Wednesday, December 4, 2013

மணமான ஆண்கள் அடிக்கடி தவறு செய்வது ஏன்?





கணவன் செய்த தவறுக்கு மனைவி அவன் கூட பேசாமல் இருப்பதுதான் அவனுக்கு தரும் பெரும் தண்டனை என்று பல பெண்கள் கருதுகிறார்கள். ஹா..ஹா.ஹா இப்ப புரியுதா மக்காஸ் ஏன் எல்லா மணமான ஆண்கள் அடிக்கடி தவறு செய்கிறார்களென்று ( எங்க வீட்டுல தவறுக்கு தண்டணை பூரிக்கட்டைதான்)

வாழ்க்கை ஒன்றும் ரிமோட் கண்ட் ரோல் அல்ல உட்கார்ந்த இடத்தில் இருந்து மாற்றிக் கொள்ள நாமதான் எழுந்திருச்சி மாற்றி கொள்ளனும் (இப்படியெல்லாம் மெஜேஜ் போடலைன்னா உன்னை ஒதுக்கி வைச்சுருவோன்னு சொன்னாங்க அதனாலதான்.)


பேஸ் புக்/வலைபதிவர்கள் எல்லாம் மீட் பண்ண நினைத்தால் ஏன் சரக்கு அடிக்க நினைக்கிறாங்க?
பேஸ்புக்ல அழகான போட்டோவை புரொபைல் படமாக போட்டு இருப்பாங்க ஆனா நேர்ல பாக்க சகிக்க மாட்டாங்க அதனால தான் சரக்கு அடிச்சா அசிங்கமா இருப்பதுகூட அழகாக தெரியும் என்பதால்..
(வழக்கமா நான் பேஸ்புக்ல மெஜேஜ் போட்ட யாரும் லைக் போடமாட்டாங்க ஆனா இதற்கு முன் போட்ட மெஜேஜுக்கு 2 ஆடு வந்து லைக் போட்டு இருக்கு...அதனாலதான் இந்த மெஜேஜ் )


என் வூட்டுகாரம்மா என் கூட சண்டை போடலைன்னாதான் நான் கவலைப்படுவேன். காரணம் அவ சண்டையை நிறுத்திட்ட என் கூட அவ பேசுறதுக்கு ஒன்றும் இல்லைன்னு அர்த்தம் (என் பொண்டாடிய நினைச்சேன் இந்த கருத்தை பதிஞ்சேன். பேஸ் புக்குல இருந்தாலும் பொண்டாடிய நினைக்கும் ஒருத்தன்)


கேர்ள் பிரெண்டு கூட 6 மணிக்குதான் பேச ஆரம்பிச்சு இருப்போம் அஞ்சு நிமிஷம்தான் பேசுன மாதிரி இருக்கும் ஆனா கடிகாரத்தை பார்த்தால் மணி 7 ஆகி இருக்கும்.

அதே போல மனைவி கூட 6 மணிக்குதான் பேச ஆரம்பிச்சு இருப்போம் 1 மணிநேரம் ஆனா மாதிரி இருக்கும் ஆனா கடிகாரத்தை பார்த்தால் மணி 06.05 ஆகி இருக்கும்.

எனக்குமட்டும்தான் இப்படியா?


நான் குழந்தையாய் இருந்த போது நிறைய பெண்கள் எனக்கு கிஸ் தர வந்தாங்க ஆனா நான் ச்சீய் என்று சொல்லி ஒடிவிட்டேன். இப்போ நிலமை வேற நான் பெண்களை கிஸ் பண்ண போனா அவங்க ச்சீய்ய்ய்ய்ய்ய் என்று வெட்கப்பட்டு ஒடுறாங்க......


நாம குழந்தையாய் இருக்கும் போது நாம பெரியவான ஆக ஆசைப்படுகிறோம். காரணம் நாம் நினைத்ததை அடையலாம் என்று ஆனால் பெரியவான ஆன பின் தான் நமக்கு புரிகிறது, நாம் குழந்தையாய் இருந்தால் அடம் பிடித்தாவது அடையலாம் என்பது...


மனைவி அழைத்தாள் அணைக்கதான் என்று நினைத்து ஒடிய எனக்கு அவளிடம் நெருங்கிய போதுதான் தெரிந்தது அடிக்க அழைத்தாள் என்று....( இதுக்குதான் ஆசைப்படக் கூடாது என்று பெரியவங்க சொல்லி வைச்சாங்க போல இருக்கு )


இதெல்லாம் நாங்க உங்க பேஸ்புஜ் தளத்தில் படிச்சிட்டேனே மீண்டும் இங்கு எதற்கு என்று கேட்பவர்களா நீங்கள்? இது அங்கு வந்து மாட்டாத ஆடுகளுக்காக இங்கு மறுபதிவு செய்யப்படுகிறது.



அன்புடன்
மதுரைத்தமிழன்

9 comments:

  1. நானாதான் சிக்கிட்டேனா!?

    ReplyDelete
  2. இந்த ஆளை காலையில பத்துமணிக்கு பூரிக்கட்டையில் சாத்த ஆரம்பிச்சது.... சாயந்திரம் 5 .மணி ஆயிடுச்சி மொத்தம் 12 பேர் 24 பூரிக்கட்டை ஒடைஞ்சதுதான் மிச்சம்... ஆனா ஒண்ணுமே நடக்காத மாதிரி இத்தன கூலா நிக்கறாப்பல....

    மதுரையால மட்டும்தான் முடியும்...! ஹா... ஹா...!

    ReplyDelete
  3. முகப்புத்தகத்தில் படிக்காத ஆடுகளுக்காக!

    ரசித்தேன்!

    ReplyDelete
  4. உங்களுடைய இந்த பதிவை ரசித்து,புன்னகையோடு படித்தேன்.
    முகநூலில் மாட்டாத ஆடுகளுக்கு நான் ஒரு உதாரணம் . இந்த மாதிரியான பதிவுகளை முகநூலில் பதித்தாலும், மீண்டும் என்னைய மாதிரி ஆட்களுக்காக மீண்டும் இந்த வலைப்பூவில் பதியுங்கள்.

    ReplyDelete
  5. தனித்தனியாக முக நூலில் படித்திருந்தாலும்
    இங்கு மொத்தமாகப் படிக்கையில்
    கூடுதல் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. அங்கும் (முகநூல்) கண்டேன்!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.