உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, December 19, 2013

உலக அரங்கில் இந்தியாவிற்கு இந்திய அரசாங்கமே தலைக்குனிவை ஏற்படுத்தி கொள்கிறதா ?

உலக அரங்கில் இந்தியாவிற்கு இந்திய அரசாங்கமே தலைக்குனிவை ஏற்படுத்தி கொள்கிறதா ?
அமெரிக்காவில் கைது செய்யபட்ட தேவயாணி, அமெரிக்காவுக்கான இந்திய தூதர் அல்ல... துணை தூதர் பொறுப்பில் உள்ள ஒரு அதிகாரி. அவர் கொடுமைபடுத்தியது, எதோ ஒரு அமெரிக்கரை அல்ல.. இந்தியரை..அதனை தவறு என்று சொல்லி கைது செய்தது அமெரிக்கா. ஆனால் அமெரிக்காவை குற்றம் சொல்லுகிறது இந்தியா...


அமெரிக்கா என்னவோ இந்தியாவிற்கு எதிரி நாடு போலவும் அமெரிக்கா அரசாங்கம் இந்தியாவை அவமானப்படுத்த வேண்டும் என்று ஏதோ திட்டம் தீட்டி சதி பண்ணுவது போல இந்திய அரசாங்கமும் இந்திய அரசியல் தலைவர்களும் கூப்பாடு போடுகின்றனர். இந்த விஷயம் இவ்வளவு பெரிதாக்கப்பட்டதற்கு காரணம் வரும் லோக்சபா தேர்தல்தான் அதனால் தான் இந்த அளவு கூப்பாடு. இந்த கூப்பாடு இரவில் ஒரு தெரு நாய் குரைத்தால் உடனே அந்த பகுதியில் இருக்கும் மற்ற நாய்களும் அந்த நாய் எதற்கு குரைத்தது என்று தெரியாமல் அதுகளும் சேர்ந்து குரைப்பது போல இருக்கிறது.

இந்திய இணை தூதர் மேல் நடவடிக்கை எடுத்தது அரசாங்கம் அல்ல விசா மோசடி மற்றும் மற்ற மோசடிகளுக்கான துறைதான். அந்த துறைகளுக்கு யார் புகார் கொடுத்தாலும் அதை விசாரணை செய்து அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் மேல் அந்த துறையை சார்ந்தவர்கள் நடவடிக்கை எடுக்கும். இதை அமெரிக்க அதிபராகவே இருந்தாலும் தலையிட முடியாது என்பது அமெரிக்காவில் இருக்கும் எவரும் அறிந்தது. அதன் படிதான் இந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்திய அரசாங்கம் என்ன செய்து இருக்கலாம் இந்த அதிகாரி செய்தது தவறுதான் அதனால் நாங்கள் அவர் மீது கண்டிப்பாக விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்கிறோம் அதனால் அவரை எங்கள் நாட்டிற்கு அனுப்புங்கள் என்று வேண்டு கோள் விடுவித்து இருக்கலாம் ஆனால் அப்படி செய்யாமல் எடுத்தோமா கவித்தோமா என்று செயல்பட்டு கொண்டிருக்கிறது.

ஏன்னா அவரு தூதரக அதிகாரியாம்.... (இனிமேல் தப்பு பண்ணுறவன் முதலில் இந்த மாதிரி ஏதாவது ஒரு தூதரகத்தில் வேலைக்கு சேர்ந்து விடவேண்டும் போலும்... ஈசியா தப்பிச்சிடலாம்....) நியாயமா பார்த்தால், இப்படி ஒரு சக மனித அக்கறை இல்லாதவரை, தன் சொந்த நாட்டினருக்கு உதவுவதற்காக பிரதிநிதியாக அனுப்பபட்டவர் தன் நாட்டு குடிமக்களை அடிமையாக நடத்தும் ஒருவரை இன்னொரு நாட்டுக்கு அனுப்பியதற்கு இந்தியாதான் வெட்கப்பட வேண்டும்...முதலில் அவர் அயல்நாட்டின் தூதர் அல்ல. அவர் ஒரு துணை தூதர் பொறுப்பில் உள்ள அதிகாரிதான்.

அவர் புரிந்த குற்றம், தூதரக பொறுப்பில் புரியபட்டதல்ல.. அவரின் வீட்டில் நடைபெற்ற செயல் அது..

நீயூயார்க மன்ஹட்டன் ஹோட்டல் பணிப்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட IMF தலைவரும் பிரெஞ்சு நாட்டு தலைவரானவர் தவறு செய்துவிட்டு விமானத்தில் தப்பி செல்ல முயன்ற போது கைது செய்யபட்ட போது கூட கைவிலங்கு போட்டுதான் கூட்டிச் சென்றார்கள். அமெரிக்கவில் சட்டம் முன்பு அனைவரும் சமம்.
இந்தியாவில் குற்றம் புரிந்தவனுக்கு எதிராக தகுந்த சாட்சி இருந்தாலும் குற்றம் செய்தவன் அதிகாரப் பதவியில் இருந்தாலோ அல்லது அதிகாரப் பதவியில் இருந்தாலோ குற்றத்தி இருந்து எளிதில் தப்பிவிடலாம் இதற்கு சங்கர் ராமன் கொலை வழக்கில் இருந்து தப்பித்த குற்றவாளிகளை உதாரணமாக எடுத்து கொள்ளலாம். இதையெல்லாம் பார்த்து வாழ்ந்து வரும் மக்களுக்கு அமெரிக்க செய்வதெல்லாம் தப்பாகவே தெரியும்.

இந்தியா அரசாங்கம் பெரிய தவறு செய்கிறது
. ஒரு குற்றவாளியை சட்டம் பார்த்து கொள்ளும் அதில் அரசு தலையிட முடியாது. ஒரு நாட்டின் தூதருக்கு தவிர மற்ற தூதரக அதிகாரிகளுக்கு டிப்லோமேடிக் இம்யூனிட்டி கிடையாது.

இந்த எதிர்ப்புகளால் அமெரிக்காவிற்கு எந்த வித பாதிப்பும் துளி கூட கிடையாது. ஆனால் இந்தியாவிற்கு எதிர் காலத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

அமெரிக்காவின் முதுகில் ஏறி சவாரி செய்தவர்கள் இப்போது எதிர்ப்பது போல் நடிப்பதற்கான காரணம் நடந்து முடிந்த மாநில தேர்தலில் ப்ளாப்ப் ஆனதுதான் .மேலும் கடைசி காலத்திலாவது ஏதாவது வீரமாக செய்யலாம் என்கிற கடைசிகால ஆசை மட்டுமே. இதெல்லாம் காங்கிரசின் மட்டமான அரசியல் சித்து விளையாட்டுகள்... இதற்கும் வழக்கம்போல சாதாரண குடிமகன்தான் தன் மொத்த மானமும் போய் விட்டது போல கவலை படுகிறான். அதுதானே அவர்களின் வோட்டரசியலுக்கு வேண்டும்...ந்த துணை தூதர் சட்டப்படி குற்றம் செய்தார் என்பது உண்மை. ஆனால் அமெரிக்க அரசு கைது செய்த முறை கண்டனத்திற்கு உரியதுதான் தான். அப்பிடிருக்க குற்றம் செய்த பெண்ணுக்கு ஐ நா வில் பணி நியமனம் கொடுத்து இருப்பது நல்லது கிடையாது. அது இந்தியாவை உலக அளவில் மிக கேலிக்குரியதாகிவிட்டது . ஐநா அதிகாரியாகிவிட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று இந்திய அரசாங்கம் நினைக்கிறது. இவர் குற்றம் செய்தது ஐநா ஊழியராக பதவி ஏற்கும் முன்பு நடந்தது. அதனால் அமெரிக்க சட்டப்படி இவர் மீது விசாரணை நடத்தி தண்டனை தரப்படும் என்பதில் மாற்றம் ஏதும் இருக்காது என நினைக்கிறேன் ஊழல்


இந்த விஷயத்தில் உலகில் எந்த நாடும் இந்தியாவிற்கு ஆதரவாக இது வரை குரல் கொடுக்கவில்லை என்பது ங்கு கவனிக்க வேண்டும்..

இந்தியாவின் போக்கு மிகுந்த அபாயகரமானது. இது எதிர் மறை விளைவுகளை தான் ஏற்படுத்தும்


டிஸ்கி : மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வர முடியாது என்பது காங்கிரஸுக்கு மிக நன்றாக தெரியும் அதனால் மோடியோ அல்லது வேறு யாரும் வந்தால் நன்றாக ஆட்சி செய்து பேர் வாங்க கூடாது என்று நினைத்துதான் கடந்த 20 வருடமாக நட்புடன் இருந்த அமெரிக்காவுடன் பகைமையை ஏற்படுத்தி வருங்காலத்தில் ஆளக் கூடையவர்களுக்கு பிரச்சனை உண்டாக்கி செல்ல விரும்புகிறதோ என்று நினைக்க தோன்றுகிறது.

27 comments :

 1. உலகிலேயே அமெரிக்காதான் பெண்களுக்கும் குழந்த்தைகளுக்கும் பாதுகாப்பு தருவதில் முதல் இடம் வகிக்கின்றது. பெண்களை திருமனம் முடித்து வெறும் போகப்பொருளாக மட்டுமே நினைத்து அனுபவித்து நினைத்த மாத்திரத்தில் திருமன ரத்து செய்ய முடியாது. அப்படி ரத்து செய்தால் மனைவிக்கு அவனது சொத்தில் பெரும் பகுதியை கொடுக்கனும். அவள் எந்தமாதிரி வாழ்க்கையை வாழ்ந்திருநாளோ அதே வாழ்க்கை தரத்தை திருமனத்துக்கு பின்னும் உறுதி செய்யனும்.
  அங்கு விவாகரத்து சகஜாமானதால் வளர்ப்பு குழந்தைகளின் துன்புறுத்தல் காரனமாக குழந்தை பாதுகாப்பு சட்டம் கடுமையாக உள்ளது.

  ஒரு பென்னை வீட்டு வேலை பார்ப்பதற்காக இந்தியாவில் இருந்து அழைத்து வருவது எந்த ஊர் நியாயம்?. இதைச்செய்தது அமெரிக்கரே ஆனாலும் சட்டம் சும்மா விடாது.

  தேவயானியின் குற்றத்துக்கு இநிய அரசாங்கம் நியாம் கற்ப்பிப்பது இந்தியாவிற்கு கேலி சேர்க்கும் அவமானமான வேலையாகும்.

  ReplyDelete
 2. கடைசியில் சொன்ன டிஸ்கி! :) இருக்கலாம்!

  ReplyDelete
 3. நிகழ்வின் சரியான உண்மைத் தன்மையை
  தங்கள் விரிவான பதிவின் மூலம்
  அறிய முடிந்தது
  பகிர்வுக்கு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. காசு உள்ளவன் என்ன வேணாலும் பண்ணலாம் அப்ப்டீங்குற மாதிரி ஆகி போச்சு இங்க சட்டம் எல்லாம் ஏழைகளுக்கு தான் \\\\\

  காங்கிரஸ் மட்டகரமான மானகெட்ட செயல் புரிகிறது தப்பு பண்ணுபவனை இவனும் கண்டிக்க மாட்டான் காண்டிப்பவனையும் விட மாட்டான் \\\\

  இலைங்கையில் அவ்ளோ பேரு செத்தாங்க அத நிறுத்த முடியல இந்த நாயீங்களால இப்போ என்ன சதம் பரதேசிகளுக்கு

  ReplyDelete
 5. சும்மா தெருவில் நடந்து போனவரை அரெஸ்ட் செய்து விட்டது மாதிரி தான் இங்கே டி.வியில் உட்கார்ந்து உட்கார்ந்து பேசி கொண்டு இருக்கிறார்கள்...தூதரகத்தில் பணி புரிபவர் எந்த நாட்டில் இருக்கிறாரோ அந்த நாட்டின் சட்டத்தை மதிக்க தானே வேண்டும். எல்லாம் தேர்தலை மனதில் வைத்து தான் இந்த கூப்பாடு.

  ReplyDelete
 6. மிகச் சரியான பார்வை. நம் தலையில் நாமே மண் அள்ளிப் போட்டுக் கொள்கிறோம்!

  ReplyDelete
 7. //இனிமேல் தப்பு பண்ணுறவன் முதலில் இந்த மாதிரி ஏதாவது ஒரு தூதரகத்தில் வேலைக்கு சேர்ந்து விடவேண்டும் போலும்... ஈசியா தப்பிச்சிடலாம்//

  உண்மைதான், கென்யாவில் கர்ப்பமுற்றிருக்கும் பெண்ணின் கணவனை கொன்றுவிட்டு அமெரிக்க தூதரக அதிகாரி தப்பி ஒட்டம். இவரை பிடித்து கென்யாவிற்கு அமெரிக்க டிபோர்ட் செய்யுமா?
  http://www.dailymail.co.uk/news/article-2384381/U-S-diplomat-flees-Kenya-killing-man-wife-pregnant-car-crash.html

  பாகிஸ்தானில் அமெரிக்க அதிகாரி இருவரை கொலை செய்துவிட்டு பணம் கொடுத்து அமெரிக்காவிற்கு தப்பினார். இவரை பாக் கைது செய்தபோது அமெரிக்கா என்ன சொன்னது தெரியுமா?

  The U.S. Embassy here demanded the release on Saturday of an American diplomat who fatally shot two Pakistani men two days ago, saying he was being "unlawfully detained" by Pakistani authorities.

  http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2011/01/28/AR2011012802004.html
  http://www.nytimes.com/2011/03/17/world/asia/17pakistan.html?_r=0

  அமெரிக்கனுக்கு வந்தா இரத்தம் மத்தவனுக்கு வந்தா அது தக்காளி சட்னியா? முதல்ல அமெரிக்கர்களெல்லாம் ரூம் போட்டு வெட்கப்படுங்கள், அப்புறமா அடுத்தவனுக்கு அட்வைஸ் கொடுக்கலாம்!

  ReplyDelete
  Replies
  1. நந்தவனத்தான்... வியாசன் பதிவு மற்றும் இந்த பதிவுகளில் உங்கள் பின்னோட்டம் பார்த்தேன். உங்கள் புரிதலே சரி என தோன்றுகிறது. தேவ்யானி , சங்கீதா இருவருமே fraud போல தெரிகிறது. There are lot of things which are not meeting our eyes!

   Delete
  2. நன்றி திரு. Bandhu, அமெரிக்காவின் மீது நன்றியுடையவனாகத்தான் இருக்கிறேன். ஆனால் இது நமது சுயமரியாதை சம்மந்தப்பட்ட விடயம் என்பதை நாம் உணரவேண்டும் என்பது அவா. நாம் வெளிநாட்டில் சிரமம் என்றால் போகுமிடம் தூதரகம். ஒரு தூதரக அதிகாரியை இப்படி நடத்த அனுமதித்தால் பிறகு இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களை நாய்கூட மதிக்காது.

   மேலும் எனக்கு இன்னொரு சந்தேகம்(conspiracy theory!)... பின்லேடனை பிடிக்க உதவி செய்த பாக்கிஸ்தான் டாக்டருக்குகூட குடியுரிமை தராமல் பாக் சிறையில் வாட விட்ட அமெரிக்கர்கள் இந்த பணிப்பெண்ணுக்கு ஏன் இவ்வளவு சிரமமெடுத்து நிரந்தரமாக தங்க அனுமதிக்கிறார்கள்? அவர் ஏதாவது தகவல்களை இந்த தூதரக அதிகாரியின் வீட்டில் சுட்டு அமெரிக்கர்களிடம் அளித்தார் என சில நாட்கள் கழித்து தெரியவருமா? இதனால்தான் இந்திய அரசு கொதிக்கிறதா?

   - சில வருடங்களுக்கு முன்பு ஒரு ரா உளவுத்துறை அதிகாரி பல தகவல்களை ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டு அமெரிக்கா ஓடி பின்பு காணாமல் போய்விட்டார் என்பது வேறு ஞாபகத்துக்கு வருகிறது.
   http://en.wikipedia.org/wiki/Rabinder_Singh_%28intelligence_officer%29

   Delete
  3. //நந்தவனத்தான்... வியாசன் பதிவு மற்றும் இந்த பதிவுகளில் உங்கள் பின்னோட்டம் பார்த்தேன். உங்கள் புரிதலே சரி என தோன்றுகிறது.//
   திரு Bandhu, நம்ம தலை எப்பவுமே ஒரு விஷயத்தை ஆழமா ஊடுரிவி தான் தான் பார்க்கும்.
   சகோவியாசன் பதிவை படித்தீர்களா அவர் இப்போ ஒரு கனடியனாக இருந்தாலும் கூட அவங்க முன்னேர்கள் எல்லாம் இங்கிருந்து தான் போனவங்க.இப்போ இந்தியாவை தாக்கியே அவங்க பொழுது போகுது:)

   Delete
  4. சகோ வேகநரி, சகோ வியாசன் ஒரு ஈழத்தமிழர் என்பதினால் இந்தியாவின் மீது கோபத்தில் இருக்கிறார். ஏதோ அவர்கள் இந்தியர்களிடம் எதிர்பார்த்தார்கள், கிடைக்காத ஏமாற்றத்தில் கோபிக்கிறார். அவ்வளவுதான்.உறவிருப்பதால்தான் மற்ற நாடுகளை விட நம்மிடம் எதிர்பார்ப்பும் கோபமும் என நல்ல முறையில் எடுத்துக்கொள்ளுவோமே! காலம் இவற்றை சரிசெய்யும் நம்புவோம்.

   ஆனால் அமெரிக்க சிட்டிசன்களாகிவிட்ட சில PIO & OCI பார்ட்டிகளின் அமெரிக்க விசுவாசமும் இந்திய வெறுப்பும்தான் வியக்க வைப்பவை. ஏதோ நியூயார்க் டைம்ஸில் மட்டும் எழுதாமல் தமிழிலும் பதிவு போடுகிறார்கள் என சந்தோசப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான் போல! ;)

   Delete
 8. //இந்தியாவின் போக்கு மிகுந்த அபாயகரமானது. இது எதிர் மறை விளைவுகளை தான் ஏற்படுத்தும்
  டிஸ்கி : மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வர முடியாது என்பது காங்கிரஸுக்கு மிக நன்றாக தெரியும் அதனால் மோடியோ அல்லது வேறு யாரும் வந்தால் நன்றாக ஆட்சி செய்து பேர் வாங்க கூடாது என்று நினைத்துதான் கடந்த 20 வருடமாக நட்புடன் இருந்த அமெரிக்காவுடன் பகைமையை ஏற்படுத்தி வருங்காலத்தில் ஆளக் கூடையவர்களுக்கு பிரச்சனை உண்டாக்கி செல்ல விரும்புகிறதோ என்று நினைக்க தோன்றுகிறது.//
  திரு.மதுரை தமிழன், நீங்க உங்க செந்த நலன்கள்,அமெரிக்காவின் நலன்களை இந்தியாவுக்குள் புகுத்தும் ஒருவராகவே மட்டுமே என்னால் பார்க்க முடிகிறது.

  ReplyDelete
 9. சகோதரர்க்கு வணக்கம்
  தங்களது கருத்துகள் யாவும் ஏற்புடையதே. எல்லாமே அரசியல் ஆகி விட்டது வேதனை இருப்பினும் தலைகீழாய் நின்றாலும் சம்மந்தப்பட்டவர்கள் ஆட்சிக்கு மீண்டும் வர முடியாது. அருமையான பதிவுக்கு நன்றி சகோதரர்..

  ReplyDelete
 10. என்னாது உலக நாடுகள் ஆதரவு இல்லையா?

  வழக்கமாக இந்தியாவை திட்டியே எழுதும் பாகிஸ்தானிகள் டைம்ஸ் ஆஃப் இண்டியாவில் போட்ட ஒரு பின்னூட்டத்தை பாருங்கள்...

  Usman Akbar (Islamabad) 19 hrs ago
  I am from Pakistan and I am very happy to see some one taking a stand to protect against the arrogant Americans. Here in Islamabad American consulate staff kill about 30 to 40 people every year thru road accidents, killing bystander, walking , motor biking individuals. This mainly because Americans are always driving on wrong side i.e right side as they do in America whereas in pak we drive left side. But our slave government has no spine it never dares to raise any voice. Our ministers and MPs have been stirp searched on US airports but no protest from our govt. It good to see how a proud nation like yours react when it is disrespected. I know now some US official will visit Pak to pressurize India but i hope Pak Govt will say no more divide and rule on humiliation of our women.

  மேலும் பார்க்க -We must learn from India, Pakistani daily News International says :::
  http://timesofindia.indiatimes.com/world/pakistan/We-must-learn-from-India-Pakistani-daily-News-International-says/articleshow/27605629.cms

  ReplyDelete
 11. வினவு தளத்தில் செழியன் என்பவர் இது குறித்து விரிவாக எழுதியுள்ளார். நேரம்இருந்தால் பார்க்கவும்

  ReplyDelete
 12. ஆமாம் சாமி போடுகிறவர்கள் போடலாம்

  ReplyDelete
 13. அந்த டிஸ்கி உண்மையோ உண்மை என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை...!

  ReplyDelete
 14. டிஸ்கி தான் உண்மைன்னு நினைக்குறேன் சகோ!

  ReplyDelete
 15. தன்க்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். நேரமிருப்பின் தொடருங்கள். http://rajiyinkanavugal.blogspot.in/2013/12/blog-post_19.html

  ReplyDelete
 16. சன்கராசாரியார் பற்றி சொல்லியிருக்கிரீர்கள். தலித் நண்பன் என்று சொல்லிக்கொள்ளும் கருணானிதியின் குடும்பதை செர்ந்த அழகிரி, ஆலடி அருணா கொலை வழக்கிலிருந்து தப்பிததையும், ரமெஷ் கொலையிலிருந்து ஸ்டாலின் விடுபட்டதையும் உதாரணமாக கூரியிருந்தால் பொருததமாகயிருக்கும்

  ReplyDelete
 17. Dear Nandavanathan,

  Indian Embassy in New York treats Indian Citizens worse than dogs. For any reason you go to the embassy, you have to stand on the platform with no shelter. No matter if it rains or snows, you have to stand there. You can't take any of your personal belongings like bags etc inside and you have to leave them on the steps outside. The Indian Government should take actions. They are worried about the luxurious life style of Diplomats. When any one sees the way Indians are treated by Indian Consulates, they will also treat Indians likewise.

  ReplyDelete
  Replies
  1. நன்றாக அலசி ஆரய்ந்திருக்கிறீர்கள். கடைசியில் சொன்னது உண்மையாகத்தான் இருக்க வேண்டும்.

   Delete
 18. இந்தியாவில் மட்டுமே நம் மீதுதான் தவறு என்ற வகையிலேயே சிந்திப்பது வழக்கம். மற்ற நாடுகளில் அவர்கள் மீது தவறு என்று தெரிந்தாலும் தம நாட்டவருக்கு ஆதரவாகவே குரல் கொடுப்பார்கள். இதே அமெரிக்காவாக இருந்தால் என்ன செய்திருக்கும் தங்கள் நாட்டுக்கு அனுப்புங்கள் என்றுதான் கூறி இருக்கும்.
  விசா மோசடி,வேலைக்காரப் பெண்மணியை மோசமாக நடத்துதல் போன்றவற்றிக்கும் ஆடை அவிழ்த்து சோதனை செய்ய வேண்டிய அவசியம் என்ன என்பது தெரியவில்லை . இந்த அளவுக்கு நடு நிலையுடன் இந்தியரைத் தவிர வேறு எந்த நாட்டவரும் இந்த விஷயத்தை பேசமாட்டார்கள் என்றே கருதுகிறேன். உண்மைகள் வெளிவரட்டும். இந்தியா அவர்களை தன்னிடம் ஒப்படைக்க கோரி ,விசாரித்து தவறு இருப்பின் தண்டனை அளிக்க தயங்கக் கூடாது. ஆனால் கண்டனம் தெரிவித்தது நியாயமே என்றே கருதுகிறேன்.

  ReplyDelete
 19. மதுரை தமிழனின் இந்த பதிவில் இந்த புகழ் பெற்ற டிஸ்கி என்னவென்றால்
  மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வர முடியாது என்பது காங்கிரஸுக்கு மிக நன்றாக தெரியும் அதனால் மோடியோ அல்லது வேறு யாரும் வந்தால் நன்றாக ஆட்சி செய்து பேர் வாங்க கூடாது என்று நினைத்துதான் கடந்த 20 வருடமாக நட்புடன் இருந்த அமெரிக்காவுடன் பகைமையை ஏற்படுத்தி வருங்காலத்தில் ஆளக் கூடையவர்களுக்கு பிரச்சனை உண்டாக்கி செல்ல விரும்புகிறதோ என்று நினைக்க தோன்றுகிறது.

  மோடிக்கு அமெரிக்கா விசாவழங்கவில்லை. அப்படியானால் அமெரிக்காவுடன் பகைமையை ஏற்படுத்தி வருங்காலத்தில் ஆளக் கூடையவர்களுடன் பகமையை ஏற்படுத்துவது இங்கே யார்?
  மோடி பிரதமாரக வந்தால் நம்ம மதுரைதமிழன் எப்படி தாங்கிக்குவாரோ தெரியல்ல!
  கம்யூனிஸ்டு கட்சியினர் ஆட்சிக்கு வர முடியாத்தா எப்படி?

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

லேபிள்கள்

நகைச்சுவை ( 406 ) அரசியல் ( 270 ) தமிழ்நாடு ( 136 ) இந்தியா ( 113 ) சிந்திக்க ( 91 ) பெண்கள் ( 91 ) அமெரிக்கா ( 84 ) ஜெயலலிதா ( 74 ) நக்கல் ( 56 ) தமிழன் ( 54 ) கலைஞர் ( 53 ) வெட்கக்கேடு ( 53 ) மனைவி ( 52 ) நையாண்டி ( 47 ) தலைவர்கள் ( 46 ) மோடி ( 46 ) தேர்தல் ( 41 ) கணவன் ( 39 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) போட்டோடூன் ( 32 ) வீடியோ ( 31 ) திமுக ( 30 ) வாழ்க்கை ( 30 ) அனுபவம் ( 28 ) சமுகம் ( 25 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சட்டம் ( 22 ) எண்ணங்கள் ( 21 ) காதல் ( 20 ) பயனுள்ள தகவல்கள் ( 20 ) குடும்பம் ( 19 ) கேள்விகள் ( 19 ) தமிழகம் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குழந்தை ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) சினிமா ( 14 ) அம்மா ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) காங்கிரஸ் ( 12 ) சமையல் குறிப்பு ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) வாழ்க்கை அனுபவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) ஆண் ( 9 ) உன்னால் முடியும்.... ( 9 ) காதலி ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நக்கல்கள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) ரஜினி ( 9 ) vijay tv ( 8 ) அதிமுக ( 8 ) அரசாங்கம் ( 8 ) அரசியல் களம் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த நாடு ( 7 ) சாதனை ( 7 ) சிரிக்க ( 7 ) டிப்ஸ் ( 7 ) தமிழக அரசியல் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) மனம் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) 2014 ( 6 ) அன்பு ( 6 ) அழகு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) உலகம் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) போலீஸ் ( 6 ) மாணவர்கள் ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) Award ( 5 ) face book ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கவிதை ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சிறுகதை ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) தமிழ் சமுகம் ( 5 ) நண்பர்கள் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) #modi ( 4 ) #modi #india #political #satire ( 4 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) tamil joke ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அழுகை ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க? ( 4 ) உறவு ( 4 ) ஊழல் ( 4 ) ஓ.....அமெரிக்கா ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலாய்ப்பு ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுவன் ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) தொழில்நுட்பம் ( 4 ) நீதி ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) ரெசிப்பி ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) #jayalalithaa ( 3 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) best school ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) satire ( 3 ) super singer ( 3 ) vikatan ( 3 ) அட்டாக் ( 3 ) அரசியல் கலாட்டா ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இந்தியர் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) உண்மைகள் ( 3 ) எக்கானாமி ( 3 ) கோபிநாத் ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சீனா ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீயா நானா ( 3 ) நையாண்டி.போட்டோடூன் ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசிபி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) #india #political #satire ( 2 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) New year ( 2 ) Social networking danger ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) apps ( 2 ) best tamil tweets ( 2 ) facebook ( 2 ) modi ( 2 ) political satire ( 2 ) sexual harassment ( 2 ) tamil ( 2 ) twitter ( 2 ) wife ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.நையாண்டி ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) எதிர்காலம் ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) ஓ...அமெரிக்கா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சமுக பிரச்சனை ( 2 ) சமுகப் பிரச்சனை ( 2 ) சரக்கு ( 2 ) சுடும் உண்மைகள் ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) ஜல்லிகட்டு ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) நல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி கார்டூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்கள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 ) பலாத்காரம் ( 2 ) பாஜக ( 2 ) பாமக ( 2 ) பிரதமர் ( 2 ) பிரார்த்தனை ( 2 ) புத்தகம் ( 2 ) பொங்கல் ( 2 ) மக்கள் ( 2 ) மதன் ( 2 ) மதுரை ( 2 ) மனித உரிமைகழகம் ( 2 ) மலையாளி ( 2 ) மழை ( 2 ) முல்லை பெரியாறு ( 2 ) ரஜினிகாந்த் ( 2 ) லேகியம் ( 2 ) வருத்தம் ( 2 ) வாழ்த்து ( 2 ) விசா ( 2 ) விஜய்காந்த் ( 2 ) வைகோ ( 2 ) ஸ்ரீலங்கா ( 2 ) ஹிந்து ( 2 ) #Cauvery ( 1 ) #ChennaiFloods ( 1 ) #I-T ACT SECTION 66 A ( 1 ) #JusticeforJallikattu #RSS #BJP தமிழகம் ( 1 ) #Rohini Bhajibhakare ( 1 ) #dmk fail ( 1 ) #fishermen ( 1 ) #ilayaraja # vadivelu #spb ( 1 ) #neet #modi #india #political ( 1 ) #olympic ( 1 ) #rohini ( 1 ) #மோடி #politics ( 1 ) 100 ( 1 ) 1000 ( 1 ) 2 million hits ( 1 ) 2011 Best Tamil Blog ( 1 ) 2014 லோக்சபா ( 1 ) 2014 லோக்சபா தேர்தல் ( 1 ) 2030 ( 1 ) Abortion ( 1 ) Ayurvedic Anti-Diabetic Medicine ( 1 ) Best jokes of the year 2013 ( 1 ) Cell ( 1 ) GK ( 1 ) Good news to be proud ( 1 ) Google ( 1 ) Hindu ( 1 ) Hindu Ritual ( 1 ) IAS ( 1 ) IIT ( 1 ) IPad ( 1 ) IPhone ( 1 ) ITouch ( 1 ) July 9th ( 1 ) Know Your English ( 1 ) Mangalyaan ( 1 ) Medical Information ( 1 ) Modern Mahatma ( 1 ) Modi .top American business leaders ( 1 ) NASA ( 1 ) NIPFA ( 1 ) New year Eve's spacial ( 1 ) One million ( 1 ) Perfect Mobile Plan ( 1 ) Telegram| ( 1 ) The Affair ( 1 ) admk ( 1 ) alcohol ( 1 ) arasiyal ( 1 ) beep song ( 1 ) big ben london ( 1 ) big boss ( 1 ) black friday ( 1 ) blog post ( 1 ) book fair ( 1 ) chennai ( 1 ) chennai book fair.Top sellers ( 1 ) clinton ( 1 ) comedians ( 1 ) dinamalar ( 1 ) dirty politics ( 1 ) diwali ( 1 ) dog ( 1 ) face book status ( 1 ) facebook theorem ( 1 ) fake news ( 1 ) famous facebook- ( 1 ) five star blogger award ( 1 ) flight ( 1 ) flood ( 1 ) friendship ( 1 ) funny advice ( 1 ) funny family ( 1 ) gopinath ( 1 ) greatest ( 1 ) heart touching ( 1 ) heart toucing ( 1 ) hits ( 1 ) humanity ( 1 ) humour ( 1 ) hygiene ( 1 ) ilayaraja ( 1 ) india ( 1 ) indian ( 1 ) inhumane ( 1 ) ipod ( 1 ) jallikattu ( 1 ) joke ( 1 ) joker ( 1 ) little girl ( 1 ) love ( 1 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 1 ) mobile phone ( 1 ) music ( 1 ) neeyaa naanaa ( 1 ) network ( 1 ) obama ( 1 ) oh..america ( 1 ) opinion ( 1 ) photos ( 1 ) poem ( 1 ) power cut ( 1 ) price ( 1 ) rape ( 1 ) recipe ( 1 ) sachin tendulkar ( 1 ) sandwiches ( 1 ) social ( 1 ) tamil bloggers meet ( 1 ) tamil blogspot ( 1 ) tamil eelam ( 1 ) telegram ( 1 ) tips ( 1 ) vijay ( 1 ) walmart ( 1 ) whatsapp . telegram app ( 1 ) wonderful ( 1 ) worlds heaviest man ( 1 ) அசோக் சக்ரா ( 1 ) அதிகாரி ( 1 ) அநாகரிகம் ( 1 ) அந்தரங்க அட்வைஸ் ( 1 ) அந்தரங்கம் ( 1 ) அனிமல் ( 1 ) அன்னையர் தினம் ( 1 ) அப்பாடக்கர் ( 1 ) அமலா பால் ( 1 ) அமெரிக்க போலீஸ் ( 1 ) அரசியல் கொத்துபுரோட்டா ( 1 ) அரசியல். சென்னை ( 1 ) அரசியல். தேர்தல் 2014 ( 1 ) அரசியல். நக்கல்கள் ( 1 ) அரசியல்களம் ( 1 ) அரசியல்வாதிகள் ( 1 ) அரசு ( 1 ) அரசு திட்டம் ( 1 ) அரபுநாடு ( 1 ) அறிமுகம் ( 1 ) அறிவிப்பு ( 1 ) அறிவு ஜீவிகள் ( 1 ) அறிவுரைகள் ( 1 ) அலை ( 1 ) அழைப்பிதழ் ( 1 ) அவார்டு ( 1 ) ஆகமவிதிகள் ( 1 ) ஆணையம் ( 1 ) ஆண்களை வசிகரிக்க ( 1 ) ஆன்மிகம் ( 1 ) ஆபத்து ( 1 ) ஆபிஸ் ( 1 ) ஆம் ஆத்மி ( 1 ) ஆயுத பூஜை ( 1 ) ஆராய்ச்சி ( 1 ) ஆல்ஹகால் ( 1 ) இணைய அறிவு ( 1 ) இத்தாலி ( 1 ) இந்திய கலாச்சாரம் ( 1 ) இந்திய கல்வி ( 1 ) இந்திய தூதரக விவகாரம் ( 1 ) இந்திய தூதர் ( 1 ) இராணுவம் ( 1 ) இலங்கை தமிழர் ( 1 ) இளைய சமுதாயம் ( 1 ) இஸ்லாமிய மக்கள் ( 1 ) ஈரோடு ( 1 ) உன்னால் முடியும் ( 1 ) ஊடகத்துறை ( 1 ) ஊடகம் ( 1 ) எக்ஸாம் ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எழுத்தாளர் ( 1 ) ஐபோன் ( 1 ) ஒலிம்பிக் 2012 ( 1 ) ஒலிம்பிக் 2016 ( 1 ) ஓட்டு ( 1 ) கசக்கும் உண்மை ( 1 ) கடல் ( 1 ) கணக்கு ( 1 ) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி ( 1 ) கணினி ( 1 ) கண்டணம் ( 1 ) கண்ணீர் ( 1 ) கமல் ( 1 ) கரடி ( 1 ) கருத்து ( 1 ) கற்பனை ( 1 ) கற்பனை பதிவு ( 1 ) கலாய்த்தல் ( 1 ) கலைஞர் ஜோக்ஸ் ( 1 ) கல்யாணம் ( 1 ) கழுகார் ( 1 ) கவலை ( 1 ) கவிதைகள் ( 1 ) கார்ட்டூன் ( 1 ) கிச்சன் ( 1 ) கிறிஸ்துவ பாடல்கள் ( 1 ) குடி ( 1 ) குடியரசு தினம் ( 1 ) குடியரசுதினம் ( 1 ) குடும்ப அரசியல் ( 1 ) குட்டுகள் ( 1 ) குமாரசாமி ( 1 ) குமுதம் ( 1 ) குமுதம் ரிப்போர்ட்டர் ( 1 ) குறும்பு ( 1 ) குஷ்பு ( 1 ) குஷ்பூ ( 1 ) கூடங்குளம் ( 1 ) கேடுகெட்ட சிந்தனைகள் ( 1 ) கேரளா ( 1 ) கேலி ( 1 ) கேள்விபதில் ( 1 ) கேவலமான தலைவர்கள் ( 1 ) கைது ( 1 ) கொடுமை ( 1 ) கோயில் ( 1 ) கோலம் ( 1 ) சக்கேடா ( 1 ) சசிகலா ( 1 ) சமுக அவலம் ( 1 ) சமுக சிரழிவு ( 1 ) சமுக வலைத்தளம் ( 1 ) சமுக விழிப்புணர்வு ( 1 ) சமையல் ( 1 ) சமையல் அறை ( 1 ) சமையல் குறிப்பு. ரெசிப்பி ( 1 ) சிக்கல் ( 1 ) சிதம்பரம் ( 1 ) சிரழிவு ( 1 ) சிரிபு ( 1 ) சிரிப்பு ( 1 ) சிறுநீரில் கல்லா? ( 1 ) சிறை கோர்ட் ( 1 ) சு.சாமி ( 1 ) சுகம் ( 1 ) சுதந்திர தினம் ( 1 ) செக் ( 1 ) சென்னை பதிவர் கூட்டம் ( 1 ) சென்னை வெள்ளம் ( 1 ) செய்திகள். செக்ஸ் ( 1 ) செல்போன் ( 1 ) சேலை ( 1 ) சைனிஷ் ( 1 ) சொத்துகுவிப்பு ( 1 ) சோனியா ( 1 ) ஜப்பான் ( 1 ) ஜல்லிக்கட்டு ( 1 ) ஜி-மெயில் ( 1 ) ஜுனியர் விகடன் ( 1 ) ஜெயலலிதா! ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? ( 1 ) மனைவியை மயக்க ( 1 ) மறைவு ( 1 ) மாப்பிள்ளை ( 1 ) மாற்றம் ( 1 ) மாற்று சிந்தனை ( 1 ) மீடியா ( 1 ) முதலாளிகள் ( 1 ) முதலைமைச்சர் ( 1 ) முத்தம் ( 1 ) முனிசிபால்டி ( 1 ) முரண்பாடு ( 1 ) மூளைக்கு வேலை ( 1 ) மூஸ்லிம் ( 1 ) மெக்ஸிகோ ( 1 ) மெட்ரோ ( 1 ) மெனோபாஸ் ( 1 ) மெளனம் ( 1 ) மேஜர் முகுந்த் ( 1 ) மேயர் ( 1 ) மைசூர் பாகு ( 1 ) மோசம் ( 1 ) மோடி ஸ்பெஷல் ( 1 ) மோடி. ( 1 ) மோடி. அரசியல் ( 1 ) யோகா ( 1 ) ரசிக்க ( 1 ) ரஜினி வடிவேலு ( 1 ) ரம்ஜான் ( 1 ) ராக்கெட் ( 1 ) ராஜா ( 1 ) ராமதாஸ் ( 1 ) லலித்மோடி ( 1 ) லொள்ளு ( 1 ) லோக்சபா தேர்தல் ( 1 ) வடை ( 1 ) வரதட்சணை ( 1 ) வலி ( 1 ) வலைத்தளம் ( 1 ) வழக்கு ( 1 ) வாழ்க்கை அனுபவங்கள் ( 1 ) வாழ்த்துக்கள். ( 1 ) வாழ்வு ( 1 ) விஜயகாந்த ( 1 ) விண்வெளி ( 1 ) விநாயக சதுர்த்தி ( 1 ) விபரிதம் ( 1 ) விபரீதங்கள் ( 1 ) விருது ( 1 ) விஸ்வரூபம் 2 ( 1 ) வீரமணி ( 1 ) வெடி ( 1 ) வெர்ஜினியா பீச் ( 1 ) வேட்டி ( 1 ) வேட்டையாடு ( 1 ) வேட்பாளர் ( 1 ) ஸ்டாக் மார்க்கெட் ( 1 ) ஸ்டாலின் கார்னர் ( 1 ) ஸ்டாலின். திருமணம் ( 1 ) ஸ்டேடஸ் ( 1 ) ஸ்பானிஷ் ( 1 ) ஸ்ரீரங்கம் ( 1 ) ஸ்வீட் ( 1 ) ஹாக்கிங் ( 1 ) ஹாலிவுட் ( 1 ) ஹிட் ( 1 ) ஹூயூமர் ( 1 ) ஹோமம் ( 1 ) ையாண்டி ( 1 )

Gadgets By Spice Up Your Blog