெட்டையும் விட்டு வைக்கலைங்க....நெட் மூலமாக பல திட்டங்களை போட்டு மக்களை ஏமாற்றி வருகிறார்கள். அவர்கள் எப்படியெல்லாம் ஏமாற்றி வருகிறார்கள் என்பதை நீங்கள் அறிய வேண்டுமா? அது மிக எளிது. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் எனக்கு ரூ 1000 மட்டும் அனுப்பி வையுங்கள். அதை நான் உங்களுக்கு சொல்லித்தருகிறேன்.

பெண்களே/ஆண்களே உங்கள் வாழ்க்கை துணை நீங்கள் பேசுவதை காது கொடுத்து கேட்காவிட்டால் கவலைப்பாடாதீர்கள் அதற்கு பதிலாக அமெரிக்கா அரசாங்கம் உங்களை பேச்சையெல்லாம் கவனிக்கிறது என்று சந்தோசம் கொள்ளுங்கள்


சுதந்திரத்திற்கு முன்பு இருந்த காங்கிரஸ் வெளிநாட்டினரிடமிருந்து இந்தியாவை கைப்பற்ற போராடியது.
சுதந்திரத்திற்கு பின்பு இருக்கும் காங்கிரஸ் இந்தியாவை வெளிநாட்டினருக்கு விற்க போராடிக் கொண்டு இருக்கிறது

புகைப் பிடித்து கொண்டே மது உடலுக்கும் குடும்பத்திற்கும் நாட்டிற்கும் கெடுதல் என தமிழர்கள் போராடுகிறார்கள் என்பதை நினைக்கும் போது சிரிப்புதான் வருகிறது எனக்கு


மலச்சிக்கல் டீன் ஏஜ் காதல் போன்றது. அது இருக்கும் போது நம்மால் தூங்க முடியாது சாப்பிட முடியாது ஆனால் அது போகும் போது மிக வலியைத் தரும்


ஞாபக சக்தி வலுவிழக்கும் நேரத்தில் நாம் செய்த சத்தியமும் வலுவிழுந்துவிடும்...


வருங்காலத்தில் தமிழக் மாணவர்கள் படிக்கும் வரலாறு புத்தககத்தில்:அசோகர் சாலையோரங்களில் மரங்களை நட்டார்.

ஜெயலலிதா அவர்கள் நாடுதோறும் டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்தார்

கலைஞர் தனது இறுதி காலம் வரை இலங்கை பிரச்சனை நாடகத்தை வெற்றிகரமாக நடத்தி வந்தார்

மோடி அலை சுனாமியைவிட மிக அதிக பாதிப்பை ஏற்படுத்தி பாஜவை மண்ணை கவ்வ வைத்துவிட்டது

சோனியா காந்தி இந்தியாவை சூரையாட வந்த வெளிநாட்டுப் பெண்மணி
என்று இருந்தாலும் அதிசயப்பட வேண்டியதில்லை.

அன்புடன்
மதுரைத்தமிழன்

10 comments :

 1. நான் மற்றவர்களிடம் தெரியாமல் ஏமாறும்போது, ஏதோ தெரியாமல் ஏமாந்துவிட்டோம் என்று மனதை சமாதானம் செய்துக்கொள்வேன். ஆனால் உங்களிடம் தெரிந்தே ரூ.1000 கொடுத்து ஏமாந்தால், மனது சமாதானம் அடையாது.

  ReplyDelete
 2. ஒவ்வொன்றும் அருமை!

  ReplyDelete
 3. அன்றும் இன்றும் காங்கிரஸ் இனியாவது யோசிக்க வேண்டிய விசயம்

  ReplyDelete
 4. எனக்கு வெளிநாட்டில் இருந்து 2௦௦ கோடி பரிசு பணம் வர வேண்டி உள்ளது ,வந்ததும் ஆயிரம் என்ன லட்சம் அனுப்புகிறேன் !
  +4

  ReplyDelete
 5. ஏமாத்துறது எப்படீன்னு உங்கக்கிட்டதான் கத்துக்கணும் போல. ஏமாறுறவங்க இருக்கறவரைக்கும் ஏமாத்தறவங்களுக்கும் இருக்கத்தான் செய்வாங்க :))

  ReplyDelete
 6. நல்ல பகிர்வு மதுரைத்தமிழன்.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog