உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, October 28, 2013

மெயில் பேக் 2 : படித்த பார்த்த நிகழ்வுகளால் மனதில் தோன்றிய எண்ணங்கள் இங்கு கிறுக்கல்களாகமெயில் பேக் 2 : படித்த பார்த்த நிகழ்வுகளால் மனதில் தோன்றிய எண்ணங்கள் இங்கு கிறுக்கல்களாக


அறிவு பசியா கூகுலில் தேடுங்கள் ... வயிற்று பசியா மனைவியை தேடுங்கள்
ஒவ்வொரு கணவனின் ஆக்ஷனுக்கு பின்னால் மனைவியின் ஓவர் ரியாக் ஷன் ( என் வீட்டில் பூரிக்கட்டை ஆக்ஷன் )கண்டிப்பாக இருக்கும்

கேம்பிளிங்கை (gambling) எதிர்க்கும் அரசாங்கமும் மதமும் கல்யாணத்தை ஆதரிப்பது மட்டும் ஏன்?

கட்சி ஆரம்பிப்பதும் பைனான்ஸ் கம்பெனி ஆரம்பிப்பதும் ஒன்றுதான். காரணம்  இரண்டும் மக்களை ஏமாற்றவே ஆரம்பிக்கப்படுகின்றன.

இந்திய பிரதமர் : உள்நாட்டு பிரச்சனைகளை தீர்க்க மாநிலம் மாநிலமாக செல்லாமல் வெளி நாட்டு பிரச்சனைகளை தீர்க்க நாடுவிட்டு நாடு சென்று கொண்டிருப்பவர்


கொடுமையான நேரம் : நண்பரின் வீட்டில் நமக்கு பிடிக்காத அல்லது டேஸ்ட் இல்லாத உணவை நமக்கு பிடித்து இருப்பதாக நடித்து  சாப்பிட்டு கொண்டிருக்கும் நேரம் தான்


நண்பர்களே யாரை விரும்புகிறீர்களோ இல்லையோ அல்லது நன்றி சொல்லுகிறீர்களோ இல்லையோ ஆனால் கை,கால்களை மட்டும் என்றும் மறந்து விடாதீர்கள். காரணம் எந்த பிரச்சனைகள் வந்தாலும் நமக்கிடையில் இருப்பது கைகள்தான். எந்த நேரத்திலும் நம்மை சப்போர்ட் பண்ணிக் கொண்டிருப்பது கால்கள்தான்

ஆண்கள் பெண்கள் குழந்தைகள் தூங்க சிறந்த இடம் :

குழந்தைகள் : பள்ளிக் கூடம்
ஆண்கள் : அலுவலகம்
பெண்கள் : படுக்கை அறைஅன்புடன்
மதுரைத்தமிழன்

5 comments :

 1. நண்பர்கள் வீட்டிலும் சுவையை எதிர்ப்பார்த்தால்... (அங்கும் பூரிக்கட்டை இருக்கும்... ஹிஹி...)

  ReplyDelete
 2. சின்ன சின்ன் நொறுக்ஸ் அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. சகோதரருக்கு வணக்கம்
  ஆம் கைகால்கள் தான் நமக்கு துணை. கைகள் பூரிக்கட்டை அடிகளைத் தடுக்க, கால்கள் ஓட்டம் பிடிக்க (அடி ஓவரா பொயிட்டா). நம்ம பிரதமர் தானே ஹி ஹி..

  ReplyDelete
 4. மெயில் பேக்.... ரசித்தேன் மதுரைத் தமிழன்.

  ReplyDelete
 5. கொடுமையான நேரம் ஜாக்கிரதை... அதனால் யாரும் எங்க வீட்டுக்கு வரக்கூடாது...!

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog