உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, January 8, 2014

மதுரைத்தமிழனுக்கு வந்த மிரட்டல்.. மிரட்டியது யார்?மதுரைத்தமிழனுக்கு வந்த மிரட்டல்.. மிரட்டியது யார்?

நேற்று நான் எழுதிய அரசியல் பதிவிற்கு பின் எனக்கு மிரட்டல் செய்தி வந்தது.அப்படி என்னை மிரட்டியது யாருமல்ல வழக்கமாக மிரட்டும் என் மனைவிதான். அவன் இவனெல்லாம் கண்டதுக்கு எல்லாம் ஊர்ல போஸ்டர் அடிச்சு ஒட்டுறான் பேனர் கட்டுறான். நீங்கதான் சுத்த மோசம் எனக்காக ஒன்றும் பண்ண மாட்டேங்கிறங்க... நாளைக்கு மட்டும் நீங்க அதுபோல எதுவும் செய்யலை என்றால் அப்புறம் நடக்குறதே வேற என்று கடுமையாக மிரட்டினாள். சரி எதுக்குன்னு சொன்னால் அதுக்கு தகுந்த மாதிரி போஸ்டர் அடிச்சு ஒட்டுறேன் என்றேன். நாளை என்ன நாள் என்று கூடவா தெரியாது. நல்லா யோசிச்சு பாருங்க என்று சொல்லி முரைத்து விட்டு சென்று விட்டாள். அதன் பின் எனக்கு கையும் ஒடல காலும் ஒடல... வழக்கமா வாங்குற பூரிக்கட்டை அடியையே வாங்கி சமாளிக்க முடியல இதுல வேற மிரட்டி விட்டு சென்று இருக்கிறாள்.. என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்று பயந்து தூக்கம் கூட வரலை. கடைசியில என் குழந்தையிடம் நடந்ததை சொல்லி அட்வைஸ் கேட்டேன். அதற்கு அவள் சிரித்த வாறே சொன்னாள். அட மக்கு அப்பா நாளைதான் ( ஜனவரி 8 ) அம்மா இந்த பூமியில அவதரித்த நாள் என்றாள்.

அதை கேட்ட நான் நீ ரொம்ப நல்லா இருக்கனும்மா நீ தான் என் தெய்வம் என்று சொல்லி என்ன செய்வது என்று யோசித்து கடைசியில இந்த படத்தை டிசைன் பண்ணி இப்ப வெளியிடுகிறேன். இந்த வாழ்த்தை வெளியிடுவதன் காரணம் அந்த நல்ல நாளிலாவது அடி வாங்காமல் இருக்கலாம் என்ற நப்பாசைதான்.


சரி குழந்தையிடம் அம்மாவிற்கு பிடித்தமாதிரி என்ன பரிசு தரலாம் என்றதற்கு கிழேயுள்ள படத்தை கூகுலில் சர்ஸ் பண்ணி என்னிடம் கொடுத்து இதன் படி நடந்தாலே அது மிக பெரிய பரிசு என்று சொன்னாள்.


அம்மா 8 அடி பாய்ந்தால் பிள்ளை 16 அடி பாயும் என்று சரியாகத்தான் சொல்லி இருக்காங்க அந்த காலத்து ஆளுங்க...


ஹும்ம்ம் அப்ப நான் போய் அந்த பரிசுக்கான ஏற்பட்டை பண்ணுறேன்... வரேங்க... நீங்களும் எனக்காக பிரார்த்தனை பண்ணுங்க இந்த நாளிலாவது மதுர அடிவாங்கமா சந்தோஷமா இருக்கனும் என்று....


 

அன்புடன்

மதுரைத்தமிழன்
மனைவியை சம்பந்தப்படுத்தி கலாய்த்து இட்ட 40 பதிவுகளையும் படித்து ரசிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்

 

32 comments :

 1. துணைவியாருக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்... தங்களின் எண்ணமும் நிறைவேறட்டும்...!

  ReplyDelete
 2. மனைவியின் பிறந்த நாளையும் திருமண நாளையும் மறந்துவிடுவது கணவர்களுக்கு சகஜம்தானே :))

  ReplyDelete
 3. மதனிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். பேசாம வைரத்துல ஒட்டியாணம் வாங்கி கொடுத்துடுங்க ரொம்ப சந்தோசப்படுவாங்க.

  ReplyDelete
  Replies
  1. சகோ நீங்க சொன்னா அதுக்கு மறுப்பேதும் உண்டா என்ன? ஆமாம் செக் அனுப்பிட்டீங்களா?

   Delete
 4. நல்ல நேரத்துக்குத்தான் வந்திருக்கேன்... மதுரை தமிழன் அவர்களின் மனைவிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்....!

  ReplyDelete
  Replies
  1. நீங்க ரஜினி மாதிரி எப்ப வருவீங்க எப்படி வருவீங்க என்று தெரியாது ஆனா சரியான நேரத்துல வந்துரூவீங்க சரிதானே

   Delete
 5. கலக்குகிறீர்கள் நண்பரே! புகைப்படங்கள் அதைவிட கலக்கல்! (அது சரி, நீங்கள் திருச்சி வந்துவிட்டீர்கள் என்கிறார்களே, உண்மையா?)

  ReplyDelete
  Replies
  1. சரக்கை கலக்கும் நமக்கு புகைப்படத்தை கலக்காவா தெரியாது. நான் இன்னும் அமெரிக்காவில்தான் இருக்கிறேன். கலைஞரோ அம்மாவோ மோடியோ அல்லது விஜயகாந்தோ அழைப்பு விடுவித்தால் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரலாம் என நினைக்கிறேன் எனக்கு எல்லா தலைவருங்களும் ஒன்னுதான். அதனால யாரு முதல்ல கூப்பிடுறாங்களோ அவங்களுக்குதான் எனது சப்போர்ட்

   Delete
 6. உங்கள் துணைவியாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்! பகிர்ந்து கொண்ட படங்கள் கலக்கல்! நன்றி!

  ReplyDelete
 7. நீங்க மூளையை யூஸ் பண்ணி தப்பிச்சீங்க.

  என் மகளிடம் தெரியாமல் நான் "ஜனவரி 8 உன் சித்தி பிறந்த நாள் இல்ல" என்று சொல்லி மாட்டிகொண்டேன்.

  கே. கோபாலன்

  ReplyDelete
  Replies

  1. மாட்டிக் கொண்டது சரி ஆனால் என்ன தண்டனை கிடைத்தது என்று சொல்லவில்லையே

   Delete
 8. நல்ல ரசனையான பதிவு, நகைச்சுவையுடன் வழக்கம் போல......கலக்கல் படங்கள்!! என்ன பூரிக்கட்டை இல்லாததால் ஜொள்ஸா!!!!!!!

  தங்கள் மனைவிக்கு எங்கள் இருவரின் சார்பில் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

  பூரிக்கட்டையை அழாகாக அலங்கரித்து, அதில் உங்கள் மனைவியின் அழகான படத்தை லாமினேட் பண்ணி கிஃப்ட் பாக்ஸில் பொதிந்து பரிசாகக் கொடுங்களேன்! அப்புறம் பூரிக்கட்டை பறக்கிறதா என்று பாருங்கள்!!!!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் இருவரின் வாழ்த்துக்கும் நன்றி.. நீங்க சொன்னபடி செய்யலாம் ஆனா என்ன பூரிக்கட்டை பறப்பதற்கு பதில் நான் பறப்பேனோ என்னவோ அதுக்கு நான் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை

   Delete
 9. பொண்டாட்டிக்கு பயந்து , நம்ம மதுரை மண்ணின் பாரம்பரியம் , வீரம், மானம் எல்லாவற்றையும் காவு வாங்கி விட்டீரே மதுரைத்தமிழா,
  என்னா கூப்பிட்டயா இதோ வந்துட்டேன்.
  இந்தா வந்துர்றேன் பாரியாள் கூப்பிடுறா.

  ReplyDelete
  Replies

  1. மீனாட்சி ஆளும் மண்ணில் பிறந்தவர்கள் அல்லவா நாம்

   Delete
 10. மனைவியின் பிறந்த நாள் வாழ்த்துக்கு, இப்படி ஒரு தலைப்பா? நான் கூட சரி, நம்ம மதுரைத்தமிழன் ஏதோ ஒரு அரசியல் கட்சி ஆளுங்கக்கிட்ட நல்லா மாட்டிக்கிட்டாரு போலன்னு நினைச்சு இந்த பதிவை படிச்சா, ஒரு சந்தோஷமான செய்தியை எப்படி உங்களால உபாதி யோசிக்க முடியுது. உங்க மனைவி இந்த பொன்னான திருநாளில் உங்களை அடிக்க வேண்டாம்னு நினைச்சா கூட, இந்த தலைப்பைப் பார்த்து கண்டிப்பா உங்களுக்கு பூரிக்கட்டை அடி நிச்சயம்னு தெரியுது.

  உங்களுடைய துணைவியாருக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. அரசியல் ஆளுங்க எல்லாத்தையும் எளிதில் சமாளித்துவிடலாம்னுங்க ஆனா அந்த அர்சியல் தலைங்க கூட பொண்டாடிக்கு பயந்தவங்கதானுங்க


   நான் அரசியல்வாதிகிட்ட மாட்டிக்கிடேன்னு நினைச்ச்சு சந்தோஷமா படிக்க வந்தீங்களா?

   வித்தியாசமா தலைப்பு கொடுத்தால்தானுங்க நாலுபேர் நம்ம கிறுக்கலை படிக்க வருவாங்க

   Delete
 11. உங்கள் மனைவிக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.....

  அடி வாங்காது நீங்கள் தப்பிக்கவும் தான்!

  ReplyDelete
  Replies
  1. அடிவாங்காது தப்பிச்சுட்டேன்

   Delete
 12. お誕生日 おめでとう ございます。

  For Translation refer google translation

  ReplyDelete
  Replies
  1. தங்களுக்கு ஜப்பானிய மொழி தெரியுமா சகோதரி - ?

   முதல் வார்த்தை (அது காஞ்சி என்பதால்) நியாபகமில்லை. அடுத்த இரு வார்த்தைகளும் - "ஒமேதத்தோ கோஸைமாசு" - டோக்கியோவிலிருந்து வந்து 7 வருடங்கள் ஆகிவிட்டதால், ஏதோ ஓரளவிற்கு ஜப்பானிய மொழி நியாபகம் இருக்கிறது.

   Delete  2. வாழ்த்துக்கு நன்றி

   Delete
 13. மதுரை தமிழனே, மனைவியின் பிறந்த நாளை மறக்காமல் இறுக்க சிறந்த வழி அந்நாளை ஒரு வருடம் மறப்பதில்தான் உண்டு. ஒருமுறை மறந்திங்க பின்ன வாழ்நாள் முலுக்க மறக்கமாட்டீங்க.

  ReplyDelete
  Replies
  1. நான் எப்படி மறக்காம வாழ்த்து சொல்லுறேன்னு யோசிச்சிங்களா ? அனுபவம்தானுங்க

   Delete
 14. That is o tanjobu meaning Birthday. (Reply for Mr Chokkan)
  Good remembering the language

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோதரி. இப்பொழுது நியாபகத்துக்கு வந்துவிட்டது.

   Delete
 15. தளம் திறப்பதில் சற்று பிரச்சனை உள்ளது. வெவ்வேறு பக்கங்கள் வந்து படுத்தி எடுக்கின்றது. எனக்கு மட்டும்தானா? என்று தெரியவில்லை. சற்று பார்க்கவும்.

  ReplyDelete
  Replies
  1. நண்பர்களின் கணணியில் நானே திறந்து பார்த்தேன் பிரச்சனைகள் ஏதும் இல்லை. ஊரில் உள்ள சிலபேரிடமும் கேட்டு பார்த்தேன் பிரச்சனைகள் இல்லையென்றுதான் சொல்லுகிறார்கள்

   Delete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog