Sunday, December 8, 2013

காங்கிரஸின் தோல்விக்கு மோடி அலைதான் காரணமா?

காங்கிரஸின் தோல்விக்கு மோடி அலை காரணம் அல்ல காங்கிரஸின் செயல்பாடுதான் காரணம்.



மோடி அலையால் விளைந்தது என்ன?????

The Modi "wave" is turning out a joke.




மோடி அலையை அலசி ஆராய்ந்து துவைத்து காயப்போடுவதுதான் இந்த பதிவு. இது நடுநிலைமையோடு எழுதுப்பட்ட பதிவு. எந்த வித ஆதாயமும் யாரிடமும் பெற்றோ அல்லது எதிர்பார்த்தோ எழுதப்பட்டது அல்ல


அடுத்தாண்டு, மே மாதம், லோக்சபா தேர்தல் நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதில் வெற்றி பெற்று, ஆட்சியை பிடிப்பதற்கு, தற்போதைய ஆளும் கட்சியான, காங்கிரசும், பிரதான எதிர்க்கட்சியான, பா..,வும், தயாராகி வருகின்றன. இந்த விஷயத்தில், பா.., ஒரு படி முன்னேறி, தங்களின் பிரதமர் வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அறிவித்தது


லோக்சபா தேர்தலுக்கான அரையிறுதிப் போட்டியாகக் கருதப்படும், டில்லி, .பி., ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில், மோடி சூறாவளி சுற்றுப்பயணத்தை, மாநில நிர்வாகிகளுடன் மேற் கொண்டார். அது மட்டுமல்லாமல் மீடியாக்களின் துணை கொண்டு ஏதோ சுனாமி போல மோடி அலை அடிக்கிறது என்று ரொம்ப பில்டப் பண்ணினார்கள்.அந்த பில்டப் பட்ட அலை என்ன ஆச்சு என்பதை படித்து அறிந்து கொள்ளுங்கள்.

டில்லி, மிசோரம் ஆகிய மாநிலங்களில், காங்., ஆட்சியும், சத்தீஸ்கர், .பி., ஆகிய மாநிலங்களில், பா.., ஆட்சியும் இருந்தது.

இதில் ம.பி.,யில், சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.., அதிக இடங்களில் வெற்றி பெற்று, தொடர்ச்சியாக, மூன்றாவது முறையாக, ஆட்சியை பிடித்து, 'ஹாட்ரிக்' அடித்துள்ளது. இந்த வெற்றி மோடியால் வந்தது அல்ல அந்த மாநிலத்தில் நல்ல ஆட்சியைக் கொடுத்ததால்தான் என்பது நடுநிலமை உள்ள யாவரும் ஒத்துக் கொள்ளும் உண்மை. அப்படி இல்லை இல்லை என்று சொல்பவர்கள்

சத்தீஸ்கரில் நடந்த நிகழ்ச்சியை கவனிக்கவும்

சத்தீஸ்கரில், பா.., - காங்., ஆகிய கட்சிகளுக்கு இடையே, கடைசி வரை இழுபறி நீடித்தாலும், கடைசி சுற்றுகளில், ஒரு சில தொகுதிகளில், பா..,வுக்கு, அபாரமான முன்னிலை கிடைத்தது. இதன் காரணமாக, அந்த கட்சி, 49 இடங்களில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக, ஆட்சியை தக்க வைத்துள்ளது. அந்த கட்சியை சேர்ந்த, ரமண் சிங், மூன்றாவது முறையாக முதல்வராகிறார்.

மேலே உள்ளதை படித்தவர்கள் ஒரு உண்மையை புரிந்து இருப்பார்கள்தானே.மோடிக்கு அலை இருந்தால் ஏன் இந்த இழுபறி இங்கே நடந்து அதன் பின் ஜெயித்து இருக்க வேண்டும்

அடுத்தாக ,ராஜஸ்தான் மாநிலத்தில், காங்கிரசிடமிருந்து, ஆட்சியை பறித்து, இதற்கு காரணம் மோடி அல்ல அங்கு மோசமாக ஆட்சி செய்த காங்கிரஸின் செயல்பாடுதான்.

இப்போது இறுதியாக டெல்லியை கவனிப்போம்

டில்லி சட்டசபை தேர்தல் தான், இந்திய அரசியலில், இதுவரை இல்லாத வகையில், பரபரப்பான திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. இங்கு, துடைப்பத்தை தேர்தல் சின்னமாக முன்வைத்து, பிரசாரம் செய்த, அரவிந்த் கெஜ்ரிவாலின், ஏழை மக்கள் கட்சிக்கு, ஓட்டுகள் குவிந்தன. இங்கு, அந்த கட்சிக்கு, 28 தொகுதிகள் கிடைத்தன. பா.., 32 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், தனியாக ஆட்சி அமைக்க தேவையான தொகுதிகள் கிடைக்கவில்லை.

நேற்று புதிதாக ஆரம்பித்த அரவிந்த் கெஜ்ரிவாலின், கட்சியை விட இந்தியாவில் மோடி அலை வீசப்படும் என் கருதப்படுகிற பிஜேபி அதிகமாக நான்கே நான்கு இடத்தில்தான் வெற்றி பெற்று இருக்கிறது.

இதை நன்கு பார்த்தால் ஒரு உண்மை புலப்படுகிறது. மோடி அலை என்பது பொய் காங்கிரஸின் செயல்பாடுகள் மக்களுக்கு பிடிக்கவில்லை என்பதுதான் மெய். அதனால் இந்த 2 கட்சிகளின் தலைவர்களை விட முன்றாவது ஆள் வருகிற லோக்பால் தேர்தலில் இறங்கினால் அரவிந்த் கெஜ்ரிவால் போல இன்னும் நல்ல மெஜாரிட்டியை பிடிப்பார்கள் என்பது உண்மை அப்படி நடந்தால் மோடி அலை ஒரு வெற்று அலைதான்


இப்படி எழுதுவதால் நான் பிஜேபிக்கோ எதிரியும் அல்ல அது போல காங்கிரஸுக்கு நண்பனும் அல்ல.

மோடியோ ராகுலோ ஜெயலிலிதாவோ நம்ம காமெடி சிங்கம் விஜயகாந்தோ பிரதமாரக வந்தால் எனக்கு எந்தவித பலனுமில்லை....காரணம் இவர்களால் எதாவது காரியம் நடக்க வேண்டுமென்று நினைத்து இவர்களுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ எழுதவில்லை. அவ்வளவுதாங்க.


என் மனதில் தோன்றியதை நான் சொல்லிபுட்டேன் உங்க மனதில் தோன்றியதை நீங்களும் சொல்லிப்புட்டு போங்கோ




அன்புடன்
மதுரைத்தமிழன்.






29 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. பிஜேபியை செல்லாத காசு என்று சொல்லவில்லை மோடி ஒரு சில்லறை காசு என்றுதான் சொல்லி வருகிறேன்

      Delete
  2. மோடி அலை இல்லை காங்கிரஸ்சின் ஊழல் அலை என்றும் சொல்லலாம்....!

    ReplyDelete
  3. எனது கருத்து,

    தேர்தலுக்கு முந்திய கருத்துகனிப்புகளின்படி அரேவிந் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டது. அதை மாற்றியது மோடி அலைதான்

    ReplyDelete
    Replies
    1. காங்கிரஸின் மோசமான செயல்பாடுதான் பிஜேபி இந்த அளவிற்கு சீட் பெற முடிந்தது. நீங்கள் சொல்வது போல மோடி அலை இருந்து இருந்தால் அரவிந்த் கட்சி கூட வெகு சில சீட்டுகளே பெற்று இருக்கும் என்பதுதான் என் கருத்து

      Delete
    2. காங்கிறசின் மோசமான செயற்பாடு எதிர் காட்சிக்கு வாக்களிக்க வைத்தது. அது எது என்று தீர்மானித்தது மோடி அலை. அரவிந் வென்றிருந்தால் மோடி அலை இல்லை என்று கூறியிருக்கலாம். இன்னொரு விதமாக கூறபோனால், மோடி சுனாமி இல்லை, ஆனால் மோடி அலை உண்டு...

      Delete
    3. காங்கிரஸின் மோசமான செயல்பாட்டுக்கு கிடைத்த எதிர் ஒட்டுகளும் ஏற்கனவே "பிஜேபி கட்சி இருந்த ஒட்டடு வங்கியும்தான்" பிஜேபியின் வெற்றிக்கு காரணம் மோடி அலை இருந்து இருந்தால் அது மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்று இருக்கும் நண்பரே

      Delete
    4. டெல்லி தொகுதி காங்கிரஸ்கின் கோட்டை. அங்கு BJPக்கு பெரிய வாக்கு வங்கி இல்லை.

      Delete

    5. நண்பரே காங்கிரஸின் மோசமான செயல்பட்டால் அல்ல பிஜேபியின் முன்னாள் தலைவர்கள் ஏற்படுத்திய ஒட்டு வங்கியால் அல்ல மோடியால் மட்டுமே இங்கு வெற்றி பெற்றது என்ற உங்கள் நம்பிக்கையை எண்ணி வியக்கிறேன் வரும் லோக்சபா தேர்தலில் யார் கூடவும் கூட்டணி வைக்காமால் சொந்த காலில் நின்று மோடி 150 சீட்டுக்கும் மேல் ஜெயித்து காட்டினால் அவருக்கு அலை இருப்பதை நான் ஒத்துக் கொள்கிறேன்.

      Delete
    6. மோடியால் மட்டுமே வெற்றி கிடைக்கவில்லை. மோடி ஒரு பூஸ்ட்(or wave). அதாவது மோடி இல்லாவிட்டால் டெல்லியில் இரண்டாம் இடத்திற்கு தள்ளபட்டிருக்கும்.

      Delete
    7. என்னவோ எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது.

      காங்கிரஸ் வாங்கிய அடியை பார்க்கும் போது, சிங்கத்தின் கோட்டைகுள் புகுந்து அதன் பிடரி மயிரை பிடித்து தொங்கி அதன் கன்னத்தில் சளார் பளார் என அறைந்த மாதிரி எனக்கு தோன்றுகிறது

      Delete
    8. மோடியின் என்ற பூஸ்டால் பாஜக வெற்றி பெற்றது என்றால், அதே மோடி, சூறாவளி பிரசாரம் செய்த கர்நாடகாவில், பாஜக ஏன் தோற்றது???

      Delete
    9. அங்கு வாங்கிய அடிக்கு காரணம் BJPன் ஊழல்.

      Delete
    10. //மோடி பிரசாரம் செய்த கர்நாடகாவில் பாஜக ஏன் தோற்றது//
      அது போன மாசம்

      Delete
  4. Replies
    1. தயிர் சாதத்துக்கு மாவடு ஊறுகாய் போல எனது தளத்திற்கு அரசியல் பதிவு ஒரு ஊறுகாய் அவ்வளவுதாங்க

      Delete
  5. இப்போது இருப்பது 'anybody but congress' அலை. சென்ற தேர்தலிலும் கொஞ்சம் இருந்தது. ஆனால் அப்போது பிஜேபி யில் ஒரு ஆளுமை மிக்க தலைவர் இல்லாததால் அதை ஒருங்கிணைக்க முடியவில்லை. இப்போது மோடியால் முடிகிறது!

    ReplyDelete
    Replies
    1. ///இப்போது இருப்பது 'anybody but congress' அலை. ////

      இதுதான் உண்மை & இப்போது அத்வானி இருந்து இருந்தாலும் இதே அளவில் வெற்றி பெற்று இருக்க முடியுமுங்க

      Delete
  6. நேர நெருக்கடி அதிகமாக இருந்தாலும் அவர்கள் பக்கம் விசிட் வராமல் இருக்க முடியவில்லை.. நல்லாத்தான் அலசி ஆராய்ஞ்சி காய போட்டிருக்கீங்க. நேற்று பாஜக நண்பர் ஒருவர், ' பாத்திங்களான்னு... ரொம்ப பெருமையா... நீங்க பிஜேபி வந்துடுங்க... ஸ்டெயிட்டா டெல்லிக்கு போயிடலாம் என்றார்.... பக்கத்தில் இன்னொரு தோழி " நீங்க இங்க வந்திங்கன்னா நேரா அம்மாவையே போய் பார்த்துட்டு வந்துடலாம்... என்றார்.. நானோ , " இப்ப என்ர ஊட்டுக்காரரை பாத்துட்டு வந்துடறேன்... பொறவு டெல்லிக்கு போறதா அம்மா வீட்டுக்கு போறதான்னு பாக்கலாம்னு ..." எஸ்கேப்...! ஹா... ஹா....!

    ReplyDelete
    Replies
    1. நேர நெருக்கடியிலும் எனது பதிவை படித்தது மட்டுமல்லாமல் அதற்கு கருத்து இட்டுச் சென்ற உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் உங்கள் பிஜேபி நண்பருக்கு முடிந்தால் இதை சொல்லி ஞாபகபடுத்துங்கள்

      2004ல் இதே நான்கு மாநில தேர்தல்களில் பாஜக பெரும் வெற்றி பெற்று நான்கையும் கைப்பற்றியது..அந்த முடிவை பார்த்த உற்சாகத்தில் தான், ஆறு மாதம் முன்கூட்டியே நாடாளுமன்றத்தை ஆட்சியை கலைத்து,அதன் பின் நடந்த பொதுத்தேர்தலில் தோல்வியடைந்து ஏமாந்துபோனது பிஜேபி அது ஞாபகம் இருக்கட்டும்.... (நெட்டில் படித்தது....)

      Delete
  7. காங்கிரசின் தோல்விக்கு காங்கிரசே காரணம், மோதி அலை என்பது ஊடகங்கள், சமூக ஊடகங்களில் பணத்தால் ஊதிப் பெரிதாக்கிய பலூன் என்பதை கோப்ரா போஸ்ட் தோலுரித்துவிட்டது. நடந்த தேர்தலில் தில்லி மற்றும் சட்டீஸ்கரில் தனிப் பெரும்பான்மை அமைக்க இயலாமல் போனதும், ஆம் ஆத்மியின் வெற்றிவாகையும் நிரூப்பித்துவிட்டன. காங்கிரசின் குடும்ப அரசியல் மற்றும் லட்சம் கோடிகளில் நிகழ்த்தப்பட்ட தொடர் ஊழலுமே காங்கிரசின் மண் கவ்வல்களுக்கு காரணம். நடுத்தர மற்றும் இளையோர் காங்கிரஸ், பாஜக-வுக்கு மாற்றாய் ஒன்று வரும் பட்சத்தில் வரவேற்கத் தயாராய் உள்ளனர். தலித்கள், பழங்குடிகள் பாஜக-வை நம்பத் தயாராக இல்லை என்பதை சத்தீச்கர் தேர்தல் வெளிக்காட்டியுள்ளது. ஊழல்வாதம் - மதவாதம் இரண்டுக்கும் மக்கள் ஆதரவு இல்லை என்பதே தேர்தல் உணர்த்துகின்றது. என்ற போதும் காங்கிரசு மீது ஒட்டுமொத்த மக்களும் செம காண்டாக உள்ளதே உண்மை.. :)

    --- விவரணம் ---

    ReplyDelete
  8. உங்கள் ஆய்வு, கருத்து மிகவும் சரியானதே! என் ஓட்டு உங்களுக்கே!

    ReplyDelete
  9. அருமையாயக அலசி ஆரய்ந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. அய்யா, சரியாய் சொன்னீர்கள். எனது பதிவையும் படித்துப் பாருங்களேன். permalg.blogspot.in

    ReplyDelete
  11. விடாக்கண்டன்,கொடாக்கண்டன்.ஆக இந்த ரெண்டு கண்டனும் மாறி மாறி நாற்காலியில் உட்காந்து ஆண்டாலும் பாலாறும் தேனாறும் ஓடப்போவதில்லை,

    ReplyDelete
  12. உங்கள் கருத்தில் நானும் உடன்படுகிறேன்.உள் நாட்டில் மட்டுமல்ல,வெளி நாட்டுக் கொள்கை வகுப்பும் சரிவுக்குக் காரணமாக இருக்கக் கூடும்!மொத்தத்தில்,காங்கிரஸ் இனி.................

    ReplyDelete
  13. மோடியின் மீதான அபிமானம் பரவியிருக்கின்றது என்று சொல்லலாம் ஆனால் இன்னும் அலை எதுவும் வீசும் அறிகுறிகள் இல்லை...... மத்திய பிரதேசம், ராஜஸ்தான் வெற்றிகளுக்கு மோடி ஒரு காரணமல்ல....

    கருத்துகள் ஒத்துப்போனதில் மகிழ்ச்சி.... தங்கள் கருத்துரைக்கு நன்றி....

    நானும் ஒரு மதுரைத் தமிழனே!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.