உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, January 28, 2014

உங்களுக்கு புத்தி இருந்தால் இதை படிங்க?


இன்று வழக்கம் போல என் மனைவிக்கு என் மேல் கோபங்க. அதனால அவ பூரிக்கட்டையால நல்லா அடிச்சுட்டாங்க

நானும் கோபத்தில உன்னைக் கட்டிக்கிட்டதுக்கு என் புத்தியை செருப்பாலேயே அடிச்சிக்கணும்"என்று சொன்னேனுங்க

அதுக்கு அவ எங்கிட்ட  அமைதியாகச் சொன்னாள்,......."செருப்பு இருக்கு ... புத்திக்கு எங்கே போவீங்க??" என்று?

என்னங்க இப்ப சொல்லுங்க எனக்கு புத்தி இருக்கா இல்லையான்னு?

எனக்கு இல்லைன்னு சொல்லுறவங்க உங்க புத்தியை எங்கிட்ட கொஞ்சம் தாருங்க  நீங்க தரலைன்னா உங்களுக்கும் புத்தி இல்லைன்னு அர்த்தம்

நீங்க எனக்கு தந்திங்கிண்ணா உங்களுக்கு புத்தி இல்லைன்ன்னுதானே அர்த்தம் புத்தி கெட்டவனுக்கு புத்திய தரவன் புத்தி கெட்டவனாகத்தானே இருக்கனும்


ஆமாம் இப்ப நீங்க என்ன செய்யப் போறீங்க......உங்க புத்தியை தரப் போறீங்களா இல்லையா இல்லை இந்த மொக்கை பதிவை படிச்சுட்டு புத்தி கெட்டு அலையப் போறீங்களா?

 
அன்புடன்
மதுரைத்தமிழன்

40 comments :

 1. Replies
  1. இதுக்கே இப்படி கண்ணைக்கட்டுதுன்னா இன்னும் சொல்ல வேண்டியது நிறைய இருக்கே... தலையில எலுமிச்சம்பழம் தேய்ச்சுகிட்டு வாங்க

   Delete
 2. எனக்கு புத்தி இல்ல. இருந்திருந்தா, உங்களைப் பத்தி தெரிந்தும்!!?? இந்த பதிவை படிக்க வந்திருப்பேனா!?

  ReplyDelete
  Replies

  1. எனக்குதான் புத்தியில்ல என்று என் மனைவி சொல்லிட்டா சகோ அதுபோல உங்க வூட்டுகாரரும் சொல்லிட்டாரா என்ன? இப்படி நம்ம குடும்ப பெருமை இப்படி இணையத்துல பறக்குதே...

   நம்க்கு புத்தி இல்லைன்னா பரவாயில்லை ஆனால் நம்மகிட்ட நிறைய அன்பு இருக்குதே அது போதும் சகோ

   Delete
 3. பூரிக்கட்டை நிறைய தேவை தான் உங்க மனைவிக்கு........

  ReplyDelete
  Replies
  1. உங்களை மாதிரி அன்பு உள்ளங்கள் வாங்கி கொடுத்தது நிறைய இருக்கு அதைவச்சுக்கிட்டு இந்த வருசம் முழுக்கா ஒட்டுவா என் அன்பு மனைவி இதுக்கு மேலே வாங்கி கொடுக்காதீங்க மக்களே

   Delete
 4. உங்கள் குறும்பிற்கு அளவில்லாமல் போச்சி...!

  ReplyDelete
  Replies
  1. அதுக்கு காரணம் நம்ம மதுரை மண்ணுதானுங்க

   Delete
 5. அந்த அருவாளை எங்கேலே வச்சேன் சன்முகப்பாண்டி ?

  ReplyDelete
  Replies
  1. மொராக்கோகிட்ட இரூக்குமுங்க நல்ல பாருங்க

   Delete
 6. என் மகன் ஞாபகம் வந்து விட்டது.
  நான் "உன்கிட்டே சொன்னேன் பாரு என் புத்தியை ........அடிச்சுக்கணும் ன்னு சொன்னா
  உடனே என் கிட்டே வந்து நின்னு அம்மா "Can Be of any help to you " ன்னு கேப்பான்.
  பாவம் . ஆயிரம் இருந்தாலும் நம்ம புள்ள இல்லையா?

  ReplyDelete
 7. ஒருவேளை கொடுத்துக் கொடுத்து
  உங்களுக்குக் குறைஞ்சிருக்குமோ

  எனக்கு இல்லாததால் அது குறித்து
  ஒர் ஐடியா இல்லை

  பிறர் பின்னூட்டங்களை
  ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்

  இருப்பவர் எவரும் வராமலா போய்விடுவார்கள்

  ReplyDelete
  Replies
  1. கொடுத்து கொடுத்து குறைஞ்சது அல்ல பூரிக்கட்டையால் வாங்கி வாங்கி குறைஞ்சதாக கூட இருக்கலாம்

   உங்களுக்கு இல்லையா?இதுதான் நீங்க சொன்ன முதல் பொய்யாக இருக்கும். சரி பயப்படாதீங்க் நான் உங்ககிட்ட கடன் கேட்கமாட்டேன்

   Delete
 8. கொஞ்சம் குடுங்க அப்டீன்னா. ஷாக் ஆய்ட்டேன். எதுக்குடீன்னேன்.

