உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, December 25, 2013

ரஜினியின் மெளனம் சொல்வது இதுதானோ? ( போட்டோடூன் : மோடி )

ரஜினியின் மெளனம் சொல்வது இதுதானோ? ( போட்டோடூன் : மோடி )

ரஜினி அன்று சொன்னது......

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது..


ரஜினி இன்று சொல்ல நினைப்பது......


மோடி ஆட்சிக்கு வந்தால் இந்திய நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது...


மோடி கிறிஸ்துவமக்களுக்கு வாழ்த்து சொன்னார் அதைப்படித்ததும் என் நினைவிற்கு வந்தது இதுதான்.


அவருக்கு வேண்டிய கிஃப்ட் பிரதமர் பதவிதானே?


மோடியின் முயற்சியால் குஜராத் வளர்ச்சியடைந்தது இப்படிதானோ?


மற்றுமொரு சந்திரபாபு நாயுடு குஜராத்தில் அவதரித்து இருக்கிறார்..


அன்புடன்
மதுரைத்தமிழன்

24 comments :

 1. எல்லாக் கட்சிகளுமே ஒரே மாதிரிதான். நேர்மையும் மக்கள் நலனில் உண்மையான அக்கறை கொண்டவர்களையும் பார்ப்பது அரிது. ஒரு வேளை அப்படி இருந்தாலும் மக்கள் அவர்களுக்கு ஆதரவு அளிக்க மாட்டார்கள்.போட்டூன் சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. ஒரு தலைவனை கூட நல்லவன் என்று சொல்ல முடியாத நிலையில் நம் சமுதாயம் இருக்கிறது என்பதை நினைக்கும் போது வருத்தம் அளிக்கதான் செய்கிறது முரளி

   Delete
 2. பாஸ்... நீங்கள் சொல்ல வருவது என்ன???
  காங்கிரஸ்-யும் கழுவி கழுவி ஊத்துகிறீர்கள்...
  பா.ஜ.க -வையும் கழுவி ஊத்துகிறீர்கள்...

  உங்களை போல எனக்கும் இந்த இரண்டு பெரும் கட்சிகளையும் பிடிக்காது (அவர்கள் செய்த அக்கப்போரினால்) ... ஆனால், இரண்டில் ஒன்று தானே ஆட்சிக்கு வரும்.. அதானே உலக வழக்கம்...

  நீங்கள் யார் பக்கம்..???? என்ன தான் எதிர்பார்கிறீர்கள்..

  ReplyDelete
  Replies
  1. அசுத்தமாக இருக்கும் பாத்திரத்தை கழுவி கழுவி வைப்பதுதான் நம் வேலை நண்பா.

   நான் என்றுமே எந்த கட்சியையும் பிடிக்கிறது பிடிக்கவில்லை என்று கூறியது இல்லையே


   நான் உங்கள் பக்கம்தான் நண்பா அதாவது மக்கள் பக்கம்

   Delete
 3. முரளி சார் சொல்வதுதான் என்னுடைய கருத்தும்..............

  ReplyDelete
  Replies
  1. என்ன மக்கள் நல்லவனுக்கு ஒட்டு போடமாட்டார்கள் என்பதா?

   Delete
 4. பேசாம நீங்க பிரதமராகிடுங்களேன்.

  ReplyDelete
  Replies
  1. என்னால் ஊமையாக மெளனியாக நாட்களை கடத்த முடியாதுங்க

   Delete
 5. ரெண்டு பேரும் மோசம் தான்! போட்டூன் கலக்கல்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. கருத்திற்கு நன்றி

   Delete
 6. எரிகிற கொள்ளி எந்த கொள்ளி நல்ல கொள்ளின்னு சொல்ல முடியுமா......???

  ReplyDelete
  Replies
  1. கஷ்டம்தான் நண்பா

   Delete
 7. முரளி ஐயாவின் கருத்தே என்னுடையதும்

  ReplyDelete
  Replies
  1. கருத்திற்கு நன்றி

   Delete
 8. எல்லாரும் ஒண்ணுதான்...

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தானுங்க

   Delete
 9. புதிதாக அரசியல் கட்சியை தொடங்க நினைக்கும் ஒரு சாதாரண மனிதன் கடவுளிடம் வேண்டுகிறான்: "கடவுளே, இந்த மதுரைத் தமிழனிடமிருந்து என்னுடைய மானாசீக குருமார்களான இந்த அரசியல் தலைவர்களை எல்லாம் காப்பாற்று"!!!

  அதற்கு கடவுள் இப்படி பதில் அளித்தாராம்:

  "நானே அந்த மதுரைத் தமிழனைப் பார்த்து பயந்து போயிருக்கிறேன். நான் ஏதாவது செய்யப்போய், அவன் என்னையும் அவனுடைய வலைப்பூவில் கலாய்க்க ஆரம்பித்து விட்டால் என்ன பண்ணுவது!!!!"

  ReplyDelete
  Replies
  1. என்னடா பதிவு எழுதலாம் என்று யோசிக்கும் வேளையில் நாரதர் மாதிரி வந்து கலகம் விளைவித்து வீட்டீர்கள் கூடிய சீக்கிரத்தில் கடவுளையும் நம்ம பதிவில் இழுத்து விட வேண்டியதுதான்

   ஜடியா தந்ததற்கு நன்றி

   Delete
 10. Replies
  1. நீங்கள் என்னை கிண்டல் பண்ணுறீங்களா அல்லது பாராட்டுகிறீர்களா?

   Delete
 11. ரஜனி என்று பேசியிருக்கிறார்!!!! பாவம் அவரு! அவரு நினைசுருப்பர் நாம வாய தொரக்கப் போயி நல்லா மாட்டிக்கிட்டொம் முன்னாடி.....இப்ப ராமன் ஆண்டா என்ன ராவணன் ஆண்டா நமகென்ன! எல்லாம் ஒரே குட்டை தான்..கலங்கின அழுக்கு குட்டைதன்..... நாம பாட்டுக்கு இமயமலபோனமா....த்யானம் பண்ணினமானு இருக்கலாம்...அப்படினு ...

  ReplyDelete
  Replies
  1. இனிமே அவர் கருத்து சொல்லும் நிலையில் இல்லைங்க... அதுவும் தேர்தல் வருதோ இல்லையோ அதுக்கு எல்லாம் அவர் கவலைப்படலைங்க அவருக்கு உள்ள கவலையெல்லாம் அவரின் படம் ரீலீஸாகி நல்ல படியாக ஒடனும் என்றுதான்

   Delete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog