உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Saturday, December 14, 2013

பெண் பதிவர் ராஜி செய்யும் அட்டகாசங்கள்

பெண் பதிவர் ராஜி செய்யும் அட்டகாசங்கள்

தினமும் ஒரு பதிவை வெளியிடும் ஒரு பெண்பதிவர் செய்யும் அட்டகாசத்தை சொல்வதுதான் இந்த பதிவு
சேரில் அரை குறை தூக்கத்தில் இருந்த ராஜியின் கணவர் போன் அழைப்பு சத்தத்தை கேட்டதும் கண்ணை முடியவாரே போனை எடுத்து ஹலோ என்றதும் ,மறு பக்கத்த்தில் என்னங்க நான் ராஜி பேசுகிறேன் என்றதும் பதறி அடித்து எழுந்து நின்று என்னம்மா நல்லா இருக்கியா? பெங்களுரில் குளிர் அதிகமாக இருக்கிறதா? என்று கேட்டுவிட்டு, உடனே என்னம்மா பெங்களுரில் உள்ள எல்லா கோயிலுக்கும் சென்று நிறைய போட்டோ எடுத்திருக்கியா? எல்லாம் நல்லா வந்துருக்கா என்று நலன் விசாரிக்கிறார் ( ஆனால் அவரது மைண்ட் வாய்ஸ் சொல்லுகிறது: குழந்தை நல்லா இருக்கா? கோயிலில் நல்லா சாமி கும்பிட்டியா என்று கேட்க வேண்டிய நாம். எல்லா கோயிலுக்கும் சென்று நிறைய போட்டோ எடுத்திருக்கியா? எல்லாம் நல்லா வந்துருக்கா என்று கேட்க வேண்டியிருக்கிறது ஹும்ம்ம்ம்ம்)

ஆமாங்க நிறைய படம் எடுத்து இருக்கேன். இப்படி நிறைய போட்டோ எடுத்து எடுத்து என் கையெல்லாம் வலிக்குதுங்க.... அதை கேட்ட அவர் வீட்டுகாரர் அடி செல்லம் நான் உன் பக்கத்தில் இருந்தால் உன் கை விரலுக்கெல்லாம் நல்லா மஜாஜ் பண்ணியிருப்பேனே என்றார்.

அது கிடக்கட்டும் நம்ம மதுரைத்தமிழன் தந்த ஜடியா படி நம்ம கிச்சனை மாற்றி அமைச்சிட்டிங்களா? அவன் சொன்னபடி கிச்சன் ஸ்டவ் ரூமுக்கு நடுவில் மேடை அமைத்து அதில் இருக்க வேண்டும். ஸ்டவில் நான் சமைக்கும் போது நான் சமைப்பதை முன்னால் இருந்து போட்டோ எடுப்பதற்கு தகுந்த மாதிரி நிறைய இடம் விட்டு இருக்க வேண்டும். எனக்கு பின்னால் பெரிய ப்ரிஜ் வைத்து இருக்க வேண்டும் பக்கவாட்டில் கண்ணாடி ஷெல்ப் வைத்து இருக்க வேண்டும். அவன் அனுப்பிய போட்டோவை உங்களுக்கு பார்வோர்ட் செய்து இருந்தேன் அல்லவா அதை பார்த்து அதே மாதிரி செய்து முடித்து இருக்க வேண்டும் என்று சொன்னேன் அல்லவா அது எந்த அளவிற்கு முடிந்து இருக்கிறதுங்க?

அதற்கு அவர் எல்லாம் முடிந்து விட்டதம்மா சுவத்திற்கு பெயிண்ட் அடிக்க வேண்டியதுதான் பாக்கி (மைண்ட் வாய்ஸ் இவ பதிவு போட ஆரம்பிச்சாலோ இல்லியோ அப்ப ஆரம்பிச்சதுடா நமக்கு பிரச்சனை அதையும் உலகத்தில் பல நாடுகளில் இருக்கும் பல வேலை வெட்டியற்ற பசங்க படித்து விட்டு ஆஹா ஒகோ என்று புகழ்ந்து பேசிடுறாங்க. அதை கேட்டதும் நம்ம வூட்டுகாரம்மாவுக்கு தலைகால் புரியாம ஆட ஆரம்பிச்சுடுறாங்க. அவன் எவனோ மதுரைத்தமிழனாம் மதுரையில் இருந்து குப்பை கொட்ட அமெரிக்கா போய்விட்டானாம் அவன் சும்மா இருக்காமா பதிவு சூப்பர் மேலும் சூப்பராக வர, உலக பேமஸ் ஆக இப்படி பண்ணுங்க் அப்படி பண்ணுங்க என்று ஏற்றி விட்டு எனக்கு பெரும் செலவை ஏற்படுத்திவிட்டான் மவனே அவன் மட்டும் என் கண்ணுல சிக்கினான் தொலைஞ்சான்)

சரி சரி அதை சிக்கிரம் நான் அடுத்த வாரம் ஊருக்கு வருவதற்குள் முடித்து அந்த ரூமை சுத்தப்படுத்தி லாக் பண்ணி வைச்சிடுங்க.. இந்த கிச்சன் நான் பதிவிடுவதற்கு சமைப்பதற்காக மட்டும்தான். வீட்டு பின்னாடி இருக்கும் இடத்தில் சின்ன ரூம் கட்டி அதை வீட்டிற்கு சமைக்கும் கிச்சனாக மாற்றி விடுங்கள்.

அப்புறம் சொல்ல மறந்துட்டேன் கிச்சனுக்கு இன்னும் 2 செட் புதிய பாத்திரங்கள் வாங்கி விடுங்க...

என்னம்மா ராஜி போன மாசம்தானே புதிய பாத்திரங்கள் வாங்கினோம் அதுக்குள்ள இன்னும் 2 செட்டா?

என்னங்க அதில் சில பாத்திரம் நான் சமைக்கும் போது சிறிது கரி பிடிச்சு இருக்கு அதை மீண்டும் யூஸ் பண்ணி படம் எடுத்தால் அந்த மதுரை தமிழன் கிண்டல் பண்ணுவானுங்க...

சரிம்மா உன் கஷ்டம் எனக்கு புரியுது...அதனால நீ சொன்ன படி செஞ்சுடுறேன் (மைண்ட் வாய்ஸ் நிச்சயம் அந்த மதுரைத்தமிழ்னுக்கு என் கையாலதான் சாவு....)

அப்புறம் நம்ம சின்ன குழந்தைகள் என்ன செய்கிறாங்க அவங்க ஹோம் வொர்க் எல்லாம் முடிச்சுட்டுங்களா?
கணவரின் மைண்ட் வாய்ஸ் இப்பவாது குழந்தைகளை விசாரிக்கிறாளே...) அவங்க உன்னை போல சமத்துடி எல்லாம் முடிச்சுட்டு இப்ப டிவி பார்கிறாங்க...

என்ன........ டிவி பாக்கிறாங்களா .....அதை முதல்ல ஆஃப் பண்ணுங்க.. லேப்டாப்பை கையில் கொடுத்து நான் ஏற்கனவே நான் ரிகார்ட் பண்ணி வைச்சிருக்கும் கருத்துகளை நான் சொன்ன வலைத்தளங்களுக்கு போய் கமெண்டாக பதிவு செய்ய சொல்லுங்க....அவங்க அதை சரியா பண்ணுறாங்களான்னு பாத்துகுங்க...

அப்புறம் அந்த மதுரைத்தமிழன் பதிவுகளுக்கு கருத்து ரிகார்ட் பண்ண மறந்துட்டேன் அதனால நீங்க என்ன பண்ணுறீங்க அவன் மனைவியை கிண்டல் பண்ணி பதிவு போட்டு இருந்தா 10 பூரிக்கட்டை பார்சல்ன்னு சொல்லுங்க தமிழக் தலைவர்களை கிண்டல் பண்ணி இருந்தா தமிழ்நாட்டுக்கு வந்தா உங்களுக்கு 'ஸ்பெஷல் வரவேற்பு' இருக்கு என்று கருத்து சொல்லுங்க என்னைபற்றி கிண்டல் பண்ணி ஏதாவது பதிவு இட்டு இருந்தா அண்ணா உங்க மொக்கை பதிவு சூப்பர் என்று கருத்து இடுங்க ஒகேவா அதைவிட்டு விட்டு டிவி பார்த்து நேரம் வேஸ்ட் பண்ணாதீங்க..

என்னங்க லைன்லே இருங்க... இன்னொரு போன் வருது அதை அட்டெண்ட் பண்ணிட்டு வாரேன்
ஹலோ யாரு அது பிரகாஷ் தம்பியா? ஆமாக்கா நீங்க மிஸ்டு கால் கொடுத்தீங்கலே அதை இப்பதான் பார்த்தேன் என்னக்கா என்ன விஷயம்.

தம்பி ஒரு உதவி வேண்டும் அதுதான் கால் பண்ணினேன்.... உங்களுக்கு தெரியுமே நான் புது புது சமையல் குறிப்பு வெள்யிடுகிறேன் அல்லவா அந்த சமையல் செய்யும் போது அதை லைவ்வா ஷோவா ஆன்லைன்ல காண்பிக்கனும் அதுக்கு கொஞ்சம் ஏற்பாடு நீங்க செய்யனும் அதுக்குதான் நான் கூப்பிட்டேன்..

சரிக்கா அதை செஞ்சு அசத்திருவோம்...

சரிப்பா அதை சிக்கிரம் பண்ணு.... எனக்கு இன்னொரு கால் வருது அதை அட்டெண்ட் பண்ணிட்டு அப்புறம் அதை பற்றி இன்னும் விரிவாக பேசலாம்..

ஹலோ கணேஷ் அண்ணாவா செளக்கியமா அண்ணா? அண்ணி செளக்கியமா? ஒரு நிமிஷம் இருங்கண்ணா லைன்ல.... என்னங்க நீங்க இன்னும் லைன்ல இருக்கீங்களா?

ஆமாம் அம்மா...

சரிங்க நான் சொன்னதை எல்லாம் ஞாபகம் வைச்சி எல்லாம் சரியா பண்ணிடுங்க.. மீதி அப்புறம் நான் கால் பண்ணுறேன்...இப்போ லைன்ல கணேஷ் அண்ணா இருக்காங்க அவங்ககிட்ட பேசிட்டு வந்துடுறேன்/

(மைண்ட் வாய்ஸ் நல்ல வேலை இந்த கணேஷ் வந்து கைகொடுத்தார் இல்லேன்னா நாம் நின்னுகிட்டு இருப்பதும் இல்லாமல் இவகிட்ட வாங்கி கட்டிக் கொண்டு இருக்கணும் அந்த பிள்ளயாரப்பாதான் இந்த கணேஷ் வடிவில் வந்து நம்மை காப்பாற்றுகிறார்...எங்கிருந்தாலும் நீ நல்லா இருப்பா)

என்ன கணேஷ் அண்ணா லைன்ல இருக்கிங்களா? அது வந்துண்னே என் வலைதளத்தில் கொஞ்சம் மாற்றம் செய்யனும் இப்படி அவர் பேசிக் கொண்டிருக்கும் போது....

ஆஆஆஆஆஆ.....என்று மதுரைத்தமிழன் அலறியவாறே கண்ணை திறக்கிறான் அவன் முன்னால் அவன் மனைவி பூரிக்கட்டையோடு நின்றவாறே என்னங்க எவ்வளவு நேரம் நான் காலிங்க் பெல் அடிக்கிறது. நம்ம பொண்ணு வந்து கதவை திறக்கும் வரை நீங்க அசந்து தூங்கி, கனவு கண்டு ராஜி,,கணேஷ்..பதிவு வலைதளம் என்று ஒளறிக் கொண்டு இருக்கிறீங்க... இந்த சாய்ங்கால வேலையில் உங்களுக்கு என்ன தூக்கமுங்க..

இல்லைம்மா அது வந்து நேற்று உங்கிட்ட நிறைய அடி வாங்குனதுல்ல உடம்பு எல்லாம் நல்லா வலிச்சிதும்மா அதனால வேலை விட்டு வந்ததும் சோபாவில் உட்கார்ந்து இருந்தேன்னா அப்படியே கண்ணு அசந்திட்டனேம்மா இனிமே இப்படி எல்லாம் நடக்காதும்மா என்னை மன்னிச்சிரும்மா...

சரி சரி இனிமேவாவது ஒழுங்கா இருங்க சரி நம்ம பொண்ணுக்கு ஏதாவது ஹோம் வொர்க் இருக்காண்ணு பார்த்து உதவி செய்துவட்டு வருகிறேன் அதுக்குள்ள எனக்கு ஒரு சூடா ஒரு காபி போட்டு வந்துடுங்க..

சரிம்மா என்று அங்கிருந்து தப்பித்தோமா இல்லையான்னு கிச்சனை நோக்கி ஒடினான்... சிறிது நேரத்தில் காபியை கொடுத்துவிட்டு அவளின் முகம் நோக்கி அவள் என்ன சொல்லப் போகிறாள் என்று அப்பாவியாக முகத்தை வைத்து காத்து கொண்டிருந்தான்..

அதற்கு தகுந்தாற் போல அவன் மனைவியும் என்னங்க எனக்கு இன்று ரொம்ப டயர்டா இருக்கு அதுமட்டும்மில்லை இப்ப டிவியில் சரவணன் மீனாட்சி வரப் போகுது அதனால் இன்று நீங்களே ஒரு சாம்பார் வைச்சி ஒரு பொறியல் பண்ணி சமைச்சிடுங்க..

சாம்பார் வைக்கும் போது , அதில் தாளிச்சு கொட்டும் போது எண்ணெய் அதிகம் விட்டு விட வேண்டாம்.. அது மட்டுமில்ல தேங்காய் எதுவும் சேத்துடாதீங்க. அது போலதான் பொறியலுக்கும் என்ன புரிஞ்சுதா. நான் சொன்னதை விட்டுட்டு எதையும் அதிகம் போட்டு சமைச்சா என் வாய் பேசாது நம்மவீட்டு பூரிக்கட்டைதான் பேசும் ஜாக்கிரதை..

மதுரைத்தமிழன் மைண்ட் வாய்ஸ்: என்ன ஏதோ மாட்டுக்கு போடுறது மாதிரி ஏதோ அவிச்சு போடா சொல்லுறா... அதை செஞ்சிட வேண்டியதுதான்..

என்னங்க... அப்ப நான் என் மனைவிக்கு சமைச்சு போட்டு வந்துடுறேன் இல்லைன்னா அவ பூரிக்கட்டை பேசும் அதுக்கு அப்புறம் என்னால இப்படி மொக்கை பதிவு போட முடியாது.. அதனால வரேன்..

அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : பெண் பதிவரோ அல்லது ஆண் பதிவரோ பதிவு இடுவதில் எவ்வளவு கஷ்டம் இருக்கிறது. அதனால உங்களுக்காக இப்படி கஷ்டப்படுறவங்களுக்கு நீங்களும் மறக்காம கமெண்ட் போட்டு போங்க..

23 comments :

 1. நகைச்சுவையும் உங்களுக்கு வருகின்றதே?

  ReplyDelete
  Replies
  1. ஆனா உங்களை மாதிரி நல்ல பயனுள்ள விஷயங்களை எழுத வரமாட்டேங்குதே ஜோதிஜி. ஒரு வேளை தமிழ்நாட்டுக்கு வந்து உங்கள் கையால் குட்டு வாங்கின அப்புறம் எழுதவருமோ என்னவோ?

   Delete
  2. தலைப்பு பிரமாதம். ராஜி எப்படி தினமும் ஒரு பதிவு போடறாங்கன்னு தெரிஞ்சு போச்சு. ஆனா பூரி கட்டைல அடி வாங்கிகிட்டே தினம் ஒரு பதிவு போடற மதுரை தமிழன் தான் கிரேட்.

   Delete
 2. கருப்பு நிற Tசர்ட்டுல இருக்கற மாடல் ஒண்ணு கிடைக்க வாய்ப்பு இருக்கா?.வாய்ப்பு இருந்தா ஒண்ண நமக்கு அனுப்பி வையுங்க.

  ReplyDelete
  Replies
  1. கருப்பு டீ சர்ட் போட்ட பொண்ணு நிறைய இருக்காங்க ஆனா அவங்க உங்களைத்தேடி வரமாட்டாங்க நீங்கதான் அவங்களை தேடிவரணும்

   Delete
 3. கலக்கலான பதிவு.....

  ரசித்தேன் மதுரைத் தமிழ்.

  ReplyDelete
  Replies
  1. படித்து ரசித்தற்கு நன்றி

   Delete
 4. அண்ணே !!!அடி ரொம்ப வலிக்குதா

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ரொம்ப வலிக்குதுண்ணு வாய் திறந்து சொல்ல ஆசைதான் ஆனா வாய் திறக்க முடியலை வாயில் அதிகம் அடிபட்டுவிட்டது இந்த தடவை

   Delete
 5. ஆமாமா வீட்ல இருக்கறவங்க எத்தனை தியாகம் நமக்காகச் செய்யறாங்க.....

  ReplyDelete
 6. பிரிக்கமுடியாதது எதுவோ?
  மதுரைத் தமிழனும் ( ..................). Please fill the blank.

  ReplyDelete
  Replies
  1. மதுரைத்தமிழனும் அவன் மனைவியின் பாசமும்தானுங்க ( அடிக்கிற கைதான் அணைக்கும் )

   Delete
 7. ஹா... ஹா...

  சமீபத்திய குமுதத்தில் கணவர்கள் அடி வாங்குவது பற்றி ஒரு கட்டுரை வந்து இருந்தது... உங்கள் ஞாபகம் தான் வந்தது...

  ஆமாம்... வாரம் 3 அல்லது 4 பதிவுகள் தானே...?

  ReplyDelete
  Replies
  1. அப்படியா... அடி வாங்கும் கணவர்கள் கழகம் என்று ஆரம்பித்து அதில் நானே தலைவாரக ஆகப் போகிறேன். ஆனா அதில் உங்களுக்கு இடம் இல்லைங்க... காரணம் நீங்க மனைவியிடம் அடி வாங்காதவர்கள் கழகத்தை சேர்ந்தவர்கள் என்பதால்தான்...

   வாரம் 3 அல்லது நாலு பதிவுதான் ஆனா தேர்தல் வருவதால் நானும்ரொம்ப பிஸியாகி வீட்டேன். கட்சிகள் செய்யும் காமெடி அதிகமுங்க அதை பற்றி கிண்டல் செய்யாமல் இருக்க முடியலைங்க

   என்னிடம் ஒரு கெட்டப்பழக்கம் எதாவது சொல்ல நினைத்தால் அதை அடைத்து வைக்க முடியாது பட்டென்று சொல்லிவிடுவேன் அது மாதிரிதான் நான் ஏதாவது பதிவு எழுதி டிராப்டில் வைத்து வெளியிட பிடிக்காது அதனால் உடனே வெளியிட்டு விடுவேனுங்க....

   Delete
  2. அவாகக (avkk) வெற்றி பெற வாழ்த்துக்கள்

   Delete
 8. அது எப்படிங்க சகோதரியை நல்லா கிண்டல் பண்ணிட்டு, அப்புறம் ஒண்ணும் தெரியாத குழந்தையாட்டம் அது எல்லாம் வெறும் சும்மாங்கிற மாதிரி கனவுன்னு சொல்லிட்டீங்க. ஆனா என்னத்தான் அடுத்தவரை கிண்டல் பண்ணினாலும், அவுங்க உங்களை அடிக்கிறதுக்கு முன்னாடியே, என் வீட்டுக்காரரை நான் தான் முதல்ல அடிப்பேன்னு அடுத்தவங்களுக்கு விட்டுக்கொடுக்காம இருக்காங்க பாருங்க, அங்க நிக்கிறாங்க உங்க மனைவி.

  அப்புறம் நீங்க இன்னும் உங்க ஊர்ல "அடி வாங்கும் கணவர்கள் கழகம்" ஆரம்பிக்கலையா? நாங்க எப்பவோ, சிட்னில "மனைவியிடமிருந்து கணவனை காப்பாற்றும் சங்கத்தை" ஆரம்பிச்சிட்டோமே.

  ReplyDelete
 9. ஹா...ஹா... ஸண்டே வலைக்கு லீவு விட்டுட்டதால இப்பத்தான் படிச்சேன்.. சூப்பர்...!

  ReplyDelete
 10. ஹலோ! என் வூட்டுக்காரர் உங்களைப்போல இல்ல. வீடு கட்டும்போதே நல்லா வெளிச்சமா மாடுலர் கிச்சனோடுதான் வீடு கட்டி இருக்கார். கேமரா மட்டும்தான் ஃபிக்ஸ் பண்ணனும்.

  ReplyDelete
  Replies
  1. அப்ப பூரிக்கட்டையால அடிக்கறத இனி லைவ்வாவே பார்க்க முடியும்னு சொல்லுங்க.

   Delete
 11. என் பசங்க அவங்க மாமாவை போல இல்லாம செம புத்திசாலி. நான் சொல்லவே வேணாம். ஃபோட்டோ அட்டாச் பண்ணுறது முதல் கமெண்ட் வரை கலக்கிடுவாங்க,

  ReplyDelete
  Replies
  1. மருமக்களே LIVE TELECAST உரிமையை வேற யாருக்கும் உட்டு குடுத்துராதீங்க.

   Delete
 12. பூரிக்கட்டை இன்னுமா உடையலை....

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog