உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, November 21, 2013

எனது வலைத்தளத்தைப் பற்றி "உலக புகழ் பெற்ற இவர்கள்" என்ன சொல்லுகிறார்கள் என்று பார்ப்போமா?

எனது வலைத்தளத்தைப் பற்றி "உலக புகழ் பெற்ற இவர்கள்" என்ன சொல்லுகிறார்கள் என்று பார்ப்போமா?

இது வரை எனது தளத்தில் நான் பலவிதமான பல்சுவை கொண்ட பதிவுகளை இட்டு பல மக்களின் மனதில் இடம் பிடித்து இருக்கிறேன். பலபேரை நகைச்சுவை என்ற பேரில் சிரிக்கவும் சில சமயங்களில் (இதெல்லாம் நகைச்சுவையா என்று )அழுகவும் செய்ய வைத்து இருக்கிறேன்.

பல மக்களின் வெறுப்பையும் ( அரசியல் கட்டுரைகளால் & மொக்கை பதிவுகளால் ) சம்பாதித்து இருக்கிறேன்,

ஒரு கட்சியையும் அதன் தலைவர்களையும் நகைச்சுவையாக கிண்டல், கேலி மற்றும் உண்மைகளை பதிவு வாயிலாக சொல்லும் போது அந்த கட்சிகாரர்களின் வெறுப்பையும் மாற்று கட்சிகார்களிடம் இருந்து பாராட்டையும் சில சமயங்களில் மிரட்டல்களையும் பெற்றுக் கொண்டிருந்தாலும் தொடர்ந்து மனதில் பட்டதை அப்படியே நடுநிலமையோடு சொல்லி வருகிறேன்.

இப்படி பட்ட இந்த வலைத்தளத்தை உலக புகழ் பெற்ற இவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று பார்ப்போம்.அந்த புகழ் பெற்றவர்கள் வேறு யாரும் இல்லை அது இந்த தளத்தை படித்து வரும் நீங்கள்தான். உங்கள் மனதில் நினைப்பதை ஒளிவு மறைவு இன்றி என் தளத்தைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லிச் செல்லுங்கள். அது மேலும் பொலிவிடன் இந்த தளத்தை நடத்தி செல்ல எனக்கு உதவும் என நம்புகிறேன். சைலண்ட் ரீடர்களும் உங்கள் கருத்தை இங்கு பதியும்மாறு தாழ்வன்புடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி...

டிஸ்கி : குட்டுவதோ திட்டுவதோ பாரட்டுவதோ உங்கள் இஷ்டம்


அன்புடன்
மதுரைத்தமிழன்


26 comments :

 1. நான் உங்கள் இரசிகன்! எதையும் சொல்வதில் உங்களுக்கென்று ஒரு தனித்தன்மை உண்டே! துணிவும் உண்மையும் நகைச்சுவையும் மிளிர தங்கள் எழுத்தி வருவது பதிவுலகம் அறிந்த ஒன்றே நாளும் தொடரட்டும் உங்கள் பணி!

  ReplyDelete
 2. மனதில் பட்டதை ஒளிவு மறைவு இல்லாமல் ‘போட்டு உடைக்கும்’ ‘வெள்ளை மனதுக்காரர்’ நீங்கள். திருத்திக்கொள்ள ஏதுமில்லை;

  ஆனாலும் ஒன்று சொல்லியே ஆகவேண்டும். “உலகப் புகழ் பெற்ற நீங்கள்” என்கிறீர்கள். இனியும் இம்மாதிரி பொய்யெல்லாம் சொல்ல வேண்டாம்!

  ReplyDelete
 3. மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் தோழரே...

  ReplyDelete
 4. மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் தோழரே...

  ReplyDelete
 5. சாமி... நாந்தேன் கட்சி ஆரம்பிச்சி... உங்களுக்கு தலீவரு பதவி எல்லாம் குடுத்திருக்கேனே... அப்புறம் இன்னாத்துக்கு டவுட்டு என்னா நெனைக்குறேன்னு...உங்க ப(பா)ணி தொடர்ந்துக்குனே இருக்கட்டும்... அப்பத்தான் நம்ம சனங்க சிரிச்சுக்கினே சந்தோசமா இருப்பாங்க...!
  - இப்படிக்கு உலக புகழ் உஷாஅன்பரசு..!

  ReplyDelete
 6. என் மனசுல என்னா நினைச்சிருக்கேன்னா... உங்களை உலக புகழ் பெற வைத்த " பூரி கட்டைக்கு" ஒரு பாராட்டு விழா நடத்தி எங்க எல்லோருக்கும் சோர்(விருந்து) போடனும்... செரிங்களா?
  - இப்படிக்கு,
  உலகபுகழ் உஷாஅன்பரசு.

  ReplyDelete
 7. உலக புகழ் பெற்ற என்னிடம் கருத்து கேட்டதால் அவர்களின் தளம்- உலகப்புகழ் பெற்றது என்று சொல்லாமலே விளங்கும்!
  - இப்படிக்கு
  உலக புகழ் உஷா அன்பரசு

  ReplyDelete
 8. உலக புகழ் பெற்ற உங்களுக்கு ஓட்டு போடாம போனா எப்படி அதுனால த.ம-4
  இப்படிக்கு,
  உ.பு.பெ- உ.அ ( ஸ்..யப்பா... சொல்லி சொல்லி டயர்டா ஆயிடுச்சி..)

  ReplyDelete
 9. நான் சொன்ன போட்டூன் பாணியைத் தொடரவும்

  ReplyDelete
 10. உள்ளதை உள்ளபடிச் சொல்லி சிரிக்கவும் அழவும் சிந்திக்கவும், நிந்திக்கவும் வைக்கும் ’அவர்கள் உண்மைகள்’ வாழ்க ! என உண்மையாகச் சொல்கிறேன்.

  []டிஸ்கியில் உள்ளதைப்படித்ததும் ஏதோ மனதில் தோன்றியதை எழுதியுள்ளேன்.

  ReplyDelete
 11. சரி, சரி, பாரத ரத்னாவிற்கு அடி போடுகின்றீர்கள் என்று தெரிகின்றது. என் ஓட்டு உங்களுக்கு நிச்சயம் உண்டு.

  ReplyDelete
 12. நான் உங்கள் ரசிகை.

  மருந்தைக் கூட இனிப்பில் கலந்து கொடுக்கும்
  பக்குவம் உங்களிடம் அதிகம் உள்ளது.
  என்னதான் உங்களுக்கு வயதாகி விட்டிருப்பதாலும்.... அது
  உங்களின் எழுத்தின் முதிர்ச்சியில் தெரிகிறது.

  புரி கட்டையால் அடி வாங்கி அடி வாங்கி மறுத்து விட்டதால்
  வரப்போகின்ற அடிகளுக்குப் பயப்படாமல் நிற்கும்
  துணிவு தைரியம் உங்களை விட்டால் யாருக்கு வரும்?

  புகைந்து கொண்டிருக்கிறதே... அது நெருப்பா,..?
  பனியா..? என்பதை நாங்கள் அறியாத போது
  அது வெறும் குப்பையைக் கிளர்ந்ததால் ஏற்பட்ட
  புழுதிதான் சுட்டிக்காட்டி எங்களைத் தெளிவுபடுத்தும்
  உயர்ந்த பணியை நீங்கள் செய்கிறீர்கள்.

  தொடருங்கள் “உண்மைகள்“ நானும் உங்களைத் தொடருகிறேன்.

  ReplyDelete
 13. வணக்கம்

  உங்கள் பணி சிறக்க எனது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 14. என்னத்த சொல்ல?!
  எனக்கு நேரம் சரியில்லேன்னா உங்க போஸ்ட் படிப்பேன்.
  (உடனே என் நேரம் சரியாகிவிடும் என்று நினைத்திடவேண்டாம்! ஹிஹீஹ்ஹ்ஹ்ஹீ)

  ReplyDelete
 15. சிரிக்கவும் ச்ந்திக்கவும் செய்யும் அருமையான பகிர்வுகள்..

  உலகப் புகழ் பெற்றமைக்கு வாழ்த்துகள்...

  ReplyDelete
 16. எல்லாவித பதிவுகளும் தேவை. உங்களுடையது நகைச்சுவை பாணி. அதையே தொடருங்கள். எங்களுக்கெல்லாம் உலகப்புகழ் பெற்றுத் தந்ததற்கு நன்றி.

  ReplyDelete
 17. எப்படியோ இப்படி ஒரு பதிவு தேத்திட்டீங்க போல! உண்மையில் பல நல்ல கருத்துக்களை காமெடி கலந்து எழுதும் உங்கள் பாணி அருமை! தொடருங்கள்! நன்றி!

  ReplyDelete
 18. நான் உலகப்புகழ் பெற்றவன் என்பதை ஒப்புக்கொண்டதற்கு நன்றி! (அது சரி, இப்படி மொக்கையாகப் பதிவுபோடவேண்டிய அவசியம் என்ன? திறமையில்லாதவர்கள் செய்யும் காரியத்தை நீங்கள் ஏன்செய்யவேண்டும்? அடடே, வேலைப் பளு தான் காரணமா? அப்படியானால் சரி.) - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை

  ReplyDelete
 19. எங்கேயோ இருந்துக்கிட்டு தாய்நாட்டு மேல இருக்கும் அக்கறையில அரசியல் செய்திகளை நடுநிலையோடு சொல்றீங்க. சாதி, மதம்,இனம் கலக்காம எழுதும் பதிவர்களில் நீங்களும் ஒருவர். அதுக்கே உங்களை பாராட்டனும். வாலை சுருட்டிக்கிட்டு நல்ல பிள்ளையாய் நடந்து பூரிக்கட்டை அடி வாங்காம இருந்தா நல்லா இருக்கும். ஆனா, அப்படி இருந்தா எங்களுக்கு பதிவுகள் கிடைக்காதே!!

  ReplyDelete
 20. தங்கள் பதிவுகளில் இருக்கும் நேர்மையும்
  அழுத்தமும் எனக்குப் பிடிக்கும்
  அரசியல் பதிவுகளில் மட்டும் சமயத்தில்
  கொஞ்சம் காரம் கூடுதலாகப் போட்டுவிடுகிறீர்கள்
  அதைக் குறைக்கலாம்.
  மற்றபடி தங்கள் பாணியே சிறப்பாக உள்ளது
  அப்படியே தொடரலாம்
  (குறிப்பாக நாஞ்சிலாரின் அரிவாளும்
  தங்கள் பூரிக்கட்டையையும் மிகவும் ரசிப்பேன்
  வாழ்த்துக்களுடன்

  ReplyDelete
 21. ரசிக்க தெரியாதவன் எப்படி ரசிகனா இருப்பான். அது வேரு யாருமில்லங்க............அது நானுதாங்க,,,,!!

  ReplyDelete
 22. நீங்களும் ஒரு நேர்மையற்ற ஒரே ஒரு பதிவைப் போட்டது நினைவுக்கு வருகிறது ..அது ,நீங்கள் காலமாகி விட்டதாக போட்ட பதிவுதான் !தங்களின் பாணியை ரசிக்கிறேன் தொடருங்கள் !
  த.ம +1

  ReplyDelete
 23. உங்கள் பாணியில் தொடருங்கள் அதுதான் உங்கள் வாசகன் என் கருத்து ஐயா!

  ReplyDelete
 24. உங்கள் பாணியில் தொடர்ந்து பதிவு எழுதுங்க......

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog