உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, January 13, 2014

என்னை காப்பாத்துங்க காப்பாத்துங்கஎன்னை காப்பாத்துங்க காப்பாத்துங்க

நேற்றைய பதிவில் விட்டு போன கருத்துக்கள்

இன்று போகிப் பண்டிகையாம் வேண்டாததை வீட்டுக்கு வெளியில தூக்கி போட்டு ஏரித்துவிடுவாங்களாம்   என் மனைவி என்னை தூக்கி போட்டு ஏரித்துவிடுவார்கள் என்று எனக்கு பயமா  இருக்கு. அதனால மக்களே இன்று ஒரு நாள் மட்டும் என்னை காப்பாத்திவிடுங்க


விலைவாசி ஒவ்வொரு ஆண்டும் ஏறிக் கொண்டே போனாலும் போகும் ஆனா பெண்களின் வயசு மட்டும் ஏறவே ஏறாதுங்க

மனைவி கோபமாக இருந்தால் ஏதோ நமக்கு சின்ன செலவு வரப்போகுதுன்னு அர்த்தம் ஆனா அவ நம்ம மேல ரொம்ப ஆசையாக இருக்கிற மாதிரி இருந்தால் மிகப் பெரிய செலவுக்கு வேட்டு வைக்கிறானு அர்த்தமுங்க

குளிர்காலத்தில் கதகதப்புக்கு காதலியிடம் போனால் சூடா ஒரு முத்தம் தருவா ஆனா அதே காதலி மனைவியான பிறகு அதே மாதிரி தருவா என எதிர் பார்த்து போனால் கிடைத்தது என்னவோ வேறதான்..ஹும்

பெண்கள் தங்களுடைய  கணவருக்கு பிடித்தமான துணியையும் கணவர் அம்மாவிற்கு ஆசையாக வாங்கி தந்த சேலையையும் அப்புறப்படுத்தவே கண்டுபிடிக்கப்பட்ட பண்டிகை தான் போகின்னு நினைக்கிறேன்


மனைவி எடுத்தெறிந்து பேசினால் புயல் வருகிறதுக்கு அறிகுறி  அதே மனைவி கையில் கிடைத்த..
எதையாவது எடுத்து எறிந்து பேசினால்  அதுதாங்க சுனாமி

வீட்டுல வைக்கிற பொங்கல் பொங்குதோ இல்லையோ ஆனால் பேஸ்புக்கில் டிவிட்டரில் தேவைக்கும் அதிகமாக பொங்கல் வாழ்த்துக்கள் பொங்கி வழிந்து கொண்டிருக்கின்றன. பேசாம அம்மா டாஸ்மாக்கிற்கு லீவு வுட்டதை போல நானும் லீவு வுட்டுடலாமா என நினைக்கிறேன்

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள். பொங்கல் போல உங்கள் வாழ்வும் இனிக்க எனது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்


அன்புடன்
மதுரைத்தமிழன்

15 comments :

 1. தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. உங்களை நான் காப்பாற்ற நினைத்தால், என் மனைவி, நீ ஏன் மதுரைத் தமிழனை காப்பாற்றினாய் என்று அடிப்பார். அவர் அடிப்பது பத்தாது என்று, தங்கள் மனைவியும் என்னிடம் பூரிக்கட்டையால் அடி வாங்குகிற என் புருஷனை எப்படி நீ காப்பாற்றலாம். உனக்கு அவ்வளவு தைரியமான்னு அவர்களும் அடிப்பார்கள். எனக்கு இதெல்லாம் தேவையா???

  ReplyDelete
 3. இந்தப் பதிவை பார்த்தால், உங்களை வாழ்நாள் முழுவதும் அல்லவா காப்பாற்ற வேண்டும்!!!!!!.

  அதுவும் உங்கள் மனைவியிடமிருந்து மட்டும் இல்லாமல், உலகத்தில் இருக்கும் அத்தனை சகோதரிகளிடமிருந்து அல்லவா உங்களை காப்பாற்ற வேண்டும்.

  ReplyDelete
 4. :))))))))))) என்றென்றும் சிரித்து வாழ வழி சமைக்கும் உங்களுக்கு ஒன்றும் ஆகாது சகோ
  இனிய தைப் பொங்கல் +புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் :)))))உங்களுக்கும் உங்கள்
  குடும்பத்தினர் அனைவருக்கும் இவ்வாண்டு மகிழ்ச்சி பொங்கும் ஆண்டாக
  மலரட்டும் ......

  ReplyDelete
 5. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது கரும்பைவிட இனிய தமிழர் திருநாளாம் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 6. நீங்க சொல்றா மாதிரிதாங்க. ட்விட்டர்லயும் ஃபேஸ்புக்லயும் வாழ்த்துக்கள் நிறைந்து வழிகின்றன. ஆனால் அக்கம்பக்கத்துல இருக்கறவங்கக் கிட்ட எத்தனை பேர் வாழ்த்துக்கள் பகிர்ந்துக்கிட்டாங்கன்னு கேட்டா அநேகமா இல்லேன்னுதான் பதில் வரும்.

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. பொங்கல் வாழ்த்துக்கள் .
  போக வர செலவுக்கான காசு கொடுத்தால் நாங்க காப்பாத்த ரெடி !

  ReplyDelete
 8. வழக்கம் போல் கலகலப்பான பதிவு. அருமை சகோதரரே. உங்கள் பயத்தில் ஒரு அர்த்தம் இருக்கத் தான் செய்கிறது. மத்த நாளுல நாம சும்மா இருந்தா நம்மளை போகிக்கு விட்டு வைப்பாங்க. நாம தான் சும்மா இருக்கிறது இல்லையே. சும்மா.
  -------
  தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..

  ReplyDelete
 9. ஹஹஹா....மதுரை தமிழா! என்று உங்களுக்கு கல்தானு தெரில..!!!!!!! உங்கள் நகைச் சுவைஉணர்வே உங்களை காப்பாற்றிடுமே!! அப்புறம் என்ன கவலை!!!????

  ReplyDelete

 10. வணக்கம்!

  திருவள்ளுவா் ஆண்டு 2045
  இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

  பொங்கல் திருநாள் பொழியட்டும் நல்வளங்கள்
  தங்கத் தமிழ்போல் தழைத்து!

  பொங்கல் திருநாள் புகழட்டும் பூந்தமிழை
  எங்கும் இனிமை இசைத்து!

  பொங்கல் திருநாள் புனையட்டும் புத்துலகைச்
  சங்கத் தமிழாய்ச் சமைத்து!

  பொங்கல் திருநாள் புடைக்கட்டும் வேற்றுமையை!
  கங்குல் நிலையைக் கழித்து!

  பொங்கல் திருநாள் பொருத்தட்டும் ஒற்றுமையை!
  எங்கும் பொதுமை இசைத்து!

  பொங்கல் திருநாள் புதுக்கட்டும் சாதிமதம்
  தொங்கும் உலகைத் துடைத்து!


  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
 11. பொங்கல் வாழ்த்துக்கள் பொங்கி வழியுதுன்னு சொல்லிட்டு நீங்களும் பொங்கல் வாழ்த்து சொல்லிட்டீங்க ஹி ஹி...

  இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 12. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. அண்ணிக்கிட்ட திட்டு வாங்காட்டி உங்களுக்கு விட்யாதோ!?

  ReplyDelete
 14. :)))) ரசித்தேன்....

  பொங்கல் முடிஞ்சுப் போச்சு! அதான் வாழ்த்து சொல்லல உங்களுக்கு!

  ReplyDelete
 15. வீட்டுக்காரம்மா பொங்கல் கொண்டாடுவாங்க தானே? இனிய தாமதமான வாழ்த்துகள்.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog