Monday, January 13, 2014



மதுரைத்தமிழனின்  மனம் அலைபாயுதா அல்லது வலைபாயுதா?

டிவிட்டர் நிறுவனத்திடம் இருந்து எனக்கு ஒரு கடிதம் ஐயா மதுரைத்தமிழா எங்கள் நிறுவனம் மிக கஷ்டமான நிலையில் உள்ளது. எங்கள் கம்பெனியின் பங்குகள் மிகவும் குறைந்து கொண்டிருக்கிறது அதை நீங்கள் நினைத்தால் மாற்றலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் நீங்கள் தொடர்ர்ந்து டிவிட்ஸ் எழுதி வெளியிட வேண்டும் உங்களைப் போல பிரபலமானவர்கள் எழுதினாலே எங்கள் கம்பெனியின் வளர்ச்சி தானாலே அதிகரிக்கும் என்று கேட்டுக் கொண்டார்கள். அந்த கம்பெனியை நம்பி பல குடும்பங்கள் வாழ்வதால் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நான் எனது டீவிட்டரில் கீச்சுகளை வெளியிட்டேன். அந்த கீச்சுகள் உங்களுக்காக இங்கே...... அல்லது கிழே...

 

தாராள மனமுடையவர்கள் பெரும்பாலும் ஏழைகளாகவே இருக்கிறார்கள்

உன் வாழ்க்கையை நீ வெறுக்கலாம் ஆனால் உன்னைப் போல ஒரு வாழ்க்கையை வாழ பலர் கனவு காணலாம்


தமிழ்நாட்டு பெண்கள் தண்ணி அடிப்பது டாஸ்மாக்கில் அல்ல குழாயடியில்


"காண்டம் பாதுகாப்பானது அல்ல" அது அணிந்த இளைஞன் கட்டிலில் இருந்து கிழே விழுந்து கால் உடைத்து கொண்டான்


உலகில் 99 சதவிகித பெண்கள் மிக அழகாக இருக்கிறார்கள் மீதி 1 சதவிகிதம் என் வீட்டை சுற்றி இருக்கிறார்கள்

எதுக்குமே பயப்படாத ஆண்கள் மனைவியிடம் இருந்து தொடர்ந்து 5 மிஸ்டுகால்கள் வந்தால் மட்டும் பயந்து நடுங்குகிறார்கள்

கையில் உள்ள குழந்தை கிழே விழுந்தாலும் கவலைப்படாத பெண்கள் தன் கையில் உள்ள ஐபோன் கிழே விழும் போது கவலைபடுவது மிக அதிகாமாக இருக்கிறது

இரவில் எவ்வளவுதான் சத்தம் போட்டாலும் எழுந்திரிக்காத மனைவி நாம் லேப்டாப்பை எடுத்து 2 கீயை தட்டியதும் எழுந்திருப்பது எப்படிதானோ

நாம தனியாக போகும் போது வராத அழகான பெண்கள் நாம் மனைவி கூட போகும்போதுதான் வருகிறார்கள்

நீ என்னதான் நல்ல காரியம் செய்தாலும் உன்னை  சுட்டிக்காட்டாத சமுகம் நீ குசு விட்டால் மட்டும் உன்னைக் சுட்டிக் காட்டும்

விஜயின் ஜில்லா படம் பார்த்திட்டு வெளியே வருபவர்கள் 5% படம் மோசம் என்றும் 5% ஒகே என்றும் மீதீ 90% ஆத்திரத்தை அடக்கிவிடலாம் ஆனா மூத்திரத்தை அடக்க முடியாது என்று பாத்ரூம் நோக்கி செல்லுகிறார்கள்


தமிழ் நாட்டுல ரெட் சிக்னலில் நிக்காம போறவன் குடிக்காதவனாக இருக்கலாம் ஆனால் க்ரின் சிக்னலில் நிப்பவன் நிச்சயம் குடிச்சுகிட்டு ஒட்டுபவனாக இருக்கலாம்

அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : எனது கருத்துக்களை படித்து மகிழ்ந்த உங்களுக்கு ஒரு லேப்டாப் இலவசமாக தரப் போகிறேன். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் இதை ▒▒▒▒▒▒▒▒▒▒▒▒ சுரண்டினால் எனது போன் நம்பர் இருக்கும். அந்த நம்பருக்கு கால் செய்தால் முதலில் கால் செய்த 100 பேருக்கு இலவசமாக லேப்டாப் அனுப்பபடும். மறக்காதீர்கள் நான் சொன்ன இடத்தை மிக ஷார்ப்பான கத்தியால் சுரண்டி நம்பரை அறிந்து கொள்ளுங்கள் நம்பர் தெளிவாக தெரியும் வரை சுரண்டவும்

40 comments:

  1. Replies
    1. என்னை கழுதை என்று செல்லமா திட்டி அதன் பின் க்ளவர் என்று சொல்லி அதன் பின் என்மேல் அன்பை பொழிந்து நான் சொன்னதை எல்லாம் சரி என்றுதானே சொல்லி இருக்கீங்க தனபாலன்

      Delete
    2. அட நீங்க வேற...சுரண்டியதன் விளைவு... ஹிஹி... சும்மா ஜாலிக்காக...

      வீட்டில் பொங்கல் விசேசம் எல்லாம் உண்டா...? எப்படி நடக்கிறது அங்கே...?

      Delete
  2. அனுபவம் தான் வாழ்க்கை என்பது உங்களை பொருத்தவரை எவ்வளவு சரியாக இருக்கிறது பார்த்தீர்களா???????

    ReplyDelete
    Replies

    1. மிக குறுகிய காலத்தில் என் பதிவை படிச்சு என்னை ப்ரிந்து கொண்டது நீங்கள் மட்டுதான் ஹீ.ஹீ

      Delete
    2. பாம்பின் கால் பாம்பறியும் என்பது தெரியாதா உங்களுக்கு!!!!

      Delete
  3. நீங்க சொன்ன இடத்துல சுரண்டி என்னோட கம்பியூட்டர் ஸ்கிரீன் ஓட்டையாப் போயிடுச்சு.அதனால,அந்த லாப்டப்ப என்னோட மெயில் அட்ரசுக்கு அனுப்பி வைக்கவும்!

    ReplyDelete
    Replies
    1. ரூல்ஸ் படி எனது போன் நம்பர் கிடைத்து கால் பண்ணிய முதல் 100 பேருக்கு மட்டும்தான் பரிசு. என் நம்பருக்கு பதில் உங்களுக்கு ஒட்டைதான் கிடைத்திருக்கிறது அதனால் பரிசு பெறும் வாய்ப்பை இழந்துவிட்டீர்கள் முடிந்தால் வீட்டில் வேறு லேப்டாப் இருந்தால் மீண்டும் முயற்சித்து பார்க்கவும்

      Delete
  4. என்னது இது?
    நல்லவேளை நான் சுரண்டவில்லை ...பொங்கல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies

    1. போச்சுங்க உங்களுக்கு தமிழக அரசியல் தலைவராக வருவதற்கான சான்ஸே இல்லைங்க

      Delete
  5. டிவீட்ஸைவிட டிஸ்கி சூப்பர்!
    எங்க மேல ஏன் அவ்வளவு கோபம்?
    உங்க கடைபக்கம் வரவேகூடாதுன்னுதானே இப்படியெல்லாம் ஐடியா கொடுக்கறீங்க?

    ReplyDelete
    Replies
    1. மக்களுக்கு நல்லது செய்ய நினைச்சு பதிவு போட்டா எங்கள் மீது கோபமா என்று கேட்கிறீர்கள்

      Delete
  6. எப்பல இருந்து இந்த சுரண்டல் லாட்டரி பிசினெஸ்!?

    ReplyDelete
    Replies
    1. என் மனைவி தீய்ந்து போன பாத்திரத்தை போட்டு நல்லா சுரண்டி கழுவுங்கன்னு சொன்னாங்க அப்ப இருந்து இந்த சுரண்ட்ல் பிஸினஸுங்க

      Delete
  7. ஒரு குழந்தைப் போனா அடுத்த பத்து மாசத்துல பெத்துக்கலாம். ஆனா!? ஐபோன்?! 40000 செலவழிக்கனுமே!

    ReplyDelete
    Replies
    1. தெளிவா சொல்லீட்டிங்க சகோ பொண்ணுகளுக்குதான் இந்த கஷ்டம் புரியுமுங்க

      Delete
  8. இந்த மாதிரியெல்லாம் ட்வீட் பண்ணா ட்விட்டர் உருப்பட்ரும். ஏன்னா உங்கள ஃபாலோ பண்ணோ ஒரு பெரிய கூட்டமே அலைமோதுமே :/)

    ReplyDelete
    Replies
    1. மோடிக்கு வந்த அலை மாதிரிதானுங்க இங்க என் நிலமை ஹீ.ஹீ மக்கள் உஷாருங்க

      Delete
  9. அனைவருக்கும் எனது பொங்கல் பரிசு :

    நான் என்னத்தங்க சுரண்டரது. இதுக்கு பதில் தெரியாமல் இவ்ளவு நாளா மண்டய சொரண்டிக்கிட்ருக்கேன்.

    கணவருக்கு மிகவும் பிடித்த ஐடம் மட்டும் மனைவிகளுக்கு எந்த சமையல் குறிப்புகளில் தேடியும் கிடைப்பதில்லையே ஏன்.

    என் தங்கையை பெண் பார்க்க வருகிறார்கள் என்று மனைவி சொன்னவுடன் கணவர்கள் முகத்தை திருப்பிக்கொள்வது ஏன்.

    மனைவி மருமகனிடம் பேச ஆரம்பித்தவுடன் கணவர் நேரமாகி விட்டது என்று சொல்வது ஏன்

    பெரிய நான் ஸ்டிக் பாத்திரத்தில் உபயோகப்படுத்தும் கரண்டியை சமைக்க மட்டும் என்று மனைவிகள் நினைப்பது ஏன். (பூரி)

    வீராங்கனை மனைவி அடுத்தவீட்டுப் பெண்மணி கடன் கேட்க வரும்போது மட்டும் என் கணவர் கோபிப்பார் என்று சொல்வது ஏன்.

    எலியும் பூனையுமாக இருக்கும் மாமியார் மருமகள் TV சீரியல்கள் மட்டும் பக்கத்தில் உட்கார்ந்து பார்ப்பது ஏன்.

    கணவர் பக்கத்தில் இருக்கும்போது மட்டும் மனைவி மற்றவரை அண்ணே என்று ரொம்ப சத்தமாக அழைப்பது ஏன்.

    சிறுவர்கள் நன்றாக டிரெஸ் பண்ணிக் கொண்டு பொகும்போதெல்லாம் டீச்சர் இன்னக்கி அப்ப ஆபீஸ் போகலயா என்று கேட்பது ஏன்.

    தமிழனுக்கு திரைப்பட நடிகைகள் இன்றுவரை தமிழகத்திலிருந்து ஏன் கிடைக்கவில்லை.(த்ரிஷா பார்ப்பனர் என்பதால் அவரை கணக்கில் நான் சேர்க்கவில்லை)


    கே. கோபாலன்

    ReplyDelete
    Replies
    1. அனைத்தும் மிக அருமை பகிர்வுக்கு நன்றி

      Delete
  10. ஏன் மனைவியிடம் இருந்து மட்டும் மிஸ்ட் கால் வருகிறது? ஏனெனில் நீங்கள் மனைவியின் கால்ஐ மட்டும் answer பண்ணுவதில்லை.

    ReplyDelete
    Replies
    1. நான் என் மனைவியின் கால் ஐ மிஸ் பண்ணுவத்தில்லை மிஸ் பண்ணிட்டா அப்புறம் வாழ்க்கையில் சந்தோஷம் மிஸ் ஆகிவிடுமுங்க அப்புறம் மீபாவமுங்க

      Delete
  11. லேப்டாப்புக்கு சுரண்டனுமா ? கொன்னேப்புடுவேன்...

    கீச்சுக்கள் அருமை...

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
    Replies

    1. அரசாங்கம் மக்களை சுரண்டிதானே இலவச லேப்டாப் தருகிறது. ரொம்ப மிரட்டுனா உங்களை ஜெயா அம்மாகிட்டே சொல்லிக் கொடுத்துடுவேன்

      Delete
    2. எனக்கு ஒன்றும் பயமில்லை. நான் என்ன எதிர்க்கட்சித் தலைவரா, அவரது அமைச்சரா, தமிழக ஐஏஸ் அதிகாரியா. நான் கடவுளையும் தமிழக மக்களையும் நம்புபவன்.

      அனைவருக்கும் எனது உள்ளம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்.

      கே. கோபாலன்

      Delete
  12. அற்புதமான கருத்துக்கள்
    தொடர்ந்து எழுதினால் மகிழ்வோம்

    ஈ மெயிலில் தொடர்பு கொண்டால் லேப்டாப் கிடையாதா ?

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. 'ஈ' மட்டும் மெயில் தொடர்பு கொண்டால் லேப்டாப் கிடைக்கும் மற்றவங்களுக்கு சுரண்டினால் மட்டுமே கிடைக்க வாய்ப்பு உண்டு

      Delete
  13. வணக்கம் சகோதரர்
    சிறப்பான கருத்துகளை நகைச்சுவை ஓட்டத்தோடு பகிர்ந்துள்ளது கண்டு மிகுந்த மகிழ்ச்சி. தங்களுக்கும் இல்லத்தார் அனைவருக்கும் எனது இனிய தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. படித்து மகிழ்ந்தற்கு நன்றி சகோதரரே

      Delete
  14. மௌஸால அந்த இடத்தை தேய்ச்சுப்பார்க்காத துறவிகள் யாராவது இருக்கீங்களா?

    ReplyDelete
    Replies
    1. மெளஸை அல்ல மவுத்தை(வாய் ( பிரெஞ்ச் கிஸ்) மவுத்தோட தேய்க்கும் துறவிகள்தான் இப்ப அதிகம்

      Delete

  15. உங்கள் பதிவின் என்னுடைய கமண்ட்டை
    படிக்க இங்கே சுரண்டவும் #####################.

    ReplyDelete
  16. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. ஹாஹஹஹ!!! ட்வீட்டுக்கள் எல்லாமே மிக அருமை! ரசித்தோம்! அதிலும் சில பின்னூட்டங்கள் இன்னும் மதுரை டமில் கையின் டச்சோ டச்சு! எப்படி ஒரு நகைச்சுவை! வியப்பாக இருக்கு!!

    எங்கள் வலைப்பூவை ஜோதிஜி திருப்பூர் அவர்களுக்கு அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி!

    துளசிதரன், கீதா

    ReplyDelete

  18. வணக்கம்!

    இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பொங்கல் திருநாள் பொழியட்டும் நல்வளங்கள்!
    தங்கத் தமிழ்போல் தழைத்து!

    பொங்கல் திருநாள் புகுத்தட்டும் பன்னலங்கள்
    திங்கள் ஒளிபோல் திகழ்ந்து!

    பொங்கல் திருநாள் பொலியட்டும் பொன்னழகாய்
    உங்கள் இதயம் ஒளிர்ந்து!

    பொங்கல் திருநாள் புகழட்டும் பூந்தமிழை
    எங்கும் இனிமை இசைத்து!

    பொங்கல் திருநாள் புனையட்டும் புத்துலகைச்
    சங்கத் தமிழைச் சமைத்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  19. யோவ் மானா தானா... நீகாண்டி... இந்த http://avargal-unmaigal.blogspot.com/2014/01/maduraitamilguys-greatest-tamil-tweets.html லிங்கு சாமியாண்ட போயி... அப்பால... கீய கமண்டு செக்சனுக்கா வண்டிய வுட்டு... முட்டா நைனாவ கண்டுக்கினு... ஒன் லேப்பு டாப்ப குட்த்துகினா... நா சொர்ண்டி பாக்றேன் எதுனா நம்பரு கீதான்னு...

    ReplyDelete
  20. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்து

    த ம 6

    ReplyDelete
  21. நல்ல கீச்சுகள்! :)

    ரசித்தேன்....

    நமக்கு சுரண்டல் எப்பவுமே பிடிக்காது மதுரைத் தமிழன்.

    ReplyDelete
  22. குழந்தைகளோட இப்பத்தான் ஜில்லா பார்த்தேன். எனக்கு பிடித்து இருந்தது. வீரம் பிடிக்கல.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.