Monday, December 30, 2013


கலைஞரும் விஜயகாந்தும் சந்தித்தால்?

திமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற வாய்ப்பு ஏற்பட்டால் நான் பெரும் மகிழ்ச்சி அடைவேன் என்று கலைஞர் தன் பேஸ்புக் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதனை பார்த்து விஜயகாந்தும் கலைஞரும் சந்தித்தால் இப்படிதான் பாடி தன் பேச்சுக்களை ஆரம்பிப்பார்களோ?

 


விஜய காந்த் : அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே கலைஞரே கலைஞரே

கலைஞர் : இந்த நாள் அன்று போல இல்லையே க.எம்ஜியாரே க.எம்ஜியாரே


தலைவர் விஜயகாந்து கூட்டணி விஷயமாக கலைஞரிடமும் ஸ்டாலினிடமும் பேச்சு வார்த்தைக்கு சென்றால் இந்த வீடியோ க்ளிப்பை அவர்களுக்கு போட்டு காண்பித்து அதை பார்க்கும் போது அவர்களின் முக உணர்ச்சிகளை மீண்டும் படம் பிடித்து வெளியிடுவாரா?



அண்ணே இப்படி வாங்கி கட்டிய பின்பும் திமுகவோட நீங்க போய் சேர்ந்தா நீங்களும் ஒரு வடிவேல் அண்ணே. வடிவேல் படத்தில்தான் இப்படி வாங்கி கட்டிக்குவார் ஆனா நீங்க உண்மையிலே வாங்கி கட்டிக் கொள்ளும் ஆளாகிவிடுவீர்கள் அண்ணே...



அன்புடன்
மதுரைத்தமிழன்



15 comments:

  1. எனக்கு ஒண்ணு மட்டும் புரியமாட்டேங்குது!
    பமக-வை சந்தர்ப்பவாத கூட்டணி வைக்கும் கட்சி என்பவர்கள் மற்ற அனைத்து கட்சிகளும் அதையே செய்யும்போது எல்லோரும் பொத்திக்கொண்டு போவது ஏன்?

    ReplyDelete
  2. ஐயோ ஐயோ என்னடா அரசியல் இது கொய்யால.....

    ReplyDelete
  3. நல்ல ரசனைமிக்க கலாய்த்தல்!! என்ன அரசியலோ! மம்ம்ம்ம் ஒரு மண்ணும் புரியல! ஆமாம் பின்ன எந்தக் கட்சி எப்ப எந்தக் கட்சியோட சேரும் பிரியும் அப்புறம் எங்க சேரும்....அட போங்கப்பா...மக்கள மாங்கா மடையனாக்குறாங்க வேலையத்த அரசியல் வாதிங்க...இதே பொழப்பா போச்சு!!

    ReplyDelete
  4. கண்றாவி பிடிச்ச அரசியல்.
    நீங்கள் கண்ணதாசனின் "வனவாசம்" படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். படிக்கவில்லையென்றால், கண்டிப்பாக படியுங்கள். அதில் கலைஞரின் அரசியல் தந்தரங்களை அப்பட்டமாக சொல்லியிருப்பார் கண்ணதாசன்.

    ReplyDelete
  5. உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. மதுரைத் தமிழனுக்கும், தங்கள் குடும்பத்திற்கும் எங்களது மனமார்ந்த இனிய வாழ்த்துக்கள்!!

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  8. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், மதுரை தமிழன்!

    ReplyDelete
  9. கேப்டன் அரசியல் கோமாளி ஆகி ரொம்ப நாள் ஆச்சுங்க சகோ!

    ReplyDelete
  10. இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் சகோ!

    ReplyDelete

  11. வணக்கம்!

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பல்லாண்டு வாழ்க! படா்கின்ற புத்தாண்டை
    நல்லாண்டு வாழ்க நலஞ்சூடி! - வல்லதமிழ்ச்
    சொல்லாண்டு வாழ்க! சொந்தமென நம்மினத்தின்
    தொல்லாண்டு வாழ்க சுடா்ந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    01.01.2014

    ReplyDelete
  12. இந்த காணொளி [காமெடி] இன்று பார்த்து ரசித்தேன்! அரசியல்ல இதெல்லாம் சகஜம் ! :)

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. ஆண்டவரோடு கூட்டு என்று சொன்னதின் அர்த்தம் இப்போ புரியுது !
    +1

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.