உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Saturday, January 4, 2014

மோடி அலை விஜயகாந்த் அலையன்ஸ்க்காக காத்து இருக்கா?


மோடி அலை விஜயகாந்த் அலையன்ஸ்க்காக காத்து இருக்கா?இந்தியாவெங்கும் பர பரப்பாக பேசப்பட்ட மோடி அலை டில்லி சட்டசபை தேர்தலுக்கு பின்னால் வலுவிழந்து போய் விட்டது. அது வலுவிக்க காரணம் கெஜ்ரிவால் என்ற புதிய அலை இந்தியாவெங்கும் வீச ஆரம்பித்ததால்தான். டில்லியில் ஏற்பட்ட கெஜ்ரிவாலால் அலையால் மோடி அலை மிகவும் அடி வாங்கி நொந்து நூலாகி இறுதியாக தமிழகத்தில் விஜய்காந்த அலையன்ஸ்க்காக மண்டி போட்டு காத்துகிடக்கிறது

கடந்த டிசம்பர் மாதம் 8ம் தேதி டில்லி சட்டசபை தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை நடந்தது. அதுவரை, அனைத்து மீடியாக்களிலும், டுவிட்டர், பேஸ்புக்குகளிலும் நரேந்திரமோடியே வலம் வந்து கொண்டிருந்தார். அனைவரையும் பின் தள்ளி, மோடி ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தார். ஆனால், டிச.8க்கு பின், கெஜ்ரிவால் அந்த இடத்தை பிடித்தார். அனைத்து சேனல்களும் கெஜ்ரிவால் குறித்த செய்திகளையே அதிகம் வெளியிட்டன. பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் அரவிந்த் கெஜ்ரிவாலே இன்று வரை ஆதிக்கம் செலுத்தி வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கொஞ்சம் நஞ்சம் இருந்த மோடி அலையை அடக்க காங்கிரஸ் இந்திய தூதரக அதிகாரியான தேவயானி பிரச்சனையை பெரிதாக்கி விட்டது. இந்த பிரச்சனைகாரணமாக மோடி அலை மேலும் அடி வாங்கி சுருண்டு கொண்டது..

மோடி மிக புத்திசாலியாக இருக்கலாம் ஆனால் கூட இருக்கும் ஜால்ராக்களால் புத்திசாலி மதிமயங்கி தவறு செய்யலாம். அப்படிதான் மோடி தவறு செய்து இருக்கிறார். அவர் செய்த தவறு அலையை மிக சீக்கிரமாக துவங்கிவிட்டதுதான். அவருக்கும் அவர் கூட ஜால்ரா போடும் மீடியாக்களும் மறந்த ஒன்று இந்திய மக்களின் குணாதிசியத்தை பற்றிதான். இந்திய மக்களிடம் இருக்கும் ஒரு குணம் எந்த ஒரு விஷயத்தையும் ஒரு குறிப்பிட்ட நாள் வரை மட்டும்தான் ஞாபகம் வைத்து கொள்வது அல்லது அடுத்த பிரச்சனை அலை வரும் வரை ஞாபகம் வைத்திருப்பது. அதனால்தான் மோடி அலை கெஜ்ரிவால் அலையால் மறக்கப்பட்டது..


இப்ப சொல்லங்க இன்னும் மோடி அலை இருக்கிறதா இல்லையா என்று அப்படி இருந்தால் அது எங்கு வீசிக் கொண்டிருக்கிறது என்று சொல்லிஸ் செல்லுங்கள்

இதை படித்த நீங்கள் மறக்காமல் கிழே உள்ளதையும் படித்து செல்லுங்கள்

செய்தி :கர்நாடக முன்னாள் முதல்வர், எடியூரப்பா, பாரதிய ஜனதா கட்சியில் சேருவது உறுதியாகி விட்டது. கடந்த ஓராண்டு காலமாக நடந்து வந்த பேச்சுவார்த்தைகள், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.ஊழல் குற்றச்சாட்டு காரணமாக, 2012ல், பா..,விலிருந்து விலகிய எடியூரப்பா, 'கர்நாடக ஜனதா பக் ஷா' என்ற கட்சியை துவக்கினார்.

மீஸ்டர் க்ளின் மோடியின் கைகளை வலுப்படுத்த எடியூரப்பா சேருகிறார். பிரதமர் ஆவதற்கு ஊழல் வாதிகளை நம்பி இருக்கும் மோடி ஆட்சிக்கு வந்தால் நல்ல ஆட்சியை தரப் போகிறாரா என்ன? இந்திய மக்கள் ரொம்ப அப்பாவிங்களா இருக்காங்களே..

செய்தி ;சுப்பரமணிய சாமி பேட்டி: மோடிக்கு இப்ப நல்ல செல்வாக்கு இருக்கு. தமிழகத்தில் 40 இடங்களில் பிஜேபி போட்டியிட்டால் கண்டிப்பாக 5 இடங்களில் வெற்றிப் பெறலாம் என்று கூறுகிறார்

இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் 5 தொகுதியில் வெற்றிப் பெற்றால் மோடி பிரதமாரகிவிடுவார் போல இருக்கிறதே...சுப்பரமணிய சாமி மோடியை நல்லாவே கிண்டல் பண்ணுகிறார்..
அன்புடன்
மதுரைத்தமிழன்

13 comments :

 1. வணக்கம்
  ஐயா.

  அரசியல் சார்ந்த பதிவு சிறப்பாக எழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள்...
  த.ம 1வது வாக்கு  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. கூட்டணி பேச்சுவார்த்தையில் சுப்ரமணியம் சாமியும் விஜயகாந்தும் கலந்து கொண்டு பேசுவதை கற்பனை பண்ணி பார்க்கும்போது நல்ல தமாஷாத்தான் இருக்கு!
  இந்த உரையாடலை தொகுத்து வழங்க அழைக்கிறேன், மதுரை தமிழனை!

  ReplyDelete
 3. சு.சுவாமி ஒரு கோமாளிங்க. அவர இப்ப பிஜேபியிலயே யாரும் கண்டுக்கறதில்லை. கெஜ்ரிவாலை உருவாக்கியதே இந்த மீடியாக்கள்தான். இப்போது அவர்களே அவரை குறை காணுவதில் மும்முரமாக உள்ளனர். அடுத்த சில மாதங்களில் வாக்களித்தவற்றை அவர் நிறைவேற்றவில்லையென்றால் இதே மீடியா அவரை நார்நாராக கிழித்தெறிந்துவிடும். ஒருவேளை அவர் சொன்னதை செய்பவர் என்று நிருபித்தால் மோடியின் ஆதரவு ஐஐடி காரர்களில் பலர் அங்கு தாவிவிடுவார்கள். அப்புறம் மோடியின் கதி அதோகதிதான். AAPயும் பெரும்பான்மை தொகுதிகளில் போட்டியிட்டால் மும்முனை போட்டி ஏற்பட்டு தில்லை சட்டசபை தேர்தல் போலவே எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை இல்லாமல் தொங்கு நாடாளுமன்றம்தான் ஏற்படும்.

  ReplyDelete
 4. ஆன்மிகமாவது லேசா எதோ புரியுது.

  அரசியல் .........ம்ஹும் .......அக்மார்க் சுத்தம்

  ReplyDelete
 5. புதிய வடிவில் "பாட்டி வடை சுட்ட கதை". அருமை.

  ReplyDelete
 6. படமும் தகவலும் அருமை! உங்கள் கருத்து ஏற்புடையதுதான்! மோடி அலை குறைந்துவிட்டதுதான்! ஆனால் கெஜ்ரிவாலும் காங்கிரஸ் தயவில்தான் ஆள்கிறார்! அதுதான் குழப்பமாக இருக்கிறது! நன்றி!

  ReplyDelete
 7. அரசியல்... எல்லாப் பக்கமும் கேப்டனையே தேடுறாங்களே... அதுதான் ஏன்னே தெரியலை....

  ReplyDelete
 8. அருமையான கருத்துப்படம்
  ரசித்து மகிழ்ந்தோம்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. கேஜ்ரிவால் உண்மையில் அனைவரயும் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டார். எத்தனை நாளைக்கு தாக்கு பிடிக்கிறார் என்று பார்ப்போம். மோடி மட்டுமல்ல கேஜ்ரிவாலும் ஊழல் அரசியல்வாதிகளை நம்பித்தான் ஆகவேண்டும். நேர்மையானவர்கள் யாரும் அரசியலில் தாக்கு பிடிப்பது. மக்கள் 100 சதவீத நேர்மையார்களை விரும்ப மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

  ReplyDelete
 10. காத்திருந்தவன் (மோடி )பெண்டாட்டியை நேற்று வந்தவன் (கேஜ்ரிவால் )கூட்டிட்டுப் போன கதையாகிப் போச்சே !
  த.ம 7

  ReplyDelete
 11. நல்ல அலசல் பதிவு!!! கெஜ்ரிவால் எந்த்தனை நாளுக்கு என்று பார்ப்போம்! அவரைச் சுற்றி உள்ளவர்கள் ஆடாமல் இருந்தாலே சரி!!

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog