உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, November 27, 2013

அமெரிக்காவில் வசிக்கும் தமிழ் குழந்தை இப்படியெல்லாமா கேட்கும்?

அமெரிக்காவில் வசிக்கும் தமிழ் குழந்தை இப்படியெல்லாமா கேட்கும்?

செல்லம் அதையெல்லாம் கேட்க கூடாதுடா.... நான் சொல்லுறதை கேளுடா...ஷாப்பிங் போன இடத்தில் மகளோடு போராடிக்கொண்டிருந்தார் தந்தை. (மதுரைத்தமிழன் அல்ல என்று சொன்னால் நீங்கள் நம்பவா போகிறீர்கள் )

என்னங்க ஒரு ஆபிஸ் டிரெஸ்சை செலக்ட் பண்ணறதுக்குள்ள உங்களால் இந்த சின்ன குழந்தையைப் பார்த்துக்க முடியலையா என்ன?

அடியே நீ போய் சீக்கிரம் டிரெஸ்சை எடுக்குறதுக்க வழியப்பாருடீ...

சிறிது நேரம் கழித்து வந்த அந்த பெண் இன்னும் தன் கணவன் அந்த குழந்தையிடம் வாக்குவாதம் பண்ணிக் கொண்டிருப்பதை பார்த்து விட்டு


"என்னங்க நீங்க ... இந்த சின்னக் குழந்தையை பாத்துக்குறதுக்கு இந்த பாடுபடுறீங்க ... அவ எதை கேட்கிறாளோ அதை வாங்கிக் கொடுங்களேன் என்றாள்.

அதற்கு அவன் வேணாம்டி விவரம் ஏதும் தெரியாம பேசாதடி லூசு..

பேசாம அவ கேட்கிறதை வாங்கிக் கொடுங்க அதை விட்டுட்டு லூசு அது இதுன்னுட்டு ? என்ன விவரம் தெரியணும்?

அடியே அடியே என் வாயில நல்லா வருது சும்மா வாயை முடிட்டு பேசமா இருடின்னா உனக்கு ஏதும் புரியாதா?

என்னங்க இன்று ரொம்ப அதிகமாகபேசுறீங்க.. அப்படி என்ன குழந்தை கேட்குதுங்க?


"அடியே... அவ 'எனக்கு இந்த அம்மா வேண்டாம் .. அதோ அங்கே நிக்கிற‌ சேலை போட்ட அம்மாவை வாங்கிக் கொடுங்க'ன்னு சொல்றாடி"


மனைவி ஙேஙங்....... என்று முழித்தாள்


அன்புடன்
மதுரைத்தமிழன்

28 comments :

 1. பாவம் சின்னக் குழந்தை
  அம்மாவின் படுத்தல் பொறுக்காமல்தானே கேட்கிறது
  முடிந்தால் வாங்கிக் கொடுத்தால் தப்பில்லை
  என்றுதான் தோன்றுகிறது
  (நீங்கள் ஹைவோல்டேஜ் எனக் குறிப்பிட்டிருந்தது
  மிகச் சரிதான் )

  ReplyDelete
  Replies
  1. ஒரு ஆண்தான் ஒரு ஆணைப்பற்றி புரிந்து கொள்ள முடிகிறது.

   Delete
 2. பாப்பாவைக் காரணம் காட்டி புதுப் பொருள் வாங்க ஆசைப்படுற மாதிரி இருக்கு. அமெரிக்காவுக்கு பூரிக்கட்டைகள் பார்சல்

  ReplyDelete
  Replies
  1. புதுப் பொருள் நல்ல கலராக இருந்தது புதுப் பொருள் நல்ல கலராக இருந்தது ஹும்ம்ம்ம்ம்

   Delete
 3. நல்லா இருக்கே கதை?

  ReplyDelete
  Replies
  1. அனுபவங்கள்தான் கதையாகின்றன

   Delete
 4. இது அந்த (கெட்ட) அப்பாவின் ஆசையாக இருக்கும்.
  குழந்தை எப்பொழுதுமே வேறு அம்மாவைக் கேக்காது!

  ReplyDelete
  Replies
  1. அப்பாவும் குழந்தையும் ஆசைப்பட்டது சேலைகட்டிய பெண்ணை அதாவது அம்மா சேலை கட்டி வரவேண்டும் என்ற ஆசைதான் நீங்க தப்பா நினைச்சீட்டீங்க போல இருக்கு....ஹீஹீ

   Delete
 5. //(மதுரைத்தமிழன் அல்ல என்று சொன்னால் நீங்கள் நம்பவா போகிறீர்கள் )//

  யாருக்கு தெரியும்?!...

  இது குழந்தை கேட்ட மாதிரி தெரியலயே!!...

  ReplyDelete
  Replies
  1. இங்க வளர குழந்தை இதுக்கு மேலேயும் கேட்குங்க

   Delete
 6. இப்படி ஏதாவது சாக்கு வைத்து கேட்டால்தான்உண்டு...

  ReplyDelete
  Replies
  1. கேட்டால் கிடைக்க கூடியா இது ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

   Delete
 7. சந்தடி சாக்கில் உங்க ஆசைய சொன்ன மாதிரி இருக்கு?.

  ReplyDelete
  Replies
  1. ஆசையை மறை முக மாக சொன்னதற்கே நம்ம சகோ அமெரிக்காவிர்கு பூரிக்கட்டையை பார்சல் அனுப்புறாங்க என்ன கொடுமை

   Delete
 8. இது பெரிய குழந்தையின் ஆசை மாதிரி இல்ல இருக்கு!

  த.ம. 6

  ReplyDelete
 9. ஆனாலும் நீங்க ரொம்ப குறும்பு தான்!

  ReplyDelete
 10. உலக்கை வீட்டுல இல்லையோ ஹி ஹி....

  ReplyDelete
 11. குழந்த ஆசப்படுறத உடனே வாங்கிக் குடுத்துடணும்!///சரி,அம்மணி என்ன சொன்னாங்க?உங்கள எரிக்கல?

  ReplyDelete
 12. வீட்டில் பூரிக் கட்டை இல்லையா ? இல்லை உடைந்தே விட்டதா? தெரிந்து கொள்ள ஆவல்.

  ReplyDelete
 13. குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று சொல்வார்களே நீங்க பொய்
  சொல்லாமல் சொல்லுங்கள் சகோ குழந்தை நிஜமாவே கேட்டிச்சா ?...
  (இல்லை என்று தெரிந்து கொண்டால் லாஸ் வாகனில் பூரிக் கட்டைகள்
  அனுப்பி வச்சிடணும் :)))) )

  ReplyDelete
 14. நண்பரே இதெல்லாம் சென்னையிலேயே நடக்கிற விஷயம் தான்! எல்.கெ.ஜி. மாணவர்களிடம் ஒரு சர்வே நடத்தினால் உண்மை தெரிந்துவிடும்.

  ReplyDelete
 15. மனைவி பாவம் அப்பாவி போலே. அவங்க எதுக்கு ஞே ன்னு முழிக்கணும்?

  365 நாளும் வேட்டி கட்டும் அப்பாவுக்கு மட்டுமே புடவை கட்டும் அம்மா கிடைப்பாங்க ன்னு சொல்லிட்டா சரியாப் போச்சு.
  இது அந்த குழந்தையோட அப்பாவுக்கே தெரிஞ்சு இருக்கணும் .

  ReplyDelete
 16. தமிழா .. என் மூத்த ராசாத்தி சொன்ன முதல் வார்த்தை "சித்தி"! அதை இன்னும் நிறைவேற்றி தரலையே பீளிங்கில் இருக்கும் போது உன்னுடைய பதிவு வேற..

  ReplyDelete
 17. குழந்தைக்கு எவ்வளவு லஞ்சம் கொடுத்தாரோ அந்தத் தந்தை! (நானும் உங்களைச் சொல்லவில்லை!)

  :))))

  ReplyDelete
 18. 2013, 2015, 2016 இன்னும் அந்த சேலை கட்டிய அம்மாவை வாங்கிக்கொடுக்கலையா?

  ReplyDelete
 19. அட..இது நல்ல பிள்ளையால்ல இருக்கு..

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog