Wednesday, October 9, 2013

இந்திய அரசியல் கொலுக் கண்காட்சி ( நவராத்திரி ஸ்பெஷல்)

இந்தியாவில் தலைவர்களை கடவுளாக நினைப்பவர்கள் அநேக பேர்கள். அப்படிபட்ட கடவுளைதான் இங்கு நாம் கொலு கண்காட்சியில் வைத்து அழகு பார்க்கிறோம். ஒவ்வொரு வருடமும் கொலு நடத்தும் போது பழைய பொம்மைகளை மீண்டும் வைத்து அதோடு தங்களிடம் வந்து சேரும் புதிய பொம்மைகளையும் அந்த கொலுவில் வைப்பார்கள்.

@avargal unmaigal




அதுபோலத்தான் நானும் 2011 ல்கொலுக் கண்காட்சி  வைத்து இருந்தேன். அதன் பின் 2013 ல்தான் கொலு வைத்து இருக்கிறேன்.


இந்த வருடத்தில் கொலுக்காட்சியை சற்று மாற்றி அமைத்து இருக்கிறேன். இந்த வருடத்தில் மேலும் 3 புதிய சாமிகள் உள்ளனர்.

நரபலி சாமியார் . மீடியாவால் புகழ் பெற்றது இந்த சாமி. நீங்கள் நினைக்கும் காரியம் வெற்றி பெற இந்த சாமி போல சில பலிகள் கொடுத்து வந்தால் எல்லாம் சுபமாக முடியும்.

மெளன சாமியார். உலகமே இடிந்து விழுந்தாலும் மெளனமாக இருந்தால் நினைத்ததை சாதித்து கொள்ளமுடியும் இந்த சாமி போல

லொள்ளு சாமியார் : நீங்கள் மிக லொள்ளுவாக ஆக விரும்பினால் இந்த லொள்ளு சாமியார் எழுது பதிவுகளை படித்து வந்தாலே போதும்


தமிழக மக்களுக்காக வலைப் பதிவாளர் அமைத்த அரசியல் கொலு...(நவராத்திரி ஸ்பெஷல் 2011)

தமிழ் பதிவாளர்களே உங்களுக்காக நான் அமைத்த அரசியல் கொலு. இந்த கொலுவில் தமிழகத்து எட்டு அரசியல் சாமிகளை நான் இங்கு உங்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளேன். இந்த சாமிகளை கும்பிட்டால் நமக்கு கிடைக்கும் பலன் கள் என்னவென்பதை விளக்கியுள்ளேன்.

இவர்களை வணங்கி ஆசிர்வாதகங்களை அள்ளி செல்லுங்கள்..இந்த கடவுள்கள்தான் தமிழகத்தை காக்கும் கடவுள்கள்.

ஆணவ சாமி : இந்த சாமியின் ஆசிர்வாதம் கிடைக்க இந்த சாமியின் காலடியில் விழுந்து வணங்க தெரிந்து இருக்க வேண்டும். எந்தளவுக்கு இந்த சாமியின் காலடியில் விழுந்து கிடக்கிறீர்களோ அந்த அளவுக்கு பலன் கிடைக்கும்.

கமிஷன் சாமி : இந்த சாமியின் ஆசிர்வாதம் கிடைக்க கமிஷன் கொடுக்க வேண்டும். நீங்கள் எப்படி வேண்டுமானலும் சம்பாதிக்கலாம். ஆனால் உங்கள் வருமானம் அதிகரிக்க நீங்கள் எந்த அளவு கமிஷன் கொடுக்கிறிர்களோ அதற்கு ஏற்றமாதிரி நீங்கள் சம்பாதிக்கலாம். இந்த சாமிக்கு ஏதிரான சாமி ஆணவ சாமி. இந்த சாமியை கும்பிடுபவர்களை ஆணவஸ் சாமிக்கு சுத்தமாக பிடிக்காது. சில சாமர்த்தியவாதிகள் இந்த இரண்டு சாமிகளை மறைமுகமாக வணங்கி எல்லா ஆசிர்வதங்களையும் பெற்று செல்வார்கள்.

ஆறுதல் சாமி : உங்கள் குடும்பத்தில் யாராவது இறந்து அந்த துக்கத்தில் இருந்தால் இந்த சாமியிடம் சென்றால் உணர்ச்சிவசப்பட்டு உங்களுடன் சேர்ந்து கண்ணிர்விட்டு ஆறுதல் தரும்.

மகராச சாமி : இந்த சாமியின் கையால குட்டுபட்டால் நீங்கள் மகராசனாக வாழலாம். இந்த சாமியிடம் எல்லா நேரத்திலும் குட்டு வாங்க முடியாது. அதனால் இந்த சாமி எப்போது "தீர்த்தம்" அதிகமாக அருந்தியிருக்கிறது என்று பார்த்து அந்த நேரத்தில் ஆசிர்வாதம் வாங்க வேண்டும்.

காமெடி சாமி : மனம் நொந்து போனவர்கள், வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர்கள் இந்த சாமி சொற்பொழிவு ஆற்றும் போது சென்று கேட்டு வந்தால் வாய்விட்டு சிரித்து மனப்பாரம் எல்லாம் குறைந்து வருவார்கள்.

காவடி சாமி : தமிழகத்தில் நல்ல பதவி வேண்டுமென்றால் இந்த சாமியின் வழியை பின்பற்றி டில்லிக்கு அடிக்கடி காவடி எடுத்து டில்லி அம்மாவை வணங்கிவந்தாள் எல்லாம் நல்ல படியாக நடக்கும்.

உண்டி சாமி : ஏழை மக்களை உழைக்காமல் காக்க உண்டி வழங்கி உண்டி குலுக்கி வாழ்க்கையை நடத்தி கொடுக்கும் சாமி.

கலக சாமி : பிடிக்காத மாமியார் மருமகள் இருந்தால் இந்த சாமியிடம் முறையிட்டால் உங்கள் சார்பாக பெரிய கலகம் ஊட்டி உதவும் சாமி. இது எந்த நேரத்தில் எந்த பக்கம் சார்ந்து இருக்கும் என்று தெரியாத சாமி. இந்த சாமியும் கும்பிடும் ஒரு பெரிய சாமி உண்டு. அதன் பெயர் அமெரிக்காசாமி. அமெரிக்கா சாமியின் மறைமுக அருள் பெற்றசாமி இது.

எல்லா சாமிகளின் ஆசிர்வாதத்தை பெறுவது எப்படி என்பதை தெளிவாக விளக்கியுள்ளேன். இந்த சாமிகளிடம் ஏற்கனவே ஆசிர்வாதம் வாங்கியவர்கள் யாராக இருந்தாலும் உங்கள் அனுபவத்தை பின்னுட்டமாக இடலாம்.


அன்புடன்
மதுரைத்தமிழன்


8 comments:

  1. கொலு ரொம்ப அருமை!
    ஆனால் என்ன சுண்டல்தான் கிடைக்கவில்லை.
    உடனே பார்சல் அனுப்பி வைங்க நண்பரே!

    ReplyDelete
  2. அட, கொலு நல்லா இருக்கே! ஆனா, எனக்கு அந்த கடைசி சாமியைதான் பிடிச்சிருக்கு.

    ReplyDelete
  3. கலக்கல் கொலு! உங்க வீட்டுக்கு அழைக்காமல் நெட்டிலேயே கொலு வைத்துவிட்டீர்கள் போல! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. ஆகா! பார்ப்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறேதே! அரசியல் கொழு அசத்தல் லொள்ளு சாமி. அந்த பத்துக்கிட்டயும் பார்த்து இருங்க சாமி. பகிர்ந்த லொள்ளு சாமிக்கு நன்றி.

    ReplyDelete
  5. அறுதல் சாமி - மிக அருமை - அப்படி பொங்குவாரல

    ReplyDelete
  6. நரபலி சாமி தவிர மற்றது அனைத்தும் நல்லாயிருக்கு. இது பொதுப்படையான குற்றச்சாட்டு. அப்படிப்பார்த்தால் காங்கிரஸ் அரசாண்ட மாநிலங்களில் நடைபெற்ற கலவரங்களினால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது.

    புதிய தலைமுறையில் நியூசெர்சியில் நடைபெற்ற கொலு குறித்து ஒளிபரப்பினார்கள். அழகான தமிழிலில் பேசினார்கள். அப்போது உங்களைத்தான் நினைத்துக் கொண்டேன். உங்கள் வீட்டிலும் கொலு வைத்தீர்களா?

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.