உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, October 30, 2013

தமிழர்கள் மீது விஜய் டிவிக்கு ஏன் இந்த கோபம்?தமிழர்கள் மீது விஜய் டிவிக்கு ஏன் இந்த கோபம்?
செய்தி : தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிக்காக விஸ்வரூபம் திரைப்படம்  விஜய் டிவியில் ஒளிபரப்பு
மதுரைத்தமிழன் : தீபாவாளியை தமிழர்கள் சந்தோஷமாக கொண்டாடக் கூடாதுன்னு தீபாவளி அன்று விஸ்பரூம் படத்தை  அவர்கள் டீவியில் வெளியிடப் போகிறார்களாமே?தமிழர்கள் அப்படி என்ன செய்தார்கள்? ஏன் இந்த கோபம்?

நம்மை எப்படி "அவா' ஆதரிப்பா?''பத்திரிகைகள் மீது சிதம்பரம் தாக்குதல்:
மதுரைத்தமிழன் : நீங்க  ஆட்சி செஞ்ச லட்சணத்திற்கு 'அவா' மட்டுமல்ல 'எவாளும்' ஆதரிக்கமாட்டாங்க

மோடியை நமக்காக கடவுள் அனுப்பி வைத்திருக்கிறார்: சோ
மதுரைத்தமிழன் : அந்த நன்றிக்கடனுக்காகதான் மோடி மக்களை கடவுளிடம் அனுப்பி வைத்துதாரோ?


தீபாவளி கொண்டாடுவது ஏன்!?

மதுரைத்தமிழன் : தங்கள் கணவனின் பல்லை உடைக்க தைரியமில்லாதா அப்பாவி பெண்கள் பலகாரம் செய்து ( முறுக்கு. மைசூர்பாகு) கணவணுக்கு கொடுத்து அவரின் பல்லை உடைக்கவே தீபாவளி கொண்டாடுகிறார்கள்இப்போதைய இளைஞர்களின் புதிய நாகரீகம் யாராவது கவனித்தீர்களா, தெரியவில்லை. பான்ட் பின்புறம் மிக இறங்கி உள்ளாடை பாதி தெரியுமளவு அணிகிறார்கள். இது பெண்களின் குற்றச்சாட்டு

மதுரைத்தமிழன் : பல பெண்கள் முன்பாகம் தெரியும் அளவிற்கு ஜாக்கெட் போடுவது தெரியவில்லையா அது மட்டும் குற்றம் இல்லையா? இது ஆண்களின் குற்றச்சாட்டு


ஆண்கள் பெண்களை விட உடல் வலிமை பெற்றவர்களாமே?  
மதுரைத்தமிழன் : அப்படின்னா ஏன் எல்லா ஆண்களும் மனைவியிடம் அடி வாங்கி கொண்டிருக்கிறார்கள்


பத்திரிகை செய்தி: 'ஏற்காடு இடைத்தேர்தலில் போட்டியிடுவீர்களா என, கேள்வி கேட்ட நிருபர்களிடம், 'நீங்கள் ஏதேனும் வேட்பாளர் வைத்து உள்ளீர்களா' என, தே.மு.தி.க., விஜயகாந்த் பதில் அளித்துள்ளார்.

டவுட் தனபாலு: கூட்டா, தனித்தா, புறக்கணிப்பாங்கற குழப்பத்துல தான் ஏற்காடு இடைத்தேர்தல் குறித்து வாய் திறக்காம இருக்கீங்களோன்னு மக்கள் நெனச்சுட்டு இருந்தாங்க... இப்பத் தான் தெரியுது, வேட்பாளர் சிக்காதது தான் காரணம் கறது... வேற எந்தக் கட்சித் தலைவரும், இந்த அளவுக்கு ஓப்பனா பேச மாட்டாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை...!

அன்புடன்
மதுரைத்தமிழன்


9 comments :

 1. ஏனிந்த கொலவெறி? பின்புலம் வெள்ளையாகவே இருக்கட்டுமே.

  ReplyDelete
  Replies
  1. இது தீபாவளி ஸ்பெஷல். பண்டிகை முடிந்ததும் மாற்றப்படும்

   Delete
 2. திறந்த புத்தகமான கேப்டன் வாழ்க

  ReplyDelete
 3. நச் பதில்கள்

  ReplyDelete
 4. கலக்கல் கமெண்ட்ஸ்!

  ReplyDelete
 5. இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 6. தீபாவளி பதிவு கலக்க போறிங்கன்னு தெரியுது இப்பவே பேஜ் புல்லா மின்னுது.... சரி... சரி... தீபாவளி பிஸியா கொண்டாடிட்டு மெதுவா வந்து பார்க்கிறேன்.. அதுவரை
  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! மிக்க நன்றி!

  ReplyDelete
 7. இன்பம் பொங்கும் திருநாளாக எல்லா நாட்களும் அமைய இங்கே
  என் இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள் சகோதரா .

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog