Tuesday, October 15, 2013


கூடிய சீக்கிரம் தமிழகத்தில் இப்படியும் நடக்கலாம்.

கல்லூரி முதல்வர் : ஹலோ ராமசாமியா?
ராமசாமி : ஆமாம் நான் ராமசாமி பேசுறேன். நீங்க யார் பேசுறீங்க?



நான் உங்க பையன் படிக்கும் காலேஜ் முதல்வர் பேசுறேன்.
அப்படியாங்கய்யா...என்ன விஷேசமய்யா என் பையன் ஏதாவது அவார்டு வாங்கி இருக்கானாய்யா?
ஆமாங்க உங்க பையன் செய்த நல்ல காரியத்திற்கு அவனுக்கு தூக்கு தண்டனைதான் தரணும்.
அய்யா அப்படி என்னய்யா என் புள்ள செஞ்சுட்டான்.
அவன் கல்லூரி பேராசிரியரை கொலை பண்ணிட்டான்ய்யா...
அய்யா அவன் ஏதோ கோபத்துல அப்படி செஞ்சுட்டானா ? அப்படி ஏதாவது செஞ்சு இருந்தா நாம் பேசி முடிவு எடுத்துக்கலாமய்யா அவனை போலீஸில் மட்டும் பிடிச்சு கொடுத்திடாதீங்கய்யா?
யோவ் நீ சரியான அந்த காலத்து ஆளா இருப்பே போலிருக்கே... சரி கவலைப்படாதே... ஒரு 3 லட்சம் பணத்தை எடுத்து வந்து என்னைப்பாரு?
எதுக்கய்யா அவ்வளவு பணம்.
நீ விவரம் தெரியாத ஆளாய் இருக்கே. உனக்கு தெரியாதய்யா மாணவன் பேராசிரியரை கொலை பண்ணின்னா அபராதம் 4 லட்சமென்று.
அவ்வளவா?
ஆமாமய்யா பேராசிரியர் குடும்பத்திற்கு ஒரு லட்சம், காலேஜுக்கு அபராத தொகை 1 லட்சம், போலிஸுக்கு 1 லட்சம், சீர்திருத்த இஞ்சினியரிங்க் காலேஜ் டிரான்ஸ்பர் பீஸ் 1 லட்சம்

ரொம்ப அதிகமாக இருக்குதே!
இதை கொடுக்க முடியலைன்னா சொல்லு நேரா ஜெயிலுக்கு அனுப்பிடலாம்...
அய்யா அதுலாம் வேண்டாங்கய்யா... கொஞ்சம் சலுகை காட்டுங்கய்யா
ராமசாமி உன் பையன் கொலை செஞ்சது தப்பான்ன நேரத்துல.. விஜயதட்சுமிக்கு முன்னாலவோ அல்லது ஆடி மாதம் அல்லது புத்தாண்டு நேரத்தில் பண்ணி இருந்தாலோ காலேஜ் பீஸுல சிறப்பு தள்ளுபடி செய்து இருக்கலாம் ஆனா இப்ப முடியாதய்யா?

அதென்னய்யா தமிழ்நாடு சீர்திருத்த இஞ்சினியரிங்க் காலேஜ்?
அதுவா அது தமிழ்நாடு அரசாங்க அனுமதியோடு ஆரம்பிக்கப்பட்ட காலேஜ். அந்த காலேஜ்லேயே போலிஸ் ட்பார்ட்மெண்டும் சேர்ந்து இருக்கும். உங்க பையன் அங்க வந்து தினமும் கையெழுத்து போட்டு விட்டு அதன்பின் தான் வகுப்புக்கு வரணும். நார்மல் காலேஜில் வருஷத்திற்கு ஒரு லட்சம் பீஸ்ஸுன்னா இங்க வருஷத்திற்கு 2லட்சம் பீஸு அவ்வளவுதானுங்க

அப்படிய்யா.!!!!! ஆமாம் அங்க சொல்லித் தருகிற பேராசிரியர் திறமை வாயந்தவர்களய்யா?

ஆமாம் அவர்கள் மிக திறமையான ஆசிரியர்கள்தான் ஆனால் அவர்களும் குற்றவாளிகள்தான்?
என்னய்யா சொல்லுறீங்க.

ஆமாய்யா அந்த பேராசிரியர்கள் எங்கள் கல்லூரிகளில் பணியாற்றிய திறமையான ஆசிரியர்கள்தான் ஆனால் அவர்கள் கல்லூரியில் படிக்கும் மாணவிகளை பலத்காரம் பண்ணி மாட்டிக் கொண்டவர்கள். அவர்களைதான் இந்த கல்லூரிக்கு பேராசிரியர்களா நியமித்து இருக்கிறோம். அவர்களுக்கு பாதி சம்பளம் மட்டும் தரப்படும். அவர்கள் இப்படி கண்டிப்பாக 10 ஆண்டுகள் இந்த கல்லூரியில் பணி புரிய வேண்டும்



இந்த கல்லூரியில் படித்த பின் வேலைவாய்ப்புகள் எப்படிய்யா?
இங்க மெக்கானிக்கல் பிரிவு எடுத்தவர்கள்தான் நாட்டில் இருக்கும் பேங்க் லாக்கர்களை உடைத்து கொள்ளை அடிப்பவர்கள், எலக்ரானிக்ஸ் & கம்பியூட்டர் சைன்ஸ் ப்ரிவு எடுத்தவர்கள் ஆன்லைன் ஹேக்கிங்க் & ஆன்லைன் பேங்க் கொள்ளையில் ஈடுபடுபவர்கள். சிவில் பிரிவு எடுத்தவர்கள் ஜெயில் இருக்கும் கிரிமினல்கள் தப்பிக்க சுரங்கம் அமைத்து கொடுத்தவர்கள் இப்படி மிக சிறப்பான வாய்ப்புக்கள் அவர்கள் முன்னால் கொட்டி கிடக்குதய்யா.

அய்யா எம் புள்ளை ரொம்ப புத்திசாலிங்கய்யா அதனாலதான் இப்படி பேராசிரியரை கொலை பண்ணி இந்த காலேஜில் இடம் பிடிச்சுக்கானய்யா?

ஆமாம் ராமசாமி இப்படி பட்ட மாணவர்கள் இருப்பதனாலதான் எங்க பொளப்பும் நல்லா இருக்கு.

சரி சிக்கிரம் பணத்தை எடுத்து வாய்யா இங்கு இன்னொரு பேராசிரியரை வேற யாரோ கொலை பண்ணிட்டாங்காளாம் அதை விசாரிக்க நான் போகிறேன்

அன்புடன்,
மதுரைத்தமிழன்

டிஸ்கி : பேராசிரியரை மாணவர்கள் கொலை செய்த செய்தியை படித்ததனாலும் கல்லூரிகள் பெற்றோர்களிடம் பணத்தை கொள்ளை அடிப்பதையும் படித்ததினால் எழுந்த விபரீதமே இந்த பதிவு.
இந்த விபரீத எண்ணம் வருங்கலாத்தில் உண்மையாக கூட நடக்கலாம். யார் கண்டது





10 comments:

  1. தற்போது மாணவர்கள் பள்ளியில் படிக்கும் போதே எல்லா பழக்கங்களையும் கற்றுக்கொள்கிறார்கள்...
    கல்லூரிக்குச்சென்ற பிறகு தவறுகளின் எல்லைக்கே சென்றுவிடுகிறார்கள்...

    இருதரப்பிலும் பிரச்சனைகள் இருக்கிறது சரியான கவுன்சிலிங் தேவை....

    படங்கள் நல்லாவந்திருக்கு...

    ReplyDelete
  2. பணம் செய்யும் கொடூரம்... பேராசிரியர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்...

    ReplyDelete
  3. பணம் இருந்தா எல்லாம் சரி பண்ணிடலாம்

    ReplyDelete
  4. இப்படி நடந்தால் கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை

    ReplyDelete
  5. இந்தியாவில் பிள்ளைகளைப் படிக்க அனுப்பலாமா? வேண்டாமா...?

    ReplyDelete
  6. அருணா!
    எதுக்கு பிள்ளைகளை இந்தியாவிற்கு அனுப்பனும்; பிரான்சிலே படிக்கட்டுமே! குழந்தைகளை அங்கே விட்டுட்டு இங்க என்ன வாழ்க்கை ? தேவையா?

    ReplyDelete
  7. சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த கட்டுரை.! யாருடைய பணத்தாசைக்கோ ஒரு கல்லூரி முதல்வரும் மூன்று மாணவர்களும் பலி கடாக்கள் ஆகிவிட்டனர்.

    ReplyDelete
  8. கல்வி முறையினை முதலில் சரி செய்ய வேண்டும்

    ReplyDelete
  9. நான் ஆட்சிக்கு வந்தால் நீர் தான் நிதியமைச்சர்.

    ReplyDelete
  10. கோபத்தை குறைத்து கொண்டு தங்கள் வருங்காலத்தையும் சிந்திக்க வேண்டும் மாணவர்கள்..

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.