  பூரிக்கட்டயயே யூஸ் பண்ணி போரடிச்சிருச்சு. வேற ஐடம் ஏதாவது எங்கயாவது கிடைக்கிதான்னு தேடிப் பாக்கணும் அப்டீன்னா.

  அவங்களுக்கு குடுத்தது போக இருந்தா ஒங்களோட Mail Bagல அனுப்பறேன்.

  கே. கோபாலன்

  ReplyDelete
  Replies
  1. என்னங்க இப்படி ஏமாத்தீட்டிங்க மெயில் பேக்கை திறந்து பார்த்தா களி மண்ணுதான் இருக்குது. அதுதான் எங்கிட்ட நிறைய இருக்குதே ஹலோ நான் கேட்டது அறிவுங்க...அது இருந்தா ஏன் எனக்கு மண்ணு வருது ஹும்ம்ம்( நகைச்சுவைக்காக இப்படி சொல்லியுள்ளேன் தவறாக எடுத்து கொள்ளவேண்டாம்)

   Delete
 9. ஏங் கேசு வேறேங்க.

  ஏன் சம்சாரம் ஒங்க புத்தியக் கொஞ்சம் குடுங்க அப்டீன்னா. ஷாக் ஆய்ட்டேன். எதுக்குடீன்னேன்.

  பூரிக்கட்டயயே யூஸ் பண்ணி போரடிச்சிருச்சு. வேற ஐடம் ஏதாவது எங்கயாவது கிடைக்கிதான்னு தேடிப் பாக்கணும் அப்டீன்னா.

  அவங்களுக்கு குடுத்தது போக இருந்தா ஒங்களோட Mail Bagல அனுப்பறேன்.

  கே. கோபாலன்

  If you have knowledge let others vote and you leave India.
  K. GOPALAN

  ReplyDelete
 10. என் புத்திய உங்களுக்கு கொடுத்துட்டா, பிறகு நான் எப்படி என் புத்திய செருப்பால அடிச்சுக்கிறது?
  ஸோ... சாரி ... நஹீ ஹை!!

  ReplyDelete
  Replies
  1. எல்லோரும் ஏதாவது நொண்டிக்காரணம் சொல்லி எஸ்கேப் ஆகுறாங்க....

   Delete
 11. எனக்கும் புத்தி இல்லைங்க. நானே உங்ககிட்ட கேக்கலாம்னு பார்த்தா, நீங்க முந்திக்கிட்டீங்க. எனக்கு கல்யாணத்துக்கு முன்னாடி, நிறைய புத்தி இருந்துச்சுங்க. அதுக்கப்புறம் தான் மண்டைல ஒண்ணும் இல்லாம போச்சு. உங்களுக்கும் அப்படித்தான் நினைக்கிறேன். சரி தானே?  ReplyDelete
  Replies
  1. தப்புங்க..கல்யாணத்திற்கு முன்பு என்னிடம் இல்லைங்க அப்ப மட்டும் எனக்கு இருந்துச்சுன்னா நான் கல்யாணமே பண்ணி இருக்கமாட்டேனுக

   Delete
  2. ஆஹா, ஆரம்பத்திலிருந்தே உங்களுக்கு இல்லையா, சரியாப்போச்சு.
   எனக்கு கல்யாணத்துக்கு முன்னாடி இருந்துச்சு, மனைவிக்குத்தான் இல்லாம இருந்துச்சு. அதனால தான் நான் தைரியமா அவுங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

   ஆனா, அதுக்கு அப்புறம் தான், அவுங்க என்னோட புத்தியை கொஞ்சம் கொஞ்சமா சுரண்டிக்கிட்டாங்க. இப்ப எனக்கு தான் புத்தி இல்லாம போச்சு.

   Delete
 12. சந்திரபாபு பாட்டுத்தான் நினைவுக்கு வருது!

  ReplyDelete
  Replies
  1. என்ன சொல்லவறீங்க எனக்கு புத்தி இருக்கா அல்லது இல்லைன்னா?

   "புத்தியுள்ள மனிதன் வெற்றிகாண்பதில்லை வெற்றி பெற்ற மனிதனெல்லாம் புத்திச்சாலி இல்லை"

   Delete
 13. நான் என் வூட்டுக்காரை கோவத்துல உங்களுக்கு அறிவிருக்கா? ன்னு கேட்டால் அது இருந்திருந்தா உன்னை ஏன் கல்யாணம் பண்ணியிருக்க போறேன்பார்....... அப்ப உங்களுக்கெல்லாம் முதல்லர்ந்தே இல்லையா..?

  நான் கடன் வாங்க மாட்டேன்... கொடுக்கவும் மாட்டேன்... நான் தப்பிச்சுக்கிட்டேன்பா...........!

  ReplyDelete
  Replies
  1. நல்ல சமாளிக்கிறீங்க ஆமாம் ஆமாம் உங்ககிட்ட இருந்தாதனே கொடுப்பதற்கு

   Delete
 14. அடாடா.... இப்படி எல்லாமே இல்லாத விஷயமா போச்சே......

  சரி பார்க்கலாம்! என்ன நடக்குதுன்னு!

  ReplyDelete
  Replies
  1. பாத்திங்களா இல்லாத விஷயத்துக்கு எவ்வளவு அடிவாங்க வேண்டியது இருக்கு?

   Delete
 15. ஹாஹா! நாங்க் புத்தி உள்ளவங்க??!!!! அதான் பாவம் மதுரைத் தமிழன் அடியெல்லாம் வாங்கி, புத்தி வேணும் அப்படின்ற குரல் கேட்டு வந்து இங்கபதிவை படிச்சு உங்களுக்கு புத்தி கொஞ்சம் இலவசமாகவோ/கடனாகவோ தரலாம்னுதான்!!!! இது எப்புடீ

  ReplyDelete
  Replies
  1. துளசி & தில்லைக்கு அறிவு இருக்குன்னா அதுக்கு காரணம் உங்க ஒற்றுமைதான். யாரோக்கு ஒருத்தருக்கு இல்லை அதனால் மற்றவர் தன்னிடம் இருப்பதை பகிர்ந்து கொண்டதால் இப்ப உங்க ரெண்டு பேருக்கும் அறிவு இருக்கு... ஒற்றுமையாய் இருந்தால் எல்லாம் அடையலாம் என்று பெரியவங்க சொன்னதில் அர்த்தம் இருக்குங்க

   Delete
  2. ஹாஹா!! உங்ககிட்டருந்து எப்படி பேசினாலும் தப்பிக்கவே முடியாது போல!!!!! ஆனால் மிகவும் ரசித்தோம்.....

   Delete
 16. பெரும்பாலும் நிறைய பேர் எனக்கு புத்தி இல்லை , எனக்கு புத்தி இல்லை என்று ஒப்புதல் வாக்கு மூலம் கொடுக்கிறார்கள். நானும் அந்தக் கூட்டத்தை சேர்ந்தவள் தான். யாருக்காவது இருக்கு என்று சொன்னால் எனக்கும் சொல்லுங்கள். நானும் என்ன வட்டியாயிருந்தாலும் பரவாயில்லை நானும் கடனாக வாங்கிக் கொள்கிறேன், காந்தி கணக்கில்.

  ReplyDelete
  Replies
  1. காந்தி கணக்கை மூடி ரொம்ப நாளாகுது இப்பவெல்லாம் ஒபாமா கணக்குக்கு மட்டுதான் தருவாங்க

   Delete
 17. அய்யோ !!!!!!! முடியலடா சாமி...!!!! உங்க விலாசம் கொடுங்க; பூரி கட்டைகளுக்கு பதிலா ஒரு உருட்டு கட்டை வாங்கி அனுப்புறேன்...

  ReplyDelete
  Replies
  1. என்னாவொரு கொலைவெறி கொலைவெறிங்க

   Delete
 18. இந்த ஐயருக எவ்ளவு வெவரமானவுங்க. கல்யாணம் ஆற அன்னக்கே மாப்ளைக்கி செருப்பு வாங்கிக் குடுத்றாங்க. அத வெச்சுகிட்டு எவனாவது இப்டீல்லாம் பேச முடியுமா. ஒடனே மாமி அதுக்குத்தான எங்கவூட்ல வாங்கிக் குடுத்ருக்காஙக அப்டீம்பாங்க.

  கே. கோபாலன்

  ReplyDelete
  Replies
  1. சரியாய் சொன்னேள் போங்கோ....

   Delete
 19. அடடே... ஒன்க்கும் பீசா பூடிச்சாபா... சர்தாம்பா... வுடுபா... இந்தா ஒரு சீமெண்ணெய் புட்டி... இத்த வச்சுகினு ஒப்பேத்து... அப்பாலிக்கா... ரேசன் வந்த ஒடனே என்க்கு ஒரு புட்டி குட்த்துரனும்... இன்னாபா புர்தா...?

  ReplyDelete
 20. .புத்திஇருந்தா கொடுக்க மாட்டமா? வச்சுக்கிட்டா வஞ்சனை பண்றோம்.எங்களால குடுக்க முடிஞ்சதேல்லா தமிழ்மண ஓட்டுதான்

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog