உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, January 10, 2014

நாட்டு நடப்புகளை அலசி ஆராய்வது மதுரைத்தமிழன்நாட்டு நடப்புகளை அலசி ஆராய்வது மதுரைத்தமிழன் 
செய்தி : நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெறப்போவதாக மனிதநேய மக்கள் கட்சி அறிவித்துள்ளது. 

மதுரைத்தமிழன் :இப்ப பாருங்க திமுக 40 இடத்திலும் வெற்றி பெற போறாங்க. அதன் பிறகு பிரதமரை தீர்மானிக்கும் பொறுப்பு திமுகவுக்கு வந்து விடும்

செய்தி :திமுக தலைவர் கருணாநிதியை மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் சந்தித்து பேசினார்.

மதுரைத்தமிழன் :காங்கிரஸ் கட்சியுடன் தான் கூட்டணி இல்லை ஆனால் காங்கிரஸ் தலைவர்களுடான எங்கள் கூட்டணி என்றும் நிலைத்திருக்கும்

செய்தி :சென்னை புத்தகக் கண்காட்சி ஆரம்பம்

மதுரைத்தமிழன் :சந்தேகம் புதுப்படம் வந்தால் திருட்டு டிவிடி வருது அதுபோல திருட்டு புத்தகங்களும் வருமா?

செய்தி : தமிழகத்தில் டாஸ்மார்க் கடைகளை 4 நாட்கள் மூட தமிழக அரசு உத்தரவு!!
மதுரைதமிழன் :அம்மா கடையின் எந்த கதைவை மூட உத்தரவு என்பது தெளிவாக இல்லை பசங்க முன் கதவை மூடி பின் கதவை திறந்து வைக்கப் போறாங்க

செய்தி : பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதினார்.
தகவல் அறியும் சட்டத்தின் படி முதல்வர் அனுப்பும் கடிதம் பிரதமரை சென்று அடைகிறதா அதை அவர் பட்த்து பார்க்கிறாரா என்று கேட்டுச் சொல்லுங்களேன்.

இந்திய தூதரக அதிகாரி தேவயானிப் பற்றி?

இந்திய அரசாங்கமும் அமெரிக்கா அரசாங்கமும் சேர்ந்து உருவாக்கிய இந்தியாவின் வருங்கால எம்.பி அல்லது மத்திய அமைச்சர் இவர்

மதுரைத்தமிழன் புத்தியில் உதித்த புகழ் பெற்ற கருத்துக்கள்

எனக்கும் தமிழ்பட சினிமா விமர்சனம் எழுத ஆசைதான் ஆனா சினிமாவிமர்சனம் எழுத படம் பார்க்கவேண்டுமாம். அட போங்கப்பா அதுக்காக நான் சாகவெல்லாம் முடியாது

"அப்பாகிட்ட சொல்றேன்!" என்று குழந்தையை மிரட்டுவது அந்த காலம் அப்பாகிட்ட சொல்றேன்!" என்று அம்மாவை மிரட்டுவது இந்தகாலம்

தமிழ் சினிமா டைரக்டர்கள் மட்டும் நல்ல படமா எடுத்தால் பேஸ்புக்கிலும் வலைத்தளத்திலும் சினிமாவை கிண்டல் பண்ணுபவர்கள் பண்ணமுடியாமல் தற்கொலை செய்தாலும் செய்து கொள்வார்கள்

அன்புடன்
மதுரைத்தமிழன்

14 comments :

 1. கருத்துக்கள் அருமை...
  அப்பாகிட்டே சொல்றேன்... சுவைக்க வைத்த உண்மை.

  ReplyDelete
 2. சினிமா விமர்சனம் செய்ய உங்களுக்கு ஆசையா!? பாவம் சினிமா!

  ReplyDelete
 3. அப்ப நீங்க சினிமாவே பார்க்கிறது இல்லையா?

  ReplyDelete
 4. கேள்வியும் நானே பதிலும் நானே
  வெகு சுவாரஸ்யம்
  தொடர வாழ்த்துக்கள்

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
 6. உங்க அப்சர்வேஷன் எல்லாமே சூப்பர்.

  ReplyDelete
 7. மதுரை டமில் கை! நாங்களும் கொடுக்க நினைத்திருந்தோம் செய்தி அண்ட் கமென்ட்ஸ்.......நீங்க ரொமபவே சூப்பரா கொடுத்திட்டீங்க......No chance!!! ஆமாம் எப்படி இப்படி ஒரு மண்டை உங்களுக்கு!!! நல்ல நகைச்சுவை!!!!!

  ReplyDelete
 8. இனிய பொங்கல் வாழ்த்துக்கள் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும்!!!! உங்க கையில பொங்கல் ஆனவங்க எல்லாம் உங்களுக்கு பொங்கல் அனுப்பறாங்களாமே! செய்தி!!!!! (அதான் நம்ம அரசியல் தலைவருங்கதான்)!!!!

  ReplyDelete
 9. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய பொங்கல் வாழ்த்டுக்கள்!!

  ReplyDelete
 10. யோவ் ஜில்லா படத்தை பார்த்துட்டு இன்னும் அழுதுகிட்டே இருக்கேன்ய்யா.

  ReplyDelete
 11. அப்பாகிட்ட சொல்லிடுவேன்.... உண்மை!

  ReplyDelete
 12. இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு நறுக் சுறுக். முயற்சிக்கவும்.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog