உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, December 22, 2013

மோடி பணம் கொடுத்து நடத்தும் சமுக தளங்கள் சொல்வதென்ன?

மோடி பணம் கொடுத்து நடத்தும் சமுக தளங்கள் சொல்வதென்ன?

அகத்தியரின் கமண்டலத்தில் அடைபட்டுக் கிடந்த காவிரியைப்போல ஊழல் முறைகேடுகளால் இந்தியநாட்டின் வளர்ச்சியும் முன்னேற்றமும் தடைபட்டுக் கிடக்கிறதாம். விநாயகன் காக்கை உருவில் வந்து கமண்டலத்தைக் கவிழ்த்து காவிரியை விடுவித்தது போல் மோடி பிரதமர் வடிவில் வந்துதான் ஊழல் தளைகளால் சிக்குண்டு கிடக்கும் இந்தியாவை விடுவிக்கப் போகிறாராம்
 


அதன் பின் இந்தியாவில் பாலாறும், தேனாறும் பெருக்கெடுத்து ஓடத் துவங்கிவிடுவது மட்டுமல்லாமல் இந்தியா சுபிட்சமாகிவிடுமாம். அப்புறம் மக்களுக்கு ஒரே கவலை மட்டும்தான் இருக்குமாம் அந்த கவலை இந்தியாவில் பாய்ந்தோடும் பாலாறிலும், தேனாறிலும் ஈக்கள் வந்து
மொய்க்காமல் பார்த்துக் கொள்வது மட்டும் தானாம்.

இப்படி மோடி பணம் கொடுத்து நடத்தும் வலைதளங்களும் மற்றும் ஆதரவு இந்திய ஊடகங்களும் முரசு கொட்டி அறிவித்து கொண்டிருக்கின்றனர்


இப்படி பணம் கொடுத்து தன் புகழ் பரப்பி கொண்டிருக்கிறார் மோடி. அதனால் அவரை எதிர்க்கும் அதிமுக திமுக கட்சிகளுக்கு உதவ இங்கு மோடி ஸ்லோகன் வெளியிடப் படுகிறது.படித்து ரசியுங்கள்....

டிஸ்கி : இந்திய வாக்களர்களே இங்கு நீங்கள் யாருக்கு வோட்டு போட வேண்டும் வேண்டாம் என்று நான் சொல்லவில்லை அது உங்கள் உரிமை & நீங்கள் வாழும் நாடு. அதில் நான் தலையிடவில்லை.

ஆனால் இந்திய தலைவர்களைப் பற்றிமட்டுமல்ல உலக தலைவர்களை நான் இங்கு கலாய்ப்பது எனது உரிமை. அதனால் எனது எழுத்து உரிமையில் தலையிட உங்களுக்கு உரிமையில்லை.

முக்கியமாக மோடி ஆதரவாளர்களே நீங்கள் கெட்டவார்தைகளால் பின்னுட்டம் இடுவதையும் மிரட்டுவதையும் தவிர்க்கவும். உங்களின் கெட்டவார்த்தைகளுக்கும் மிரட்டலுக்கும் நான் பயப்படமாட்டேன். மோடி கண்ணியமானவர் அவர்களின் ஆதரவு ஆட்கள் நாங்களும் கண்ணியமானவர்கள் என்று நீங்க கருதினால் உங்கள் மாற்று கருத்துக்களை கண்ணியமான முறையில் பதியுங்கள் அதனால் இன்னும் அதிகம் ஒட்டுகிடைத்தால் அது மோடியின் வெற்றிக்கு உதவும் என்பதை மறக்க வேண்டாம்


அன்புடன்
மதுரைத்தமிழன்

13 comments :

 1. கட்சிக்காக இல்லாமல் நாட்டுக்காக ஓட்டளியுங்கள் என்று மோடி மும்பை மாநாட்டில் மக்களிடம் கேட்டுக்கொண்டார். அப்போ அந்த மோடி அலையெல்லாம் சும்மா டூப்பா? வீடுதோறும் தாமரை என்றது கப்ஸாவா?
  http://saidaiazeez.blogspot.ae/2013/12/blog-post_22.html

  ReplyDelete
  Replies
  1. என்னத்தச்சொல்ல, அங்க ஒரு பெரியார் பிறந்திருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா.

   அங்க B J P பிராமணர் பார்ட்டின்னாவது சொல்லியிருக்கலாம்.

   கோபாலன்

   kgopaalan@blogspot.com

   Delete
  2. அங்க நம்ம பெரியார் பிறக்காமல் போனாரே.

   B J P பிராம்ணர் பார்ட்டின்னாவது சொல்லிருக்கலாம்.

   கோபாலன்

   kgopaalan@blogspot.com

   Delete
  3. மனைவி : என்னய்யா கவலையா ஒக்காந்துருக்க.

   கணவன் : ஜயேந்திரன், மோடிக்கு அப்பரம் எவன் மாட்டுவான்னு யோசிச்சிட்டிருக்கென்.

   கோபாலன்
   kgopaalan@blogspot.com

   Delete
 2. வழக்கம் போல நகைச்சுவை அள்ளித் தெளிக்கப்பட்ட அருமையான பதிவு!! பவர் ஸ்டா(டோ)ர் மோ(ச)டி? யை வியத்து நல்ல காமெடி பண்ணியிருக்கீங்க!!!

  ReplyDelete
  Replies
  1. பவர் ஸ்டாரை பப்ளிசிடி படுத்திய ஊடகங்கள் மற்றும் பிரபலங்கள் தன் முகத்தில் கரியை பூசிக்கொண்டதும் மறந்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். மோடி தனது தீவிர பிரச்சாரத்தை மிகவும் முன்னதாகவே தொடங்க்கிவிட்டதால் இது தெதலுக்கு முன் புளித்துப்போகவும் சலித்துப்போகவும் வாய்ப்புகள் அதிகம். எதையும் நம் மக்கள் குறைந்த காலத்திற்க்கு மட்டுமே தூக்கிவைத்து கொண்டாடுவது வழக்கம் அது விரைவில் அவர்களுக்கு புளித்துவிடும்.

   Delete
  2. ///மோடி தனது தீவிர பிரச்சாரத்தை மிகவும் முன்னதாகவே தொடங்கிவிட்டதால் இது தேர்தலுக்கு முன் புளித்துப்போகவும் சலித்துப்போகவும் வாய்ப்புகள் அதிகம். எதையும் நம் மக்கள் குறைந்த காலத்திற்க்கு மட்டுமே தூக்கிவைத்து கொண்டாடுவது வழக்கம் அது விரைவில் அவர்களுக்கு புளித்துவிடும். ////


   ஜெயம் நீங்கள் சொன்னதுதான் நான் நினைப்பதும் அது உண்மையும் கூட.....

   Delete
 3. இந்தியாவுல பாலாறும் தேனாறும் ஓடிடப்போகுதுன்னு உங்களுக்கு பொறாமை!

  ReplyDelete
  Replies
  1. தெரில்ங்க. யார்யாரோ ரத்த ஆறு ஓடும்னு சொல்லி பயமுறுத்திகிட்ருக்காங்க. ம்ம்ம்ம் எவன நம்ப்றது.

   கோபாலன்

   Delete
 4. இவ்வளவு விலாவாரியா அரசியல் பத்தியெல்லாம் பதிவு போட நேரம் கிடைக்குதா?
  எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.
  குழந்தையின் ஹோம் ஒர்க் யார் பண்றா?

  ReplyDelete
 5. மக்கள் இன்றைய நிலைமையில் நல்ல ஒரு அரசியல் கட்சி ஆள்வதை விரும்புகிறார்கள். இப்போதைய காங்கிரஸ் ஆட்சியின் ஊழல் வெள்ளத்தை கண்டு கொதித்து போயிருக்கிறார்கள்.பி.ஜே.பி ஒன்றும் ஊழலில் சளைத்ததில்லை. என்றாலும் மோதி என்னும் தனி நபர் இப்போதைய ஊழல் அரசியல்வாதிகளை compare பண்ணும்போது சற்று மேலானவர் என்று தோன்றுகிறது. மேலும் குஜராத்தில் இருபது ஆண்டு காலம் வாழ்ந்த தமிழன் என்ற முறையில் சொல்லுகிறேன். அவரை இந்துத்துவவாதி என்று தூற்றும் நண்பர்களுக்கு சொல்லுகிறேன். சின்ன சின்ன மூத்திரச்சந்துகள் போன்று இருந்த குஜராத் நகர வீதிகளை highway என்று சொல்லும் அளவுக்கு விரிவு படுத்தும் பணிகளில், இடையில் இருந்த மசூதி, சர்ச், போன்றவைகளைக்காட்டிலும் இந்துக்கள் வழிபடும் கோயில்களை இடித்து நிரவி, நாட்டின் முன்னேற்றம் மட்டுமே தனது முக்கிய பணி என்பதை நிரூபித்தவர். If he says he means buisiness... yes Modi means business.

  ReplyDelete
 6. வித்தியாசமான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கு வாழ்த்துக்கள். மோடி பிரதமராக வந்து, "அநியாயத்துக்கு என்னைக் கலாய்த்த மதுரை தமிழனையே, நான் என்னுடைய அந்தரங்க காரியதரிசியாக (personal PA )வாக நியமிக்கப்போகிறேன்" என்று உங்களை தேடிக் கண்டுபிடித்து கூப்பிட்டால் என்ன செய்வீர்கள்??

  ReplyDelete
 7. மோடிக்கு ஆதரவாக எழுதினால் அவர் பணம் குடுத்து எழுத சொன்னார்னு சொன்னால், அவருக்கு எதிராக எழுதுபவர்களுக்கு யார பணம் தருகிறார்கள் .

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog